Friday, June 26, 2015

தமிழர் வாக்குகள் சிங்களத்துக்கு கிள்ளுகீரையா?-2 ஆம் கட்டுரை.


நேற்று வெளியிட்ட முதல் கட்டுரையில் மைத்திரிபால சிரிசேனா ஏன் நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டு, தேர்தலை நாடி செல்கிறார் என்பதை பார்க்க தொடங்கினோம்.ஒருபுறம் "சிறிலங்கா சுதந்திரா கட்சியை உடைய விடாமல் மகிந்தாவுடன் சமரசமும்", மறுபுறம் ரணில் விக்கிரமசிங்கேவின் "ஐக்கிய தேசியக் கட்சி"[ யு.என்.பி] ஆலோசனைப்படிதான் கலைத்தேன் என்று கூறும் "பக்குவம்" நிறைந்த கெட்டிக்கார சிங்கள அரசியல்வாதி என்பதை நிரூபித்துள்ளார். மைதிரிபாலா அதிபராக வெற்றிபெற்று வந்தவுடன், அதற்கு பெரிதும் உதவிய "ஈழத்தமிழர்களின் வாக்குகளை" பெற்றுக் கொடுக்க உதவிய தமிழ்நாட்டின் மக்களது உணர்வும், புலம் பெயர்ந்தோரின் உணர்வுகளும்,இந்திய அரசின் உற்சாகப்படுதலால் ஏற்பட்டது என்பதாலேயே, முதலில் "தான் வருகை புரியும் நாடு இந்தியா என்று டில்லியை குளிர வைத்தார்.அதனால்தான் அன்று "மகிந்தா இந்திய அரசின் உளவு நிறுவனமான "ரா" தான் தனது தோல்விக்கு காரணம்" என்று கத்தினார்.

                       அப்படியாக ஆட்சிக்கு வந்த மைத்திரிபாலா, இந்தியா வந்தபோது "ஹம்பன்தொட்டா துறைமுகத்தை சீனாவிற்கு குத்தகை கொடுப்பதை தற்காலிகமாக நிறுத்தி வைக்கிறோம் என்று கூறியவர்" அடுத்த மாதமே சீனா சென்று அதை முழுமையாக சீன அரசுக்கே கொடுத்துவிட்டார் அப்படியானால் "தெற்காசியாவில் தனது மேலாதிக்கத்தை நிறுவி வரும் இந்திய அரசுக்கே" அல்வா கொடுக்கும் திறமையுள்ளவரா இந்த மைதிரிபாலா? அதனால்தான் தனக்கு வாக்களித்து வெற்றி பெற காரணமாக இருந்த ஈழத் தமிழருக்கு சில சலுகைகளை கொடுத்து அவர்களில் ஒரு "சாராரை" தன்னுடன் இழுத்துக் கொள்வது என்ற "தந்திரத்தை" இப்போது எடுத்து வருகிறார். அதனால்தான் சில தமிழ் அரசியல்வாதிகளும், ஊடவியலாளர்களும், புலம் பெயர்ந்த தமிழர்களும்,இன்று மைத்திரி கூறும்,"ஒன்றுபட்ட இலங்கைக்குள்" என்ற கருத்தாக்கத்தை "தூக்கிப்பிடிக்க" கிளம்பியிருக்கிறார்கள்.

.          இன்று மைதிரிபாலாசிறிசெனாவை ஆதரிக்கும் சில தமிழர்கள் தங்கள் வாதங்களை இப்படி முன்வைக்கிறார்கள்.

 இந்த ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ...
(1) வலிகாமம் வடக்கில் இராணுவத்தினால் பறிக்கப்பட்ட 1,033 ஏக்கர் காணி மக்களுக்கு திருப்பிக் கொடுக்கப்பட்டுள்ளது. {இரண்டு லட்சம் ஏக்கர் பறிக்கப்பட்ட தமிழர் நிலங்களில்,10,000 ஏக்கரை முதலில் மீட்டு தருகிறோம் என்று கூறியவர்கள்தான் இந்த 1033 ஏக்கர் நிலத்தை வாங்கிக் கொடுத்துள்ளனர்.}

(2) சம்பூரில் இராணுவம் பறித்த 1,055 ஏக்கர் நிலம் "கொள்கையளவில்" மக்களுக்கு மீள்கையளிக்கப்பட்டுள்ளது. இதில் கடற்படை கைப்பற்றிய 237 ஏக்கரும் உள்ளடக்கம்.

(3) வட கிழக்கில் ஆளுநராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளார்கள். திருகோணமலையில் 10 ஆண்டுகள் அரச அதிபராக இருந்த முன்னாள் இராணுவ அதிகாரி ரி.ஆர்.டி சில்வா மாற்றப்பட்டுள்ளார். {மக்களது எழுச்சி தெருவுக்கு வந்தபிறகு,அதுவே உலக அரங்கில் எதிரொலிக்கும்போது,இதையாவது செய்யவேண்டும் அல்லவா}

(4) இராணுவத்துக்கு முன்னைய அரசு கையளித்திருந்த பொலிஸ் அதிகாரம் பிடுங்கப்பட்டுள்ளது. [வடக்கு மாகாண முதல்வர் பகிரங்கமாக பிபிரவரி 10 அன்று, நடந்த போர் ஒரு "இன அழிப்பு போர்" என்று தீர்மானம் போட்ட பிறகு இதையாவது செய்து "அல்வா"கொடுக்கவேண்டும் அல்லவா?}

(5) கடந்த சுதந்திர நாள் மும்மொழியிலும் மூன்று இனத்தவரும் பங்கு கொண்ட சுதந்திர நாளாக கொண்டாடப்பட்டது. {அப்போதுதானே தமிழீழமே தீர்வு என்ற அனைதுநாட்டு சமூக உணர்வுகளுக்கு பதிலாக "ஒன்றுபட்ட இலங்கைக்குள்" என்ற உதாரை சந்தையில் விற்கமுடியும்?}

(6) மலையகத் தமிழர்களுக்கு வீட்டுத் திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. {தமிழ்நாட்டு தமிழர்களான இந்திய வம்சாவளியை சமாதனப்படுத்த ஏதாவது செய்யவேண்டும் அல்லவா?}

(7) மலையகத் தமிழர்களது பிள்ளைகள் தமிழில் படிக்க மேலதிகமாக தமிழ்ப் பள்ளிக் கூடங்கள் கட்டப்படும். {இந்தியாவில் உள்ள தமிழர்களுக்கு ஒரு இனிப்பு மிட்டாய்}

(8) வட மாகாண சபை முதலமைச்சர் நிதியம் தொடங்குவதற்கு சனாதிபதி சிறிசேனா அனுமதி வழங்கியுள்ளார். { தமிழ்தேசியக் கூட்டமைப்பிற்குள் பிளவை ஏற்படுத்த ஏதாவது "கேரட்" காட்டவேண்டாமா?}

மேலே காட்டியவை மகிந்த இராஜபக்சாவினால் மறுக்கப்பட்ட உரிமைகளாகும். அவர் மீண்டும் வெற்றிபெற்று ஆட்சியைப் பிடித்திருந்தால் ஒரு ஏக்கர் காணிதானும் ஏழைத் தமிழ்மக்களுக்கு கிடைத்திராது. [ முழு உரிமை மறுப்பாளருக்கும், பட்டினி கிடப்பவனுக்கு ரொட்டி கொடுத்து வேலை வான்குபவ் அணுக்கும் உள்ள வேறுபாடு}

ஐநாமஉபே இல் அமெரிக்கா கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானங்கள் புலம்பெயர் தமிழர்களது அழுத்தத்தால் கொண்டுவரப்பட்டது என்று ஆய்வாளர் சொன்னது படுபொய். புலம்பெயர் அமைப்புகளில் உலகத் தமிழர் பேரவை நீங்கலாக அந்தத் தீர்மானத்தின் படியை தெருவில் போட்டு கொளுத்தினார்கள். அந்தத் தீர்மானத்தில் ஒன்றம் இல்லை என்று ஒப்பாரி வைத்து அழுதார்கள். அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்துக்கு முக்கிய காரணியாக இருந்தது ததேகூ மட்டுமே! { சுதந்திரன் நடத்திய ரகசிய பேச்சுவார்த்தைக்கு வக்காலத்து வாங்க இப்படி ஒரு தயாரிப்பு}
   
      இப்போது நமக்கு "தலை சுற்றும்" அளவுக்கு இந்த "நாளுமன்ற கலைப்பு" நாடகம் தனக்கே உரிய "பின்னணி தகவல்களை" கொண்டுள்ளது என்பது புரிகிறதா? அதனால்தான் "பிரிட்டிஷ் தமிழர் மன்றமும்,உலக தமிழர் பேரவையும்" இலங்கையின் "ஒன்றுபட்ட தீவிற்குள் இரண்டு தேசிய இனங்களும் சுமுகமாக வாழ,ஆள வழி உண்டு" என்ற ஒரு "பழைய, கிழிந்துபோன, கந்தலான தத்துவத்தை மீண்டும் சந்தையில் விற்க" வந்திருக்கிறார்கள். அதை எதிர்கொள்ள உண்மையான தீர்வை "ஈழத் தமிழர்களின் சுதந்திர நிலத்தை மீட்டுக்க" என்ன செய்யப் வேடனும் என்பதை அடுத்த கட்டுரையில் மேலும் காண்போம்.
...

தமிழர்களின் வாக்குகளை சிங்களவர் கிள்ளுக்கீரையாக எண்ணுகிறார்கள்.


   இலங்கையில் அதிபர் மைதிரிபாலா சிறிசேனா இன்று "நாடாளுமன்ற கலைப்பை" அறிவிக்கிறார், ஆகஸ்டில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த இருக்கிறார்கள்.அப்படியானால் "சிங்களர்கள்,தமிழர்கள்" என அனைவரின் வாக்குகளும் வேண்டும் என்று என்னவேண்டும் அல்லவா? அப்படிப்பட்ட பார்வை சிங்கள அரசியல்வாதிகளுக்கு குறிப்பாக மைதிரிபாலா சிறிசெனாவிற்கு இருப்பதாகத் தெரியவில்லை.ஏன் என்றால்,மைதிரிபாலா சிறிசேனா, முதலில் சிங்களத் தலைவரான " ரணில் விக்கிரமசிங்கே தலைமையிலான,கட்சியுடன்"கூட்டணி வைத்துக் கொண்டு, "அதிபர் தேர்தலை"சந்தித்தார்.ஏற்கனவே ரணில் விக்ரமசிங்கே, மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து அதிபர் தேர்தலுக்கு போட்டியிட்டு "தோல்வி"கண்டவர்.

    மஹிந்த ராஜபக்சே ரணிலை வெல்லும்போது, அவர் "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யின் வேட்பாளர்.அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சி"யை சேர்ந்தவர்தான், மைதிரிபாலா சிறிசெனாவும், சந்திரிகா குமாரதுங்காவும். .மகிந்தாவை வேட்பாளராக முதலில் நிறுத்தியதே,சந்திரிகா குமாரதுங்காதான்  வேட்பாளராக அறிவிக்கப்பட்ட பிறகு, மகிந்தா தனது சகோதரர்களான கோத்தபாயே,பசில் ஆகியோருடன் சேர்ந்துகொண்டு, ஆட்சியை தங்களது குடும்ப சொத்தாக மாற்றி, "சிறிலங்கா சுதந்திரக் கட்சியை" கைப்பற்றிவிட்டார்.ஓரங்கட்டப்பட்ட சந்திரிகா,அரசியலில் பல ஆண்டுகள் அமைதியாக ஆனார். அவருக்கு இந்திய அரசின் "மென்மையான நட்பு" உண்டு.ஆட்சிக்கு வந்த மகிந்தா "சீன அரசுடன்" நெருக்க உறவை வைத்துக் கொண்டு தங்களது பெருமையை தென்னிலங்கையின் சிங்களவர் மத்தியில் தக்கவைத்துக் கொண்டார்.  .

      இலங்கை அரசின் தலைமை "சீன அரசுடன்"நல்லுறவு வைத்துக்கொள்வது என்பது இலங்கையின் வரலாற்றில் "புதிய ஒரு செய்தியல்ல". ஏன் என்றால் சந்திரிகாவின் "தாயாரான திருமதி பண்டாரநாயகா" சீன அரசுடன் நல்லுறவு கொண்டிருந்தார்.மேற்கத்திய நாடுகளுக்குத்தான் "சிங்கள அரசு" நெருக்கமின்றியே இருந்துவந்தது.அதனால் மகிந்தா எடுத்த நிலைப்பாடு தென்னிலங்கை சிங்களவர் மத்தியில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பதும் புதிய எதிர்பாராத செய்தியல்ல.மஹிந்தா தனது "மேற்கத்திய எதிர்ப்பு" என்ற முழக்கத்தை வைத்துக் கொண்டே தென்னிலங்கையிலும்,உலக அரங்கிலும் தனது "பயங்கரவாத எதிர்ப்பு என்ற பெயரிலான தமிழின எதிர்ப்பை" நியாயப்படுத்த முடிந்தது.அதுவே ஐ.நா.மனித உரிமை கழகத்தில்,அமெரிக்கா  கொண்டுவந்த "இலங்கை அரசுக்கு எதிரான போர்க்குற்ற விசாரணை" என்பதை "மேற்கு நாடுகளுக்கு எதிரான சீனா,ரஷிய,கியூபா,பாகிஸ்தான்" போன்றவற்றின் ஆதரவை பெற முடிந்தது.

          ஆகவே மகிந்தா எதிர்ப்பில் அரசியல் நடத்தும் "ரணில் விக்கிரமசிங்கேவிற்கு ,  அமெரிக்கா அதரவு" கொடுப்பதும் ஆச்சரியமான செய்தியல்ல.உலக சமூகத்தில் தனிமைப்படுத்தி இலங்கையை கொண்டுவந்தது மகிந்தா குடும்ப ஆட்சியால்தான் என்ற உணர்வே, சிங்களர் மத்தியில், சிறிசேனா மகிந்தா அமைச்சரவையிலிருந்து வெளியே வந்து, "ரணிலுடன் சேர்ந்துகொண்டு அதிபர் தேர்தலில் மகிந்தாவை தோற்கடித்ததை" செயலாக்கியது.ஆனால் அதே "சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிகாவும்" சேர்ந்துகொண்டு, ரணில் பேசும் "அதிபர் அதிகாரத்தை குறைத்து, பிரதமர் அதிகாரத்தை அதிகப்படுத்தும்" தந்திரத்தை,மைதிரிபாலவை ஏற்கச் செய்துவிட்டார்கள். அதுவே "மகிந்தாவின் அதிகாரக் குவிததலை" இறக்கி "அமெரிக்காவும், இந்திய அரசும் பேசும் நாடாளுமன்ற ஜனநாயகத்தை"நிறுவ உதவும் என்றும், அதனால் மகிந்தா மீண்டும் வர இயலாது என்றும் வாஷிங்கடனும், டில்லியும் "மனப்பால்" குடித்தன.

      ஆனால் மகிந்தாவிற்கு ஆதரவாக "சிங்கள தேசம் என்ற இன உணர்வு" வேலை செய்கிறது. அது எப்போதுமே "தமிழர் தேசத்தை" கணக்கில் எடுத்துக் கொள்வதில்லை. பேருக்கு வேண்டுமானால் "பசப்பு"காட்டலாம்.அப்படிப்பட்ட "சிங்களம்" "சிறிலங்கா சுதந்திரக்கட்சியில்" பெரிய அளவில் செல்வாக்கு செலுத்துகிறது. இரு தேசங்கள் இருக்கின்றன என்பதையும், "இரு தேசிய இன உணர்வுகள்தான் மக்கள் மத்தியில் இருக்கிறது" என்ற உண்மை நிலைமையையும் காணத்தவறியவர்களால் இந்த "சிக்கலான இடமாற்ற அரசியலை"புரிந்துகொள்ள முடியாது. அதனால்தான் சிங்கள அறிவுஜீவிகளின் ஆலோசனைப்படி, "மைத்திரிபால சிறிசேனா இன்று மகிந்தாவுடன்"சமரசத்திற்கு வந்து,"சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்குள்" தான் "தனிமைப்பட்டுவிடக் கூடாது"என்பதற்காக ஒரு புதிய ஏற்பாட்டுக்கு வந்துவிட்டார்.அதுதான் "ரணிலை கைவிட்டுவிட்டு, மகிந்தாவுடன் இணைந்துகொள்வது".

     இப்போது நாடாளுமன்றத்தை கலைத்துவிட்டார்.தேர்தலை அறிவித்து விட்டார்.மகிந்தாவுடன் சமரசம் செய்துகொண்டு, "மைதிரிபாலா அதிபராகவும், வருகிற தேர்தல மூலம் மகிந்தா பிரதமாராகவும்"ஆட்சியில் அமரப்போகிரார்கள்.அதனால் சிங்களத்தை பொறுத்தவரை, "தமிழர்களின் வாக்குகள், அதிபர் தேர்தலுக்கு தேவை", ஆனால் "நாடாளுமன்ற தேர்தலுக்கு தேவையில்லை". இப்போது புரிகிறதா? தமிழன் அங்குள்ள "தேர்தல் முறையில்கூட " சிங்களவனுடன் சேர்ந்துவாழ முடியாது.