தமிழ்நாட்டில் மாவோயிஸ்டுகள். இது ஊடகங்களுக்கு ஒரு பரபரப்பு செய்தி. காவல்துறைக்கு கேளிக்கை செய்தி. மக்களுக்கோ அதிர்ச்சி செய்தி. தமிழ்நாட்டின் மாவைச்டுகளின் ஒரு தலைவர் விவேக் கைது என்று ஊடகங்கள் ஒரு வாரம் முன்பு பரபரப்பு ஊட்டின. விவேக் "கரம் உயர்த்தி" முழக்கமிட்டு வரும் படங்களை போட்டு நல்ல வேலையாக ஊடகங்கள் நியாயம் செய்தன. யார் இந்த விவேக் என்று சில ஊடகங்கள் எழுதின. வாலிப வயது கொண்ட விவேக் வருகிற வழியில் நின்று படம் பிடித்த ஊடகங்கள் அதையே வெளியிட்டு பெருமை தேடின. சென்னையில் சீ.பி.டி. என்ற பாலிடெக்னிக் இல் படித்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. திண்டுக்கல் பகுதியை சேர்ந்தவர் என்பதையும் சில ஊடகங்கள் வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளது கூற்றை ஒட்டி, ஐந்து ஆண்டுகளாக தலைமறைவாக இருந்தவர் என்றும் சிலர் கூறினர். யாருக்கு விவேக் தலைமறைவாக இருந்தார் என்று நமக்கு புரியவில்லை.
விவேக் உள்ளபடியே கண்டவர் நேசிக்கும் அளவு சிறந்த அறிவாற்றலும், போர்க்குணமும் கொண்ட ஒரு இளைஞர். அவர் தமிழ்நாட்டு மக்கள் மத்தியில் எளிதாகவும், சாகசமாகவும் பவனி வந்தவர். அபப்டியானால் யாருக்கு அது "தலைமறைவு?". காவல்துறை தனக்கு தானே ஒரு திரையை போட்டுக் கொண்டு அவர் தலைமறைவு, இவர் தலைமறைவு என்று கூறினால் சம்பந்தப்பட்ட தோழர்கள் அதற்கு எப்படி பொறுப்பாவர்கள்? தோழர் விவேக் நம்மை போலவே பல தோழர்களுக்கும் அறிமுகமானவர்தான். அவர் "முற்போக்கு மணாவ்ர் சங்கத்தில்" பணியாற்றி வந்தவர் என்று ஊடகங்களே வெளியிட்டன. காவல்துறை அதிகாரிகளே கூறுகின்றனர். அப்படியானால் பலருக்கும் அவர் அறிமுகமானவ்ர்தானே? அப்புறம் என்ன தலைமறைவு என்று ஒரு குற்றம் போல காவலர் கூறுவதும் அதையே ஊடகங்கள் ஒப்பிப்பதும்? அவர் "தப்பி ஓடியவர்" என்பது போன்ற ஒரு தோற்றத்தை அவர்கள் கொடுக்கிறார்கள். இவர் ஏதோ இந்த நாட்டில் முழுமையாக ஆள்வது போலவும் மடர்வர்வர்கள் இந்த நாட்டில் தப்பி ஓடிக்கொண்டு இருப்பவர்கள் என்பது போலவும் ஒரு மாய தோற்றத்தை உண்டு பண்ண முயல்கிறார்கள்.
ஒரு புரட்சிகர சிந்தனையாளன் அதாவது மாவோ வழியை ஏற்றுக் கொண்டவன், உங்கள் நாட்டு சட்டத்தையோ, நீதிமன்றங்களையோ, அரசான்க்ஜத்தையோ, காவல்துறையையோ, இராணுவத்தையோ, மனத்தளவில் ஏற்றுக் கொல்ல இயலாது. அவர்கள் தனகளுக்கான அரசையும், சட்டங்களையும், நீதிமன்றங்களையும், காவல்துறையையும், ராணுவத்தையும் கட்டி உருவாக்குவதில் நம்பிக்கை கொண்டவர்கள். ஆகையால் அததகைய மாற்று புரட்சிகர நிறுவனங்களை கட்டி எழுப்ப மக்கள் மத்தியில் பணியாற்றுவதே அவர்களது கடமையாக அமைகிறது. அதற்கு போறில் உங்கள் நாட்டு, அதாவது தாங்கள் இந்திய நாட்டை ஆள்வதாக கருதும் இந்த ஆளும் வர்க்கம், தனக்குதானே ஏற்படுத்தி கொண்ட நிறுவனங்களையும், சிந்தனைகளையும் மட்டுமேர் சார்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கிறது. அதனால்தான் அவர்களது காவல்துறை புரட்சிகாரர்களை "தப்பி ஓடிவிட்டவர்கள்" என்று முத்திரை குத்தி அழைக்கிறது. அதை புரட்சியாளர்கள் கண்டு கொள்வதில்லை. கவலை படுவதில்லை. நீயும் உன் அரசாங்கமும் என்ற மனோபாவமே புரட்சியாளர்களிடம் இருக்கிறது. அவர்கள் அவர்கள் போக்குக்கு மக்கள் மத்தியில் அவர்களது குறிக்கோள்களுக்காக உழைத்து கொண்டு இருக்கிறார்கள். நீ ஒரு அரசாங்கம். உன்னை கண்டுகொள்ள வேண்டுமா? என்பதே அதன் பொருள்.அநேகமாக் அந்த பொருள் இன்று அணித்து மக்கள் மத்தியிலும் இந்த அரசாங்கம் பற்றி இருக்கத்தான் செய்கிறது.
அடுத்து இந்த காவல்துறையும், ஊடகங்களும் புரட்சிகர சினதனையாளர் பத்மா பற்றியும் இதே போல கூறுகிறார்கள். விவேக் கைது. பத்மா தப்பி ஓட்டம் என்பது இவர்களது விவரிப்பு. தாங்கள் ஏற்றுக் கொள்ளாத காவல்துறையையும், நீதிமன்றத்தையும் ஏற்றுக் கொண்டு அவர்களிடம் வந்து கைகட்டி நிற்க வேண்டும் புரட்சியாளர்கள் என்று இவர்கள் எதிர்பார்க்கிறார்களா? அவர்கள் தப்பி ஓடவுமில்லை. உங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. அதாவது தாங்கள் ஏற்றுக் கொள்ளாத இந்த நிலவும் அரசாங்கத்தின் காவல்துறையையும், நீதித்துறையும், கண்டுகொள்ளாதவர்கள், அத்தகைய பிற்போக்கு நிறுவங்களிடமிருந்து, தப்பி ஒடுவதுமில்லை. அந்த பிற்போக்கு நிறுவனங்களிடம் சிக்கி தவிக்க்கவுமில்லை. எப்போது அத்தகைய நிறுவனங்கள் பிற்போக்கானவை என்று அடையாளம் காண்கிறார்களோ, அப்போதே அத்தகைய நிறுவனங்களை நீக்கி விட்டு, மக்களுக்கான நிறுவனங்களை ஏற்படுத்த புரட்ச்சியாளர்கள் பாடுபடுகிறார்கள். ஆகாவே அவர்கள் உங்களது உலகத்தில், "தப்பி ஓடவுமில்லை, சிக்கி தவிக்க்கவுமில்லை" மாறாக உருப்படியான மாற்று நிருவனகளை மக்கள் மத்தியில் கட்டி எழுப்ப உழைக்கிறார்கள். ஆகவே உங்கள் மஞ்சள் காமாலை கண்களோடு புரட்ச்சியாலர்க்சலை கண்டால், உங்களுக்கு உண்மை விளங்காது.