Tuesday, January 10, 2012

உழவர் எழுச்சியை ஏற்படுத்திய பசுபதியின் மரணம்

பசுபதி பாண்டியன் திண்டுக்கல் அருகே அவரது வீட்டில் அடையாலம்கட்டாத எதிரிகளால் நேற்று இரவு ஏழரை மணிக்கு படுகொலை செய்யப்பட்டார். தேவன்றகுல வேளாளர் கூட்டமைப்பு நிறுவன தலைவர் என்ற பெயருடன் அவர் செயல்பட்டு வந்தார். ஒன்பதாம் நாள் தேனியில் முல்லை பெரியார் பிரச்சனைகாக ஒரு பட்டிநிபோராட்டத்தை நடத்தி விட்டு வந்திருந்தார். அவருக்கும் மூலக்கடை பண்ணையார் குடும்பத்திற்கும் உள்ள மோதல் பற்றி எடுகள் வெளியிட்டுள்ளன. அவரது நடவடிக்கைகளினால் பண்ணையார் பக்கத்தில் பலர் மரணம் அடைந்ததையும், அவரது செயளால மேலும் பலர் கொலை செய்யப்பட்டதையும் கவனமாக கூறும் காவல்துறை, பசுபதி பக்கத்தில் "பண்ணையார் குடும்பத்தால்" கொல்லப்பட்டவர்கள் "பதிமூன்றுபேர்" என்பதை கூறுவதில்லை. ஏன் என்றாலவர்கள் "தாழ்த்தப்பட்டவர்கள்".

தேவேந்திரகுல வேளாளர்கள் தமிழ்நாட்டு உழவர் பெருங்குடி மக்களின் போர்குணமிக்க முன்னணி படை. அந்த படையின் ஒரு முன்னோடி கொல்லப்பட்டதனால், டென்றா எழுச்சி திர்ஹேன் மாவட்டங்களில் இப்போது சாலையெங்கும் திரண்டு நிற்கிறது. பசுபதியின் உடலை ஏந்திய வாகனம் பெருமூர்வலமாக தூத்துக்குடி நோக்கி கொண்டு செல்லப்பட்டுக்கொண்டு இருக்கிறது. சாலையெங்கும் திரண்ட தேவேந்திர கூட்டம் ஆண்களும்,பெண்களும் தங்கள் தலைவனை காண கிராமங்களில் இருந்து வெளியே வந்து நிற்கின்றனர். திண்டுக்கல், கொடை ரோடு, மதுரை, அருப்புகோட்டை, எட்டையபுரம், எப்போதும் வென்றான், தூத்துக்குடி என்று அந்த மாபெரும் உழவர் எழுச்சி பேரணி சென்று கொண்டு இருக்கிறது. மதுரை விமான நிலையத்தில் காத்திருந்து டாக்டர் கிருஷ்ணசாமி, மலர் வலயம் வைத்து ஊர்வலத்தில் கலக்க, எட்டயபுரத்தில் பசுபதிக்கு மரியாதை செலுத்தி இணைய ஜான் பாண்டியன் தயாராய் நிற்க இந்த உழவர் பெரும் எழுச்சியை தேவேந்திரா சமூகம் இனி மறக்க முடியுமா? .

இனியாவது உழவு தமிழன் தனது போர்குணத்தை காட்ட தனக்குள்ளேயே எத்ரியை தேடாமல் பண்ணை திமிங்கிலங்களின் கைகளில் கலாவடப்பட்டிருக்கும் நிலங்களை எல்லாம் தனாதாக்கி நாட்டு மக்களுக்கு "உழுது, பயிருட்டு, சோறு போடும் பெரும் கூட்டமாக உருவாகுமா? என்ற ஏக்கம் நமக்கு.

நக்கீரன் வெற்றி பெற்றதா? இல்லையா?

நக்கீரன் சனிக்கிழமை இதழிலேயே அடுத்த இதழ் "பத்தாம் நாள் செவ்வாய் கிழமை" வெளிவரும் என்று பிரச்சனைக்குரிய கட்டுரை வெளியான பக்கத்திலேயே போட்டிருந்தார்கள். அதாவது பொங்கலை முன்னிட்டு, முன்கூட்டியே என்பது அதன் பொருள்..அதற்காக அவர்கள் அடுத்த இதழை தயார் செய்வதில் ஏற்கனவே கவனம் செலுத்தி வந்தனர். ஞாயிற்று கிழமையும் அந்த இதழை முடிப்பதில் வேகம் காட்டி முடித்து விட்டனர். சனிக்கிழமை தாக்குதலால் அடுத்தட இதழ் "தயாரிப்பு ஒரு சவாலாக" நக்கீரன் இதழுக்கு ஆகிவிட்டது. இந்த லாவுக்கு காவல்துறைக்கு அந்த இதழின் விரைவான செயல்பாட்டு சூழல் பற்றி தெரிய வாய்ப்பில்லை. அதனால் அவர்கள் தங்களுக்கு வந்த புகார்களின் அடிப்படியில், நக்கீரன் கொடுத்த புகாரையும், கணக்கில் எடுப்பதிலும், எண்ண செய்யவேண்டும் என்று அந்த புகார்கள் பற்றி முடிவு எடுப்பதிலுமே கவனமாக இருந்தனர்.

அதற்குள் நக்கீரன் குடும்பத்தினர் தங்களது அடுத்த் இதழ் தயாரிப்பில் வேகம் காட்டி , அதை அடித்து, பயிண்டு பண்ணி, பார்சல் கட்டி எல்லா ஊர்களுக்கும் அனுப்புவதில் கவனம் செலுத்தி அதிலும் வெற்றி அடைந்து விட்டனர். அதேபோல செவ்வாய் கிழமை காலையில் கடைகளில் போடுவதிலும் வெற்றி பெற்று விட்டனர். அந்த வெற்றி சென்னையில் எல்லா இடங்களிலும் கிடைக்கவில்லைதான்.அதாவது சென்னையில் உள்ள கடைகளில் அதிமுகவினர் முந்திய இதழை பிடுங்கி எரிக்கும்போதே வட சென்னை போன்ற இடங்களில் உள்ள கடைகளில் இனி நக்கீரன் விற்க கூடாது என்று மிரட்டியது இந்த இரண்டு நாட்களுக்குள் வேலை செய்யத்தானே செய்யும்? அதனால்தான் சென்னையில் போதுமான அளவில் கிடைக்க வில்லை. ஆனாலும் நாம் செவ்வாய் காலையில் கொடுத்த தொந்திரவின் பேரில், வின் தொலைக்காட்சி ஊழியர்கள் போய் கடைகளில் சண்டை போட்டு வாங்கி வந்து விட்டனர்.

அதனால்தான் நேற்று "செய்திகளும், நிஜங்களும்" நிகழ்ச்சியில் எங்களால் நக்கீரனின் "நேற்றைய செவ்வாய் கிழமை இதழ்" பற்றி பேச முடிந்தது. அந்த இதழை பார்த்த போது, அதில் முழுமையாக எப்படி அதிமுக வினர் அராஜகத்தில் ஈடுபட்டனர் என்ற புகை படங்களும், விளக்கங்களும், மட்டுமே இருந்தன. ஏற்கனவே சென்ற இதழான "சிக்கலில்" மாட்டிய இதழில் எப்படி "அதிமுக செயற்குழு, பொதுகுழுவில் பொன்னையன் பேசியதை" ஜெயலலிதா பாராட்டினார் என்று ஒரு தவறான செய்தியை வெளியிட்டிருந்தார்களோ,அதேபோல நடிகர் விஜயின் அம்மா போஎஸ் தோட்டத்தில் இருப்பதாக ஒரு தவறான செய்தியை வெளியிட்டு இருந்தார்கள். இதுபோன்ற தவறான செய்திகளை தருவதற்கு ஏற்ற மனிதர்கள் அந்த இதழுக்கு நெருக்கமாக இருப்பதும் தெரிந்தது. அதிமுக வின் செயற்குழு, பொதுக்குழுவின் படங்களை பார்த்து விட்டு, மேடையில் அமர்ந்திருக்கும் பொன்னையனும், வளர்மதியும் பேசி இருப்பார்கள் என்று எண்ணி "மேசை எழுத்தில்" அது அப்படி எழுதப்பட்டுள்ளது தெரியவருகிறது. பொன்னையன் மேடையில் உட்காரவைக்கப்பட்டிருந்தார் என்றாலும் பேசவில்லை என்று அதிமுக வட்டாரம் கூறுகிறது. வளர்மதி தீர்மானங்களை மட்டுமே வாசித்தார் என்றும் பேசவில்லை என்றும் கூறுகிறது.


அதாவது அந்த சிக்கலான் இதழில், உள்ள சிக்கல்னா கட்டுரையில், ஜானகி அணியின் பொன்னையனும் , வளர்மதியும், பழைய சேவல் அணியான ஜெயலலிதா அணியை சேர்ந்தவர்களை விட விசுவாசமாக இருப்பதாக "ஜெ" கூறியதாக இட்டு கட்டப்பட்ட கட்டுரை வெளிவந்துள்ளது. இதுபோன்ற தவறுகள் "அறை,குறையாக" சிலர் தங்களுக்கு தெரிந்த விவரங்களை பரப்பி, அதிக ரகசியம் தெரிந்தவர்களாக காட்டிக் கொள்வார்கள். அதை சோதித்து பார்க்க வேண்டியது ஏடுகளின் பணி.அத்தகைய தெரிந்தவர்கலேன்று நம்பப்படுபவர்கள் எம்.நடராசனும், திருச்சி வேலுசாமியும் என்பது அனைவருக்கும் தெரிகிறது.

அதாவது செவ்வாய் கிழமை வெளிவந்த இதழில், திருச்சி வேலுசாமி நேர்காணலும், நடராசன் பற்றிய செய்திகளும் இடம் பெற்றுள்ளன. படங்களுடன் அந்த செய்தி வேலுசாமி-நடராசன் பெயர்களுடன் வெளிவந்துள்ளது. அதுமட்டுமின்றி, நக்கீரனுக்கு மிகவும் வேண்டிய மூத்த ஊடகவியலாளர் எ.எஸ்.பன்னீர்செல்வம் தனது கருத்தை புதிய தலைமுரைடி.வி.யில் கூறும்போது, ஒரு ஆட்சி தனது செயல்களை பகிரங்கமாக வைக்காதபோது, ஒரு ஊடகம் அதை யூகம் செய்துதான் எழுத முடியும் என்றும், அதற்கு அந்த ஆட்சிக்கு நெருக்கமாக்கைருந்தவர்களிடம்கேட்டுதான் எழுத முடியும் என்றும் கூறி "பூனையை, பையை விட்டு வெளியே " எடுத்து போட்டு விட்டார். இப்படித்தான் அந்த தோட்டத்திலிருந்து வெளியேற்றப் பட்டவர்களின் மீது "சந்தேகம்" எழுந்துள்ளது. எப்படியோ வெளியே ஓடிவந்தவர்களுக்கும், தேர்தலில் தோற்ற முன்னாள் முஹல்வரின் கட்சிகாரர்களுக்கும் மட்டுமே இதனால் பலன். நக்கீரனுக்கு பலனா? பலவீனமா?

நக்கீரனை கைவிட்ட திமுக?

நக்கீரனை கைவிட்ட திமுக?
நக்கீரன் "ஜெ"வை தாக்கி எழுதினால் அதற்கு ஆதரவாக திமுக தலைமை வரவேண்டும் அல்லவா? அதுதானே தமிழ்நாட்டு அரசியல்? இந்த முறையும் நக்கீரன் அலுவலகத்தை அதிமுக வினர் களை முதல் மாலைவரை தாக்கும்போது, திமுக தலைவர் மதியத்திலேயே ஒரு கண்டன அறிககையை கொடுத்தார் அல்லவா? ஆனால் கலிஞர் அறிக்கையே பல கேள்விகளை எழுப்பிவிட்டன. இந்த பழம் பெறும் அரசியல்வாதி ஏன் தனது மகன் மாத்திரை தினகரனை ஆள் வைத்து எரிக்கும்போது, சும்மா இருந்தார்? அப்போது ஏன் இவர் தனது மகனிடம் இதே அறிவுரையை, அதாவது " வழக்கு" போடலாம், தாக்குதல் கூடாது என்று கூறவில்லை? என்றும் கேள்விகளை பொதுமக்கள் கேட்டார்கள். ''ஊடகத்தை தாக்குவது ஜனநாயக நாட்டில் தவறான செயல் " என்று அப்போது ஏன் இவர் கூறவில்லை? என்றும் கேள்விகள் எழுந்தன.

கலைஞர் வழக்கமாக தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர்கள் பற்றி ஒன்றை கூறுவார். ''சரக்கும் முறுக்கு, செட்டியாரும் முறுக்கு " என்பார். இந்த இடத்தில் நக்கீரன் என்ற சரக்கு முறுக்காக இருந்தாலும், அதை பற்றி கருத்தை விற்பனை செய்ய வந்த செட்டியார் கலைஞராக இருந்ததால், அது "திருப்பி" அடிக்கிறதோ? ஹைதர் அலி ஒன்றை கூறினார். அதாவது பா.ஜ.க. கட்சியின் அலுவலகத்தை திமுக முற்றுகையிட்டு, தாக்கும்போது, திமுக மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகனும், பரிதி இளம்வழுதியும் முன்னே நின்று தலைமை தான்கினார்களே? அது சரியா? என்று நம்மிடம் கேட்டார். யார் செய்தாலும் தவறுதானே? மாட்டு மாமிசம் சாப்பிடுபவர்கள் உலகமெங்கும் பல கொடி இருக்கிறார்கள்: அவர்களை இழிவாக சித்தரிகிரார்களா? என்றும் வினவுயனார். அதேபோல முஸ்லிம், தலித் தோழர்கள் சிலரும் இதையே கேட்டனர். ஜெயலலிதாவை இழிவு படுத்துவதாக எண்ணிக்கொண்டு, அவர்கள் உணவு பழக்கத்தை இழிவுபடுத்தி விட்டார்கள் என்பதே வரகளது வாதம்.

ஆனால் கலைஞர் எப்படி அறிக்கை விட்டார் தெரியுமா? நக்கீரனிடமிருந்து ஒரு வேண்டுகோள் வந்த பிற்பாடு, வலியுறுத்தல் வந்த பின்பே, வெளியிட்ட செய்தியை பற்றி கோபப்பட்டு விட்டு, பிறகே அவர் அறிக்கை தந்தார் என்கிறது ஒரு செய்தி. சரி. அதன்பிறகு, நக்கீரன் அலுவலகத்தார் "தளபதி ஸ்டாலினை" அணுகி அவர் வந்து உடைக்கப்பட்ட அலுவலகத்ஜ்தை பார்வையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டதாகவும், அடஹ்ர்கு அவர் "மறுமொழியே" சொல்லவில்லை என்றும் ஒரு செய்தி வந்துள்ளது. அப்படியானால் நக்கீரனை திமுக கை விட்டு விட்டதா?

நக்கீரன்ல உள்ள நல்லாதானே இருக்கு

அன்று சனிக்கிழமை. சனவரி ஏழாம் நாள். புதுக்கோட்டையில் இருந்தேன். அப்போதுதான் சென்னையிலிருந்து வாடகை காற்றில் திருச்சி வழியாக வந்து இறங்கினோம். பண்ருட்டி வழியில் தானே புயலுக்கு பின்னால் இரவில்; செல்ல முடியாது என ஓட்டுனர் கூறிவிட்டதால், திருச்சி வழிதான் எங்களுக்கு கிடைத்தது. மக்கள் ஜனநாயக கட்சி தலைவர் ஷெரீப் ஏற்பாடு செய்து கொடுத்த விடுதியில் தங்கினோம். அம்பேத்கர்-பெரியார் மக்கள் கழகம் தலைவர் செல்வன் அழைத்தாரே என்று "கரம்பக்குடி" கூட்டத்திற்கு வந்திருந்தோம். கடைகளில் தொங்கிய நக்கீரன் தலைப்பி கொஞ்சம் கண்ணை ஈர்த்தது. " மாட்டு மாமிசம் சாப்பிடும் மாமி நான்" என்று தலைப்பிட்டு "விவரிக்கிறார் ஜெயலலிதா" என்று எழுதி இருந்தது. அவரே சொல்கிறாரா? என்பது நமது கேள்வியாக எழுந்தது.ஆர்வம் இருந்தும் பிறகு வாங்கிகொள்ளலாம் என்று இருந்து விட்டேன். விடுதியில் படுத்து எழுந்த பின்னால் அனகில எட்டிலிருந்து ஒரு நண்பர் தொலைபேசினார். நக்கீரன் அலுவலகம் தாக்கப்படுகிறது என்றார். ஊடகவியலாளராக வருத்தப்பட்டார்.நானும்தான்.

அடுத்து கலைஞர் டி.வி. பார்த்தேன். அதில் நக்கீரன் அலுவலகம் உள்ளே தாக்கப்பட்ட காட்சிகளை, வெளியே ஆர்ப்பாட்டம் செய்யும் காட்சிகளை காட்டினார்கள். அடஹ்ர்குள் த.ம.மு.க. போது செயலாளர் ஹைதர் அலி தொலை பேசினார். நக்கீரன் என்பதால் எனக்கு பேசினார். மாட்டு இறைச்சி ச்டப்பிட்டால் இழிவா? என்ற தோரனையில் இருந்தது அவரது குரல். கலைஞர் அறிக்கை கலிஞர் டி.வி.யில் கட்டப்பட்டது என்றேன். எண்ண சொன்னார்? என்றார். நீதிமன்றம் சென்று அவதூறு வழக்கு போடவேண்டியதுதானே? என்று கேட்டிருக்கிறார் என்றேன். இதே கருத்தை தனது மகனுக்கு ஏன் அவர் "மதுரை தினகரன்" தாக்கப்பட்ட போது கூறவில்லை? என்று கேட்டார். அதுவும் சரியாகத்தானே இருக்கிறது என எண்ணினேன்.அடுத்து உடனேயே நக்கீரன் அலுவலகம் தொடர்பு கொண்டு காமராஜிடம் பேசினேன். உள்ளே "பாசிடிவாகத்தான்" எழுதியிருக்கிறோம் என்றார். எண்ண எழுதி இருக்கிறீர்கள்? என்றேன். மாட்டு இறைச்சி சாப்பிடுவது பற்றி எம்.ஜி.ஆர். கூறியதை ஜெயலலிதாவிற்கு ஆதரவாகத்தான் போட்டிருக்கிறோம் என்றார்.


அ[ப்படியானால் ஏன் அட்டையில் "நெகடிவாக" போட்டீர்கள்? என்றேன்.மாவிற்கு, மா போடவேண்டும் என்று எண்ணியதால் "கெடுத்துக்கொண்டோம்" என்றார். அவர் நக்கீரனின் இணையாசிரியர். அவரது கூற்றை அதிகாரபூர்வமாக எடுத்துக் கொண்டேன். அப்போது அவரது தொலைபேசி மூலம் வெளியே முழக்கம் போடும் சத்தம் கேட்டது. மதுசூதன் ஆட்கள் இப்போது வந்து முழக்கமிடுகிறார்கள் என்றார். "வெளியே காவலர்கள் காட்சி ஊடகத்தில் நிற்பது தெரிந்ததே? எப்படி உள்ளே வந்து உடைத்ததை களைஞர் டி.வி. காட்டினான் "என்றேன்.. முதலில் பத்து பேர் வந்து உள்ளே நுழைந்து எங்கள் வாகனங்களை உடைத்து அலுவலகம் உள்ளே வந்து பல பொருட்களையும் உடைத்து போட்டு விட்டனர். நாங்கள் அவர்களை வெளியே தள்ளி கதவை ப[ஊட்டி விட்டோம் என்றார். அதற்கு பிறகுதான் காவல் துறை வந்தது. வாசலில் நிற்கிறது.ஆனாலும் அவர்களுக்கு ஒத்துழைப்பு கொடுக்கிறது என்றார். ஒவ்வொரு கூட்டமாக அதிமுக வினர் வந்து முழக்கமிட்டு, கள் எரிந்து விட்டு போகிறார்கள் என்றார்.

அதிமுக வினர் மாநிலமெங்கும் நக்கீரன் புத்தகத்தை கடைகளில் பிடுங்கி எரித்து வருகிறார்கள் என்றார். அதேபோல பிற இடங்களிலிருந்தும் கேள்விப்பட்டேன். மறுநாள் காலை தி ஹிந்து, தினத்தந்தி, போன்ற ஏடுகள்; உட்பட திமுக வினர் செய்த அராஜகத்தை படம் பிடித்து வெளியிட்டனர். அன்று காவல்துறை அதாவது ஞாயிற்று கிழமை சிறிது "அடக்கி" வாசித்தாங்க போலிருக்கிறது. உள்ளே போட்டதை படித்து பார்த்து வெளியே போட்டதை ஓரந்தள்ளி பார்க்க அரசியல் கட்சிகாரர்களுக்கு "பொறுமையில்லையோ?". அது அவர்கள் வேலையில்ல்யோ? சரி.இப்படித்தானே மதுரை தினகரன் அலுவலகம் தாக்கப்பட்ட போது, முதலில் மேயர் தேன்மொழி தனது படையுடன் சென்று வாசலில் முழக்கமிட்டு சென்றார். அடுத்து வந்த திமுக குழு வந்து கள் எறிந்துவிட்டு சென்றது. அடுத்து வந்த அட்டாக் பாண்டி குழு உள்ளே புகுந்து அடித்து நொறுக்கி, மூன்று பேர் சாகா காரணமாக ஆகிவிட்டது. இரு கட்சியிலும் தலைமைக்கு விசுவாசம் கட்ட ஒவ்வொரு குழுவாக இப்படித்தான் வந்து தாக்குதல் நடத்திவிட்டு செல்லவேண்டுமோ?