Tuesday, August 2, 2011

சூ.சாமி ஒரு "சூ,மந்திரக்காளியா?

அமெரிக்கா விரும்பியவுடன் "இந்தியாவிற்குள்" ஒரு "மத மோதல் சூறாவளியை" உருவாகும் வல்லமை அந்த "ஆளுக்கு" இருக்கிறதா? அந்த "ஆள்" வேண்டுமானால் அமெரிக்கா ஒற்றராக இருக்கலாம். ஆனால் "ஹார்வேர்ட்" பலகலைக் கழகத்தில் கற்ற அல்லது கற்கும் அனைவரும் அப்படி இருக்க வேண்டிய அவசியம் இல்லையே? இப்போது ஜூலை 11 இல் அதாவது அமெரிக்கா " தாவூது இப்ராஹீம்" பற்றி "பட்டியலில்" அறிவித்த பின்,மூன்றாம் நாளில், அந்த மும்பை குண்ட வெடிக்க வைத்தார்கள். அதனால் "அமெரிக்கா" பக்கம் மேலும் இந்தியா சாயவேண்டும் என்ற எதிர்பார்ப்பு.

அடுத்து ஜூலை 16 இல், சு.சாமி என்ற சுப்பிரமணிய சாமியை மும்பையிலிருந்து வெளிவரும் "டி.ஏன்.எ." என்ற டெய்லி நேசனல் அனலிசிஸ்" ஏட்டில் ஒரு "தூண்டிவிடும்" கட்டுரையை எழுத வைத்தார்கள். அதில் அவர் "இஸ்லாமிய பயங்கரவாதம்-எப்படிஒழிப்பது" என்று தலைப்பிட்டு எழுதினர். அதில் "இந்தியாவில்உள்ளமுஸ்லிம்கள் எல்லோரும் தங்களை பாரம்பரிய இந்துக்களாக இருந்தவர்கள்" என்று அறிவிக்கவேண்டும் என்று எழுதினார். மதமாற்றம் தடை செய்யப்படவேண்டும் என்றார். இந்து மதத்திற்கு திரும்ப வருவதை ஏற்றுக் கொள்ளவேண்டும் என்றும் எழுதினார்.

எந்த "சாதியில்" வேண்டுமானாலும் "திரும்பி வருகிறவர்கள்" ஸ்ர்கப் படவேண்டும் என்றும் எழுதினார். அதாவது ஒரு " இடதுவிலக்கை இந்துத்துவாவிற்கு" கொடுத்திருந்தார். இஸ்லாம் போர்தொடுத்து பிடித்த நாடுகளில் எல்லாம் "நூறு விழுக்காடு" முஸ்லிம்களாக இரண்டு பத்தாண்டுகளில் மாறிவிட்டார்கள் என்றும், ஆனால் எண்ணூறு ஆண்டுகள் கடுமையாக இஸ்லாம் ஆண்டும் கூட "ஒன்றுபட்ட இந்தியாவில் எழுபத்தி ஐந்து விழுக்காடு இந்துக்களே " இறந்தனர் என்றும் அதனால் 'அடிப்படைவாதி இஸ்லாமியர்கள்" இந்தியாவில் பயங்கரவாதம் செய்ய விரும்புவதாகவும் எழுதினார். இது நிச்சயமாக ஒரு வல்லரசின் சாதிகளுக்காக தீட்டப்பட்ட " நச்சு ஆராய்ச்சி விதையாகத்தான்" இருக்க வேண்டும்.

அந்த கட்டுரையை உடனடியாக "ஹார்வேர்ட்" பல்கலைகழக "இந்திய மாணவர்கள்" எதிர்த்து " மனு" ஒன்றை இணையத்தில் கட்டவிழ்த்து விட்டனர். அதில் " மதவெறி தூண்டும் கட்டுரை எழுதிய சு.சாமியயுடன் ஹார்வேர்ட் பலகலை இனி எந்த தொடர்பும்" வைத்துக் கொள்ளகூடாது என எழுதி இருப்ன்தனர். அவர்கள் "குமார் என்றும் சஞ்சய் பின்டோ" என்றும் பெயர் கொண்ட அதாவது இந்தியாவின் "இந்து மத" பின்னனி கொண்ட ஆராய்ச்சி மாணவர்கள். அவர்களதுவேண்டுகோளுக்குஉடனடியாக"இருநூறு மாணவர்கள்" கையெழுத்திட்டனர்.

இந்தியாவில் உள்ள "சிறுபான்மை உரிமை கவுன்சில்" ஜூலை 19 இல்,தனது கூட்டத்தில் இந்த புகாரை எடுத்துக் கொண்டது. இனி இந்தியமக்கள்தான் இந்த "சதிகார சாமியை" கவனத்துக் கொள்ளவேண்டும்.,"மதச்சார்பற்ற சக்திகளுக்கு" ஒரு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் "சு.சாமி" இந்திய தலைமை அமைச்சர் மன்மோகனை உச்சநீதிமன்ற நீதியரசரின் கோபத்திலிருந்து "காப்பாற்ற பிணை" எடுத்தவர் எனபதையும் நாம் நினைவு படுத்தவேண்டும். மீண்டும் மன்மோகனுக்கு ஆபத்து வரும் இந்நேரம் சு.சாமி "வன்முறையை" கிளப்பி விடுகிறாரா?

தமிழர் தலைவருக்கு போட்டியா?

எதிர்பாராத இடத்திலிருந்து தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. உலகத்தமிழர்கள் திணறிப் போனார்கள். அதனால் "நீங்கள்தான் இனி எங்கள் நம்பிக்கை" என்றனர். அந்த அளவுக்கு "அக்மார்க் முத்திரை வாங்கிய தமிழினத் தலைவர்களும்", "தமிழக மக்களும்" தங்களுக்கு எந்த உதவியும் தரவில்லையே என்று ஏங்கிப் போன "உலகத் தமிழினம்" இப்படித்ட் தான் தனது உணர்வுகளை காட்டமுடியும். ஆனால் "தனித் தானே தமிழினத் தலைவன்" என்று தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களால் அதைத் தாங்கமுடியாது. அதனால் அப்போதே "குதர்க்கம்" பேசினர்.

அடுத்து அமெரிக்காவின் "ஹிலாரி கிளிண்டன்" வேறு வருகை புரிந்தார. அவர், இவரை அடக்கிவிடுவார் என்றனர். அதற்கும் நாம் "இருக்கும்" என்றோம். ஆனால் "ஹிலாரியும்" தமிழக முதல்வர் சொல்கேட்டு மாறிவிட்டாரோ என்று நினைக்குமளவுக்கு "அமெரிக்காவின் பொருளாதார தடையும்" வந்துவிடும்போல இருக்கிறது. அதுகண்டு இங்குள்ள தமிழர்கள் " அந்த அம்மாவை" உண்மை தமிழச்சி என்று பாராட்டுகிறார்கள். இது நமது "அக்மார்க்" தமிழர் தலைவருக்கு பொறுக்கவில்லை. " உலகத் தமிழர்கள் அவரை உத்தமத் தாய் " என்று கூறுகிறார்களே என்று இப்போது "புலம்புகிறார்".


அடுத்து நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" பிரச்சனையை எழுப்பச் சொல்லி "தலைவி" சொல்ல, அதிமுக எம்.பி.களோ,இலங்கை "சிங்கள எம்.பி.களின் வருகையை" e எதிர்த்து "குரல்" எழுப்பி அந்த "தலைவி" புகழை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலும் உயர்த்தி விட்டனர். இப்போது "பா.மா.க. வெளியே வந்து "தனி அணி" என்கிறது. "வி.சீ.க" நானும் அப்படியே என்கிறது. "ம.தி.மு.க." வுடன் சேர்வோம் என்கின்றனர். அதன்மூலம் அதிமுக பெற்ற இடத்தை "தமிழினத் தலைவர்" இடத்தை உடைத்துவிடுவார்கள் என்று திமுக தலைமை அதிர்பார்த்து நிற்கிறது என்றும் ஒரு "குரல்" கேட்கிறது. எப்படியோ "தனக்கு கிடைக்காத" தமிழினத் தலைவர் நாற்காலி "அந்தமாவுக்கு" போய்விடக் கூடாது என்பதுதானே "அக்மார்க் தலைவரின்" உள்ளத்து ஆசை?

மானம் கப்பலேறி போகுதே.

இந்திய அரசுக்கு மானம் இல்லை. இலங்கை எம்.பி.களை வரவேற்று அவர்களை "தமிழ்நாட்டு எம்.பி.கள் எதிர்த்து முழக்கம் இட்டால், அதற்காக அந்த "சிங்கள பவுத்த பேராண்மை வாதிகளான போர்குற்றம் புரிந்த இரத்தக்கைகளுக்கு" கை கொடுத்து அவர்களிடம் மன்னிப்பு கேட்கும் ஒரு "மக்கள் அவைத்தலைவரை" கொண்டிருக்கும் நாடு. தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறப்பினர்கள் ஒருசேர எதிர்ப்பு கொடுத்தான் கூட, அது தமிழ்நாட்டு மக்களின் அதாவது எழரைகோடி மக்களின் உணர்வு என்று தெரிந்தும்கூட, மக்களவையை நடத்தும் "மீராகுமார்" புரிந்துகொள்ளவில்லைஎன்றால், இத நாட்டை இந்த நாடாளுமனறத்தை இனியும் எதற்காக "தமிழர்கள்" மதிக்க வேண்டும்?

இலங்கை எம்.பி.களின் குழுவிற்கு தலைமை தாங்கி வந்திருப்பவர் அங்குள்ள நாடாளுமன்ற லேரவைத் தலைவர். அதாவது அரசத் தலைவர் "மகிந்தாவின்" சகோதரர். அவரிடம் மீராகுமார் மன்னிப்பு கேட்கிறார் என்றால், ஒன்றரை லட்சம் தமிழர்களை கொன்றதற்காக, "ராஜபக்சே கும்பலும், டில்லி ஆட்சியாளர்களும்" எத்தனை முறை "தமிழர்களிடம்" மன்னிப்பு கேட்கவேண்டும்? ஜகஜீவன்ராமின் மகள் என்பதற்காகவும், ஒரு தலித் பெண் என்பதற்காகவும் இதுவரை மரியாதை தந்துவந்தோம் மீராகுமாருக்கு என்று நாம் கூறவேண்டி இருக்கிறது. தமிழகமே எழுந்து "டில்லியே ராஜபக்சேவிற்கு உதவியதற்காக தமிழர்களிடம் மன்னிப்பு கேள்" என்ற குரலை உயர்த்தவேண்டிய கட்டம் வந்துள்ளது. இதைத்தான் இன்று காலை வின் காட்சி ஊடகத்தின் நிகழ்ச்சியான" செய்திகளும், நிஜங்களும்" எடுத்து சொன்னது.