Sunday, April 22, 2012

இன்று இரவு முடிந்தால் ஜெயா டி.வி. காணுங்கள்.


இன்று இரவு முடிந்தால் ஜெயா டி.வி. காணுங்கள். ஈழத்தமிழர்களின் பல இன்னல்களை நாம் பட்டியல் போட்டு பேசிவரும் நேரத்தில், போர்குற்றங்களை, மனித உரிமை மீறல்களை, மானுடத்திற்கு எதிரான குற்றங்களை, பல கோணங்களில் விளக்கி எழுதி, பேசி வரும் காலத்தில், இதுவரை தொகுக்கப்படாத ஒரு முக்கிய இடத்தை வழக்கறிஞர் பாண்டிமாதேவி தொகுத்துள்ளார். அதுதான், "பெண்களின் பார்வையிலிருந்து.." அதாவது, போரை, போருக்கு பின்னுள்ள ராணுவ நடமாட்டத்தை, போரின் நேரத்தில் ராணுவ செயல்பாட்டை, பொதுவாக ஆண்கள் ஆளும் உலகின் பார்வையை, பலப்பல வகைகளில் பலப்பல அமைப்புகளின் தொகுப்புகளில் இருந்து எடுத்து, மொத்த தொகுப்பாக "போராட்டமும், வாழ்வுரிமையும்" என்பதுபோல ஒரு ஆங்கில தொகுப்பை செய்துள்ளார். அதன் அறிமுகத்தை, அல்ல்லது அதில் உள்ள கருத்துகளை, இன்று இரவு 10 மணிக்கு,.ஜெயா தொலைக்காட்சியில் ரபி பர்நார்டுடன் உள்ள தஹ்னது உரையாடலில் பாண்டிமாதேவி கூறுகிறார். நேநேகள் தவற விட்டால், வருகிற செவ்வாய் கிழமை இரவு "பத்தரை மணிக்கு" அதே ஒளிபரப்பை ஜெயா பிளஸ் காட்சி ஊடகத்தில் காணலாம்.

Thursday, April 19, 2012

மகேஷின் கட்டுரையும், அதையொட்டி புதிய கோணமும்.

கீற்று இளைய தளத்தில் வெளிவந்த மகேஷின் கட்டுரை.

நேற்று(15.04.2012) முதல் இந்தியாவின் கிழக்கு கடல் பகுதியில் மீன் பிடி தடைக் காலம் தொடக்கி உள்ளது. இனி 45 நாட்கள் இயந்திர படகு மீனவர்கள் கடலில் சென்று மீன் பிடிக்க முடியாது.

மீன் வளத்தை பெருக்கும் பொருட்டு, மீன்களின் இனப்பெருக்க காலத்தில் இந்த தடை விதிக்கப்படுவதாக அரசுகள் கூறுகின்றன. மேலோட்டமாக பார்க்கும்போது மீனவர்களுக்கு நன்மை பயக்கும் விஷயமாக இது தோன்றினாலும், இதிலிருக்கும் உள்குத்து மிக மோசமானதாகும்.

பல கடல் சார் விஞ்ஞானிகள், அக்டோபர் மாதம் தான் இந்திய கடல் பகுதியில் மீன்களின் இனப்பெருக்க காலம் என்று சொல்லி கொண்டிருக்கும் பொழுது, மத்திய அரசு ஏப்ரல், மே மாதங்களில் இந்தியாவின் கிழக்கு கடலிலும், ஜூன், ஜூலை இந்தியாவின் மேற்கு கடலிலும் மீன் பிடி தடை விதிக்க காரணம் என்ன? அதே போல் ஒரே சீதோஷ்ண நிலை கொண்ட இந்தியாவின் கிழக்கு மற்றும் மேற்கு கடல் பகுதிகளில் வெவ்வேறு காலகட்டங்களில் தடை விதிக்கக் காரணம் என்ன?மீன்பிடி தடை என்ற பெயரில் வெளி பொருத்தும் இயந்திரப் படகுகள் தவிர மற்ற அனைத்து இயந்திரப் படகுகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. இது சட்டம் போடுபவர்களின் உச்சபட்ச அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. மீன்கள் தனது முட்டைகளை பெரும்பாலும் பாறை இடுக்கிலும் மணற்பரப்பிலுமே இடுகிறது. ஏற்கனவே காங்கிரஸ் அரசால் மீனவர்களுக்கிடையில் திணிக்கப்பட்ட, இழு வலையால் மட்டுமே தொழில் முறை பாதிப்பு ஏற்பட வாய்ப்பிருக்கிறது. (காங்கிரஸ் ஆட்சியில் இழுவலை தொழில் திணிக்கப்பட்டதால், மீனவரல்லாத உள்ளூர் மற்றும் வெளியூர் பண முதலைகள் மீன் பிடித் தொழிலில் கால் பதித்தது தனிக் கதை). இழு வலை என்பது கடலின் அடி ஆழத்தில் மணற்பரப்பு வரை சென்று கிடைக்கும் அனைத்தையும் வாரி சுருட்டும், மிகச் சிறிய கண்ணிகளை கொண்ட, பலம் வாய்ந்த நைலான் வலை. மற்ற அனைத்து பாரம்பரிய வலைக் கண்ணிகளும், தூண்டில்களும் முதிர்ந்த மீன்களை மட்டுமே பிடிக்கும் வகையிலே அமைக்கப்பட்டிருக்கும். பாரம்பரிய வலைகள் அனைத்தும் கடலின் மேல் பகுதியிலும், நடுப் பகுதியிலும் மீன்பிடிக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். சிறிய அளவிலான மீன்கள் தப்பி செல்லும் வகையில் பெரிய அளவிலான கண்ணிகளே பாரம்பரிய வலைகளில் பின்னப்பட்டிருக்கும். இவை பெரும்பாலும் பருத்தி நூல் கொண்டு தயாரிக்கப்படுகின்றன. ஆனால் மீன் பிடி தடைக் காலத்தில் பாரம்பரிய வலைகள் மற்றும் தூண்டில்களைப் பயன்படுத்தும் இயந்திரப் படகுகளையும் தடை செய்யக் காரணம் என்ன?

அதற்குக் காரணம், இந்தக் கால கட்டங்களில் வெளிநாட்டு மீன்பிடிக் கப்பல்கள் எந்த தொந்தரவும் இல்லாமல் இந்தியக் கடல் பகுதியில் மீன் பிடிக்க இது உதவியாக இருக்கிறது. ஆம் இந்த மீன் பிடி தடையானது வெளிநாட்டு மீன் பிடிக் கப்பல்களை கட்டுப்படுத்தவில்லை. ஒரிசா கடல் பகுதி வரை வந்து சிங்கள மீனவர்களும் இந்த காலகட்டத்தில் மீன்களை அள்ளி செல்கின்றனர். வெளிநாட்டு மீன் பிடி கப்பல் முதலாளிகளுக்கு ஆதரவாக இந்த சட்டம் தொடர வேண்டுமா? இது எப்படி ஒரு உண்மையான மீன் பிடி தடைக் காலமாக இருக்க முடியும்? இவையெல்லாம் சட்டம் செய்பவர்களின் அறியாமையா? அல்லது தெரிந்தே செய்யும் அயோக்கியத்தனமா?

மீன் வளர்ச்சிக்கு தடையாக இருக்கும் முக்கியமான காரணிகள் இழு வலை மட்டுமல்ல, ஆலைக் கழிவுகள், அணு உலைக் கழிவுகள், சாயப் பட்டறை கழிவுகள், கடல் நீரைக் குடிநீராக்கும் திட்டங்களினால் கடலில் கலக்கும் பல ஆயிரம் காலன் கொதிநீர் - இப்படி பல முக்கியமான காரணங்கள் உள்ளன. இவற்றையெல்லாம் 45 நாட்கள் நிறுத்திவைக்க இந்த அரசுகள் உடன்படுமா?

பெரும்பாலும் கரைப் பகுதியில், மீன்கள் குறிப்பாக இறால் இனப்பெருக்கம் செய்வது ஆறுகள் வந்து கலக்கும் முகத்துவாரங்களில் தான். ஆனால் இன்று மணற் கொள்ளைகளால் பாலாறு உட்பட பல ஆறுகளும் கடல் வரை வந்து சேருவதில்லை. அது மட்டுமின்றி வந்து சேரும் ஆறும் முழுவதுமாக ஆலைக் கழிவுகளால் ரசாயனம் கலந்த விஷமாகத்தான் கடலில் வந்து கலக்கின்றது.

இப்பொழுது சொல்லுங்கள் இந்த மீன் பிடி தடைக் காலம் உண்மையில் யாருக்காக?

பி.கு:- புதுச்சேரி அரசு மீன்பிடி தடைக் காலங்களில் விசைப் படகு உரிமையாளர்களுக்கு 30,000 இழப்பீடு தொகையாக வழங்குகிறது. இந்த நடைமுறை இதுவரை தமிழ்நாட்டில் பின்பற்றப் படவில்லை.

- எஸ்.ஏ.மகேஷ், அகில இந்தியப் பாரம்பரிய மீனவர் சங்கம்

இவரது மற்ற படைப்புகளைக் காண இங்கே அழுத்தவும்


மகேஷ் கட்டுரை ஒரு நல்ல தொடக்கம்.எல்லா நாடுகளையும் போல, இந்திய நாடும் இரண்டு உலகங்களை கொண்டிருக்கிறது. அதில் ஒன்று "நிலம் சார்ந்த உலகம்". இன்னொன்று "கடல் சார்ந்த உலகம்". இந்த நிலம் சார்ந்த உலகத்தில் உள்ள அரசியல்வாதிகளும், அதிகார வர்க்கமும் இங்கே அரசாங்கம் என்று ஒன்றை கட்டி கொண்டு ஆட்சி நடத்துகிறார்கள். கடல் சார்ந்த உலகில் உள்ளவர்களுக்கு அதில் எந்த பங்களிப்பும் இல்லை. ஆனால் கடல் சார்ந்த உலகத்தாரை இந்த நிலம் சார்ந்த உலகத்தார் தங்களது ஆட்சிக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். கடல் சார்ந்த உலகத்தின் முதுகெலும்பான மீனவர்கள் பூர்வகுடி மக்கள். அவர்களை "பழங்குடிகள்" என்று அழைக்க வேண்டும். ஆனால் நிலம் சார்ந்த ஆட்சியாளர்கள், அந்த கடல் சார்ந்த பழங்குடி மக்களை, தமிழ்நாட்டில் "மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்று அழைக்கிறார்கள்.

அதாவது தங்களுக்கு புரிந்த தங்கள் உலகின் சொல்லாடல்களுக்குள், அந்த கடல் சார்ந்த பழங்குடிகளை "கட்டுப்படுத்தி" அல்லது "அவர்கள் மீது தங்களது "நாட்டாமையை" திணித்து, அவர்களை தாங்கள் உருவாக்கியுள்ள இட ஒதுக்கீடு பட்டியலில் ஒரு இடத்தில் "பாவம் கிடக்கட்டும்" என்று போட்டு வைத்து விட்டார்கள். அந்த மீனவர்களுக்கு அதன்மூலம் ஆட்சியாளர்கள் "பிச்சை" போடுவது போல ஒரு இடத்தை ஒதுக்கியுள்ளார்கள். அந்த விவகாரமே" இந்த மீனவர்களுக்கு புரியாததால் அவர்களும் அதிகம் அது பற்றி கண்டுகொள்ள வில்லை. அதனால்தான் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் பட்டியலை கூட அவர்கள் அதிகம் பயன்படுத்தவதில்லை. அல்லது பயன்படுத்தும் நிலையில் இல்லை.

இப்படிப்பட்ட மீனவ மக்களை இந்த இன்னொரு உலகின் எசமானர்கள் எப்படி தீர்மானிக்க முடியும்? அதற்கு முற்று புள்ளி வைக்க வேண்டும். நேபாளத்தில் மாவோவாதிகள் தனி படை வைத்திருந்தார்கள். அவர்கள் ஆட்சிக்கு வந்தவுடன், இப்போது அந்த புரட்சிகர படையும், ஏற்கனவே உள்ள ராணுவத்துடன் இணைக்கப்ப்ட்டள்ளது. அப்படியானால் அரசுக்கு முக்கிய அங்கமான படையில், புரட்சிக்காக உருவாக்கப்பட்ட "மக்கள் படையும்" இருப்பதால், நாளை எந்த வர்க்க நலனும், உழைக்கும் வர்க்கத்திற்கு எதிராக முழுமையாக் செயல்படுத்தலில் இருந்து "தடை" போட ஒரு மக்கள் படை எழ முடியும். அதே சூழல் இந்த மீனவ மக்களுக்கு, "தமிழீழத்தில்" உருவானது. தம்பி பிராபகரன் தலைமையில் உருவான படையில், "கடல் புலி படை" முக்கியமானது. ஆட்சிக்கு ஈழத்தமிழர்கள் எழும் போது, கடல் புலிகளின் பங்கை விட்டு விட முடியாது. அவர்கள் தங்கள் படையுடன் தனகளது மீனவ மக்களது நலன்களை "ஆட்சிக்குள்"எடுத்து வைக்க முடியும். நிலம் சார்ந்த ஆட்சியாளர்கள் , கடல் சார்ந்த ஆட்சியாளர்களுடன், சேர்ந்துதான் ஆள முட்யும். அவ்வாறு புலிகள் மட்டுமே இயல்பாகவே இந்த நிலம்- கடல் என்ற சிக்கலுக்கு தீர்வு கொடுக்கும் ஒரு அனைத்து நாட்டு கொள்கைவாதிகள்.

மார்கிசம் அனைத்து உழைக்கும் மக்களுக்கும் ஆன தத்துவம்தான். ஆனால் அதுகூட, இந்த நிலம்-கடல் என்ற வேறுபாட்டை புரிந்து கொள்ள வில்லை. நிலம் சார்ந்த அறிவுஜீவிகளுக்கு, கடல் சார்ந்த "அறிவு" கிடைக்க வாய்ப்பில்லை. கடல் சார்ந்த பழம்குடி சமூகத்திலிருந்து வந்த காரணத்தால், பிரபாகரனால் ஒரு கடல் சார்ந்த படையை உருவாக்கி நிறுத்த அதிகம் சாத்தியப்பட்டது. அதுவே அந்த மக்களின் விடுதலைக்கும் வழி தரும். ஆகவே "தமிழன் மட்டும்தான்" இந்த இரு உலகம் தத்துவத்தில், கடல் சார்ந்த பழங்குடிகளை "ஆட்சிக்கு " தயார் செய்வதில் இயற்கையாகவே ஈடுபட்டான் என்பதற்கு புலிகள் இயக்கம் ஒரு சான்று. அபப்டிப்பட்ட தமிழ் தேசிய இனத்தை, எப்படி விவரம் அறிந்த ஏகாதிபத்தியவாதிகள் விட்டு வைப்பார்கள்? தமிழ் தேசிய இனம் மட்டுமே ஏகாதிபத்தியத்திற்கு மரண அடி கொடுப்பதற்கான ஒரே முதன்மை தேசிய இனம் என்பது பல இடங்களில் இப்போது நிரூபணமாகி நிற்கிறது.


அபப்டிப்பட்ட படையுடன் மீனவ பழங்குடிகள், ஆட்சியில் பங்கு பெறும்வரை, " சலுகை" அளவில் அவர்களது கோரிக்கைகளை நிறைவு செய்ய "பழங்குடிகள் " என்ற பட்டியலில் அந்த மக்களை சேர்த்து அதன்மூலம் அவர்களுக்கான " தனி ஒதுக்கீடு கல்வி, வேலை வாய்ப்பு, சட்டமன்ற , நாடாளுமன்ற தொகுதிகள்" கொடுக்கப்பட வேண்டும்.அப்போதுதான் மீன்பிடி தடை காலமும், வேறு ஒரு கூட்டத்திற்கு பயன்படுவதற்காக ஒதுக்கப்படாமல், மீனவ மக்களின் நலனுக்கு ஏற்றவாறு ஒதுக்கப்படும்.. ,

பச்சை என்ற காத்து படம் லயிக்கவைத்தது.

நான் லயித்து போனேன். அது எனது பலமான அம்சமா? பலவீனமான அம்சமா? எனக்கு தெரியவில்லை. ஏற்கனவே நான் அந்த " போடிநாயக்கனூர் கணேசன்" படத்தை பார்த்து விட்டு இப்படித்தான் லயித்து போனேன். ஆனால் இந்த பச்சை படத்தில் எனக்குள் நிறைய வித்தியாசமான உணர்வுகள். ஒரு படத்தை பார்த்து விட்டு நாம் அதில லயித்து போனோம் என்றால், ஏதோ வகையில் அந்த படம் நம்மை ஈர்த்துள்ளது என்று பொருள். நான் மதுரை மற்றும் தென்மாவட்டங்களில் "தலைமறைவு இயக்க" பணிகளில் இருக்கும் போது, நிறைய கிராமப்புற இளைஞர்கள், அதேபோல நகர்ப்புற இளைஞர்களில் "கண்டபடி திரிந்தவர்கள்" {அவர்கள்தான் நமக்கு கிடைப்பார்களோ} இவர்களிடம் நெருங்கி அவர்களை புரட்சிகர வன்முறைக்கு உற்ச்சாகப்படுத்தும் பணியை ஒருவித "கலை நுணுக்கத்துடன்" வெற்றிகரமாக செய்த அனுபவம் நினைவுக்கு வந்தது. இந்த படத்தில் எந்த புரட்சியும் இல்லை. ஆனாலும் அந்த முரட்டுத்தனமான, உதிரி தன்மை கொண்ட கிராமப்புற இளைஞரின் பாத்திரத்தை வகிக்கும் கதாநாயகன் நம்மை ஈர்த்து விட்டார்.

படத்தை நாகரிக பாணியில் ஒரு "கருத்தாக்கத்துடன்" சொலவேண்டும் என்றால், இன்றைய இளைஞர்களை "கட்சி அரசியல்வாதிகள்" தங்கள் நலனுக்கு பயன்படுத்துவதும், பயன்படுத்தி முடிந்த பின்பு அவர்களது உயிரை கூட "விலை" பேசுவதும், இந்த படத்தில் அம்மணமாக அமபலப்படுத்தபடுகிறது. படத்தை பார்த்தே ஆகவேண்டும் என்று அந்த படத்தின் இணை இயக்குனர் விச்வபாலா இரண்டு மூன்று நாட்களாக தொடர்பு கொண்டு கடைசியில் என்னை பார்க்க வைத்து விட்டார். அதுவும் ஜீவா, ஓவியா, சமி,குழந்தை சிற்பி ஆகியோருடன் பார்த்ததில் ஒரு திருப்தி. படத்தில் வரும் பச்சை வேடம் தாங்கிய "வாசகன்" தம்பி நல்லா செய்திருக்குது. அது அப்படியே தேனீ மாவட்ட கிராமப்புற முரட்டு இளைஞரை ஒவ்வொரு காட்சியிலும் கொண்டு வந்து நிறுத்துகிறது .கோபத்தில் கண்ணை அகல விரிக்கும்போதும், நாக்கை துருத்த்ம்போதும், சண்டை போடும்போதும், காதலில் திளைக்கும்போதும், அப்பாவித்தனமாக காதலிக்கும்போதும், அதற்காக வலிய சிரிக்கும்போதும், உண்மையிலேயே தாய் பாசத்தையும், காதலி பாசத்தையும் காட்டும்போதும், முரட்டு பாசத்தால் காதலியை நீரில் அமுக்கி அதுவே கொலையாக ஆகும்போதும்,மோட்டார்சைக்கிளில் ஹாயாக வரும்போதும், தங்கை பாசம் காட்டும்போதும், தெருவில் இறங்கி வீரசாகசம் காட்டும்போதும் நமக்கு உண்மையிலேயே ஒரு கிராமப்புற துடிப்புள்ள இளைஞரை பார்க்கும் திருப்தி.
ஆமாம், எங்கள் நன்பரும் தோழருமான பேராசிரியர் மு.ராமசாமியை பற்றி கூறாமல் விடக்கூடாதே. அவர்தான் பச்சையின் தந்தை.பின்னிபோட்டாறு ராமசாமி. அவருடைய நடிப்பை எப்படி சொல்ல?. பல படங்களில் நடித்திருந்தாலும், இந்த படத்தில் ஒவ்வொரு காட்சியிலும் கோபப்படும் தந்தையாக ,சண்டை கட்டும் தந்தையாக ராமசாமி கொன்று விட்டார்.போங்க. என்னய்யா இந்த படத்தை பற்றி இப்படி பாராட்டுகிறேனே. அத்தனைக்கும் காரணம் அந்த இயக்குனர்தான் என்ற உண்மையும் நமக்கு தெரிகிறது. பரவாயில்லை ஒரு நம்மூர் படம் பார்த்த திருப்தி.

கிராமப்புற இயல்புகளை படமாக்கினால் நகர்ப்புறங்களில் ரசிக்க மாட்டார்களோ? தெரியவில்லை.ஆனால் அந்த பச்சை ஏதோ உண்மை பாத்திரம் என்கிறார்கள். மணப்பாறை அருகே நடந்த கதையாம். திரைக்காக தேனீ மாவட்டம் என்று இயக்குனர் கூறுகிறார் என்றால், முழுமையாக தேனீ மாவட்ட மக்களது சொல் நடை வேண்டாமா? அதற்கு முயற்சி நடந்துள்ளது. பரவாயில்லை. ஆனால் துல்லியமாக அந்த சொல்லாடல் {slangs ] முழுமையாக கவனம் எடுத்து பயன்படுத்தப்பட்டிருந்தால் நன்றாக இருந்திருக்கும். அந்த கதாநாயகி பெண்ணும் சிறப்பாக நடித்திருக்கிறார்.

Saturday, April 14, 2012

கள்ளதோணி குறும்படம் கண்ணீர் வாவழைத்தது.

இன்று அருள் எழிலன் தயாரித்த க்றும்படம் கள்ளதோணி திரையிட்டார்கள். பெரியவர் வேடத்தில் ஓவியர் வீரசந்தானம் வந்து,போய், பேசி, முகம் காட்டி, முகம் அசைத்து, குழந்தையிடம் பேசி,குழந்தைக்காக பேசி, அழ வைத்து விட்டார். இங்கே இந்தியாவில், தமிழ்நாட்டில், இலங்கை அகதிகளுக்கு அவர்களது முகாம்களில் வெளியே உள்ள ஏழை எளியவர்களுக்கு கிடைக்கும் அனைத்து அரசு சலுகைகளும் கிடைக்கும் என்று அரசு அறிவித்தும்கூட, தனகளுக்கான சட்டரீதியாக கிடைக்க வேண்டிய " ஒப்புதல் சான்றிதழை" பெற முடியாமல் ஒவ்வொரு வருவாய் அலுவலகங்களாக, காவல்துறையின் கட்டபஞ்சாயத்து நிலையங்களாக அலைந்து திரிந்து வேறு வழி இல்லாமல் "அம்மாவிடம் குழந்தையி" ஒப்படைக்க எண்ணும் பெரியவரை, உள்ளே தள்ளும் காவல்துறையும், நீதிமன்றமும் தமிழ்நாட்டில் மட்டுமே இருக்கும் என்று இந்த படம் சாட்சி கூறுகிறது.

கள்ளத்தோணியில் செல்ல கட்டாயப்படுத்தும், களவாணி காவல்துறை இந்த தமிழ்மண்ணில் மட்டும்தான், தமிழர்களால் நடத்தப்படும். தமிழனாக இருக்கும் காவல்துறையினர் கலவாநிகளாக இருக்கும் பொது, கள்ளதொனிகள் ஏன் உருவாகாது? களவாணி காவல்துறை அதிகாரிகளை கண்ட இடத்தில் சுட வாக்கு இல்லாத தமிழர்கள், குறிந்த பட்சம் அந்த கருப்பு ஆடு காவல்துறையினரை கேள்வி பட்டதும், சவுக்கு கொண்டு அடிக்க ஒன்று கூடி கிராமம், கிராமமாக திரளமாட்டார்களா?

Thursday, April 12, 2012

அம்பேத்கரை இழிவு படுத்தி.............

ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவர் அம்பேத்கரை, நத்தை மீது போகிறார் என இழிவு படுத்தி, அவரை காஷ்மீரின் பண்டித பார்ப்பான் நேரு, விரைவாக போகசொல்லி "சாட்டை" கொண்டு அடிப்பதாக ஒரு கேலிச்சித்திரத்தை, மேட்டுக்குடி மத்திய மனிதவள மேம்பாடுதுறை அமைச்சர் கபில் சிபல், தனது "என்.சீ.ஆர்.டி" தயாரித்த "பதினோராம் வகுப்பு" பாடப்புத்தகத்தில், "இந்திய அரிசயல் சட்டம் பணியில்" என்ற தலைப்பில் உள்ள புத்தகத்தில், வெளியிட்டு, கேளிசித்திரக்காரறது கருத்து என்று கூறி, அதில் "அரசியல் சாசன சபை" அரசியல் சட்டத்தை தயாரிக்க மூன்று ஆணுட்கள் எடுத்து கொண்டது என்று கேலி செய்து வெளியிட்டுள்ளனர்.

இது 1989 ஆம் ஆண்டின் எஸ்.சீ./எஸ்.டி.மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப்படி, குற்றமாகும். ஆதாவது ஒரு எஸ்.சீ. இனத்தை சேர்ந்தவரை, ஒரு எஸ்.சீ. இனம் சேராதவர் கேலி செய்தால் அந்த சட்டம் பாயும். அதன்படி, மத்திய அமைச்சர் கபில் சிபல், என்.சீ.ஆர்..டி. தலைவர், கேளிசித்தியா ஓவியர், அதை வெளியிட்டவர் ஆகியோர் தனடைக்கப்படவேண்டும். அந்த வழக்கை பாட மனித உரிமை ஆர்வலர்கள் முன்வர வேண்டும்.

Dalits araise.

Dr.Ambedkar abused by the Kapil siballed Human Development ministry in its NCERT pepared book for the XI Std under the title " Indian Constitution at work" by a cartoon as Ambedkar on a Snail and Kshmiri Pandit Jawaharlal Nehru beating him with a Whip.

Under the Cartoon this is written:-

Cartoonist’s impression of the ‘snail’space’ with which the Constitution wasmade. Making of the Constitution took almost three years. Is the cartoonist commenting on this fact? Why do youthink, did the Constituent Assembly take so long to make the Constitution?

The above publication attracts 1989 Sc/ST Prevention of Atrocities Act.Can anyone file a case against the Central Minister Kapil Sibal, P.M.Manmohansing,and the Chairman of NCERT,and also the Cartoonist FOR PUBLISHING THIS UNTOUCHABILITY ACT AND Spreading this among the young ones of the country?

Sunday, April 8, 2012

சோ ராமசாமிக்கும அவரது அடியாட்களுக்கும் காவல்துறை முறைவாசல் செய்யலாமா?

சோ ராமசாமிக்கும அவரது அடியாட்களுக்கும் காவல்துறை முறைவாசல் செய்யலாமா?
ஏற்கனவே மயிலாப்பூர் குலத்திற்கு அருகே உள்ள அலைனன்ஸ் அய்யர் நடத்தும அட்டூழியம் பற்றி எழுதினோம். நேற்றைக்கு முந்திய நாளே வின் டி.வி.காரர்கள் அங்கே போய், பதிக்கப்படும் பட்டாணி கடைக்காரர்களிடம் சென்று அந்த கொடூரத்தை அம்பலப்படுத்தி இருந்தனர். அந்த காட்சி ஊடகத்தார் வரும்போது வேலைகளை நிறுத்திவிட்டு, பிறகு அந்த ஆக்கிரமித்துகட்டும் வேலைகளை அலைனப்ஸ் அய்யர் தொடர்ந்தார். இன்று பெண் வழக்கறிஞர் ஒருவர் பாதிக்கப்பட்டோருக்காக சென்று மயிலாப்பூர் காவல்துறை அதிகாரிகளிடம் சென்று கொடுத்த புகாரை பதிவு செய்ய சொல்லி, அதன்விளைவாக பதிவு செய்த புகாருக்கு, சீ.எஸ்.ஆர். என்ற ரசீதை ஆய்வாளர் கொடுத்துள்ளார். அதன்பிறகு அந்த காவல் ஆய்வாளர் மோகன்தாஸ் " கலவை தயார் செய்து விட்டார்கள். அதனால் அதை மட்டும் பயன்படுத்தி கட்டட்டும்" என்று கூறியுள்ளார். வழக்கறிஞர் கொடுத்த எதிர்ப்பிற்கு பதில் கூறாமல் இருந்து விட்டார்.

அதன்பிறகு அந்த பேரன் வழக்கறிஞர் கட்டிடம் கட்டும் இடத்திற்கே சென்று எப்படி எங்கள் கட்சிகாரர் கட்டிடம் மேல் நீங்கள் செங்கல் வைத்து கட்டலாம் என்று கூறி அதை நிறுத்தி விட்டார். அதன்பிறகும் சோ ராமசாமியின் ஒரு அடிவருடி வழக்கறிஞர் கொடுத்த தைரியத்தில் மீண்டும் கட்டிட வேலையை ஆக்கிரமிப்பு செய்து கட்டுகின்றனர். இதுதான் இந்த நாட்டில் நடக்கும் சட்ட-ஒழுங்கு லட்சணம். பெரியார் பிறந்த மண்ணில் பார்ப்பனர்கள் மட்டுமே சட்ட ஒழுங்கை மீறி ஆக்கிரமிப்பு செய்து, அடுத்தவர் இடங்களில் கட்டிடம் கட்டலாம் என்று அனுமதிக்கும் காவல்துறையை வைத்து ஆட்சி நடத்துபவர்கள், யாருக்காக ஆட்சி நடத்துகிறார்கள்? இவர்கள் பிறபடுத்தப்பட்ட, மற்றும் தாழ்த்தப்பட்ட வாக்களர்களின் வாக்குகளை வாங்கி கொண்டு அவர்களுக்கே துரோகம் செய்யும் "காட்டாட்சியை" எத்தனை நாட்கள் நடத்த முடியும்?

Saturday, April 7, 2012

Is Cho creating Law & Order problem?

துக்ளக் சோ அராஜகமா?
இன்று ஆட்சியாளர்களை தங்கள வலைக்குள் பிடித்து வைத்திருப்பதாக துக்ளக் சோ நேரடியாக சொல்கிறார்களோ இல்லையோ, பார்பனர்களில் சில நரித்தந்திரசாளிகள் சென்னையில் களவாணித்தனம் மூலம் பணம் சேர்த்த கூட்டம் ஒன்று பரப்பி வருகிறது. சசிகலாவை விரட்டினால், பார்பனர் கோட்டையாக தோட்டம் மாறிவிட்டது என்பதும், சைகலாவை மீண்டும் சேர்த்து கொண்டால் கள்ளர் கோட்டையாக மாற தோட்டம் துடிக்கிறது என்றும் கதை கட்டி விட்டு அதிலே லாபம் தேடும் கூட்டம் ஒன்று செயல்பட்டுக் கொண்டே இருக்கிறது. அப்படிப்பட்ட கூட்டத்தை சேர்ந்தவர்தான் மதிப்பிற்குரிய "அலையன்ஸ் பதிப்பக" உரிமையாளர் திருமிகு. சீனிவாசன் என்ற பார்ப்பனர் என்று சந்தேகம் வந்துள்ளது.

மயிலாப்பூரில் கபாலீஸ்வரர் கோவிலுக்கு எதிரே இருக்கும் குலம் மிகவும் பிரபலமானது. அதனால் அங்குள்ள பேருந்து நிறுத்தமும் பிரபலமானது. அதன் அருகே இந்த அலையன்ஸ் பதிப்பகத்தார் பெரிய கடை வைத்திருப்பதும் அனைவரும் அறிந்ததே. அந்த கடையை இடித்து மிக பெரியதாக கட்டி வருகிறார் அதன் முதலாளி என்பதும் அனைவரும் அறிந்ததே. ஆனால் அந்த கடைக்கு அருகே ஒரு பட்டாணி கடை இருப்பதும், அந்த பட்டாணி கடையின் சுவர்களை இந்த அலையன்ஸ் முதலாளி சீனிவாசன் என்ற பார்பனர் இடித்து வருவதும், அதற்கு அந்த பட்டாணி கடைகாரர் எதிர்ப்பு தெரிவித்து அலறுவதும் யாருக்கும் தெரியாது. பட்டாணி கடை வைத்திருக்கும் பெண்மணி தனது குடும்பத்தை நடத்த கடினப்பட்டு வணிகம் செய்வதும், இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனருக்கு உரைக்காத ஒன்று.


ஏற்கனவே இந்த சீனிவாசன் என்ற பார்ப்பனர் எழுத்தாளர் கு.பா.ராஜகோபாலன் என்ற பிரபலத்தின் எழுத்துக்க்களை புத்தகங்களாக வெளியிட்டு அந்த ஏழை எழுத்தாளரின் குடும்பத்திற்கு எந்த காசும் கொடுக்காமல் ஏமாற்றி வந்ததால், அந்த எழுத்தாளரின் குடும்பம் இன்று நடுத்தெருவில் நிற்க வேண்டிய நிலை என்று ஒரு ஊடகத்தார கூறினார். அந்த அளவுக்கு தான் செய்யும் வணிகத்திலே "களவாணித்தனம்" செய்து பிறரை குடும்பத்துடன் அழித்துவரும் இந்த சீனிவாசனிடம் எத்தகைய கரிசனத்தை நாம் காண முடியும்? அதுபோலவே இந்த பட்டாணி கடை பெண்மணியிடமும், சீனிவாசன் பாராமுகம் காட்டி கொடுமை படுத்துகிறான். பட்டாணி கடை பெண்மணி மைலாபூர் காவல்நிலையத்தில் சென்று புகார் கொடத்த பின்னர், இரு காவலர்கள் வந்து சத்தம் போட்டு சென்ற பின்னால் அந்த சீனிவாசன் என்ற கொடியவன் மேல் அதிகாரிகளை பார்த்து தான் துக்ளக் சோவின் ஆள் என்பதுபோல அளந்து விட்டிருக்கிறார். எதைகன்டாலும் பயந்து நடுங்கும் இன்றைய காவல்துறை அதிகாரிகள், இதை கேட்டு பயந்து போய், புகாருடன் மீண்டும் மீண்டும் வரும் பட்டாணி கடை பெண்மணியை விரட்டி விட தொடங்கி விட்டனர்.

இதை ஒரு தனியார் தொலைகாட்சி ஊடகம் படம் எடுக்க வந்த போது, சீனிவாசன் கும்பல் வேலைகளை நிறுத்தி விட்டு ஓடிவிட்டனர். அதன்பிறகு படம் எடுத்தவர்கள் சென்ற பிறகு, மீண்டும் அங்கே வந்து வேலை செய்ய தொடங்கிவிட்டனர். இவை எல்லாமே முதல்லை சீனிவாசனின் உத்தரவில் நடந்து உள்ளது. பிறபடுத்தப்பட்ட மக்களின் வாக்குகளை வாங்கி கொண்டு ஆட்சிக்கு அவரும் அரசியல்வாதிகள் ஆட்சிக்கு அவன்த பின்ன்னர், பார்ப்பனர்கள் பிற்படுத்தப்பட்டோர் மீது நடத்தும் அராஜகங்களை ஏன் தட்டி கேட்பதில்லை.? இந்த நிலை சென்னையிலேயே தொடர்ந்தாள் பரியார் மண்ணில் இந்த சில்லறை புத்தி கொண்ட பார்ப்பனர்களுக்கு தொடர்ந்து மரியாதை கிடைக்குமா? இதை இந்த மண் ஏற்றுக்கொள்ளுமா? துக்ளக் சோ இருக்கும் தைரியத்தில் இந்த அலையன்ஸ் சீனிவாசன் துல்லுகிறான் என்றால், துக்ளக் சோ தனக்கும் இதற்கும் சம்பந்தமில்லை என்கிறாராம். பாடியானால் காவல்துறை ஏன் தைரியமாக நடவடிக்கை எடுக்க மறுக்கிறது?

Wednesday, April 4, 2012

மாவோவாதிகளின் கடத்தலை, கொச்சைப்படுத்த கிளம்பியிருக்கிறார்களா?

மாவோவாதிகள் ஓடிசாவில் ஆதிவாசிகளின், மற்றும் தலித் இன மக்களின் வாழ்வாதாரத்தை பறிக்கும் அரசு இயந்திரத்தின் மாபெரும் போருக்கு எதிராக ஒரு ஆயுதம் தாங்கிய போரை நடத்தி வருகிறார்கள். அத்தகைய போரில் பல புரட்சியாளர்கள் கொல்லப்பட்டுள்ளார்கள். இந்தியாவின் இதயப்பகுதியில் கனிம வளங்களை காப்பதற்கும், அதை சூறையாட வந்துள்ள கார்போரேட்களின் கயவாளித்தனத்தை எதிர்க்கவும், போராடும் போர் உள்ளபடியே ஒரு நாட்டுப்பற்றாளர்களின் போர். அத்தகைய போரில் பல யார்த்த பலிகள் நிகழும். அவ்வாறு போரில் அவர்கல்பரிகொடுத்த உயிர்களான கிஷன்ஜி, ஆசாத், போன்ற மறையாத தியாகிகளை எண்ணி மீண்டும், மீண்டும் தனகளது போரை கூர்மைப்படுத்த வேண்டியது புரட்சியாளர்களுக்கு கடமையாக இருக்கிறது. இந்த சூழலில் ஒரு இத்தாலிய பயணிகள் கடத்தல் நடக்கிறது. அரசு இயந்திரம் அதை கொச்சைப்படுத்த பல கதைகளை கட்டவிழ்த்து விடுகிறது.


அதில் ஒன்று பாண்டா என்ற சப்யசாச்சி தனது தலைமையை நிறுவிக்கொள்ள அந்த கடத்தலை செய்தார் என்பது. அதற்கு அடுத்து ஒரு எம்.எல்.ஏ.வை கடத்துகிறார்கள். சம்பந்தமில்லாமல் போரில் மாவிஒவாதிகட்கு ஒத்துழைத்தாக கருதி ஆதிவாசி மக்களை சிறையில் தள்ளியுள்ள ஓடிஸா அரசு, அந்த கைதிகளை விடுதலை செய்யவேண்டும் என்பது ஒரு முக்கிய கோரிக்கை. அதுமட்டுமின்றி மாவோவாத இயக்கத்தின் தலைவர் சப்யசாச்சி யின் மனைவியை பிடித்து சிறையில் அடைத்துள்ளனர். அவரையும் விடுதலை செய்ய கோரியுள்ளனர். இவை எல்லாமே நியாயமான கோரிக்கைகள் என்பதை எந்த சனநாயக வாதியும் இந்த நாட்டில் ஒப்புக்கொள்வார்கள். ஆந்திராவின் புரட்சியாளர்கள் தலைமைக்கும், ஓடிசாவின் தலைமைக்கும் ஒரு முரண்பாடு இந்த கடத்தல் விசயத்தில் இருக்கிறது என்பது அரசு ஊடகங்கள் மூலம் கிளப்பி விடும் அடுத்த திசை திருப்பும் வேலை.

அதற்கும் மாவோவாதிகள் பதில் கூறி விட்டார்கள் .அதாவது புரட்சிகர காலப்போரில் இருக்கும்போது இரண்டு மாநில மைப்புகளுக்குள் வேறுபாடுகள் வருவதும் இயற்கையே என்றும் அதை நனகல்புரிய வைத்து கொள்வோம் என்றும் பதில் கூறி விட்டார்கள்.ஆளும்வர்க்கம் ஓடிஸா மாநிலத்தின் ஆட்சியாளர்களுடன் டில்லியில் இருந்து கொண்டு எல்லா அவிசயத்திலும் ஒரே சிந்தனையுடன் செயல்படுகிறார்களா? ஏன்? பயங்கரவாத தடுப்பு மையம் உருவாக்கும் விசயத்தில் கூட குடுமி பிடி சண்டை போட்டுக் கொள்ளவில்லையா? அபப்டிப்பட்ட ஆளும்வர்க்கத்திற்கு புரட்சியாளர்கள் மத்தில் வரும் முரண்பாடுகல்பற்றி பேச என்ன "நா" இருக்கிறது? பச்சை வேட்டை என்ற பெயரில் புரட்சியாளர்களை ஒடுக்க என்று கூறிவிட்டு, நமது நாட்டின் பூர்வ குடி மக்களை கொடூரமாக பாடுகளை செய்யும் இரத்த வெறி பிடித்த ஆளும்கூட்டமே, உனக்கு என்ன தகுதி இருக்கிஉஅர்து நீ கடத்தல் பற்றி கருத்து சொல்ல என்று சனநாயக வாதிகள் கேட்க வேண்டும்.

ஆனால் நம்மூரில் நிலைமையே வேறு. இங்கே யார் சனநாயக வாதிகள் யார் பிழைப்பு வாதிகள் என்பதை இனம் கண்டு கொள்வதே கடினம். பச்சை வேட்டை என்பதை எத்ஜிர்த்து எல்லோரும் தமிழ்நாட்டில் பேச தொடங்கிய போது, வேறுபாடு இல்லாமல் பல நீரோட்டங்களிளிருந்து வெளிவந்த பல கூறப்படும் அறிவுஜீவிகள் தாங்களும் பச்சை வேட்டியை எதிர்ப்பதாக கூறிவந்தார்கள். அந்த அளவுக்கு அது நல்ல காரியம்தான். ஆனால் சிலர் இப்போது மாவோவாதிகளின் போர் கடுமையாக அரசால் ஒடுக்கப்படும்போது, அதுவும் வனங்களில் வாழும் ஆதிவாசி பெண்களை ஆட வைத்து அதன்மூலம் அந்நிய நாட்டு சுற்றுல்லா பயணிகளை குளிர்விக்க அரசு இயந்திரம் செயல்படும்போது, அந்த அந்நியநாட்டு பயணிகளை எங்கள் அமண்ணின் மைந்தர்கள் உங்களுக்கு பண்பாட்டு காட்சிகளா? என்று கேட்டு, அதை ரசிக்க வந்த "ஆண் ஆதிக்க" சுரண்டல்கார அந்நிய நாய்களை, கடத்தி அதிலேயே தனகது மோரிககியையும் இணைத்து வைத்து, ஆதிவாசி பெண்களை ஆடவிட்டு ஆன்னிய சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும் அரசின் கொச்சைப்படுத்தலுக்கு முற்று புள்ளி வைக்க அதே காடுகளில் சுற்றுலா வந்த இத்தாலிகாரர்களை கடத்தி இந்த உலகுக்கு புரிய வைத்துள்ளார்கள்.


அங்குள்ள நிலைமையை இதைவிட எளிதாக புரியவைக்க முடியாது. அதை ஊடகங்களும் வெளியிட்டுள்ளன. மக்கள் பக்கத்திலும்,புரட்சியாளர் பக்கத்திலும் , இழப்பு ஏற்பட்டால் அதையும் ஆளும் வர்க்கம் பக்கத்தில் இழப்பு ஏற்பட்டால் அடஹியும் ஒன்றென பார்க்கும் பார்வை யாரிடம் வந்தாலும் அவர்கள் ஆளும்வர்க்கத்திற்கு தெரிந்தோ, தெரியாமலோ சேவை செய்பவர்கள் என்றே பொருள். அறிவுஜீவிகள் அதை செய்தால் அவர்கள் ஆளும்வர்க்க அறிவுஜீவிகள் என்றே பொருள். ஆனால் இங்கே ஒரு காட்சி ஊடகத்தில் ஒரு அறிவுஜீவி அதேபோல மாவோவாதிகளின் கடத்தலை கொசசைப்படுத்தி பேசியிருப்பது வெளியே வந்துள்ளது. அதாவது ஒரு காவல்துரைகாரர் மகனை தேடி சென்று, கிடைக்காதபோது, அப்பனை கைது சேது வந்து விடுவது போல இந்த கடத்தலும் என்று ஒப்பிட்டு பேசியுள்ளார். இத்தகைய பேச்சுக்கள் நாக்கில் நரம்பில்ல்லாமல்
பேசுவது என்ற வகையையே சாரும். இதன்மூலம் நடுத்தர வர்க்கத்தில் நமுட்டு சிரிப்புக்கு வேண்டுமானால் தீனி போடலாம். அனால் புரட்ச்சியாளர்களின் செயலுக்கு நியாயம் செய்யாமல் ஒதுங்கி கூட நிர்கமால் நக்கல் செய்வதாகவே ஆகும். அதாவது ஆளும்வர்க்கத்தின் அறிவுஜீவிகளின் வேலையை செய்வதாகவே பொருள்.

இதுவே காட்சி ஊடகம் மூலம் பல லட்சம் மக்களை அடையும் போது பேசுவது டேஹ்ரியாமல் அல்லது தஹ்ர்செயளாக பெசுயயது என்று ஆகாது. அதுவே டேஹ்ரிந்து புரட்சியாளர்களையும், அவர்கது புரட்சிகர நடவடிககிய்டையும் கொச்சை படுத்துவது என்றே பொருள். தமிழ்நாட்டில் மட்டும்தான் எந்த சனநாயக உணர்வுகளையும் மதிக்காமல் எதிர்ப்புரட்சிகர கருத்துக்ககளை தஹிரியமாக ஒளிபரப்பும் அளவுக்கு பேசமுடியும். அதேசமயம் பேசுபவர்களை வேறு காரணங்களை கூறி சிறப்பாக விளக்குகிறார் என்பதற்காக இன்னொரு புறம் பாராட்டி உச்சி மோர்ந்துய் கொள்ள முடியும். யாரயும் என்ன பேசுகிறார்கள், என்ன எழுதுகிறார்கள் என்பதையும் தாண்டி என்ன செய்துள்ளார்கள், யாருக்கு சாதகமாக ஏயலப்ட்டுல்லார்கள் என்று கவனித்தி மதிப்பீடு செய்யும் பழக்கம் தமிழர்கள் மத்தியில் இல்லாதபோது, அல்லது எடுபடாத போது, இப்படி போகிற போக்கில் பேசிவிட்டு செல்வது நிகழத்தான் செய்யும்.

Monday, April 2, 2012

பார்வார்டு பிளாக் கட்சியும் நமக்காக.....

சென்ற வாரம் கொல்கத்தாவில் நடந்த அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் மத்திய குழுவில் தமிழ்நாட்டிலிருந்து சென்ற தொழிற்சங்க தலைவர் ஆனந்த முருகன் ஒரு சிறப்பான தீர்மானத்தை முன்மொழிந்தார். தமிழீழ தசிய தலைவர் பிரபாகரனை, நேதாஜியின் வழி வந்தவர் எனபதையும், நேதாஜி மீது அளவிள்ளபற்று கொண்டவர் எனபதையும் விளக்கினார். அதை ஒட்டி போர்குற்றங்களை தமிழர்கள்மீது இழைத்த சிங்க கொடியவன் ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்ற கருத்தையும் முன்வைத்தார். அதை ஒட்டி அந்த மத்திய குழு இலங்கைக்கு தங்கள் கட்சி சார்பாக ஒரு குழு சென்று உண்மை நிலை அறிந்து தமிழர் நிலைமை பற்றிமத்திய அரசுக்கு வேண்டுகொல்கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தை அகில இந்திய பொது செயலாளர் பிஸ்வாஸ் கொண்டு வந்தார்.

அந்த குழுவில் பார்வார்டு பிளாக் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், தமிழ்நாட்டு செயலாளர் கதிரவன் எம்.எல்.ஏ.வும், அகில இந்திய செயலாளரும், கட்சியின் வெளிவிவகார பொறுப்பாளருமான தேவராஜும், இலங்கை சென்று வார திட்டமிடப்பட்டது. அதை ஒட்டி கதிரவன் எம்.எல்.ஏ. வுடன், ஆனந்தமுருகனும் இன்று "நாடு கடந்த தமிழீழ அரசாங்க தோழமை மைய அமைப்பாளர் பேராசிரியர் சரஸ்வதியை வந்து சந்தித்து அளவளாவினர். வழக்கறிஞர் பாண்டிமாதேவி அவ்வமயம் அவர்களிடம் இலங்கையிலுள்ள ஈழ தமிழர்கள் மீதான தாக்குதல்களின் தன்மைகளை எடுத்து விளக்கினார். இந்திய அரசு கொடுத்துள்ள உதவிகலான டிராக்டர்கள், வீடுகள் ஆகியவை யாருக்கு சென்றுள்ளன என்றும் வினவ கோரினார். அவை தமிழ் மக்களுக்கு கொடுக்கப்படுவதற்காக இந்திய அரசால் கொடுக்கப்பட்டாலும், சிங்கள மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ளன என்ற வாதத்தை இலங்கை நாடாளுமனரத்திலேயே பதிவு செய்யப்பட்டதையும் சுட்டி காட்டினார். பார்வார்டு பிளாக் கட்சியினரும் அக்கறையுடன் கேட்டு கொண்டனர்.விரைவில் அவர்களிலன்கைக்கு பயணம் ஆவார்கள்.

Sunday, April 1, 2012

நாளை போஸ்கோ வரலாறு கேட்கலாம் வாங்க.

ஏப்ரல் 2 ஆம் நாள், திங்கள் கிழமை காலை 11 மணிக்கு சென்னையில் போஸ்கோ ஆலைரகசியங்களை கேட்கலாம். சனிக்கிழமை காலை ஊடகங்கள் ஒரு அதிர்ச்சி செய்தியை தந்தன. கொரியா நாட்டு மூலதனத்தில் ஓடிஸா மாநிலத்தில் ஒரு பெரும் எக்கு ஆலை திட்டமிடப்பட்டுள்ளது. அது ரூ.52000 கோடி மூலதனத்துடன் இறங்குகிறது. நமது காடுகளையும், கனிம வளங்களையும், மண் வளத்தையும் அதை வைத்து பிழைக்கும் ஆதிவாசி, தலித் மக்களையும் அவர்களது வாழ்வாதாரத்தையும் அழித்து அந்த ஆலை கொண்டுவரப்படுகிறது. அதை எதிர்த்து அந்த பாரம்பரிய மக்கள் போராடுகின்றனர். இப்போது இந்திய மத்திய அரசின் "சுற்று சூழல் மற்றும் வன இலாகா" அமைச்சகம் கொடுத்த அனுமதியை, "பசுமை தீர்ப்பாயம்" இடைக்கால ரத்து செய்துள்ளது. அவ்வாறு ரத்து செய்வதற்கான அடிப்படை காரணங்களை இந்திய அரசு நியமித்த "நிபுணர் குழு" அறிககையை கொண்டே முடிவு செய்துள்ளனர். அந்த நிபுணர் குழு மத்திய அரசின் சுற்று சூழல் இலாக்கா கொடுத்த அனுமதியையும், அதற்கான ஆதரங்களையும் கடுமையாக எதிர்த்தது.

அந்த நிபுணர் குழுவில் சென்னையை சேர்ந்த தமிழ்நாடு பி.யு.சீ.எள். தலைவராக இருந்த வழக்கறிஞர் சுரேஷ் செயல்பட்டார். அவர் தனது ஆதாரங்களை நம் முன்பு விரிவாக்க விளக்க ஒப்புக்கொண்டுள்ளார். திங்கள் கிழமை காலை பதினோரு மணிக்கு, உயர்நீதிமன்ரம் எதிரே உள்ள "லிங்கி செட்டி தெருவின் முதல் குறுக்கில் உள்ள எரரபாலா தெரு முக்கில் உள்ள வி.ஏன்.கே. கட்டிடத்தில், இரண்டாவது மாடியில், நடைபெறும். அனைவரும் வரலாம். தங்களால் வருகை உவகை டஹ்ரும். ---டி.எஸ்.எஸ்.மணி .9444905151

சிங்கள அரசின் இனவாத அணுகுமுறையில், சிங்கள புரட்சியாளர் தலைவருக்கும், தமிழ் புரட்சியாளர் தலைவருக்கும் உள்ள வேறுபட்ட அணுகுமுறை.

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்

Monday, 26 March 2012 10:49

சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட 'தண்டிக்கப்படாத குற்றங்கள் ' ஆவணப்படத்தில் பிரபாகரனுடைய இளைய மகனான 12 வயது பாலச்சந்திரன் கொல்லப்பட்டிருந்த தகவல்

போர்க்குற்ற ஆதாரமாகச் சுட்டப்பட்டிருந்தது. இந்தியத் தொலைக்காட்சி விவதாம் ஒன்றில் கலந்து கொண்டிருந்த சுப்ரமணியசுவாமியும் போரில் கொல்லப்பட்ட பல பிள்ளைகளில் பிரபாகரன் மகனும் ஒருவர். அதற்கு ஏன் முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது எனும் வகையில் கருத்துத் தெரிவித்திருந்தார். இது போன்று சிறிலங்காவின் ஆட்சியாளர்கள் தரப்பில் இருந்தும் பல்வேறு விமர்சனங்கள் வந்திருந்தன.

இவர்களின் கேள்விக்கு பதிலளிக்கும் வகையில் colombotelegraph வெளிவந்திருக்கிறது இக் கட்டுரை. இக் கட்டுரையை எழுதியிருக்கும் உவிந்து குருகுலசூரிய ஒரு சிங்களர் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கும், கொழும்பு ரெலிகிராப் தளத்துக்கும், இதனை தமிழில் மொழியாக்கம் செய்த குளோபல் தமிழ்ச் செய்திகளின் தேவ அபிரா ஆகியோருக்கான நன்றிகளுடன் இங்கு மீள்பதிவு செய்கின்றோம். - 4Tamilmedia Team

கொல்லப்பட்ட பாலசந்திரனும் காப்பாற்றப்பட்ட றோகணவின் மகன் உவிந்துவும்

“ ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்து வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.”

- உவிந்து குருகுலசூரிய.

“இங்கே கொள்கைகள் இருக்கின்றன இங்கே உண்மைகளும் இருக்கின்றன. கொள்கைகள் மாறுபடலாம் ஆனால் எப்படியிருப்பினும் உண்மைகள் மறுக்கப்படமுடியாதவை. ஆயிரக்கணக்கான தமிழர்கள் இளையவர்கள் முதியவர்கள் என்ற பாகுபாடின்றித் தாக்கப்பட்டார்கள். இன்னும் குழந்தைகள் கூடத் தாக்கப்பட்டார்கள். தமிழர்கள் தங்களுடைய வாகனங்கள் உடமைகள் கட்டிடங்கள் வீடுகள் தொழிற்சாலைகள் யாவும் கொள்ளையடிக்கப்பட்டு எரிக்கப்பட்டதைக் கண்ணுற்றார்கள். அவர்கள் அவமானப்பபடுத்தப்பட்டு நாதியற்றவர்களாக அகதிகளாகப் பயத்துடன் வாழ விதிக்கப்பட்டார்கள்”

இதயத்திலிருந்து வரும் ஒரு அழுகை…. 1983ம் ஆண்டின் இறுதியில் நிகழ்ந்தது என்ன? (ஆயர் லக்ஷ்மன் விக்கிரமசிங்கவின் கடிதத்திலிருந்து

சனல் நான்கின் “கொலைக்களம்” விவரணப்படத்தின் இயக்குனர் கொலம் மக்றே சென்ற கிழமை இவ்வாறு எழுதுகிறார்: 12 வயதுச் சிறுவன் நிலத்தில் விழுந்து கிடக்கிறான். இடுப்பிற்குமேல் நிர்வாணமாக்கப்பட்டு மார்புப் பகுதியில் அய்ந்து குண்டுத் துளைகளைக் கொண்டிருந்த அவன் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் புதல்வனான பாலசந்திரனாவான். அவனுக்கருகில் அவனது அய்ந்து மெய்ப்பாதுகாவலர்களின் உடல்களும் கிடந்தன. அவர்கள் நிர்வாணமாகவும் கண்கள் கட்டப்பட்ட நிலையிலும் சுடப்பட்டிருக்கலாம் எனத்தெரிகிறது. மேலும் சாட்சியங்களை வைத்துப்பார்க்கும் போது இலங்கை அரசு சரணடைந்த புலிகளின் தலைவர்களையும் விடுதலைப்புலிப் போராளிகளையும் அது குழந்தைகளாக இருந்தபோதும் கூடக் கொல்வதில் ஒரு தெளிவான திட்டமிடலை அணுகுமுறையை கொண்டிருந்தது புலப்படுகிறது.

இதுவேதான் இலங்கை அரசுக்குள்ள பிரச்சினையும் ஆகும் எனேனில் இந்தக் கொலை ஒரு தற்செயலான அல்லது எதிர்பாராமல் நிகழ்ந்த சம்பவமாக இருக்கவில்லை என்பதுதான். அவ்வாறு இருந்திருந்தால் இதனை கோபம் கொண்ட இராணுவத்தினரின் எழுந்தமானமான நடவடிக்கை என்று புறந்தள்ளியிருக்கலாம். இங்கே பாலச்சந்திரன் பிரபாகரனின் மகனாக இல்லாதிருந்தால் சிலவேளை இன்றைக்கு உயிருடன் இருந்திருக்கக்கூடும் என ஒருவர் நினைப்பதற்கும் இடமுண்டு.

டெய்லிமிரரில் கடந்த புதன்கிழமை வாசகர் ஒருவர் பின்வருமாறு பின்னூட்டமிட்டிருந்தார்.

யுத்தம் ஒன்றில் நிகழும் குழந்தை ஒன்றின் மரணம் அவலமானது என்பதில் சந்தேகமில்லை. ஆனால் பாலச்சந்திரனின் மரணத்திற்கு தேவையில்லாமல் கொடுக்கப்படும் முக்கியத்துவம் கடந்த முப்பது வருடப் போரில் கொல்லப்பட்ட குழந்தை பாலச்சந்திரன் மட்டுமே என்னும் தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்த முனைகிறது. ஆனால் நடந்து முடிந்த போரில் எண்ணுக்கணக்கற்ற குழந்தைகள் இறந்து போனவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் பட்டியலில் அடையாளமற்றவர்களாக இருக்கிறார்கள்.

பிரபாகரனின் மகனைக் கொல்வது என்பது மேற்குறித்தது போல ஒரு சாதாரணமான விடையமா?

நடந்து முடிந்த இரத்தக்களரியில் ஆயிரக்கணக்கான குழந்தைகள் கொல்லப்பட்டிருக்கிறார்கள்; பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மைதான் ஆனால் பிரபாகரனின் மகன் கொல்லப்பட்டது சாதாரணமான விடையம் என நான் கருதவில்லை.

இது போர்க்குற்றம் என்ற ஒரு குற்றச்சாட்டிற்கு அப்பால் இந்தக் கொலையை இலங்கைச்சமூகத்துள் நிலவும் வன்முறையான கலாசாரக்கட்டமைப்பை வெளிப்படையாகக் காட்டும் ஒரு அசாதாரணமான சம்பவமாகக் கருதுகிறேன்.

முரண்பாடுகளைத் தீர்க்கும் வல்லுனர்கள் சொல்வது போல் இராசதந்திரிகள் சமரசப் பேச்சாளர்கள் மற்றும் சமூக விஞ்ஞானிகள் உலகில் நிலவும் முரண்பாடுகளை கடந்த 50 வருடங்களாக ஆராய்ந்து முரண்பாடுகள் நிலவும் சமுகங்களில் நிலவும் வன்முறைகள் பற்றித் தெளிவான நுண்மையான கோட்பாட்டை உருவாக்கியிருக்கிறார்கள்.

முரண்பாட்டுக்கும் வன்முறைக்குக்கும் உள்ள தொடர்பை விளக்கும் கோட்பாட்டைப்பற்றி முதலில் இங்கு சொல்ல விரும்புகிறேன்.

எல்லாவிதமான முரண்பாடுகளும் வன்முறையை வெளிப்படுத்துபவை அல்ல. சமூகத்தில் மாற்றங்கள் ஏற்படும் போது முரண்பாடுகள் தோன்றுகின்றன. சிலர் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளுவார்கள் மற்றவர்கள் எதிர்ப்பார்கள். இந்த உடன்பாடின்மை அல்லது முரண்பாடு என்பது அமைதியான முறையில் வழிநடத்தப்பட்டால் அது முன்னேற்றகரமான நடைமுறையாக இருக்கும். ஆனால் ஒரு முரண்பாடு சரியான முறையில் வழிநடாத்தப்படாவிட்டால் அது வன்முறையாக மாறுகிறது. முரண்பாடு ஒன்றில் வன்முறை கைக்கொள்ளப்படும் போது மக்கள் அச்சமடைகிறார்கள். மக்கள் தமது பாதுகாப்பிற்கு இருப்பிற்கு ஆபத்து ஏற்படுவதை உணர்கிறார்கள்.

பொதுவில் முரண்பாடு என்று சொன்னாலேயே வழமையாக வன்முறை நிறைந்த முரண்பாட்டைச் சுட்டுவதாகவே ஆகிவிடுகிறது…

பௌதீக ரீதியாக மேற்கொள்ளப்படுகின்ற வன்முறைகள் வெளிப்படையானவை எல்லோராலும் அறிந்து கொள்ளப்படக்கூடியவை. தனிநபர்கள் அல்லது குழுக்கள் தம்முள் உள்ள முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு ஒருவரை ஒருவர் காயப்படுத்தவோ கொல்லவோ முயற்சி செய்கிறார்கள் இதனால் பலர் பாதிக்கப்படவும் செய்கிறார்கள்

ஆனால் இவற்றுக்கப்பால் ஒரு சமூகத்தை ஆழமாகப் பாதிக்கின்ற பல்வேறு வகையான வன்முறை வடிவங்களும் இரக்கக்கூடும். இவற்றை கண்டு கொள்வதும் ஆராய்வதும் விளங்கிக் கொள்வதும் மக்களுக்கு கடிமனாக இருக்கும். இவை மறைந்திருக்கும் வன்முறைகளாக இருக்கும். கலாச்சார ரீதியான வன்முறைகளையும் கட்டமைக்கப்பட்ட வன்முறைகளையுமே இங்கே குறிப்பிடுகிறேன்.

பல ஆண்டுகளாக ஒரு குழு இன்னுமொரு குழு மீது கலாச்சார ரீதியான வன்முறையைப் பிரயோகித்திருக்கக் கூடும். பௌதீக ரீதியான வன்முறையை நியாயப்படுத்துகின்ற பேச்சுக்கள் உரையாடல்களை ஒரு குழு நடத்தியிருக்கலாம். வன்முறையைத் தூண்டுகிற விம்பங்களை பரப்பி இருக்கலாம்.

வெறுப்புணர்வை ஏற்படுத்தும் பேச்சுக்களைப் பேசுதல் தமது சமூகத்தைச் சாராதவர்கள் மீதான வெறுப்புணர்வை வளர்த்தல் போர்வீரம் பற்றிய ஜதிகங்களை பரப்புதல் வளர்த்தல் பாலியல் ரீதியான ஒடுக்குமுறைகளை போரை நியாயப்படுத்தும் சமயக் கருத்துக்களை ஊக்குவித்தல் போன்றவை கலாச்சார ரீதியான வன்முறைகளைச் சார்ந்தவை.

ஒரு குழுவினது அல்லது சமூகத்தினது மரபுரீதியான பழக்க வழக்கங்களில் அல்லது அவர்களது சட்டங்களில் இருக்கக்கூடிய வன்முறையைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையாகக் கருதலாம்.

இத்தகைய வன்முறைகள் மிகவும் பாதிப்புக்களை உண்டுபண்ணக்கூடியவை. இவை இயல்பாகவே அந்தச்சமூகங்களில் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கும் அல்லது கண்டும் காணாமல் விடப்பட்டிருக்கும். நிறுவனமயப்பட்ட நிறவாதம் அல்லது பாலின ஒடுக்குமுறையை இங்கே உதாரணமாகக் குறிப்பிடலாம்.

அரச அல்லது பொருளாதார நடவடிக்கைகளில் வாய்ப்புக்களை வழங்கும் போது நட்புக்காக உறவுக்காக தகுதி உள்ளவர்களை புறக்கணித்தல்; ஊழல் செய்தல்; வறுமை ஏற்படுத்தல் கொடூரமான சுரண்டலைச் செய்தல்; பால் அல்லது இனரீதியான ஒடுக்குதலைச் செய்தல் குடியேற்றவாதத்திற்குத் துணைநிற்றல் போன்ற இன்னோரன்ன விடையங்களைச் செய்வதற்காக சட் டத்தைப் பேணுவதிலும் ஒழுங்கை நிலை நாட்டுவதிலும் பாரபட்சம் காட்டுதலைக் கட்டமைக்கப்பட்ட வன்முறையின் ஒரு பகுதியாகக் கருதலாம்.

இந்த வன்முறைகள் மிகமிக முக்கியமாக அடையாளம் காணப்பட வேண்டியவை. ஏனேனில் இவைகள்தான் பௌதிக ரீதியான வன்முறைகளுக்கும் அடிப்படையாக இருப்பவை.

பௌதீகரீதியான வன்முறையை அடையாளம் கண்டு நிறுத்துவது மட்டும் போதாது ஏனேனில் சமூகத்துள் மறைந்துள்ள கட்டமைக்கப்பட்ட கலாச்சார ரீதியான வன்முறைகளை களையாவிட்டால் பௌதீக ரீதியான வன்முறைகள் மீளவும் தலையெடுக்கவே செய்யும்.

போரை வென்றபின் ராஜபக்ச அமைதி வந்துவிட்டதாகக் கூறினார். உண்மையிலும் அவ்வாறு அமைதி ஏற்பட்டுவிட்டதா?

இப்போது பாலசந்திரன் கொல்லப்பட்ட நிகழ்வை இலங்கையில் நிலவுகின்ற கட்டமைக்கப்பட்ட வன்முறை என்னும் கருத்தியலுடன் இணைத்துப் பார்க்க முடிகிறதா?

உங்களுக்கு அவ்வாறு முடியும் என்றே எனக்குத் தோன்றுகிறது.

ஒரு நாகரீகமடைந்த தேசமாக, எதிர்காலச் சந்ததிக்காக, எதிர்காலத்தில் நிகழக்கூடிய இனக் கலவரங்களைத் தவிர்ப்பதற்காக தேசிய இன நல்லிணக்கம் அவசியமாகிறது. தமிழ் அரசியலைத் தனிமைப்படுத்திப் பார்க்காமல் தெற்கு அரசியலின் குருட்டுத்தனமானதும் இறுக்கமானதுமான அரசியல் காரணமாக தமிழ் அரசியல் எவ்வாறு மாற்றமடைந்தது வந்துள்ளதென்பதைப் புரிந்து கொள்வது மிக மிக அவசியமாகிறது.

அரச வன்முறையாகட்டும்சரி அல்லது அரசு அல்லாத குழுக்களின் வன்முறையாகட்டும் சரி அது மக்களுக்கு எதிரானது என்பதில் எவருக்கும் கருத்துவேறுபாடு இருக்க முடியாது.

அரசதலைவராகவும் அரசஇராணுவத்தின் தலைவராகவும் இருந்த இலங்கையின் எல்லா அரசியல்வாதிகளும் கொலைகளுக்கான உத்தரவை வழங்கியே இருந்தனர். அதுபோல புரட்சி அமைப்புக்களின் தலைவர்களாக இருந்த விஜயவீரவும் பிரபாகரனும் கூடக் கொலைகளுக்கான உத்தரவுகளை வழங்கியே இருந்தனர்.

தமிழ்ப்போராளிகள் கொண்டிருந்த பயங்கரவாதம் அரச பயங்கரவாதத்தின் விளைவாகவே ஏற்பட்டிருந்தது. இது ஒரு எதிர்விளைவாகும். 1983ம் ஆண்டு காலிமுகத்திடலில் தமிழர்களால் நடாத்தப்பட்ட அமைதியான போராட்டம் அந்நாளைய பிரதமர் பண்டாரநாயக்காவின் (S.W.R.D Banadarnaike.) உத்தரவின் பேரில் தாக்கப்பட்டு இரத்தக்களரியாக்கப்பட்டது.

அன்றைய பிரதமரினால் எவ்வாறு தாக்குதல்களுக்கான உத்தரவு வழங்கப்பட்டது என்பதை அன்றைய IGP ஆன த.சில்வா (S. W. O de Silva) 1958 ம் ஆண்டு ஜூன் மாதம் பொலிஸ் தலைமையகத்தில் நிகழ்ந்த இரகசிய கூட்டத்தில் DIG களுக்கு கூறியிருந்ததை யாவரும் அறிவர்.

இந்தச் சம்பவம் நிகழ்ந்து 20 வருடங்களின் பின்பு தமிழ்ப் போராளிகளின் பயங்கரவாதம் வேலுப்பிள்ளை பிரபாகரன் விடுதலைப்புலிகளைத் ஸ்தாபித்ததுடன் தோன்றியது. அரசல்லாத சிங்களப் போராளிகள் கடைப்பிடித்த பயங்கரவாதம் என்பது அரச வன்முறையின் விளைவாக வந்ததல்ல பதிலாக அரசைக் கைப்பற்றுவதற்கான வன்முறையாக அது உருவெடுத்தது.

இது றோகண விஜிய வீர JVP யை ஸ்தாபித்ததுடன் தோன்றியது. 1971ம் ஆண்டு JVP இன் பயங்கரவாதத்திற்கு எதிராக அரசு தனது பயங்கரவாதத்தைக்கட்டவிழ்த்து விட்டது.

இன்னொரு மொழியில் சொல்வதானால் தமிழ் போராளிகளின் பயங்கரவாதம் அரச பயங்கரவாதம் தொடங்கியதன் பின்னரே தொடங்கியது. ஆனால் சிங்களப் போராளிகளின் பயங்கரவாதம் அரசு தொடங்கமுன்னரேயே தொடங்கிவிட்டது.

இன்றைக்கு அரசு அல்லாத இரண்டு பயங்கரவாதக்குழுக்களின் தலைவர்களும் உயிருடன் இல்லை. மேலும் இவர்கள் இருவரும் அரச பயங்கரவாதத்திற்கு பலியாகியும் உள்ளனர். இருவரும் தமது நோக்கங்களை அடைய முடியாமல் எதிர்வன்முறைக்குப் பலியாகியுள்ளனர்.

றோகண விஜிய வீர கைது செய்யப்பட்டபோது நாடு முழுவதையும் பயங்கரமாக்கிக் கொண்டே அரசுக்குக்கெதிராகப் போர் செய்துகொண்டிருந்தார். றோகண விஜிய வீர தனது மனைவி மக்களுடன் கைது செய்யப்பட்ட போது நாவலப்பிட்டியில் உள்ள பண்ணையொன்றின் உரிமையாளராக அத்தநாயக்க என்ற பெயரில் வசித்துக் கொண்டிருந்தார். அதே வேளை ஆயிரக்கணக்காகன ஜே.வீ.பி போராளிகள் அரசுடன் கடுமையான சண்டையில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர்.

ஆனால் பிரபாகரன் கடைசி நேரம் வரையும் அரசாங்கத்துடன் போர்க்களத்தில் சண்டையிட்டுக்கொண்டிருந்தார்.

விஜிய வீர எப்படிக் கொல்லப்பட்டார்? பிரபாகரன் எப்படிக் கொல்லப்பட்டார்? என்பதுவெல்லாம் அரச இரகசியமாகவே உள்ளன. பொதுமக்களுக்கு இவை ஒருபோதும் தெரியப்போவதில்லை. ஆனால் இங்கே பல கேள்விகள் எழுகின்றன.

இருதலைவர்களினது குடும்பங்களின் எதிர்காலம் எப்படி இருக்கின்றது?

அரசு விஜிய வீரவின் மனைவியையும் (சித்திராங்கனி) பிள்ளைகளான உவிந்து சுபுன் சகா, தசுன் எகா மற்றும் மூன்று பிள்ளைகளையும் எவ்வாறு நடாத்தியது?

பிரபாகரனின் மனைவியான மதிவதனி மற்றும் பிள்ளைகளான சார்ஸ் அன்ரனி,( சார்ஸ் அன்ரனி போர்க்களத்தில் ஆயுததாரியாக இருந்தார் எனவே அவரை விட்டுவிடுவோம்) பாலச்சந்திரன், துவாரகா ஆகியோரை எப்படி நடாத்தியது?

விஜிய வீரவின் குடும்பம் கொல்லப்படவில்லை. அவர்கள் அரசினால் நன்றாகப் பராமரிக்கப்பட்டார்கள். அவர்கள் இன்னும் உயிருடன் இருக்கிறார்கள்.

சித்திராங்கனி விஜிய வீர யு.என்.பி கட்சி கூட தங்களுக்கு நன்கு உதவியதாக கூறி இருந்தார். 2004ம் ஆண்டு ஜூன் 20 ம் திகதி சித்திராங்கனி சண்டே லீடருக்கு அளித்த பேட்டியில் மறைந்த சனாதிபதி ரணசிங்க பிரேமதாச கூட தங்களுக்கு நிறைய உதவிகளைச் செய்ததாகக் கூறினார். எங்களுக்கு உதவி முக்கியமாகத் தேவைப்பட்ட கணத்தில் அவர் அதனைக் கவனமெடுத்துச் செய்ததாகவும் மட்டக்களப்புப்பல்கலைக்கழகத் திறப்பு விழாவுக்கு ஜூனில் வரும்போது திருகோணமலைக் கடற்படைத்தளத்தில் தங்கவைக்கப்பட்டுப் பராமரிக்கப்பட்ட தங்களைச் சந்திக்க வருவதாகக் கூறியிருந்ததாகவும் ஆனால் அவர் அந்த ஆண்டு மே மாதத்தில் கொல்லப்பட்டுவிட்டதால் அது நிகழவில்லை எனவும் கூறியிருந்தார்.

எப்படி இருப்பினும் பிரபாகரனின் மனைவி பிள்ளைகளுக்கு (சார்ஸ்சைத் தவிர) உண்மையில் என்ன நிகழ்ந்தது என்பது எங்களுக்கு இன்னும் சரியாகத் தெரியாது.

தீர்க்கப்பட்ட வெடிகுண்டுகளில் முதலாவது குண்டு பிரபாகரனின் மகனை நோக்கியே இருந்திருக்கவேண்டும் என்பதாக பிரித்தானியத் தடயவியல் நிபுணரான கலாநிதி பவுண்டர் கூறுகிறார். சிறுவனின் மார்பில் உள்ள குண்டு துளைத்த அடையாளங்களைப் பார்க்கும் போது சிறுவன் இரண்டு அல்லது மூன்று அடி இடைவெளிக்குள்ளேயே சுடப்பட்டிருக்க வேண்டும் எனப் புலனாகிறது. தன்னைச் சுடவந்த துப்பாக்கியினை எட்டிக் கரங்களால் தொட்டிருக்கக்கூடிய நிலையிலேயே அவன் சுடப்பட்டிருக்கிறான்.

விஜிய வீரவின் குடும்பத்துடன் ஒப்பிடும் போது பிரபாகரனின் குடும்பம் பாரபட்சமான முறையிலேயே நடாத்தப்பட்டிருக்கிறது. ஏன்?

இதற்கு காரணம் இலங்கையில் நிலவும் கட்டமைக்கப்பட்ட வன்முறை. ஏனேனில் பிரபாகரன் தமிழன்.

நன்றி:கட்டுரையாளர்: உவிந்து குருகுலசூரிய.

uvindu@jouranalist.com

நன்றி: மொழியாக்கம்: குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக தமிழில் தேவ அபிரா

நன்றி: Wijeweera family vs. Prabakaran’s family :colombotelegraph