Sunday, July 19, 2015

கடற்கரையையே விததுப்போட்டானுகளா?

 "மெரினா கரையிலே, நடந்தா காத்துல, கலந்தா மூச்சுல, கவுந்துட்ட மாப்பிள"..என்ற பாடலை "சிறைக்குள்" ஆர்யாவும், விஜய் சேதுபதியும்,மற்ற சிறைவாசிகளுடன் பாடினாங்கன்னா,  அது "புறம்போக்கு எனும் பொதுவுடைமை" எனும் திரைப்படம் என்று கூறுவீர்கள். அந்த பாட்டை ரசித்து சிறைவாசிகள் பாடிக்கொண்டிருந்தாலும், அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே, "கண்காணித்து" வருபவர் நடிகர் "ஷாம்" என்று கூறிவிடுவீர்கள். ஆனால் அந்தப் படம் எடுக்கும்போது இருந்த "மெரினா கடற்கரை" இனி கிடையாது, அல்லது கிடைக்காது அல்லது இருக்காது என்று கூறுகிறார்களே? ஏன் இந்த வில்லங்கம்?

          சென்ற வாரம் நாமெல்லாம் கவனிக்காத ஒரு செய்தி நாளேடுகளில் வந்தது. அதாவது நமது "சென்னை மாநகராட்சி" கூடியபோது, "மெரினா நீச்சல் குளத்தை" தனியார் நிறுவனத்துக்கு, "ஏலத்தில் அல்லது குத்தகைக்கு" கொடுத்துவிட்டோம் என்ற முடிவு. அடுத்து, மெரினா கடற்கரையை "பராமரிக்க" "ரிலையன்ஸ்" நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டார்கள். இதுபோல தனியார் நிறுவனங்களுக்கு "மூன்று பூங்காகளை" கொடுத்துள்ளனர். யார் இந்த மாநகராட்சிகாரர்கள்? இவர்கள் எப்படி சென்னையின் "பாரம்பரியமான" கடற்கரையை யாரோ தனியாருக்கு "தாரை" வார்க்க? இப்படி கேள்விகள் எழுகின்றன. சென்னையிலுள்ள "மெரினா கடற்கரை" நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் பொது சொத்தாகத் தான் இருந்துவருகிறது. சமீப காலம்   வரை, கடற்கரை "பொதுப்பணித்துறையின்" கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால், "சீரணி அரங்கம்" இருந்த காலத்தில், அதில் கூட்டம்போட  காவல்துறை அனுமதி பெறுவதுபோல, "கலங்கரை விளக்கம்" அருகே கூட்டம் போடவும், ஒருவர் "பொதுபணிதுறை" அனுமதியை வாங்கவேண்டும் என்ற பழக்கம் இருந்தது. அந்த பொறுப்பை "பொதுப் பணித்துறை" சரியாக கவனிக்கவில்லை என்று கூறி, அந்த கடற்கரை பராமரிப்பை, "மாநகராட்சிக்கு" கைமாற்றி கொடுத்தார்கள்.

    சமீபத்தில் "சீனா" சென்று வந்த சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள், அங்கே சீனாவில் "என்னவெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" போட்டுவிட்டு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.இப்போது சென்றவாரம் மாநகராட்சி கூட்டத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். அதன்மூலம் "மெரினா"வை "ரிலையன்சுக்கு" ஒப்பந்தம் செய்து  "பராமரிப்புக்கு" என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நாட்டிற்கு "நல்லது" செய்வதற்காக உருவானதா? அல்லது தனியார் "லாபம்" ஈட்டுவதற்காக உருவானதா? அவர்களுக்கு சென்னை மக்கள் சுதந்திரமாக மெரினா கடற்கரையை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதற்கு எனன "தலைவிதியா?" அதை வைத்து எந்தளவுக்கு "காசு" பார்க்கலாம் என்று எண்ணுவார்களா?

       இப்போது மெரினா கடற்கரையில், மணலில், காந்தி சிலை அருகே உள்ள,"சஹார ரெஸ்டாரன்ட்"இன் அருகே உள்ள மணலில் "நீளமான குழி" தோண்டி  "குழாய்களை" பதித்து விட்டார்கள். அந்த குழாய்கள் "தண்ணீர்" கொண்டுவரும் என்றும், அதை வைத்து "கடற்கரையை பராமரிப்போம்" என்று அதன் மேலாளர் நம்மிடம் இன்று கூறினார். உங்கள் " திட்டம்" வரைபடம் கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு "இன்னமும் எங்கள் திட்டத்திற்கு அனுமதி" பெறவில்லை.நாங்கள் அனுமதிக்காக எங்கள் திட்டத்தை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளோம் என்று கூறினார். அதாவது திட்ட ஒப்புதல் பெறாமலேயே   ரிலையன்ஸ் நிறுவனம் "கடற்கரையை" தோண்ட தொடங்கிவிட்டனர். எந்த தைரியத்தில், யாருடைய பின்னணி பக்க பலத்தில், அவர்கள் கடற்கரையை "தோண்ட" துவங்கினர்?

             ஏற்கனவே  இதே "ரிலையன்ஸ் நிறுவனம்" மயிலாப்பூர் லஸ் தொடக்கி, கச்சேரி சாலை வழியாக,சாலையின் நடுவில் "இரவு" நேரத்தில் நீண்ட குழிகளை தோண்டி அதை மெரினா நோக்கி கொண்டுவந்ததும், அதை எதிர்கொண்டு கேள்வி கேட்டவர்கள், அதற்கு தற்காலிக "முற்றுப்புள்ளி" வைத்ததும் நமக்கு தெரியும். இந்த "பகிரங்க" ஏலம் விடுதலை தஹ்டுது நிறுத்த யார் "பூனைக்கு மணி" கட்டப் போகிறார்கள்?.
------------------------------------------------------------------
  மெரினா கரையிலே, நடந்தா காத்துல, கலந்தா மூச்சுல, கவுந்துட்ட மாப்பிள..என்ற பாடலை "சிறைக்குள்" ஆர்யாவும், விஜய் சேதுபதியும்,மற்ற சிறைவாசிகளுடன் பாடினாங்கன்னா,  அது "புறம்போக்கு எனும் பொதுவுடைமை" எனும் திரைப்படம் என்று கூறுவீர்கள். அந்த பாட்டை ரசித்து சிறைவாசிகள் பாடிக்கொண்டிருந்தாலும், அவர்களை உற்றுப் பார்த்துக்கொண்டே, "கண்காணித்து" வருபவர் நடிகர் "ஷாம்" என்று கூறிவிடுவீர்கள். ஆனால் அந்தப் படம் எடுக்கும்போது இருந்த "மெரினா கடற்கரை" இனி கிடையாது, அல்லது கிடைக்காது அல்லது இருக்காது என்று கூறுகிறார்களே? ஏன் இந்த வில்லங்கம்?

          சென்ற வாரம் நாமெல்லாம் கவனிக்காத ஒரு செய்தி நாளேடுகளில் வந்தது. அதாவது நமது "சென்னை மாநகராட்சி" கூடியபோது, "மெரினா நீச்சல் குளத்தை" தனியார் நிறுவனத்துக்கு, "ஏலத்தில் அல்லது குத்தகைக்கு" கொடுத்துவிட்டோம் என்ற முடிவு. அடுத்து, மெரினா கடற்கரையை "பராமரிக்க" "ரிலையன்ஸ்" நிறுவனத்துக்கு ஒப்பந்த அடிப்படையில் கொடுத்து விட்டார்கள். இதுபோல தனியார் நிறுவனங்களுக்கு "மூன்று பூங்காகளை" கொடுத்துள்ளனர். யார் இந்த மாநகராட்சிகாரர்கள்? இவர்கள் எப்படி சென்னையின் "பாரம்பரியமான" கடற்கரையை யாரோ தனியாருக்கு "தாரை" வார்க்க? இப்படி கேள்விகள் எழுகின்றன. சென்னையிலுள்ள "மெரினா கடற்கரை" நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக மக்களின் பொது சொத்தாகத் தான் இருந்துவருகிறது. சமீப காலம்   வரை, கடற்கரை "பொதுப்பணித்துறையின்" கட்டுப்பாட்டில்தான் இருந்தது. இன்னமும் சொல்லப்போனால், "சீரணி அரங்கம்" இருந்த காலத்தில், அதில் கூட்டம்போட  காவல்துறை அனுமதி பெறுவதுபோல, "கலங்கரை விளக்கம்" அருகே கூட்டம் போடவும், ஒருவர் "பொதுபணிதுறை" அனுமதியை வாங்கவேண்டும் என்ற பழக்கம் இருந்தது. அந்த பொறுப்பை "பொதுப் பணித்துறை" சரியாக கவனிக்கவில்லை என்று கூறி, அந்த கடற்கரை பராமரிப்பை, "மாநகராட்சிக்கு" கைமாற்றி கொடுத்தார்கள்.

    சமீபத்தில் "சீனா" சென்று வந்த சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி அவர்கள், அங்கே சீனாவில் "என்னவெல்லாம் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்" போட்டுவிட்டு வந்தார் என்பது இதுவரை தெரியவில்லை.இப்போது சென்றவாரம் மாநகராட்சி கூட்டத்தில் இதுபோன்ற ஒரு தீர்மானத்தை கொண்டுவந்து அனுமதி அளித்துள்ளார்கள். அதன்மூலம் "மெரினா"வை "ரிலையன்சுக்கு" ஒப்பந்தம் செய்து  "பராமரிப்புக்கு" என்ற பெயரில் கொடுத்துள்ளார்கள். ரிலையன்ஸ் நிறுவனம் இந்த நாட்டிற்கு "நல்லது" செய்வதற்காக உருவானதா? அல்லது தனியார் "லாபம்" ஈட்டுவதற்காக உருவானதா? அவர்களுக்கு சென்னை மக்கள் சுதந்திரமாக மெரினா கடற்கரையை பயன்படுத்த வேண்டும் என்று எண்ணுவதற்கு எனன "தலைவிதியா?" அதை வைத்து எந்தளவுக்கு "காசு" பார்க்கலாம் என்று எண்ணுவார்களா?

       இப்போது மெரினா கடற்கரையில், மணலில், காந்தி சிலை அருகே உள்ள,"சஹார ரெஸ்டாரன்ட்"இன் அருகே உள்ள மணலில் "நீளமான குழி" தோண்டி  "குழாய்களை" பதித்து விட்டார்கள். அந்த குழாய்கள் "தண்ணீர்" கொண்டுவரும் என்றும், அதை வைத்து "கடற்கரையை பராமரிப்போம்" என்று அதன் மேலாளர் நம்மிடம் இன்று கூறினார். உங்கள் " திட்டம்" வரைபடம் கொடுங்கள் என்று கேட்டோம். அதற்கு "இன்னமும் எங்கள் திட்டத்திற்கு அனுமதி" பெறவில்லை.நாங்கள் அனுமதிக்காக எங்கள் திட்டத்தை மாநகராட்சியிடம் கொடுத்துள்ளோம் என்று கூறினார். அதாவது திட்ட ஒப்புதல் பெறாமலேயே   ரிலையன்ஸ் நிறுவனம் "கடற்கரையை" தோண்ட தொடங்கிவிட்டனர். எந்த தைரியத்தில், யாருடைய பின்னணி பக்க பலத்தில், அவர்கள் கடற்கரையை "தோண்ட" துவங்கினர்?

             ஏற்கனவே  இதே "ரிலையன்ஸ் நிறுவனம்" மயிலாப்பூர் லஸ் தொடக்கி, கச்சேரி சாலை வழியாக,சாலையின் நடுவில் "இரவு" நேரத்தில் நீண்ட குழிகளை தோண்டி அதை மெரினா நோக்கி கொண்டுவந்ததும், அதை எதிர்கொண்டு கேள்வி கேட்டவர்கள், அதற்கு தற்காலிக "முற்றுப்புள்ளி" வைத்ததும் நமக்கு தெரியும். இந்த "பகிரங்க" ஏலம் விடுதலை  தடுதது  நிறுத்த யார் "பூனைக்கு மணி" கட்டப் போகிறார்கள்?.இப்ப சொல்லுங்க. கண்காணிக்கும் "ஷாம்" பாத்திரத்தில் இருப்பவர் யார்? சைதையாரா?

No comments:

Post a Comment