Tuesday, August 2, 2011

தமிழர் தலைவருக்கு போட்டியா?

எதிர்பாராத இடத்திலிருந்து தமிழருக்கு ஆதரவாக ஒரு தீர்மானம் சட்டமன்றத்தில் முன்வைக்கப்பட்டது. உலகத்தமிழர்கள் திணறிப் போனார்கள். அதனால் "நீங்கள்தான் இனி எங்கள் நம்பிக்கை" என்றனர். அந்த அளவுக்கு "அக்மார்க் முத்திரை வாங்கிய தமிழினத் தலைவர்களும்", "தமிழக மக்களும்" தங்களுக்கு எந்த உதவியும் தரவில்லையே என்று ஏங்கிப் போன "உலகத் தமிழினம்" இப்படித்ட் தான் தனது உணர்வுகளை காட்டமுடியும். ஆனால் "தனித் தானே தமிழினத் தலைவன்" என்று தம்பட்டம் அடித்துக்கொண்டவர்களால் அதைத் தாங்கமுடியாது. அதனால் அப்போதே "குதர்க்கம்" பேசினர்.

அடுத்து அமெரிக்காவின் "ஹிலாரி கிளிண்டன்" வேறு வருகை புரிந்தார. அவர், இவரை அடக்கிவிடுவார் என்றனர். அதற்கும் நாம் "இருக்கும்" என்றோம். ஆனால் "ஹிலாரியும்" தமிழக முதல்வர் சொல்கேட்டு மாறிவிட்டாரோ என்று நினைக்குமளவுக்கு "அமெரிக்காவின் பொருளாதார தடையும்" வந்துவிடும்போல இருக்கிறது. அதுகண்டு இங்குள்ள தமிழர்கள் " அந்த அம்மாவை" உண்மை தமிழச்சி என்று பாராட்டுகிறார்கள். இது நமது "அக்மார்க்" தமிழர் தலைவருக்கு பொறுக்கவில்லை. " உலகத் தமிழர்கள் அவரை உத்தமத் தாய் " என்று கூறுகிறார்களே என்று இப்போது "புலம்புகிறார்".


அடுத்து நாடாளுமன்றத்தில் "ஈழத் தமிழர்" பிரச்சனையை எழுப்பச் சொல்லி "தலைவி" சொல்ல, அதிமுக எம்.பி.களோ,இலங்கை "சிங்கள எம்.பி.களின் வருகையை" e எதிர்த்து "குரல்" எழுப்பி அந்த "தலைவி" புகழை உலகத் தமிழர்கள் மத்தியில் மேலும் உயர்த்தி விட்டனர். இப்போது "பா.மா.க. வெளியே வந்து "தனி அணி" என்கிறது. "வி.சீ.க" நானும் அப்படியே என்கிறது. "ம.தி.மு.க." வுடன் சேர்வோம் என்கின்றனர். அதன்மூலம் அதிமுக பெற்ற இடத்தை "தமிழினத் தலைவர்" இடத்தை உடைத்துவிடுவார்கள் என்று திமுக தலைமை அதிர்பார்த்து நிற்கிறது என்றும் ஒரு "குரல்" கேட்கிறது. எப்படியோ "தனக்கு கிடைக்காத" தமிழினத் தலைவர் நாற்காலி "அந்தமாவுக்கு" போய்விடக் கூடாது என்பதுதானே "அக்மார்க் தலைவரின்" உள்ளத்து ஆசை?

No comments:

Post a Comment