Thursday, December 22, 2011

கிஷன்ஜி கொல்லப்பட்டது பற்றிய உண்மைகள்

மாவோவாத புரட்சிகர இயக்கத்தின் அரசியல்பிரிவு தலைவர்களில் ஒருவரான கிஷன்ஜி என்ற மல்லேசுலு கோடீஸ்வர ராவ் கொலை செய்யப்பட்டார் என்ற செய்தி அனைவரையும் கடந்த நவம்பர் மாதம் 24 ஆம் நாள் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனால்தானே தருமபுரி மாவட்ட பார்த்திபன் தோழர் கொல்லப்பட்டார் என்று தமிழ்நாட்டு தோழர்கள் வினவினார்கள். பார்த்திபன் சில ஆண்டுகளுக்கு முன்னாள் கொல்லப்பட்டது, அடஹ்ர்கும் முன்பு தோழர் ரவீந்திரனை தர்மபுரியில் "மோதல் சாவு" என்ற பெயரில் காவலர்கள் கொன்றதை எதிர்த்து வழக்கு போட்டு காவல்துறைக்கு நெருக்கடியை ஏற்ட்படுத்தியதால் என்று அறியப்பட்டது. அவ்வாறு தமிழ்நாட்டில் "மோதல் துப்பாக்கி சண்டை" என்ற பெயரில் பல புரட்சியாளர்களையும், ரவுடிகளையும் காவல்துறை சென்ற ஐந்து ஆண்டுகளில் மட்டுமே இருப்பந்தைந்து பேரை கொன்றுள்ளது என்று கோவை ஈஸ்வரன் அந்த அறைகூட்டத்தில் கூறினார். அங்கே வந்திருந்த ஆந்திரபிரதேச சிவில் உரிமை கவுன்சில் பொது செயலாளரான சந்திரசேகர் பல உண்மைகளை கிஷன்ஜி கொலை பற்றி எடுத்து வைத்தார்.


மேற்கு மிதினாப்பூர் மாவட்டத்தில் பரிசொலே மற்றும் கோசை பந்த் என்ற கிராமங்களில் உள்ள குக்கிராமமான சோரகட்டாவுக்கு உண்மையறியும் குழு சென்றது. அந்த இரு கிராமங்களின் மக்களிடமும், உண்மையறியும் குழு பேசினார்கள். அதேபோல ஐம்போனி காவல்நிலைய துணை ஆய்வாளர், உதவி துணை ஆய்வாளர் ஆகியோரிடமும் பேசினர். நவம்பர் இருபத்தினாலாம் நாள், கிஷன்ஜி மோதல் சாவில் இறந்ததாக கூறப்பட்ட இடத்தையும்நேரிலாய்வு செய்தார்கள்.சொரகட்டாவிளிருந்து 300 மீட்டர் தொலைவில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. துப்பாக்கிசூடு நடந்ததாக கூறப்பட்ட இடத்தில் அவரது உடல்கடந்த இடத்திற்கு மிக அருகே ஒரு "பெரிய கரயான் புத்து" அப்படியே எந்த பாதிப்புமில்லாமளிருன்தது. அதாவது உண்மையில்மொதல்துப்பாக்கி சூடு நடந்திருந்தால் அந்த புற்று உடைந்திருக்கும்.தொட்டாக்களந்த புற்றை துளைத்திருக்கும். அருகேயுள்ள மரங்களில் தோட்டாக்களின் துவாரங்கள் காணப்பட்டாலும்,அவற்றிலேரிந்துபோன அடையாளங்களில்லை. அதாவது வேகமான துப்பாக்கி சூடுஒன்று நடந்து முடிந்த இடத்திற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லை.

அந்த கிராமமக்களிடம்களையில்வந்து,காவல்துறையினர் வீடுகளைவிட்டு வெளியே வராதீர்கலேன்று கூறியதை அவர்கள் கூறினார்கள். அதாவது அது ஒரு நாடகபாணியில் செய்யப்ப்பட்ட செயலேனப்து தெரிந்தது. இதுபோலொரு நாடகத்தை விஜயகுமார் ஏற்கனவே தமிழ்நாட்டில் வீரப்பன் மரணத்தை ஏற்படுத்தியதில் செய்திருக்கிறார் என்பது நமக்குதான் தெரியும். வெங்கடேச பண்ணையார் மரணத்தை ஏற்படுத்தியதில் அவர் செய்த தவறும் அவருக்கு தெரியும்.ஆகவே இந்த முறை கிஷஞ்சிக்கு வரும்போது திட்டம் போட்டு "போலி துப்பாக்கி சண்டையை" நாடகம் போல நடத்துவதில் எத்தனை ஏற்பாடுகளும் செய்தும்,பல விசயங்களில் "கோட்டை" விட்டு விட்டார். .அதனால்தான் நாமிப்போது அதை அக்ண்டுபிடித்து விட்டோம்.

அடுத்து கிஷஞ்சியின் உடலைபார்த்தால்யாருமே அது ஒரு சித்திரவதை செய்து கொள்ளை செய்யப்ப்பட்ட உடல் எனபதை மறைக்கமுடியாது. தலைபகுதியில் காயங்களிருக்கின்றன. விழி குழியிலிருந்து வலது கண் தொங்கிக் கொண்டிருக்கிறது. இதுவே அவரை பிடித்து கண் விழிகளை பிடிங்கியுள்ளனர் எனபதை காட்டுகிறது.முகத்தில் கீழ் தாடை பகுதி முழுமையாக உடைக்கப்பட்டுள்ளது. இது துப்பாக்கி பட என்ற பின்புறத்தால் தாடையில் ஓங்கி இடத்தால்தான் ஏற்படும். அதை ஒரு புரட்சியாளரை பிடித்து கட்டிப்போட்டுதான் செய்யமுடியும். அதேசமயம் தாடையில் எரிந்த அடையாளம் காணப்படுகிறது.. அதாவது எதையோவைத்து அவரது தாடை பகுதி எரிக்கப்பட்டுள்ளது.இதை ஒரு மனிதரை கட்டி போட்டபின்புதான் செய்யமுடியும். இத்தனை கொடூரங்களை செய்பவர் ஏற்கனவே இதுபோன்ற சித்திரவதைகளை செய்வதில் கை தேர்ந்தவராக இருக்க வேண்டும். அபப்டி கைதேர்ந்தவர் விஜயகுமார்.


தலையின் பின்பகுதியில் மண்டை ஓடு காணப்படவில்லை. அதாவது அவரது மூளையை கண்டு பயந்த ஆளும்வர்க்கம் அவரது மூளையை வெட்டி எடுத்து "பரிசோதனைக்காக " அனுப்பி உள்ளனர் எனபது தெரிகிறது. இது மேலிட முடிவாக இருந்தால்தான் அபப்டி நடக்க முடியும். அதாவது உள்துறை இப்போது இதில் தப்பிக்க முடியாது. முகத்தில் நான்கு இடங்களில், அதாவது மூக்கின் இருபோர்மும், மூக்கிற்கு கீழே கன்னத்தில் என்று "துப்பாக்கியின் பேண்ட் பகுதியின் கூர் ஆயுதத்தால் குத்தப்பட்டது தெரிகிறது. இது கட்டி போடப்பட்ட ஒரு நபரை அதிக பட்ச சித்திரவதை செய்வடஹியே காட்டுகிறது. அந்த காயங்கலத்தை நிரூபித்து நிற்கின்றன. தொண்டை பகுதியில் கூர் ஆயுதத்தால் வெட்டி சிதைக்கப்பட்டுள்ளது தெரிகிறது. அவரது வலது முன்கை உடைக்கப்பட்டுள்ளது. ஆனால் கையின் மேல் பகுதியில் எந்த வெளிக்காயங்களும் இல்லை. அதாவது உள்காயமடையுமளவில் அந்த சித்திரவதை செய்யப்பட்டுள்ளது.


வலது கையில் மூன்று துப்பாக்கி குண்டுகல்துளைத்த காயங்களுள்ளன. இஅரண்டு கனுக்கால்களுமுடைக்கப்பட்டுள்ளன. பாதத்தில்பாதி உடைந்து தொங்கி கொண்டிருக்கிறது. இடது கால்பகத்தில் தோள்கள் காணப்படவில்லை. இடது கையில் ஆள்காட்டி விரலில் மூன்றில் ஒரு பகுதி வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இது எப்படி மோதல் சாவில் இறந்த ஒருவரது உடலில் ஏற்படும்? உடலின் முன்பக்தி முழுவதும் பெனட்களால் குத்தப்பட்டு முப்பது இடங்களில்காய்நகல் உள்ளன. அந்த அளவுக்கு உயர்ந்தபட்ச சித்திரவதைக்கு கிஷன்ஜி உள்ளாகியுள்ளார். அவரி அந்த அளவுக்கு ஆளும்வர்க்கம் வேருத்துள்ளது. அவர் மீது அந்த அளவுக்கு பகைமை பர்ராட்டி உள்ளது. அது ஏன் என்ற கேள்வி எழ வேண்டும்?


கிஷன்ஜி சில மாதங்களுக்கு முன்பு பெச்ச்கிவார்த்தைக்கு தயார் என கூறும்போது, உள்துறை அமைச்சர் சிதம்பரம் மூன்று மாதம் போர் நிறுத்தம் அறிவியுங்கள் என்றார். அதற்கு கிஷன்ஜி மூன்றே நாட்கல்போர் நிறுத்தம் போதுமேன்ருமடஹ்ர்குள் தங்கல்தரப்பை எடுத்து கூறி பெசமுடியுமேன்ரும் நம்பிக்கை தெரிவித்தார். ஆயுதப் புரட்சி செய்யும் கிஷஞ்சியே "அரசியல் போராட்டத்தில்" இத்தனை தூரம் நம்பிக்கை வைத்திருப்பது கண்டு ஆளும் கூட்டம் அதிர்ச்சி அடைந்தது. கிஷன்ஜி பக்கத்தில் இருக்கும் நியாயங்கள் ஊடகம் மூலம் பேச்சுவார்த்தை நேரத்தில் அம்பலமாகி விடும் என்று ஆள்வோர் பயந்து விட்டனர். ஜிண்டால் என்ற கார்பொரேட் நிறுவன நலன் காக்க எண்ணிய ஆளும் கூட்டம் இந்த மனிதரை உயிருடன் விட்டால் ஆபத்து என கணக்கு போட்டனர். ஜிண்டால் நிறுவனத்திற்கு எடுக்கும் நிலங்கள் ஆதிவாசிகளின் நிலங்கள். அதை எதிர்த்து பழங்குடி மக்கல்போராடி வ்ருகின்றனர். அந்த ஜிண்டால் நீருவனம் உட்பட கார்போறேட்களுகாக தான் நிதி மைச்சராக இருக்கும் போதே உரிமம் வழன்கியவர்தான் சிதம்பரம். ஆகவே இந்த கிஷஞ்சியை உயிருடன் விடுவது தன்கள் நலனுக்கு உகந்தது அல்லேன்று சிதம்பரம் எண்ணுகிறாரா?


அதேபோல அரசின் ஒவ்வொரு திட்டத்தஹியும் அந்த வட்டாரத்தில் அதாவது மிதுனாபூர் பகுதியிழ்மக்களை திரட்டி கிஷன்ஜி எதிர்த்து வந்தார். சிறு குழந்தைகளை விட்டு, "மாமா, சிதம்பரமே, எங்கள் பள்ளிகளை திறன்கள். அன்குள்ளுங்கள் ராணுவத்தை அகற்றுங்கள்" என்று கடிதங்களை எழுத வைத்தார். இதுபோன்ற நேர்மையான அரசியல்விளையாட்டுகளை சிதம்பரம் ரசிப்பதாய் இல்லை. அவரது வழிகாட்டலில்,விஜயகுமார் செயல்பட்டார் போல தெரிகிறது. கிஷன்ஜி கொல்லப்பட்டபின்பு, விஜயகுமார் ஒரு அறிக்கை வெளியிடுகிறார்.. அதில் பதில் தாக்குதல் வரும் என்று கூறுகிறார். எத்தனை எதிர்பார்ப்பு அவருக்கு? ஆகவே இது ஒரு விடுதலை பகுதியில் " கார்பொரேட் அரசுக்கும், மக்கள் அரசுக்கும் நடந்த மோதலே" தஹ்விற வேறு எதுவும் இல்லை. கார்பொரேட் களுக்கு உதவும் நாடாளுமன்ற அரசியலுக்கு எதிராக, நாடாளுமன்றத்திற்கு வெளியேதான் உண்மையான எதிர்க்கட்சி அதாவது மாவோவாதிகள் செயல்படுகிறார்கள் என்று நம்மை இந்த நிகழ்வுகள் சொல்ல வைக்கின்றன.