வருகிற ஜூன் 3 ஆம் நாள் திமுக தலைவர் கலைஞரின் ஆங்கில பிறந்த நாள். தமிழ்நாட்டில் பழக்கத்தில் உள்ள பிறந்த நாள் கொண்டாட்டங்கள் ஒன்று ஆங்கில பிறந்த நாளாக இருக்க வேண்டும் அல்லது தமிழ் நட்ச்சத்திர பிறந்த நாள்ளாக இருக்க வேண்டும்.என்னதான் தமிழ் புத்தாண்டுக்கு தமிழர்கல்போட்டி போட்டுக் கொண்டு வரிந்து கட்டி கொண்டு சண்டை போட்டாலும், தனகளது பிறந்த நாளென்று வரும்போது, ஆன்மிகவாதிகள் தனகளது நட்ச்சத்திர பிறந்த நாளையும், பகுத்தறிவுவாதிகள் தனகளது ஆங்கில பிறந்த நாளையும் க்ன்டாடுவதுதான் வழக்கம்.சமீபத்தில் இளைஞர்கள் மேற்கத்திய பொருளாதரத்தில் தனகளது வாழ்க்கையை ஈடுபடுத்தி கொண்டு, மேற்கத்திய நாடுகள் கட்டவிழ்ழ்த்து விட்ட தொழிற்கூடங்களில், வேலை பார்க்க தொடங்கியதாலும், அதையொட்டி மேற்கத்திய பண்பாடுகளை பின்பற்ற விரைந்து செல்வதாலும், ஆண்கிலபிறந்த நாள் தவிர எதையும் டேஹ்ரிந்து வைத்திருப்பது கூட இல்லை.
இப்படி ஒரு சூழலில் திமுக தலைவர் கலைஞரும் மற்றவர்களைப்போலவே பகுத்தறிவு பாதையில், ஆங்கில பிறந்த நாளையே கொண்டாடுவது என்பதை ஆண்டு பலவாக பழக்கமாகவும், வழக்கமாகவும் வைத்து கொண்டுள்ளார். ஆனால் இந்த ஆண்டு எந்த ஆண்டும் போல இல்லாமல், அந்த அனகிலபிறந்த நால்வருவதற்கு "பத்து நாட்கள்" முன்பே தனது முரசொலி இதழில், உடன்பிறப்புகளுக்கு எழுதிய கடிதத்தில் முதல் பக்கத்திலேயே, அதாவது மே 23 ஆம் நாளே, "பிறந்த நாள் வாழ்த்து கடிதம்" எழுது விட்டார். என் அப்படி எழுதினார் என்பது திமுக வில் உள்ள அறிவுஜீவிகளுக்கு பெரும் கேள்வியாக அமைந்து விட்டது.அந்த கடிதத்தில் நிறைவு பகுதியில் " பிறந்த நாள் வாழ்த்தை, ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரையாக" உடன்பிறப்புகளுக்கு அளித்து வணங்குகிறேன் என்று எழுதியுள்ளார். அந்த ளவுக்கு அந்த கடிதத்திற்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளார். அதாவது ஏதோ போகிற போக்கில் எழுதிய கடிதம் அல்ல. தனது பிறந்த நாள்வாழ்த்துக்களை உடன்பிறப்புகளுக்கு அளிப்பதில் "கவனம்" செலுத்தி எழுதிய கடிதம் அது. என் அந்த அ;அவுக்கு "பத்து நாள்" முன்பே இப்படி ஒரு கடிதம் எழுத வேண்டும்?
அந்த உடன்பிரபுகளுக்கான கடிதத்தின் தலைப்பாக " ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை" என்றும் எழியுள்ளார். ஏன்? ஏன் அப்படி எழுத வேண்டும்? தன்னை சுயமரியாதைகாரன் என்று "வலிய" அழைத்து கொல்ல வேண்டிய தேவை இப்போது ஏன் எழுந்தது? பகுத்தறிவு என்பதை சுய மரியாதை என்பதை " ஆன்மிக பார்வை அற்ற" என்பதாக "நாத்திக பார்வை" என்பதாக நமக்கு கற்றுக் கொண்டுத்தவர் கலைஞர். அபப்டி கற்று கொடுத்தவர் ஏன் இப்போது "ஆங்கில பிறந்த நாளுக்கு பத்து நாள்"முன்பே தனது பிறந்த நாள் வாழ்த்துகளை கொடுத்து விட்டு, அதற்கு சுயமரியாதைகாரனின் என்ற "அடை மொழி" கொடுக்க வேண்டும்? நட்ச்சத்திர பிறந்த நாளை, கொண்டாடுவதை "மூட நம்பிக்கை" என்றும், ஆன்மீக உணர்வு என்றும் எங்களுக்கு கற்று கொண்டுத்த கலைஞர் அவர்களே, இன்று ஏன் இந்த மே 23 ஆம் நாளை. பிறந்த நாள் வாழ்த்து கூறும் நாள்ளக தேர்வு செய்தார்? அன்றுதான் கலைஞரது நட்ச்சத்திரமான "மிருக சீரிடம்" நட்ச்சத்திர பிறந்த நாள். அப்படியானால் "ஊருக்குதான் உபதேசம்.உனக்கு இல்லையடா" என்று பொருளா? அதற்கு ஒரு சுய மரியாதைகாரனின் சூளுரை என்று பெயரிடலாமா? அய்யா, என்ன ஏமாற்றையா இது?
No comments:
Post a Comment