மே மாதம் 23 ஆம் நாள் காலை ஏடுகளில் திமுக தலைவர் கலைஞர் ஒரு செய்தியை கூறியுள்ளார். குடியரசு தலைவர் தேர்தலில் திமுக யாரை ஆதரிக்க போகிறது என்று கேள்வி கேட்பவர்கள் ஆர்வமாக அந்த பதிலை படிக்கிறோம். அதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி யாரை குடியரசு தலைவர் தேர்தலுக்கு ஆதரிக்கிறதோ, அவரையே திமுக வும் ஆதரிக்கும் என்று கூறினார். பலரும் ஓகோ காங்கிரசின் வேட்பாளரை பற்றி அப்படி கூறுகிறார் போலிருக்கிறதே என்று எண்ணிவிட்டார்கள். நமக்கு மட்டும் அந்த பதில் புரியவே இல்லை. திமுக என்ற கட்சி கனகிராஸ் என்ற கட்சியுடன் சேர்ந்து அய்.மு.கூ. என்ற கூட்டணியில் இருப்பதாகத்தானே புரிந்து வைத்துள்ளோம்? என்று நமுக்கு குழப்பம். அப்படியானால் எப்படி அந்த அய்.மு.கூ. என்ற கூட்டணி திமுக விற்கு சம்பந்தம் இல்லாமல் ஒரு வேட்பாளரை ஆதரிக்க முடிவு எடுக்க முடியும்? என்பதே நமது சந்தேகம். சரி. அதையும் காட்சி ஊடகத்தில் கேட்டு வைத்தோம். எப்படி தலைவரே அய்.மு.கூ. யில் இருக்கும் திமுக அந்த அய்.மு.கூ. ஆதரிக்கும் குடியரசு தலைவர் தேர்தலுக்கான வேட்பாளரை ஆதரிக்கும் என்று கூறுகிறீர்கள்? அப்படியானால் திமுக அந்த அய்.மு.கூ. விற்கு "உள்ளே இருக்கிறதா? வெளியே இருக்கிறதா?" என்று கேட்டு வைத்தோம். திமுக வும் சேர்ந்து தானே அய்.மு.கூ தேர்வு செய்யும் வேட்பாளரை டேஹ்ர்வு செய்ய வேண்டும்? என்றும் கேட்டோம்.
மறுநாள் அதாவது மே 24 ஆம் நாள். முரசொலியில் கலைஞரே எழுதுகிறார். கேள்வி பதிலில் கூறுகிறார். பெட்ரோல் வில்லை ஏற்றத்தை மம்தா," கூட்டணி கட்சிகளை கலந்துகொள்ளாமல் முடிவு செய்துள்ளார்கள்" என்று கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு, " ஒரு முடிவை எடுக்கும்போது அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களையும் கூட்டி முடிவு செய்தல் இயலாத காரியம்" என்று கலைஞர் பதில் கூறியுள்ளார். எப்படி தலைவரே நேநேகளும் இருக்கும் அய்.மு.கூ. ஆட்சியில் முடிவு எடுக்கும் போது உங்கள் கட்சி மைச்சர்களின் பங்களிப்பு இல்லாமல் முடிவு செய்தால் தவறு இல்லையா? என்று வினவினோம். மம்தா என்ற கூட்டணி கட்சி அந்த கலந்தாலோசித்தல் இல்லை என்பதை விமர்சிக்கும்போது நீங்கள் மட்டும் ஆதரிக்கிர்டீர்களே ? என்றும் கேட்டோம். அதற்கும் கலிஞர் பதிலில் "ஜெயலலிதா பால் விலை, பச கட்டணம்" ஆகியவற்றை உயர்த்தும் போது, கூட்டணி கட்சி தலிவர்களை கலந்து கொண்டா உயர்த்த்கினார்? என்று கலைஞர் பதில் கூறியிருந்தார். அதையும் பலர் "ஆமாம்" என்றனர். மீண்டும் நமக்கு புரியவில்லை. ஜெயலலிதா தனிக்கட்சி ஆட்சி நடத்துகிறார். அதனால் கூட்டணி கட்சி தலைவர்களிடம் கலந்துகொள்ள வேண்டியது தேவையில்லை. நேநேகள் மத்தியில் அய்.மு.கூ. என்ற கூட்டணி ஆட்சி நடத்துகிறீர்கள். அதில் கலந்துகொள்ள வேண்டியது தேவையாயிற்றே? என்று கேட்டோம். இந்த இரண்டிற்கும் வேறுபாடு டேஹ்ரிந்த கலைஞருக்கு "என்ன வந்துவிட்டது? என்றும் கேட்டோம்.
இன்று மே 25 ஆம் நாள். முரசொலியில் கலைஞர் முதல் பக்கத்தில் எழுதுகிறார். நெய்வேலி ஒப்பந்த தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் பற்றி எழுதுகிறார். அதில் கடைச்டி வரிகளை "அடிக்கோடு" இட்டு எழுதியுள்ளார். மத்தியில் ஆளும் அய்.மு.கூ. ஆட்சியில் அங்கம் வகிக்கும் கட்சிகளில் ஒன்றான திமுக வின் தலைவர் என்ற முறையில் நான் கேட்கிறேன் என்றும், உடனடியாக பேசி தொழிலாளார் பிரச்சனையை மத்திய அரசு முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்றும் எழுதுகிறார். ஏன் தலைவரே இத்தனை நாள் கழித்துதான் இந்த "உண்மை" உங்களுக்கு நினைவுக்கு வந்ததா? என்ன குழப்பம் தலைவரே?
No comments:
Post a Comment