லண்டன் சென்றார் ஸ்டாலின். ஜெனிவா சென்று ஐ.நா பொறுப்பாளரை சந்தித்து "தனத்தை" தந்த மடலை கொடுத்துவிட்டு, ஐ.நா. மனித உரிமை கவுன்சிலின் "நவீன் பிள்ளையையும்" சந்தித்து பேசிவிட்டு, லண்டன் ஸ்டாலின். அடேயப்பா, எவ்வளவு கடின வேலைகள்? உடன் சென்ற டி .ஆர்பாலு அந்த பிரமுகர்களிடம் விவரமாக பேசியதையும் காட்சி ஊடகங்களில் கண்டோம். அதன் பிறகு லண்டன் சென்றார் ஸ்டாலின். உடன் சென்ற டி கே.எஸ்.இளங்கோவன், கே.எஸ்.ராதாகிருஷ்ணன், ஆகியோர் என்ன செய்தார்களோ, யாருக்கும் தெரியாது, ஸ்டாலின் சென்றார், ஸ்டாலின் பெச்டினார், ஸ்டாலின் மனு கொடுத்தார், ஸ்டாலின் நேர்காணல் கொடுத்தார், ஸ்டாலின் ஸ்கார்ப் போட்டிருந்தார், ஸ்டாலின் கோட்டு ,சூட்டு போட்டிருந்தார். ஸ்டாலின் லண்டன் சென்றார். லண்டனில் "பிரிட்டிஷ் தமிழ் பேரவை" ஏற்பாடு செய்த மாநாட்டில் ஸ்டாலின் கலந்து கொண்டார். ஸ்டாலினுக்கு அந்த பேரவை காரர்களை ஏற்கனவே தெரி யுமா? ஸ்டாலின் தங்கச்சிக்கு அவர்களை தெரியும் ஸ்டாலின் தங்கை கனிமொழிக்கு தான் அந்த aழைப்பு, கழகத்திற்கான அழைப்பு வந்தது. தலைவர் அதை டி .ஆர்.பாலு, டிகே.எஸ்.இளங்கோவன் ஆகியோரை அழைத்து கொடுக்கப்போகும் செய்தியை அறிந்த ஸ்டாலின் தலைவரிடம் முந்திக் கொண்டார். தானே போவதாக அறிவித்தார்.
லண்டன் மாநாட்டில் ஸ்டாலின் பேசினார். ஈழச் சூழல் ப[ஆற்றி பேசினார். ஒன்றரை லட்சம் பேர் கொலை செய்யப்பட்டதை பேசினார். தொண்ணூறு ஆயிரம் பேர் தமிழ் பெண்கள் விதவைகளாக இருப்பதை பேசினார். போர் குற்றங்கள் பற்றி பேசினார். இவையெல்லாம் ஸ்டாலினுக்கு ஏற்கனவே தெரியுமா? தெரிய வேண்டிய அவசியமில்லை. இப்போது பேசினார். பேசிவிட்டு மேடையிலிருந்து கீழே இறங்கினார். மூன்று தமிழ் பெண்கள் மறித்துக் கொண்டார்கள். நீக்க பேசியது எல்லாம் சரி. இவையெல்லாம் நாங்கள் போர் nஅடைக்கும்போதே கூறினோமே? நீங்கள்தானே ஆட்சியில் இருந்தீவ்ர்கள்? அப்போது உங்கள் தனத்தை முதல்வராக இருந்தாரே? நீங்கள் துணை முதல்வராக இருந்தீர்களே? அப்போது பேசி இருந்தால் பலன் கிடைத்திருக்குமே? போர் குற்றங்கள் நின்று போயிருக்குமே? அப்போது பேசாமல் இப்போது பேசி என்ன பயன்? இவ்வாறு கேட்டார்கள்.பதில் சொல்ல முடியாமல் "எப்போ பேசறது? எப்ப பேசறது? " என்று திணறினார் ஸ்டாலின். டி .ஆர்.பாலுவும், கே.எஸ்.ராதாகிருஷ்ணனும், அந்த பெண்களுக்கு சமாதானம் கூறி அனுப்பி விட்டனர். அருகே இருந்த திருமாவளவன் ஒன்றும் குறுக்கிட்டு பேசவில்லையே? என்று ஸ்டாலினுக்கு வருத்தமாம். அருகே கோ.க.மணியும் தான் இருந்தார். அவர்களுக்கு அந்த பெண்கள் கேட்பது நியாயம்தான் என்று தெரியுமே?