Wednesday, July 22, 2015

Dinamalar Founder Mr.Ramasubbaiyar Birthday Tribue

தினமலர் ஆசிரியரும், நிறுவனருமான  திரு.ராமசுப்பைய்யருடன் பழகிய நாட்களை எண்ணிப் பார்க்கிறேன்.திருநெல்வேலி, சந்திப்பில், ஸ்ரீபுரம் தெருவில், நான் எனது தாத்தா வழக்கறிஞர் கே.வி.நாராயணன் அவர்களது வீட்டில் பிறந்து வளர்ந்த போது பள்ளி வகுப்பு முடித்தபோது,கல்லூரி வாழ்க்கையை தொடங்கிய காலம், எங்கள் வீட்டு எண் 24 என்றால், தினமலர் ராமசுப்பய்யர் அவர்கள் அப்போது வாடகைக்கு இருந்த வீட்டு எண் 23. அப்போது தினமலர் நெல்லையிலும் ஆழமாக கால் பாதிக்கும் காலம். எளிமையாகவும், எளிதாக பேசுபவராகவும் அய்யா இருப்பார்.

        46 ஆண்டுகளுக்கு முன்பு...1971 ஆம் ஆண்டு. தேர்தல் நாடெங்கும் வரும் நேரம்.நான் புரட்சிகர இடதுசாரி கருத்துக்களை தாங்கி வளர்ந்தேன். அவர் முழுமையாக நேர் எதிரான கருத்துகளை குறிப்பாக "ஜனசங்கத்தின்" கருத்துக்களை கொண்டிருந்தவர் என்பதுதான் எனது புரிதல்.ஆனாலும், "இண்டிகேட்,சிண்டிகேட்" என்று இந்திரா காங்கிரசும், நிஜலிங்கப்பா, காமராஜ் தலைமையில் சிண்டிகேட்  காங்கிரசும் தேர்தல் களத்தில் இறங்கியிருந்தன. தேர்தலை புறக்கணிக்கும் கருதது கொண்ட நான் மக்கள் மத்தியில் , தேர்தல் முக்கிய அரசியல் விவாதமாக இருந்ததால், அதிலும் "நமது கருத்தை"கூறவேண்டுமே என்பதற்காக, ஆளும் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து பரப்புரையில் இறங்கினேன்.

        இந்திரா காந்தி தலைமையில், இந்த நாடு எப்படி "அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு" அடகு வைக்கப்படுகிறது என்பதை பல்வேறு "ஆதரங்களுடன்" 10 க்கு மேற்பட்ட ""தட்டிகளை" தயார் செய்து, அவற்றில்,ஒவ்வொன்றிலும், "புள்ளிவிவரத்துடன்" நாட்டை ஆள்வோரது கட்சி, ஏகாதிபத்திய தரகு முதலாளிகளுடைய நலன்களுக்காக் இருக்கிறது என்று அம்பலப்படுத்தினேன். அந்த "நீளமும், சிவப்பும்" கலந்த எழுத்துக்களால் உள்ள "தட்டிகளை" ஸ்ரீபுரம் தெரு துவங்கும் இடத்தில, "நெல்லையப்பர் நெடுஞ்சாலை" முக்கில்,"தட்டிகளை" கட்டி வைத்தேன்.அங்கெ ஒரு மேலப்பாளையம் பாயுடைய கடை உண்டு. அதன் அருகே அந்த காலத்தில்,அந்த தட்டிகள் பெரிய அளவில் "இந்திரா காங்கிரசை" எதிர்த்து, டேஹ்ர்தல் நேர பரப்புரகளாக அமைந்தன.

       அந்த தட்டிகளை படித்துப் பார்த்த திரு.ராமசுப்பய்யர் அவர்கள் என்னைப் பாராட்டினார். என்னிடம் பல நாட்டு விசயங்களை பற்றி நிறைய பேசுவார். எல்லையில், இந்திய ராணுவம் சீனாவுடன் நடந்த சண்டையில், எப்படி பலவீனமாக இருந்தது என்று "நேரு காலத்தை" பற்றி பல குறைகளை எடுத்து சொல்லுவார். அந்த நேரம் ஒருநாள்,சிந்துபூந்துறையில், "சிண்டிகேட் காங்கிரஸ்" கட்சியின் பொதுக கூட்டம் சென்றேன், அதில் பேசிய,வழக்கறிஞர் மங்கள்ராஜ்,"ஸ்ரீபுரம் தெரு முக்கில்" போய் பாருங்கள்,அங்கே வைக்கப்பட்டுள்ள தட்டிகள் எந்த அளவுக்கு அரசியல் புள்ளி விவரங்களை  கூறுகின்றன" என்று பாருங்கள் என பேசினார். எனக்கு மகீழ்சசியாக இருந்தது.

1 comment:

சேக்காளி said...

ஸ்ரீபுரம் மேல் தட்டு மக்களின் வசிப்பிடமல்லவா. அங்கிருந்து ஒரு புரட்சிகரமானவரா?.ஆச்சரியமாக இருக்கிறது மணிசார்.

Post a Comment