இன்றைய ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசின.அன்றாடம் ஒரு அதிர்ச்சி செய்தியை வீசுவது, ஊடகங்களுக்கு வேண்டுமானால் சுவாரசியமாக இருக்கலாம். அலுவலகம் போக கிளம்பும் ஊழியர்களுக்கும், பள்ளிக்கு செல்ல புறப்படும் பிள்ளைகளுக்கும், அவர்களை அனுப்பி வைக்க வாசலுக்கு வரும் தாய்மார்களுக்கும் எப்படி சுவாரசியமாக இருக்கும்? வேதனையாகத்தானே இருக்கும்? அதுவும் தங்கள் வீடு மனிதர்கள் வெளியே போய்விட்டு பத்திரமாக திரும்புவார்களா என்ற கவலை வந்து விடாதா? ஊடகங்கள் எ இப்படி செய்கின்றன? அவர்களை கேட்டால் அரசுதானே இப்படி செய்திகளை எங்களுக்கு கொடுக்கிறார்கள்? என்று கேட்கிறார்கள்.
அரசு ஏன் இப்படி செய்திகளை கொடுகிறது? வெடிக்கும் போது கொடுக்கமாட்டார்களா? சரிதான். வெடித்தால் செய்தியை கொடுப்பார்கள். வெடிக்காமல் இறக்கும்போது கொடுப்பது ஏன்? என்று கேட்டால், வெடி வைத்தால் கொடுக்க மாட்டார்களா? என்றும் பதில் வரும். ஏன் இப்படியெல்லாம் நடக்கிறது. உண்மையிலேயே இப்படி வரும் செய்திகளை நாம் எல்லோரும் நம்பி விடுகிறோம். அதனால்தான் தொடர்ந்து இப்படி செய்திகளை அதிகாரிகள் கொடுக்கிறார்கள். அப்படிஎன்றால் இந்த செய்திகளை நம்பக் கூடாதா? நம்பக் கூடாது என்று சொல்வதற்கு நாம் யார்? நம்புங்கள் என்று சொல்வதற்கும் அரசு அதிகாரிகள் யார்? அன்ம்புவதும், நம்பாததும் அதை வாங்கிக் கொள்ளும் மக்களைப் பொறுத்து உள்ளது.
இந்தியாவில் வறுமையின் எல்லைக்கோடுக்கு கீழ் பெரும்பாலும் இல்லை என்று திட்டக் குழு துணைத்தலைவர் கூறினார். அவர் ரொம்ப பெரிய ஆல்ல்தான். அவரை யார் நம்பினார்கள்? அவர் கணக்கு போட்டு சொன்னார். நகர்புறத்தில் முப்பத்தி இரண்டு ரூபாய் மற்றும் கிராமப்புறத்தில் இருபத்தைந்து ரூபாய் சம்பாதிப்பவர்களை எல்லாம் வறுமை கோடிற்கு மேல் உள்ளவர்கள் என்று அவர் கணக்கு கூறினார். யார் நம்பினார்கள்? சோனியா காந்திக்கு வேண்டிய தேசிய ஆலோசனை கவுன்சில் உறுப்பினர்கள், சமூக ஆர்வலர் அருணா ராய், வலிய ஒய்வு பெற்ற அய்.ஏ.எஸ். அதிகாரியும், அம்தச்சர்படர்வாதியுமான மோடி எதிர்ப்பாளர் ஹர்ஷ் மந்திர், முன்னால் அதிகாரி சக்சேனா ஆகியோர் கூட அதை நம்பவில்லையே? அதற்குபிரகுதானே பிரதமரும் அதை சர்ச்சிக் குரியது என்று மறைமுகமாக ஒப்புக்கொண்டார்? இதுபோல திகாரிகள் சொல்லிவிட்டால் நம்புவது என்று ஒன்று இருக்க முடியாது.
அப்படித்தான் பயங்கரவாதிகள் விசயத்திலும் பார்க்க வேண்டாமா? நாம் பயங்கரவாதத்தை எதிர்த்து விழிப்போடு இருக்க வேண்டாமா? விழிப்போடு இருக்க வேண்டும் என்பது உணமிதான். ஆனால் எது பயங்கரவாதம் என்று தெரிந்திருக்க வேண்டாமா? அரசு சொல்வது எல்லாம் பயங்கரவாதமா? அப்படியானால் மனித உரிமையாளர்கள் அரசு பயங்கரவாதம் என்று ஒன்றை சொல்கிறார்களே? அது என்ன? பயங்கரவாதம் இரண்டு அவ்கைப்படும் என்று புரிந்துகொள்ளலாமா? இதில் எந்த பயங்கரவாதம் அதிகம் ஆபத்தானது? இந்த சர்ச்சைக்கு போவதற்கு முன்பு எந்த, எந்த விசயத்தில் அரசு சொல்வதை நம்புவது எந்த விசயத்தில் கேள்விகள் கேட்பது என்றாவது நாம் புரிந்து கொள்ளவேண்டும்.
இப்போது வந்திருக்கும் செய்தி, டில்லியில் ஒரு இண்டிகா சிறிய வாகனம், ஜம்மு காஷ்மீரிலிருந்து வந்தது. அதில் ஐந்து கிலோ ஆர.டி.எக்ஸ். என்ற பயங்கர வெடிபொருள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது உண்மையாய் இருந்தால் நிச்சயம் ரொம்ப பெரிய விசயம்தான். டில்லி என்ற இந்தியாவின் தலினகருக்கு, கலக்க ப்போம்மியாக இருக்கும் ஜம்மு காஷ்மீரிலிருந்து ஒரு வாகனத்தில் பெரும் வெடி பொருள்களை ஏற்றி அனுப்பி இருக்கிறார்கள் என்றால் நிச்சயம் இது பெரிய விசயம்தான். உடனடியாக ஒரு ஏடு அந்த வெடிகளை கொண்டுவந்தவர்கள் "பாபர் கல்சா" என்று கூறியுள்ளது. இன்னொரு ஏடு அந்த வெடிகளை கொண்டு வந்தது "லஷ்கர் ஈ தொய்பா" என்று கூறியுள்ளது. இரண்டு ஏடுகளுக்கும் செய்தி கொடுப்பது ஏதோ ஒரு அதிகாரிதான். அப்படி செய்தி கொடுப்பவருக்கு "கொடுக்கும் செய்தியின்" வீரியம் தெரியாமல் கூட இருக்கலாம். அதை வெளியிடும் ஊடகத்திற்கு கூட, அந்த செய்தியின் "விளைவுகள்" புரியாமல் இருக்கலாம்.
ஆனால் "பாபர் கல்சா" எனபது சீக்கிய போராளிகள் அமைப்பு. அதன் தொடர்பை இந்த பிடிபட்டதாக கூறப்படும் வெடிகளுடன் சேர்ப்பது, அந்த "சுய நிர்ணய உரிமைக்கு" போராடும் சீக்கியர்களை மனத்தளவில் பாதிக்கும். அவர்கள் அருகே உள்ள இந்து மக்களை "கலவரப்படுத்தும்". இது பற்றி செய்தியை வெளியிடும் ஊடகங்களுக்கு கவலை இல்லை. அதேபோல "லஷ்கர் ஈ திபா" எனபது காஷ்மீர் விடுதலைக்கு போராடும் அமைப்பு. அது "பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீர்" என்று இந்தியாவாலும், "விடுதலை பெற்ற காஷ்மீரம் " என்று போராளிகளாலும் சொல்லப்படும் பகுதியில் இருந்து செயல்படுவதாக கூறப்படும் அமைப்பு. அது இந்த வெடிகளில் தொடர்பு என்றால் "சம்பந்தப்பட்ட பலரையும்" கவலைக்கு உள்ளாக்கும். அதுபற்றி எந்த வணிக புத்தி ஊடகங்களுக்கும் கவலை இல்லை.
சரி. இப்போது ஜம்மு காஷ்மீர் முழுக்க பயங்கரமான ளவில் இந்திய ராணுவம் நிற்கிறது. அவர்களது முழுமையான ஆக்கிரமிப்பில் அந்த பகுதி இருக்கிறது. அப்படியானால் அங்கிருந்து இப்படி ஒரு பயங்கர வேத்களுடன் ஒரு வாகனம் டில்லி நோக்கி வரமுடியுமா? ராணுவமும், பாதுகாப்பிற்கு நிற்கும் உளவு துறையும், டில்லி அதிகாரிகளும் அனுமதித்தால் மட்டுமே வரமுடியும். அப்படி அவர்களே அனுப்பி இருப்பார்களா? அனுப்பி இருந்தால் எதற்காக அனுப்பி இருப்பார்கள்? அந்த வாகனத்தில் வந்தவர்கள் யாரவது பிடிபட்டிருக்கிரார்களா? யாரும் பிடிபடவில்லை.. எல்லோரும் தப்பிவிட்டார்கள் என்று அந்த செய்தி கூறுகிறது. அப்படியானால் அவர்களை "தப்பவிட்டு விட்டார்களா?". அல்லது அப்படி ஒரு வாகனமும், வரவில்லை, அதில் யாரும் பயங்கரவாதிகளும் வரவில்லை, எல்லாமே அதிகாரிகளின் நாடகம் என்பதுதான் உண்மையா? இவ்வாறு கேள்விகள் எழ வேண்டாமா? அதுதான் பகுத்தறிவு?
ஒன்று சீக்கிய தேசிய இன சம்பந்தம். இன்னொன்று காஷ்மீர் தேசிய இனம் சம்பந்தம். அதாவது இரண்டு டேஹ்சிய இன போராட்டங்களிலும் சமந்தப்பட்ட "அப்சல் குரு", " தேவேண்டற்பல்சிங் புல்லார்" இருவரும் மரண தண்டனையை எதிர் நோக்கியிருக்கும் வெலௌஇல், இந்த செய்திகள் பரப்பப்புகின்றன. அதுவும், உள்துறை இரண்டு மரண தண்டனைகள் பற்றிய முடிவேடுதளிலும், " சட்டமன்றம், நீதிமன்றம்" என்று சிக்கலை எதிர்கொள்ளும் போது, இந்த செய்திகள் பரப்பபடுகின்றன. அதற்கு இந்த டில்லி வெடிகளுடன் கூடிய வாகனம் பயன்படுத்த படுகிறது.
இப்போது டில்லிக்கு இருக்கும் "நெருக்கடியை" எண்ணிப்பாருங்கள். காஷ்மீர் விசயத்தில் முதல் மைச்சர் தனது கட்சியின் தொண்டருக்கே "காவல் சாவு' அவ்ந்ததில் மாட்டிக் கொண்டார். எதிர்க் கட்சி துள்ளி குதிக்கிறது. மக்கள் எழுச்சி பெற்று ராணுவம், காவல் துறை ஆகியோருக்கு எதிராக இருக்கிறார்கள். காஷ்மீரை விட்டு ராணுவத்தை அகற்ற "கோரிக்கைகளா" எழுந்து விட்டன. காஷ்மீர் பற்றி "ஆராய" மத்திய அரசு ஏற்படுத்தியுள்ள நிபுணர் குழு உள்துறை அமைச்சரிடம் தனது அறிக்கையி கொடுத்து விட்டது. அதை பகிரங்கமாக உள்துறை வைக்க வேண்டும் என்றும் அவர்களே கேட்டுக் கொண்டுள்ளனர். பிரஷாந்த் பூஷன் "காஷ்மீர் மக்களின்" கருத்துக்களுக்காக வாக்கெடுப்பு வேட்னுமே ன்று வேறு கூறி, தனது அறை வரை 'அடிவாங்கி" விட்டார். அவரது அறையில் புகுந்து அடித்தவர்களை " நீதிமன்ற காவலுக்கு" கொண்டு செல்லும்போதும், அங்கே வந்து "அன்னா ஹசாரே" ஆட்களை அடித்து காவி உடைவாதிகள் "பகிரங்கமாக" கலாட்ட செய்வதை ஊடகங்களில் பார்க்கிறோம். அதை முன்கூட்டியே கண்டுபிடித்து "தடுக்க" டில்லியில் உளவு துறை வேலை செய்யவில்லை. அல்லது அவர்கள் ஏற்பாட்டில்தான் "அதுவே" நடந்துள்ளது என்பது தெரிகிறது.
இப்படி சூழலில், தில்லிக்குள் ஒரு வாகனம் "வெடிகளுடன்" வந்ததாம். பிடிபட்டதாம். ஆட்கள் ஓடிவிட்டார்களாம். யார் காதில் யார் பூ சுற்றுகிறார்கள்? இதில் ஒன்று புரிகிறது. உள்துறைக்கும், பிரதமர் அலுவலகத்திற்கும், இப்போது காஷ்மீர் விசயத்தில் "வசமான சிக்கல்" ஏற்பட்டுள்ளது. அதற்கு பரிகாரம் தேட, "பிரஷாந்த் பூஷன்" மீது தாக்குதல், "வெடிகளுடன் வாகனம்" எல்லாம் ஏற்பாடு செய்யும் நிர்ப்பந்தம் உளவு துறைக்கு ஏற்பட்டுள்ளது. இது "நியாயமான" சந்தேகம்தானே? இதுகூட ஏற்படவில்லையானால், நாம் ஒரு "முட்டாளுங்க".
Friday, October 14, 2011
Subscribe to:
Posts (Atom)