Saturday, October 29, 2011

க.சுப்பு காலமானார்.

இன்று திமுக காரர் என்று அறிவிக்கப்படும் க.சுப்பு இன்று காலை காலமானார். அவர் முதலில் தனது பொதுவாழ்க்கையை "கம்யுனிஸ்ட் கட்சியில்" தொடங்கியவர். ராஜபாளையம் நகரில் தொழிற்சங்க அரசியலில் கம்யுனிஸ்டுகள் கோலோச்சிய நேரம். இந்திய கம்யுனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உருப்பினார்கவும் அந்த நகரிலிருந்து டேஹ்ர்ந்தேடுக்கப்பட்டவர் சுப்பு. அதன்பின் அங்குள்ள ஆலை அதிபர்களின் ஒடுக்குமுறைக்கு குடும்ப ரீதியிலேயே அவர் பாதிக்கப்பட்டார். அதில் கட்சியின் பாதுகாப்பும் அவருக்கு போதுமான உத்தரவாதத்தை ஏற்படுத்தவில்லை. அதனால் கட்சியிலிருந்து விலகி, திமுகவில் சேர்ந்தார். எந்த கட்சிக்கு சென்றாலும் சுப்புவிர்கான சுதந்திரம் பாதிக்கப்படும் நிலையே இருந்தது. கம்யுனிஸ்ட் கட்சியில் இருக்கும்போதே , நக்சல்பாரி இயக்கத்தின் ஆதரவாளராக இருந்தார். அந்த புரட்சிகர இயக்கத்துடன் தொடர்பும் வைத்திருந்தார். அதனாலேயே பல காவல்துறையின் உளவுத்துறையின் "தொல்லைகளை" சந்தித்தார்.

திமுக வில் பிரபல பேச்சாளராக ஆனார். "இடி, மின்னால்,மழை" என்று அழைக்கப்பட்ட மூன்று பிரபல பேச்சாளர்களில், " துரைமுருகன், சுப்பு, ரகுமான்கான்," ஆகியோர் வரிசைப்படுத்தப்பட்டனர்.இப்படி சென்ற இடமெல்லாம் சிறப்பு சேர்த்தார். ஆனாலும் தனது புரட்சிகர தொடர்புகளை விடவில்லை. புரட்சியாளர்களுக்கு ஆதரவாக ஒரு மனித உரிமை அமைப்பை உருவாக்க அவர்கள் சுப்புவை நாடினர். குறிப்பாக அன்றைய புரட்சிகர இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான ஏ.எம்.கே. என்று அழைக்கப்படும் கோதண்டராமன் வழக்கறிஞராக இருந்த காலம் தொட்டு சுப்புவுடன் தொடர்பு என்பதால், அவரை நாடி அத்தகைய ஒரு இயக்கம் தேவை என்றும், அதற்கு சுப்பு தலைமை தாங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.


சுப்புவும் சம்மதித்தார். அதையொட்டி "தமிழ்நாடு சிவில் உரிமை கழகம்" என்ற அமைப்பு சுப்பு தலைமையில் தோற்றுவிக்க பட்டது. இந்த உண்மை தெரிந்திருந்தும் கூட, கருணாநிதி சுப்புவை சிறந்த பேச்சாளர் என்பதாலும், நல்ல ஊழியர் என்பதாலும் திமுக வில் சேர்த்து கொண்டார். எம்.ஜி.ஆர். கொடுத்த தொந்திரவால், கலைஞர் எதிர்க்கட்சி தலைவராக செயல்பட கடினப் பட்ட நேரம். களிஞருடன் வாகனத்தில் கட்சியின் போது குழுவிற்கு சுப்புவை கூட்டி செல்லும்போது, தென் மாவட்டங்களில் திமுக விற்கு வேர்கள் அறுந்து கிடக்கின்றன என்ற உண்மையை சுப்பு கூற பொறுமையாக கேட்டுக் கொண்டிருந்த கலைஞர் "திருச்செந்தூர் கோவில் நகை திருட்டில் ஆ.ர.எம். வீரப்பனை" எதிர்த்து "மதுரையில் புறப்பட்டு திருச்செந்தூர்" செல்லும் "நடைப்பயணத்தை" கிராமங்கள் வ்ழியாக சென்று கட்சியின் பலத்தை மீண்டும் கூட்ட கலைஞர் திட்டமிட்ட வரலாறு கூட உண்டு.

பிறகு சுப்பு "நக்கீரன்" இதழை தொடங்கினார். அதன் சில இதழ்கள் வந்திருந்த நிலையில் விடுதலை புலிகளின் ஆலோசகர் "ஆண்டன் பாலசிங்கத்தின்" நேர்காணலை வெளியிட்டார் சுப்பு. அதற்காக சுப்புவை காண "யோகியும், பாலசிங்கமும்" அவரது வீட்டிற்கே வந்தனர். தராசு இதழிலிருந்து வெளியே வந்திருந்த ராஜகோபால், சுப்புவிடம் நக்கீரன் இதழை வாங்கினார். அதன் பிறகு அந்த இதழ் பிரபலம் அடைந்ததும் அனைவருக்கும் தெரியும். 1991 ஆம் அனடின் ஜெயலலிதா ஆட்சியை விமர்சித்து எழுதி வந்த நக்கீரன் இதழில் சுப்பு, "இங்கே ஒரு ஹிட்லர்" என்ற தொடரை எழுதியது மிகவும் பிரபலாமான ஒரு செய்தி.

சுப்பு அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அங்குள்ள சட்டமன்ற உறுப்பினர்களுக்கு சட்டமன்றத்தில் எப்படி, நடந்துகொள்ளவேண்டும் என்பது பற்றி வகுப்பு எடுக்க வைத்தார்கள். சுப்பு ஒரு பிரபல "நாடாளுமன்றவாதி". ஆகவே அவரை காங்கிரஸ் கட்சி அப்படி பயன்படுத்தியது. சிரிப்பு, சிரிப்பாக பேசுவதில் சுப்பு கெட்டிக்காரர். அதன்பிறகு மீண்டும் சுப்பு திமுக வந்து சேர்ந்தார். அதற்குள் அவருக்கு உடல் நிலை சரியிலாமல் அதிகமாக வெளியே செல்வது இல்லை என்ற நிலை வந்தது. இன்று காலை இசபெல்லா மருத்துவமனையில் மயிலாப்பூரில் அவர் காலமானார். அவரது உடல் அவரது "லாயிட்ஸ் காலனி : இல்லத்தில் வைக்கப்பட்டது. நாளை காலை இறுதி அஞ்சலி செலுத்தப்படும்.