Wednesday, May 30, 2012

சோலை--ஒரு ஊடகவியலாளரின் வரலாறு நின்றுவிட்டது.



    அவர் திண்டுக்கல் அருகே உள்ள ஐயம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர். இடது சாரி கருத்துக்களின் மேலுள்ள தாக்கத்தினால் தோழர் ஜீவானந்ததுடன் நெருக்கமானார். ஜீவா சோலை என்ற அந்த சோமசுந்தரத்தை, "ஜனசக்தி" ஏட்டில் இறக்கிவிட்டார். ஜனசக்தியும், சோலையும் சேர்ந்தே வளர்ந்தனர். அதன்பின் எம்.கல்யானசுன்தரன் நண்பர்களை உர்ச்சாகப்படுத்தியத்தில் தொடங்கியது, "மக்கள் குரல்". அங்கும் சோலையே முதன்மை பணி செய்தார். "அலை ஓசை" சிம்சன் போராட்டத்தில் தமிழ்நாடெங்கும் புகழ் பெற்றது. வேலூர் நாராயணன் நடத்தினார். அங்கும் சோலைதான் சிறப்பு செய்தார். இடதுசாரிகளின் செயல்பாட்டில் ஈடுபடும் "எழுத்தாளர்கள்" ஊடகவியலாளர்கள்" அதிகமாகவும், ஆர்வமாகவும், ஆழமாகவும், விரைவாகவும் "விடை" தேடுவதால், அவர்களுக்கு அன்றைய "நக்சல்பாரி இயக்கம்" ஈர்ப்பு மையமாக ஆகியது. சொலிக்கும் அதே நிலை. 

                சென்னை தொழிலாளர் வர்க்கம் தேர்தலில் பங்குகொள்ளும் இடதுசாரி கட்சிகாரர்களை தாண்டி சிந்தித்தது. நக்சல்பாரி எழுச்சி சென்னை தொழிலாளர் வர்க்கத்தை செழுமையாக தாக்கம் செலுத்தியது. ஏ.எம்.கே. என்ற மூன்றெழுத்து பெயர் எல்லோர் உள்ளத்திலும் எதிரொலித்தது. மோகன் குமாரமங்கலம் வழக்கறிஞராக இருந்தபோது, ஏ.எம்.கோதண்டராமன் அவருக்கு இளம் வழக்கறிஞராக இருந்தாராம். நக்சல்பாரி எழுச்சி, மார்க்சிசிட் கட்சியின் சீ.அய்.டி.யு.தொழிற்சங்கத்தை விட்டு தோழர் ஏ.எம்.கே. வை வெளியே கொண்டுவந்தது. அவருடன் வழக்கறிஞர் குசேலரும் வெளியேறினார். குசேலர் உருவாக்கியது "உழைக்கும் மக்கள் மாமன்றம்" என்ற தொழிற்சங்கம்.தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே. பெயரிலேயே  அந்த தொழிற்சங்கம் போர்க்குனமிக்கதாக வளர்ந்தது. அந்த புரட்சிகர எழுச்சி சென்னையை ஆயயொரங்களில் அல்ல, பத்தாயிரங்களில் ஆல், லட்சங்களில் தொழிலாளர் வர்க்கத்தை தெருவுக்கு இழுத்து வந்தது. அத்தகைய தொழிற்சங்கத்திற்கு ஒரு "நாளேடு" தேவைப்பட்டது. அதுதான் "மக்கள் செய்தி" ஏடு. அங்கும் சோலையே ஒளிர்விட்டார். சோலை தலைமறைவாக இருந்த ஏ.எம்.கே.வை அடிக்கடி சந்தித்து வந்தார்.

                    புரட்சிகர இயக்கத்தின் ஒரு முக்கியகூட்டம்.. இரவில் கிராமத்தில் நடந்துசெல்லும் தோழர்களுடன் சோலை "லாந்தர் விளக்கு" ஏந்தி சென்றார் என்று அவரது இறுதி நிகழ்வில் தோஹ்ர்கள் பேசிக்கொண்டனர். நேற்று செவ்வாய் அன்று சோலை தாம்பரம் தனியற மருத்துவமனையில் மரணமடைந்தார். அதற்குமுன் இடதுசாரிகளில் கல்யாணசுந்தரம் போன்றோர் எல்லாம் எம்.ஜி.ஆர். இன் கழகத்திற்கு துணை சென்ற போது, சொல்லையு உடன் சென்றார். அதன்மூலம் எம்.ஜி.ஆர். தனது முக்கிய ஆலோசகராக சோலையை உடன் வைத்து கொண்டர. அது திமுக வை எதிர்த்து தமிழக மக்களின் "ஊழல் எதிர்ப்பு" போர். அதன் வடிவமாக எம்.ஜி.ஆர். அன்று இருந்ததால் சோலை உடன் இருந்தார். பிரபல "சத்துணவு திட்டம்" சோலை கூறிய ஆலோசனை என்கிறார்கள். அதன்பின் சோலை செல்வி.ஜெயலலிதாவின் அரசியல் நுழைவின் களத்தில், எம்.ஜி.ஆர். ஆலோசனைப்படி உடன் இருந்து உதவினார். 

                   சோலை ஒரு பிரபல எழுத்தாளர். கலைஞரின் கவனத்தில் சோலை ஈர்க்கப்பட்டார். அங்கும் தனது கருத்துக்களை வைக்க சோலை தயங்குவதில்லை. கலைஞரின் உதவியாளராக இருந்துவரும் உறவுக்காரர் அய்.ஏ.எஸ். ராஜமாணிக்கம் சோலையை முழுமையாக கலைஞர் குடும்ப அரசியலுக்கு பயன்படுத்த முனைந்தார். சோலை அங்கும் பயன்பட்டார். பல வார இதழ்களில், பிறகு வார இருமுறை தழ்களில் சோலை தொடர்ந்து எழுதிவந்தார். நக்கீரன் வார இருமுரைய் இதழில் அவர் எழுதிவந்த தொடர் கட்டுரைகள் அரசியல் அரங்கில் முக்கியமானவை. சசிகலா  குழுவினர் தோட்டத்தை விட்டு விரட்டப்பட்ட போது, அதற்காக ஜெயலலிதாவை பாராட்டி எழுதினார்.கடந்த மூன்று வாரங்களாக அவரால் எழுத முடியாமல் மருத்துவமனையில்   இருந்துவிட்டதை கடைசி நேரம் மனம் நொந்து கூறியுள்ளார்.  

                கடைசி நாளுக்கு முந்திய இரவில் சில நண்பர்களுடன் பேச முற்பட்டு மருத்துவர்களால் தடுக்கப்பட்டாராம். கடைசியாக் மருந்து சீட்டின் பின்புறத்தில் அவர் எழுதச்சொல்லி எழுதியவை குறிப்பாக கூறப்படுகின்றது. வருகிற தேர்தலில் காங்கிரஸ்  செல்வாக்கு இழந்துவிடும். ப.ஜ.க.வும் செல்வாக்கு இழக்கும். இடதுசாரிகள் செல்வாக்கு பெறமாட்டார்கள் என்பது வருந்ததக்கது. ஆயினும்.... என எழுதி நிறுத்தப்பட்ட வரிகளை நண்பர்கள் எடுத்து  கூறுகின்றனர். .அதனால்தானோ என்னவோ இன்று கலைஞர் தனது ஆர்ப்பாட்ட பேச்சில், காங்கிரசுடன் கூட்டணி தொடரலாமா? என்ற கேள்வியை எழுப்பியுள்ளார். எபப்டியோ, செல்வி.ஜெயலலிதா மும்ன்முயர்ச்சி எடுக்கும் "மூன்றாவது அணியான" மாநில கட்சிகளின் கூட்டணிதான் சோலை கூறவந்ததா?

          மறக்கமுடியாத நிலையில் சோலையின் உடல் மேல் நான் ஒரு சந்தன மாலையை அணிவித்தேன். பல தோழர்களை அங்கே சந்தித்தேன். நிருபர் ஸ்ரீனிவாசனை சந்தித்து குறிப்பிடத்தக்கது. தாம்பரம் நண்பர்கள் பட்டாளமே ஆணை.பன்னீசெல்வம், வேணுகோபால், இடதுசாரி தோழர்கள் என்று கூடியதை நேரில் கண்டேன்.நேற்றும், இன்றும்   பல,பல தலைவர்கள் மு.க.ஸ்டாலின், இடதுசாரி தலைவர்கள், பீட்டர்  அல்போன்ஸ், திருநாவுக்கரசர், நக்கீரன் கோபால், ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ., எஸ்.எம்.பாக்கர், பலப்பல ஊடகவியலாளர்கள் பெருங்குலத்தூர் இல்லத்திலும், குரோம்பேட்டை மின்சார மயானத்திலும் கூடினர். தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் நடத்தும் இறுதி பயண வாகனத்தில் அவரது உடல் எடுத்து செல்லப்பட்டு எரியூட்டப்பட்டது.