Tuesday, October 11, 2011

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?

தயா-கலா வீடு "சோதனை" என்றால், கழகத் தலைவருக்கு எண்ண கவலை?
கலா--தயா வீடுகள், அலுவலகங்கள், அவர்களது "பனுதார்கலான" அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளி அக்கியோறது இருப்பிடங்கள் "சீ.பி.அய்.யால் சோதனை செய்யப்பட்டால் அது "திமுக" கட்சியின் தலைவர் கலைஞரை "பாதிக்குமா?". ஒன்றும் பாதிக்காது. அவரது கவலை எல்லாம் தனது மகள் "கனிமொழி" திஹார் சிறைக்கு உள்ளே இருக்கிறாரே அவர் எப்போது வெளியே வருவார் எனபது மட்டும்தான். ஆனாலும் "கலாநிதியும், தயாநிதியும்" அவரது மர்மகனின் பிள்ளைகளாயிற்றே. அதனால் .குடும்பத்திற்குள் "குழப்பம்" வராதா? வந்துவிட்டதே.

கலா-தயா சகோதரர்களின் "சித்தப்பா" தான் செல்வம். அதாவது முரசொலி மாறனின் தம்பி. அந்த செல்வத்தின் "மனைவி"தான் கலைஞரின் மகள் "செல்வி". அதனால் கலா-தயாவின் "சித்திதான்" செல்வி. அதனால் செல்வி, பெங்களூரில் இருந்து "கருணாநிதிக்கு" தொலை பேசினாராம். அதை "யார்" பேசுகிறார்கள் என்று தெரிந்த பிற்பாடும் கலைஞர் 'மதித்து" பேசவில்லையாம். அவருக்கு தன் அன்பு மகள் "கனிமொழியை" உள்ளே தள்ள சீ.பி.ஐயிடம் "இல்லாததையும், பொல்லாததையும்" போட்டு கொடுத்த "மாறன்" வழி வந்த கும்பலின் "அமிர்தம்" செய்த "துரோகம்"தான் திஹார் சிறையில் "கனிமொழி" வாடக் காரணம் என்ற "கருத்து" ஆழமாக இருக்கிறதே? அவர் எப்படி "மனம் இளக" முடியும்?

அணு அரசியலில் மன்மோகன் மீண்டும் "சிக்கினார்".

இன்று "தி ஹிந்து" நாளேட்டில் "வைசு நரவானே" வின் ஒரு "கட்டுரை" வெளிவந்துள்ளது. உலகிலேயே அதிகமாக "மின்சாரத்தேவைக்கு" அணு உலைகளை "சார்ந்திருக்கும் " பிரான்ஸ் நாடு "புகுஷிமா" விபத்திற்கு பிறகு "வாய்" திறக்காமலிருத "நிலையிலிருந்து" இப்போது வெளிப்படையாக் அவ்ந்துள்ள "நிலை" பற்றிய "கட்டுரை" அது. அதில் பிரான்ஸ் நாட்டில் 59 அணு உலைகள் இருப்பதாகவும், அந்த நாட்டின் "மின் தேவைக்காக" அவற்றிலிருந்து "எழுபது" விழுக்காட்டிற்கும் அதிகமாக அந்த நாடு "மின்சாரம்" பெற்று வருவதாகவும், அதனால் "ஜப்பானில் புகுஷிமாவில்' நடந்த "பேராபத்திற்கு" பிறகும், ஜெர்மன் நாடு "அணு உலைகளை" முழுமையாக " தடை" செய்ய முடிவு செய்துள்ள நிலையிலும், பிரான்ஸ் நாடு எந்த "முடிவும்" எடுக்காமல் "மவுனமாக" இருந்தது எனபதுதான் உலகம் பார்த்து வந்த பார்வை.

ஆனால் இப்போது "பிரான்ஸ்" நாட்டின் "ஈ.பி.ஆர்." என்ற அணு உலைகளை தயாரிக்கும் நிறுவனம் "அரிவா" வசமாக "பிரான்ஸ் நீதிமன்றத்தில்" மாட்டி கொண்டு விட்டது. அதாவது " பூமிக்கு அடியில் உள்ள நீரில்" அந்த நிறுவனம் "யுரேனியத்தின் திரவ நச்சை" கலந்துள்ளது என்ற "ஆதாரம்" கிடைத்த நீதிமன்றம் அந்த "அரிவா நிறுவனத்தின் கிளையான சொகாற்றி" நிறுவனத்துக்கு "நாற்பதாயிரம் டாலர்கள் " அபராதமாக விதித்துள்ளது. அந்த அளாவுக்கு அந்த " அணு உலை உற்பத்தி நிறுவனம்" பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றம் முன்னால் "பாதுகாப்பற்றது" என்று தன்னை நிரூபித்து விட்டது. அணு உலைகளின் மூலம் "மின் உற்பத்தி" செய்யும்போது அதாவது "அணுவை" பிளக்கும்போது, அதிலிருந்து "வெளிப்படும் கழிவுகளை" என்ன செய்வீர்கள் என்பதே "முக்கிய" உலக பிரச்சனை.. அத்தகைய "யுரேனிய நச்சு கழிவுகளை" அந்த நிறுவனம் "பூமிக்கு அடியில் உள்ள நீரில்" கலக்க விட்டுள்ளது என்பது "தந்திரமான" ஆபத்தான "தன்மை" கொண்ட நிறுவனமாக அது இருப்பதை நிரூபித்து உள்ளது.அத்தகைய "நிறுவனத்தில் " ஒரு நாடு தனக்கு வேண்டிய "அணு உலைகளை" வாங்கினால் "வாங்குகின்ற குறிப்பிட்ட நாடு" ஒன்று "கூமுட்டையாக" இருக்க வேண்டும் அல்லது "அந்த நாட்டின் தலைமையே ஆபத்தானவர்களால்" ஆளப்பட வேண்டும். அது எந்த "நாடு" என்ற உங்கள் "அவாவை" அதே ஏட்டின் கட்டுரை அம்பலப்படுத்துகிறது.


இந்தியாவிள் உள்ள "மகாராஷ்டிரா" மாநிலத்தில் "ஜைதாபூர்" என்ற இடத்தில் "ஆசியாவிலேயே" பெரிய அளவிலான "அணு உலையை" கொண்டு வரப்போகிறோம் எனும் "இந்திய அரசின்" சவடாலுக்கு அந்த வட்டார மக்கள் "கடும் எதிர்ப்பை" கொடுத்து வருகிறார்கள். அந்த ஜைதாபூர் அணு உலைகளுக்குக்காக "ஆறு அணு உலைகளை" மேலே குறிப்பிட்ட இப்போது "பிரன்ஸ்" நாட்டில் "சிக்கி" கொண்டுள்ள அதே நிறுவனத்திடம்தான் "இந்திய அரசு" வாங்குவதற்கு "ஒப்பந்தம்" செய்துள்ளது. அதாவது "பிரான்ஸ் நாட்டின் நீதிமன்றத்தால்" எந்த குறிப்பிட்ட நிறுவனம் "பாதுகாப்பற்றது" என்று தீர்ப்பு வெளியாகி உள்ளதோ "அதே" நிறுவனத்திடம் மன்மோகன் அரசு "எப்படி" பாதுகாப்பான அணு உலைகளை "வாங்க முடியும்?". இந்த கேள்வியை இப்போது " கூடங்குளத்தில்" பாதுகாப்பான அணு உலைகளை உருவாக்குவோம் என்று கூறும் இந்திய மன்மோகன் அரசி "நோக்கி" நாம் கேட்க வேண்டும். அதனால்தான் ஏற்கனவே "இந்திய ராணுவத்தின் யுரேனியம் செறிவூட்டல்" என்ற ஆபத்தான அணு குண்டு தாயாரிப்பு முடிவின் மூலம் "தான் போட்ட" கையெழுத்துக்கள் கொண்ட "ஒப்பந்தங்களை" மீறிவரும் மன்மோகன் அரசு "மீண்டும்" உலக "அணு உலை" வியாபாரிகளிடம் " சிக்கி" கொண்டு விட்டார் எனபதும், அதை "ஒட்டி" இந்திடாவின் "நாட்டுப்பற்றாளர்கள்" இந்த "பாதுகாப்பற்ற" அரசாங்கத்தின் "பாதுகாப்பற்ற" அணு உலைகளை "எதிர்க்க" தெருவுக்கு வரேண்டும் எனவும் "புரிந்து கொண்டால்" நாடு உருப்படும். '