Wednesday, July 22, 2015

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]

ஜூலை-23.1999.படிப்பினைகள்...[ தொடர்ச்சி..]
--------------------------------------------------------------------
                     பேரணியையும், கூட்ட நெரிசலையும் கண்ட தமிழ் மாநிலக் காங்கிரசின் வில்லிவாக்கம் ச.ம.உ. ஜே.எம்.ஹாரூன் ஏற்கனவே ஜீப்பிலிருந்து இறங்கியிருந்ததால், ஜீப்பிற்கு முன்னே சென்று காவல்துறை அதிகாரிகளிடம் பேசி, மாவட்ட ஆட்சித் தலைவரிடம் ,பேரணித் தலைவர்களை அழைத்துச் செல்வதற்கான முயற்சியில் இருந்தார். ஊர்வலத்தின் பின்புறம் எதோ தகராறு நடக்கிறது. முன்புறம் காளர்கள் மரிப்பது போல பேரணியை முன் செல்ல விடாமல் இருக்கின்றனர்.திடீரென வலதுபுறம், ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்கு உள்ளே இருந்து, "கற்கள்" ஜீப்பை நோக்கியும், தலைவர்களை குறி வைத்தும், தொடர்ந்து எறியப்படுகிறது. தொண்டர்கள் கிருஷ்ணசாமியை காப்பாற்றவும், மற்றும் தலைவர்களை காப்பாற்றவும், ஜீப்பில் ஏறி, தங்கள் உடல்களால் மூடி மறைத்துக் கொள்கிறார்கள்.திடீரென ஆட்சித் தலைவர் அலுவலகத்தின் உள்ளிருந்து, ஒரு காவலரின் "துப்பாக்கி" குண்டு ஜீப்பை நோக்கி பறந்து வந்து முட்டி கீழே விழுகிறது. இந்த நேரத்தில்,"ஆல்பா,பாட்டா" என்று ஒரு "கட்டளை" அதிரடி காவல்துறைக்கு வாய் மூலம் குரலாக கொடுக்கப்படுகிறது. இதை கீழே நின்ற ஹாரூன் பாய் மட்டுமே கேட்டு பிறகு பதிவு செய்கிறார்.அந்த கட்டளை சொற்களுக்கு கட்டுண்ட காவல் அதிரடிப் படை பேரணி மீது கண்டபடி தாக்கத் தொடங்குகின்றனர்.

     சிதறி மக்கள் எல்லாம் ஓட, தாமிரபரணி ஆற்றை நோக்கி ஓடுகின்றனர். அப்போது ஒரு "கல்" ஜீப்பின் ஓட்டுனர் மீது வந்து விழுகிறது.அடி தாங்க மாட்டாமல் பயந்துபோன ஓட்டுனர்,ஜீப்பை கண்டபடி ஒட்டி,தலைவர்களும் அவர்களை காப்பாடர வந்த தொண்டர்களுடனும், கொக்கிரகுளம் ஊருக்குள் நேரே சென்று, இடதுபுறம் திருப்பி, ஆட்சித் தலைவர் அலுவலகம் பின்னால் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சென்று நிறுத்துகிறார்...பிறகு நடப்பதும்..மய்ர்கூசெரியும் செய்திகள்தான்...[ நான் இப்போது பணிக்கு செல்கிறேன்...வந்து எழுதுகிறேன்...மன்னிக்கவும்]
     

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.

ஜூலை -23, 1999 தந்த படிப்பினைகள்.
-------------------------------------------------------------
        அன்று  நெல்லை சந்திப்பிலிருந்து கிளம்பிய "மாஞ்சோலை தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் கோரிக்கை "பேரணி அமைதியாகத்தான் சென்று கொண்டிருந்தது. முந்தியநாள் வரை அனுமதி மறுத்த காவல்துறை கடைசியாக அனுமதி தந்தது. சந்திப்பு புகைவண்டி நிலையத்திலிருந்து புறப்பட்டு, அம்பேத்கர் சிலை, அன்றைய பேருந்து நிலையத்தை சுற்றி, எட்டப்பனாயகர் சாலை வழியாக, சுலோச்சனமுதலியார் பாலம் வழியாக கொககிரகுளம் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தை அடைவது என்பதுதான் பேரணியின் பாதை. அதிக தூரம் இல்லை. தொடர்ந்து நடந்துவந்த மாஞ்சோலை தோட்டத் தொழிலாளரது போராட்டங்கள், "தேவேந்திரகுல வேளாளர் கூட்டமைப்பு" தலைவரும், ஓட்டப்பிடாரம் எம்.எல்.ஏ. யுமான டாக்டர் க.கிருஷ்ணசாமியால் தலைமை தாங்கப்பட்டது. அப்போது சட்டமன்றத்தில் "தேவேந்திர சங்கம்" என்ற பெயரில்தான் அவர் சட்டமன்ற உறுப்பினராக பதிவாகி இருந்தார்..

           1995 ஆம் ஆண்டு கொடியங்குளம் கிராமத்தில் காவல்துறை புகுந்து நடத்திய அட்டூழியத்தால், கிளர்ந்து எழுந்த தேவேந்திர மக்கள்,மருத்துவர் கிருஷ்ணசாமி தலைமையில், மாநிலமெங்கும் ஒரு பெரும் எழுச்சியாக மாறி, அதுவே ஒரு பெரும் இயக்கமாக ஆனது. 1996 இல் ஓட்டப்பிடாரம் சட்டமன்றத் தொகுதியில் நின்ற கிருஷ்ணசாமி வெற்றி பெற்று, சட்டமன்றம் சென்றார்.நாடாளுமன்றத் தேர்தலில் தென்காசி தொகுதியில், அருணாச்சலத்தை எதிர்த்து நிற்கும்போது, அம்பாசமுத்திரம் தொகுதியில் உள்ள மாஞ்சோலைக்கு வாக்கு கேட்டு சென்றார். அப்போது அங்கிருந்த தேவேந்திர மக்கள் தங்கள் சமுதாயத் தலைவரிடம் வைக்கும் கோரிக்கையாக, தாங்கள் எப்படி "கொத்தடிமைகளாக" தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்கிறோம் என்பதை
விளக்கினார்கள்.அவர்களிடம் அப்போது கொடுத்த வாக்குறுதிப்படி அவர்களது "கூலி உயர்வு, வேலை நேரம்,பிரசவ விடுப்பு, சுதந்திரமான நடமாட்டம்" போன்ற கோரிக்கைகளை அடிப்படையாககே கொண்டு, முதலில் ஒரு "நடைப்பயணம்" மலையிலிருந்து, கீழே வந்து, மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரை நடததப்பட்டது. இவ்வாறு அறவழியில், தொடர்ந்து நடத்தப்பட்ட போராட்டங்களை, "பாம்பே-பர்மா ட்ரேடிங் கார்பரேசன்" என்ற ஆளை நிர்வாகம் எந்த கோரிக்கைக்கும் இறங்குவதாக இல்லை.

               அன்று நடந்த தி.மு.க. ஆட்சியில், உள்ளபடியே கிருஷ்ணசாமிக்கு நல்ல மரியாதை இருந்தது. காரணம் அ.இ.அ.தி.மு.க. ஆட்சியை தூக்கி எரித்ததில், தி.மு.க. ஆட்சியை கொண்டு வந்ததில், இந்த இயக்கத்திற்கு நல்லதொரு பங்கு இருந்தபோதும், முதல்வர் கருணாநிதி "தோட்ட நிர்வாகத்துடன்" மிக நெருக்கமாக இருந்ததால், மருத்துவருக்கு எதிரான "தவறான கருத்துகளை" அன்றைய எதிர்க்கட்சி தலைவரான, மூப்பனார் கட்சியை சேர்ந்த சோ.பாலகிருஷ்ணனிடம் முதல்வர் கலைஞர் கூறியுள்ளார். இதை சோ.பாலகிருஷ்ணனே பிறகு கூறியதால் தெரிய வந்தது. அதனால் மாஞ்சோலை தோட்டத் தொழிலலர்களது க்நியாயமான கோரிக்கைகள் நிறைவேற வில்லை. கைது செய்யப்பட்டு, திருச்சி சிறையில் இருந்த மாஞ்சோலை தொழிலாளர்களை விடுதலை செய்யவும் சேர்த்தே அந்த பேரணி நடத்தப்பட்டது.

       சென்னையில், மாரிஸ் விடுதியில், கூட்டப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில், ஜி.கே.மூப்பனார், நல்லகண்ணு,சி.பி.ஐ., சி.பி.எம்.தலைவர்கள், என பல கட்சிகளும் சேர்ந்து எடுத்த முடிவுப்படியே அன்றைய நெல்லை பேரணி ஏற்பாடு செய்யப்பட்டது. பேரணிக்கு முந்திய நாளே, முதல்வரது உத்தரவுப் படி,"பேரணியில் அணைத்து தலைவர்களையும்" கைது செய்யக் கூறி, வந்த வழிகாட்டலை, மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகம் திட்டமிட்டது என்பது பிறகு தெரிய வந்தது. அதன்படியே பேரணியில் வருவோரை, கற்கள் கொண்டும், துப்பாக்கி கொண்டும் "தாக்குவது என்ற திட்டம் போடப்பட்டது தெரியவருகிறது. பேரணி புறப்படும்போது அப்படி எதுவுமே நமக்கு தெரியவில்லை. பேரணியில் முன் வந்த "ஜீப்"இல் 7 எம்.எல்.ஏ.க்கள் கிருஷ்ணசாமி,சோ.பாலகிருஷ்ணன், அப்பாவு, சேர்மாதேவி எம்.எல்.ஏ., ஜே.எம்.ஹாரூன், ஈஸ்வரன்,உட்பட சி.பி.எம்.கட்சியின் மாவட்ட செயலாளர் தோழர் பழனி, ஆகியோருடன், நானும்,நடிகர் மன்சூர் அலி கான் போன்றோரும் இணைந்து சென்றோம். ஜீப்பில் இருந்து இரங்கி சென்ற என்னை,"முழக்கம்" போடா  தொண்டர்கள் வாகனம் மீது ஏற்றிவிட, மன்சுரையும் கீழே இறக்கி கூட்டத்தை வாகனத்திலிருந்து குறைக்க, ஜே.எம்.ஹாரூன் கீழே இறங்கி கூட்டத்தை ஒழுங்கு படுத்த சென்று விட்டார்.  முழக்கங்களை "ராகத்துடன்" நான் போட, தோழர்கள் அனைவரும் முறையாக ஆடி,பாடிக் கொண்டு, முழக்கங்களை எழுப்பினார்கள்.இப்படித்தான் அமைதியாக ஆனால் உற்சாகமாக பேரணி சென்று கொண்டு இருந்தது.

     "  மாஞ்சோலை தொழிலாளி, காரு,பங்களா கேட்டானா? உங்கப்பன் சொத்தை கேட்டானா? கூலி உயர்வு கேட்டதற்காக கைது செய்வது நியாயமா?--"என்பதுபோன்ற முழக்கங்களை எழுப்பி வந்தோம். அப்பாவு உற்சாகத்தில், "தனியார் ஊடகத்தில் பங்கு கேட்டானா?" என்ற பொருளில் முழக்கம் போட கூறினார். அதையும் போட்டோம்.இவாறு மெல்ல ஊர்ந்து சென்று கொண்டிருந்த பேரணி, மேம்பாலத்தை தாண்டி, சென்றது. கொக்கிரகுளம் முக்கில்,எம்.ஜி.ஆர். சிலை அருகே சிறிது நின்று விட்டு, ஆற்றுக்கு அருகே செல்லும் சாலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் நோக்கி சென்றது. அப்போது பேரணிக்கு இருபுறமும்,"காவலர் படை" வரிசையாக நிறுத்தப்பட்டது. அதன் சூட்சுமத்தை நாங்கள் அப்போது எண்ணிப் பார்க்க வில்லை.அந்த சிறிய சாலைக்குள்,ஒருபுறம் "ஆறு " ஓடுகிறது. இன்னொரு புறம், மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் முன்னே உள்ள சுவர். இடையில் வருகின்ற பேரணிக்கு, இருபுறமும் குறிப்பாக சுவர் பக்கத்தில், {தமிழ்நாடு ஓட்டல் அங்கே இருக்கிறது} எதற்காக காவலர்கள் நிறுத்தப்பட வேண்டும்? பேரணி மக்களை "நதியை நோக்கி" தள்ளிவிட அப்போதே அவர்களிடம் ஒரு "சதித் திட்டம்" இருண்டஹ்து என்பது பிறகு புரிய முடிந்தது.

    [ தொடர்ந்து நடந்ததை நாளை எழுதுகிறேன்.மன்னிக்கவும். நேரமில்லை.]

          

5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?

புலி கிலி உண்மையா? 5 ஆவது வன்னிப்போருகாக தயாராகிறோமா?
------------------------------------------------------------------------------------------------------------
    40 சயனைடு குப்பிகளுடன் ஒருவர் ராமேஸ்வரம் தீவில், உச்சிபுளியில் கைது என்கிறது காவல்துறை. யார் அவர்? அவர் தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு உதவியாளர் என்றும் சில ஏடுகள் அச்சிட்டுள்ளன. இவையெல்லாம் உண்மையா? ஆயுதப் போராட்டம் மீண்டும் வராதா? ஈழம் அப்போதுதான் விடுதலை பெறும் என்று எண்ணும் சிலர் இந்த செய்தியை கேள்விப்பட்டு பெருமகிழ்ச்சி அடைகிறார்கள். நமக்கு மட்டும் என்ன? அப்படி ஒன்று நடந்தால் மகிழ்ச்சிதானே? ஆனால் உண்மை நிலை என்ன? இப்போது இலங்கை தீவு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொண்டு வருகிறது. வருகிற ஆகஸ்ட்  மாதம் 17 ஆம் நாள் தேர்தல். அதில்  தேர்ந்தெடுக்கப்படும் நாடாளுமன்றஉறுப்பினர்கள், ஒரு "தலைமை அமைச்சரை" தேர்வு செய்வார்கள்.அந்த தலைமை அமைச்சராக இன்று தலைமை அமைச்சராக இருக்கும்  "ஐக்கய தேசிய கட்சியின்" தலைவர் ரணில் விக்கிரமசிங்கே  வருவதற்காக பிரும்ம பிரயத்தனத்தில் ஈடுபட்டுள்ளார். அவரை கொண்டு வர அமெரிக்காவும், மேற்கத்திய நாடுகளும் உறுதி பூண்டுள்ளன. ஆனால் மஹிந்த ராஜபக்சே தான் பிரதமராக வந்தால் மட்டும்தான் தன மீதான அனைத்து வழக்குகளையும், காலி செய்யமுடியும். அப்போதுதான் உலக சமூகத்தை தனக்கு எதிராக் திருப்பி உள்ள சக்திகளிடமிருந்து,தப்பிக்க முடியும். இப்படி எண்ணிப் பார்த்து "தான்தான் தலைமை அமைச்சராக" வரவேண்டும் என்பதற்கான வேலைகளை செய்துவருகிறார் ராஜபக்சே..

       இந்த நேரத்தில் மூன்று நாட்கள் முன்னாள், ராஜபக்சே ஒரு "புரளியை" கிளப்பி விட்டுள்ளார். "புலிகள் மீண்டும் உருவாக்கி வருகிறார்கள்" ஆபத்து அதிகம் இருக்கிறது. இதுதான் இன்று ராஜபக்சே "சிங்கள" மக்கள் மத்தியில் கிளப்பிவிடும் பீதி. அதன்மூலம் அவர்களது வாக்குகள் தனக்கு மட்டுமே விழுவதற்கு அவர் தயார்படுத்த தொடக்கி விட்டார்.அதற்காக அவர் சில நம்பகமான ஆதாரங்களை மக்கள் மத்தியில் குறிப்பாக சிங்கள மக்களான வாக்காளர்கள் மத்தியில் நிரூபிக்க வேண்டுமே? ராஜபக்சேக்கு உதவி செய்ய இப்போது யார் இருக்கிறார்கள்? பாகிஸ்தான் இருக்கிறது. சீனா இருக்கிறது. அது போதுமா? அமெரிக்கா முழுமையாக் இறங்கி,ரணிலுக்கு வேலை செய்யும்போது தனக்கு யாரெல்லாம் இருக்கிறார்கள் என்று சுற்று முட்டும் பார்ககிறார்.அப்போது தென்பட்டதுதான் இந்திய வெளிவிவகார அமைச்சகத்தின் உளவு துறையான "ரா" அமைப்பு.

      ஏற்கனவே நடந்து முடிந்த "அதி[பர"தேர்தலில் இந்திய உளவு துறையான "ரா" தனக்கு எதிராக வேலை செய்ததாக குற்றம் சாட்டியவர்தான் மகிந்தா.. அப்போது "ரா" அதற்கு மறுப்பு கொடுத்தது.ஆனாலும் அதிபராக வெற்றிபெற்ற மைத்திரிபால சிரிசேனா,தனது விசுவாசத்தை காட்ட, முதல் பயணமே "இந்தியாவிற்கு" என்பதாக நிகழ்த்தி காண்பித்தார். இப்போது மகிந்தா, மைதிரிபாலா, சந்திரிகா ஆகியோர் இருக்கின்ற "இலங்கை சுதந்திர கட்சியும், ஐக்கிய இலங்கை மக்கள் கூட்டணியும்" மகிந்தாவின் செல்வாக்கில் உள்ளன. அதில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்தா விசுவாசத்தை காட்டி வருகின்றனர். அதனால்தான் மைதிரிபாலாவும், ராஜபக்சேவின் "வேட்புமனுவை" எதிர்க்காமல், ஆதரிக்க வேண்டிய நிலைமை உருவாக்கி உள்ளது. அவர்களது "கள்ள, அல்லது நேரடிஉறவு", வெற்றிக்கு," புலி என்ற கிலியை" சிங்கள மக்கள் மத்தியில் கிளப்ப வேண்டியிருக்கிரது. ஏற்கனவே "புலிகளை வெற்றி பெற்றவர் மஹிந்தாதான்" என்ற உணர்வே சிங்கள மக்கள் மத்தியில் அதிகமாக காணப்படுகிறது.அதனால் மீண்டும் புலி வருகிறது என்று மக்களை நம்ப வைத்து விட்டால் தென்னிலங்கை  சிங்கள மக்கள் மீண்டும் ராஜபக்சேவையே தேர்வு செய்வார்கள்.என்பதே ராஜபக்சே கும்பலது எண்ணம்.

       இந்த நேரம் "சிவாஜிலிங்கம்" ஒரு தந்திரம் எடுத்துள்ளார். ராஜபக்சேவிற்கு எதிராக அவரது தொகுதியிலேயே நிற்கிறார். அது சிங்கள தொகுதி. ஆனாலும் இந்த தேர்தலை பயன்படுத்திக் கொண்டு,"சிங்கள மக்கள் மத்தியில் இறங்கி பரப்புரை செய்யமுடியாது என்றாலும், தான் வானொலி மூலம் ராஜபக்சே எந்த அளவு இன அழிப்பு, போர்குற்றங்கள் புரிந்துள்ளார்" என்பதை வெளிப்படுத்துவேன் என்று அவர் கூறியுள்ளார். இது கண்டிப்பாக ராஜபக்சேவிற்கு ஒரு சவால்தான்.அதனை எதிர்கொள்ள ராஜபக்சே ஒரு தந்திரம் செய்துவிட்டார். அதாவது ஊடகங்கள் மூலம்,"ராஜபக்சேவை எதிர்த்து, பிரபாகரனின் உறவினர் சிவாஜிலிங்கம் நிற்கிறார்" என்று பரப்ப தொடக்கி உள்ளார். சிவாஜிலிங்கம் "டெலோ" அமைப்பை சேர்ந்தவர். அவர் வல்வெட்டிதுறைகாரர்  என்பதும், பிரபாகரனுக்கு உறவினர் எனபதும் வேறு விஷயம்.ஆனாலும் சிவாஜிலிங்கம் டெலோவின் எம்.பி.யாக இருக்கும்போது, பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் உட்பட இதே ஊடகங்கள் கூறினார்களா? இல்லையே? சிவாஜிலிங்கம் வடக்கு மாகாணசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டபோது பிரபாகரனின் உறவினர் என்று இவர்கள் கூறினார்களா? இல்லையே? பிரபாகரனின் தாயார் பார்வதி அம்மாளை, அவரது உடல் நிலை மோசமான போது சிவாஜிலிங்கம்  கவனித்து வந்தாரே அப்போது இவர்கள் எல்லாம், சிவாஜிலிங்கத்தை பிரபாகரனின் உறவினர் என்று கூறினார்களா? இல்லையே? இப்போது ராஜபக்சேவின் கூற்றான " புலிகள் மீண்டும் வந்துள்ளனர்" என்ற பீதியை சிங்கள மக்கள் மத்தியில் உறுதிப்படுத்த சிவாஜிலிங்கம் பற்றி "புதிய கோணத்தில்" பரப்புரை செய்கிறார்கள்.
 அதற்கு ஊடகங்களும் "பலி" ஆகிறார்கள்.


     இந்த நேரத்தில்தான் திடீரென ஒருவர் 40 சயனைட் குப்பிகளுடன் இலங்கை செல்ல முயற்சிக்கும்போது பிடிபடுகிறார். அதாவது இலங்கை சென்று "புலிப்படையை திரட்டி தாக்குதல் நடத்த புலிகளின் வழமையான பாணியான சயனைடு குப்பிகளை" ஏந்திவரும் சாகத் தயாரான புலிப் படைப் பொடியன்கள் இருப்பதாக காட்டுவதற்கு இந்த "நாடகம்" உதவும் அல்லவா? அப்படியானால் இந்த நாடகத்திற்கு ஆள்களை "தயார்" செய்தது ராஜபக்சேவின் உளவாளிகள் மட்டுமா? இந்திய அரசின் உளவு துறையின் துணையுடனா? ராஜபக்சேவிற்கு எதிராக் மைதிரிபாலாவிற்கு அதிபர் தேர்தலில் உதவியதாக "குற்றம்" சாட்டப்பட்ட  "ரா"பிரிவு, பிராயச்சித்தமாக இப்போது அதே "மைதிரிபாலா, ராஜபக்சேவுடன்" இணைந்து கொண்டதால், தாராளமாக அவர்களுக்கு உதவ, இந்த "நாடகத்தை" வசனம், எழுதி, தயாரித்து நடத்தி காட்டியுள்ளனரா? அதுவும், இலங்கையில், தென்னிலங்கை சிங்கள மக்களின் வாக்குகள்தான் "நாடாளுமன்ற தேர்தலில் தீர்மானிக்கும்" என்று கணித்து, அதனால் ராஜபக்சேதான் வருவார் என புரிந்துகொண்ட, "ரா" அதிகாரிகள் அதற்கேற்ற வகையில், இதை செய்துள்ளனரா? 

Dinamalar Founder Mr.Ramasubbaiyar Birthday Tribue

தினமலர் ஆசிரியரும், நிறுவனருமான  திரு.ராமசுப்பைய்யருடன் பழகிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.திருநெல்வேலி, சந்திப்பில், ஸ்ரீபுரம் தெருவில், நான் எனது தாத்தா வழக்கறிஞர் கே.வி.நாராயணன் அவர்களது வீட்டில் பிறந்து வளர்ந்த போது பள்ளி வகுப்பு முடித்தபோது,கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய காலம், எங்கள் வீட்டு எண் 24 என்றால், தினமலர் ராமசுப்பய்யர் அவர்கள் அப்போது வாடகைக்கு இருந்த வீட்டு எண் 23. அப்போது தினமலர் நெல்லையிலும் ஆழமாக கால் பாதிக்கும் காலம். எளிமையாகவும், எளிதாக பேசுபவராகவும் அய்யா இருப்பார்.

        46 ஆண்டுகளுக்கு முன்பு...1971 ஆம் ஆண்டு. தேர்தல் நாடெங்கும் வரும் நேரம்.நான் புரட்சிகர இடதுசாரி கருத்துக்களை தாங்கி வளர்ந்தேன். அவர் முழுமையாக நேர் எதிரான கருத்துகளை குறிப்பாக "ஜனசங்கத்தின்" கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதுதான் எனது புரிதல்.ஆனாலும், "இண்டிகேட்,சிண்டிகேட்" என்று இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் தலைமையில் சிண்டிகேட்  காங்கிரசும் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தன. தேர்தலை புறக்கணிக்கும் கருதது கொண்ட நான் மக்கள் மத்தியில் , தேர்தல் முக்கிய அரசியல் விவாதமாக இருந்ததால், அதிலும் "நமது கருத்தை"கூறவேண்டுமே என்பதற்காக, ஆளும் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து பரப்புரையில் இறங்கினேன்.

        இந்திரா காந்தி தலைமையில், இந்த நாடு எப்படி "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு" அடகு வைக்கப்படுகிறது என்பதை பல்வேறு "ஆதரங்களுடன்" 10 க்கு மேற்பட்ட ""தட்டிகளை" தயார் செய்து, அவற்றில்,ஒவ்வொன்றிலும், "புள்ளிவிவரத்துடன்" நாட்டை ஆள்வோரது கட்சி, ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுடைய நலன்களுக்காக் இருக்கிறது என்று அம்பலப்படுத்தினேன். அந்த "நீளமும், சிவப்பும்" கலந்த எழுத்துக்களால் உள்ள "தட்டிகளை" ஸ்ரீபுரம் தெரு துவங்கும் இடத்தில, "நெல்லையப்பர் நெடுஞ்சாலை" முக்கில்,"தட்டிகளை" கட்டி வைத்தேன்.அங்கெ ஒரு மேலப்பாளையம் பாயுடைய கடை உண்டு. அதன் அருகே அந்த காலத்தில்,அந்த தட்டிகள் பெரிய அளவில் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து, டேஹ்ர்தல் நேர பரப்புரகளாக அமைந்தன.

       அந்த தட்டிகளை படித்துப் பார்த்த திரு.ராமசுப்பய்யர் அவர்கள் என்னைப் பாராட்டினார். என்னிடம் பல நாட்டு விசயங்களை பற்றி நிறைய பேசுவார். எல்லையில், இந்திய ராணுவம் சீனாவுடன் நடந்த சண்டையில், எப்படி பலவீனமாக இருந்தது என்று "நேரு காலத்தை" பற்றி பல குறைகளை எடுத்து சொல்லுவார். அந்த நேரம் ஒருநாள்,சிந்துபூந்துறையில், "சிண்டிகேட் காங்கிரஸ்" கட்சியின் பொதுக கூட்டம் சென்றேன், அதில் பேசிய,வழக்கறிஞர் மங்கள்ராஜ்,"ஸ்ரீபுரம் தெரு முக்கில்" போய் பாருங்கள்,அங்கே வைக்கப்பட்டுள்ள தட்டிகள் எந்த அளவுக்கு அரசியல் புள்ளி விவரங்களை  கூறுகின்றன" என்று பாருங்கள் என பேசினார். எனக்கு மகீழ்சசியாக இருந்தது.