Tuesday, May 24, 2011

கே.பி. யார் கையில்? ராஜபக்சே கையிலா? "ரா"கையிலா?

கே.பி. என்ற நபர் மலேசியாவில் பிடிபட்ட நேரத்திலிருந்து, உலகத் தமிழர்கள் மத்தியில் நம்பிக்கையை இழந்து விட்டவர். இப்போது அப்படிப்பட்ட ஒரு நபர் சொன்னார் என்று, சீ.என்.என்.-ஐ.பி.என். என்ற தனியார் காட்சி ஊடகம் ஒரு நேர்காணலை நேற்று வெளியிடுகிறது. அதை எடுத்து இந்திய ஏடுகள் இன்று வெளியிடுகின்றன. அதில் அங்கு சுற்றி, இங்கு சுற்றி, கடைசியாக, ஜெயலலிதாவிற்கு எதிராக "புலிகளை" நிறுத்துவது எனபதில் போய் முடிக்கிறார்கள். இப்போது இது யார் கை என்பது சொல்லாமலேயே புரியும். எந்த நேரத்தில் எந்த செய்தியைஎப்படி வேல்யிடுகிரரகள் எனபதை வைத்துதான் நாம் இந்த " காய் நகர்த்தும் கதாநாயகர்களை " புரிந்து கொள்ள முடியும்.


திடீரென கே.பி. அதாவது, " குமரன் பத்மநாப" பிரபாகரன் பற்றி ஏன் குற்றம் சொல்ல வேண்டும்? கே.பி. இப்போது " ராஜீவ் கொலைக்கு" ஒரு புதிய அர்த்தம் கண்டுபிடிப்பது யாருடைய " கதை வசனம்"? திமுக வின் " திராவிட கருத்தியலில்" பிரபாகரன் செல்வாக்கு செலுத்தப்பட்டார் என்ற இன்றைய கே.பி. வாதம் ஒரு பச்சையான திசை திருப்பல். ஏன் என்றால் பிரபாகரன் என்றைக்கும் 'திராவிடக் கருத்தியலை' ஏற்றதில்லை.இந்தியாவையே நம்பிவந்தார். உதாரணமாக பிரபாகரன் ஒரு 'சிறந்த ஆன்மீகவாதி'. அதுமட்டுமின்றி, 'நேதாஜி சுபாஷ் சந்திர போஸ்' வழியை பின்பற்றும் கருத்துக் கொண்டவர். அப்படிப்பட்டவர் எப்படி ' பிராமண எதிர்ப்பாளராக' கே.பி. சொல்வது போல இருந்திருக்க முடியும்?.


கே.பி. சொல்வதுபோல, பெரோஸ் காந்தி என்ற பார்சி சாதியை சேர்ந்தவரின் மகனான ராஜீவ் காந்தி எப்படி பார்ப்பனராக இருப்பார்?. அவரை பார்ப்பனர் என்பதற்காக புலிகள் கொலை செய்தார்கள் என்று கே.பி. கூறுவது, ஒரு தேசியவிடுதலைப் போராட்டத்தை கொச்சைப் படுத்தும் பாணி. இந்த கருத்தியல் எப்போதுமே இந்தியாவில் திமுக விற்கு எதிராக வழக்கமாக, குற்றம் கூறும் சக்திகள் சொல்லிவரும் குற்றச்சாட்டு. அதை எந்த விதத்திலும் 'புலிகளுக்கு' எதிராக பயன்படுத்த முடியாது. ஏன் என்றால் தொடக்கம்முதல், இறுதி வரை பிரபாகரனும், புலிகளும், எம்.ஜி.ஆரின் விசுவாசிகள். ஆதரவாளர்கள். இது கே.பி.க்கும் தெரியு. ஆனாலும், மேலிருந்து உளவுத் துறையினர் எழுதிக் கொடுப்பதை படிப்பதுதான் ஐன்றைய கே.பி.யின் நிலைமை?


பிரபாகரன் தனது வாழ்க்கையின் முக்கிய திருப்பு முனையான தனது திருமணத்தை, ஒரு கோவிலில் வைத்து நடத்தினார். அதை " அய்யர்" வைத்துதான் நடத்தினார் என்பதும், அங்கு இதே கே.பி. இருந்தார் எனதும் நாடர்ந்த கதை. அப்படி இருக்கையில் பிரபாகரனையும், புலிகளையும், "பார்ப்பன எதிர்ப்பாளர்கள்" என்று முத்திரை குத்துவது எப்படி சரி?
இவ்வாறு " கிழிந்துபோன கந்தல் துணி" போல ஒரு அறிககையை இந்த உளவு நிறுவனங்கள் தயார் செய்து கே.பி. பெயரில் வெளியிட்டால் யார் நம்ப முடியும்? அதேபோல " ஜெயலலிதா ஒரு பார்ப்பனர் என்று அவரையும் புலிகள் கொலை செய்ய முனைந்ததாக" அடுத்த கதையையும் கே.பி.யை வைத்து சொல்ல வைத்திருக்கிறார்கள்.



இதேபோல, ஜெயலலிதா முதல்வராக இருக்கும்போது, 2005 ஆம் ஆண்டில், மத்திய அரசில் அப்போது ஆட்சியில் இருந்த இதே ஐ.மு.கூ. வின் முதல் தவணை ஆட்சியில், உள்துறை அமைச்சர்கா இருந்த சிவராஜ் பட்டீல், " தனது ஆண்டறிக்கையில் புலிகள் நடமாட்டம் தமிழ்நாட்டில் இருப்பதாக " அறிவித்தார். அதற்கு முதல்வர் "ஜெ" அப்போதே பதிலடி அறிக்கை வெளியிட்டார். அதற்குபிறகு இன்னொரு கடிதத்தை முதல்வருக்கு, உள்துறை அமைச்சர் எழுதினர். அதில் " இரண்டு புலிகளின் பெண் தற்கொலைப் படையினர்" பனப்பாக்கம் வந்து இறங்கியிருப்பதாகவும், முதல்வர் "ஜெ" கொலை செய்ய வந்திருப்பதாகவும் எழுதியிருந்தார். அதற்கும் அன்றைக்கே " புலி கிளியை கிளப்பாதீர்" என்று உள்துறையின் பொய்யுரையை அம்பலப்படுத்தி, இரண்டு அரை அமனி நேர நிகழ்ச்சிகளில், நானே பதில் கொடுத்திருந்தேன். அதுவும் அந்த நேரத்தில், முதல்வராக செல்வி.ஜெயலலிதா இருக்கும்போதே, " ஜெயா டி.வி." யில் ஒளிபரப்பப்பட்டது. இப்போது அதே சக்திகள் அதேபோல ஒரு போய் கூற்றை உண்மையாக்க தங்கள் கைகளில் கைதியாக உள்ள ஒரு கே.பி.யை பயன்படுத்துகிறார்கள்


இன்று டில்லிக்கும், அதன்மூலம் கொழும்புக்கும் பிரச்சனையே ஜெயலலிதா ஆட்சி தமிழ்நாட்டிற்கு வந்ததுதான். ஏன் என்றால் அவர்கள் இருவரும் கருணாநிதி ஆட்சி இருக்கும்வரை கவலை இல்லாமல் இருந்தனர். பெரும் அளவில் ஜெயலலிதா அணி வந்தபின், அதுவும் முதல்வர் ஜெயலலிதா வேற்றுபெற்ற பின்பும்கூட, ஈழப்பிரச்சனையில் " தமிழர்களுக்கு " சாதகமாக " ராஜபல்செவை" அனைத்து நாட்டு விசாரணைக் கூண்டில் என்ற்றவேண்டும் என்ற கருத்தில் உறுதியாக இருப்பது கண்டு இந்த இரண்டு நாடுகளின் தலைமையும் நடுங்கிக் கொண்டு இருகின்றன. அதனால் அவரை அதாவது "ஜெ".வை ஈழப் பிரச்சனையில் கலைத்து விட முயல்கின்றனர். அதுதான் " கே.பி." பெயரில் அவர்கள் எடுக்கும் முயற்சி. அதற்காக " கோத்தபாயே ராஜபக்செடும், பசில் ராஜபக்சேயும்", கடந்த வெள்ளிக்கிழமை இரவு டில்லி வந்து கலந்து பேசியதும், தாங்கள் கொழும்பில் இருந்த முன்னாள் இந்திய தூதர் அலோக் பிரஷாந்தின் மகன் நிதின் பிரஷாந்தின் திருமணத்திற்கு வந்ததுபோல காட்டிக்கொண்டதும், அதன்மூலம் "டில்லி ஆலோசனையின்" பேரில், எப்படியாவது "ஜெ"வை சமாதனப்படுத்த முயல வேண்டும் என திட்டமிட்டதும் தெரியவந்துள்ளது. அதன் அடுத்த " காய் நகர்த்தல்" தான் இந்த கே.பி. நேர்காணலும், அதற்கு ஊடகங்கள் கொடுக்கும் முக்கியத்துவமும்.

மரியம் பிச்சை வெற்றிக்காக உயிரை பறித்த பெருமான் யார்?

அமைச்சர் மரியம் பிச்சை, தள்ளுவண்டியில், காய்கறி வணிகம் செய்து வந்த ஒரு நல்ல எம்.ஜி.ஆர். பக்தர்.அதை தொடர்ந்து ஜெ விசுவாசியாக மாறிய நல்ல மனிதர். அவரது மறைவு செயற்கையாக ஏற்படுத்தப்பட்டுள்ளது. வாடகை கற் ஓட்டுனர் தவறா? முன்னாள் சென்ற கண்டைனர் வாகன தவறா? அல்லது ஓரண்டுபெரும் சேர்ந்து செய்த சதியா? இது புலனாய்வில் உள்ள விவகாரம். ஏன் அவர் " பதவி ஏற்பு" அன்று சரியாக மரணம் அடையவேண்டும்? இது "பதிவி ஏற்பு" நிகழ்வையும் உடைக்க உள்ள சதியா? இத்தனை சதி செய்ய " பெரிய இடம்" திட்டமிடாமல் முடியுமா?

ஏற்கனவே இது போன்ற " லார்ரி ஏற்றி" கொலை செய்வதற்கான முயற்சி, ஜெயலலிதா மீதே மதுராந்தரத்தில் நடந்ததே? அப்போதே ஒரு முக்கிய திமுக கையின் பினாமி, "அப்பு"டியே சந்தேகப்பட்டியலில் இருந்தாரே? அவர்தானே " சங்கரராம ஐயர்" கொளைவழக்கில்பிடிபட்டவர். அவர் முன்பு கலைஞர் வந்துபோன " ஆலிவர் சாலை" வீட்டில் தனி அரை கொடுக்கப்பட்டு இருந்தாரே? சங்கராச்சரியுடன் சிக்கிய பின் பிணையில் வந்து, அமைச்சர் ஆற்காட்டார் வீட்டில் இருந்தாரே? சென்ற ஆட்சியில் அனைத்தையும் மறுபடி அனுபவித்தாரே? " ஓலை நடந்த பாணி" என்றுபார்த்தால் இத்தனை சந்தேகமும் வருகிறதே?

கொலைக்கான கானம் எதுவாக இருக்கும்? அப்போதுதான் " வெல்லப்பட முடியாதவர்" என்று இருந்த ஒரு பெரும் பண்ணையாரை அவரது தொகுதியிலேயே வென்று இருக்கிறார். இது அந்த பெருமானுக்கு கோபத்தை வரவழைக்கும் என்பது உண்மைதான்? நடந்தது போக்குவரத்தில் நடந்துள்ளது. போக்குவரத்து துரையின் ஓட்டுனர்கள் சமயபுரம் வரை வந்துள்ளனர். அதற்கு பிறகு தனியார் வாடகை வாகனம், வாடகை ஒட்டி. அதுவு முன்கூட்டியே சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்திருக்க நியாயம் இருக்கிறது. தமிழ்நாடு உழுக்க " போக்குவரத்து துறை" யை கையில் வைத்திருந்தவருக்கு, ஒவ்வொரு வாடகை கார் நிறுவனமும், அதுவும் குறிப்பாக திருச்சியில் உள்ள தனியார் நிறுவனங்களை தெரியாமல் இருக்காது. அவரது தம்பிக்கு அதைவிட தாயகமாகவே தெரிந்திருக்கும். ஆகையால் விசாரணை, மரியம் பிச்சையால் தோற்கடிக்கப் பட்ட கே.என்.நேரு மீதும் திரும்பத்தானே செயும்? பெரோஸ் காந்தி மரணத்தில் , ஜவஹர்லால் நேருவையே சந்தேகப்பட்டார்களே? இந்த நேரு எம்மாத்திரம்?

தயா நடிப்பு கொஞ்சம் ஓவர்

தன் சம்பந்தி ஏட்டில், அதாவது " தி ஹிந்து" ஏட்டில் தனது ஒப்புதலுடன் வெளியிடப்பட்ட, விக்கிலீக்ஸ் கசிவான, கலைஞர் பற்றிய தனது கருத்தை, அமெரிக்க தூதர் ஹூபரிடம் கூறியதை எப்படி ஆராயாமல் வெளியிடலாம் என்று கோபபடுவது போல ஒரு நடிப்பு. அதற்கு ஒரு மறுப்பு வேண்டுதல். இல்லாவிட்டால் மான நட்ட வழக்கு ஐந்து கோடி கேட்டு என்று ஒரு வக்கீல் நோட்டிஸ். ஆஹா. இந்த நடிப்பை தமிழ்மக்கள் புரிந்து கொள்ள மாட்டார்களா? என்ன?

ஒருபுறம் கலைஞரை மிரட்ட, அந்த உண்மையை வெளியிடுவதும், மறுபுறம் அதையே மறுத்து கலைஞருடன் ஓட்டிக்கொள்வதும், மின்னொரு புறம் " ஜெ" யை தான் கலைஞர் விரோதி என்று ஏமாற்றுவதும், எப்படி இந்த சகொதரர்கலாலா நடிக்க முடிகிறது?