காதலர் தினத்தன்று காலையில் அந்த செய்தி வந்தது. அது எந்த காதளைப்பற்றியோ, காதலர்களைப்பற்றியோ இல்லை. தமிழ்நாட்டின் பிரபல ஊடகவியலாளருக்கு ஊழல் மீது உள்ள காதலைப்பற்றியது. நடந்துகொண்டிருக்கும் இரண்டு தலைமுறை அலைக்கற்றை ஊழலில் சிக்கியுள்ள ஆ.ராஜாவிற்கு மேலும்,மேலும் சீ.பி.ஐ.அதிகாரிகள் நெருக்கடி கொடுக்கிறார்கள்.அது தி.மு.க. தலைவருக்கு அதிக இரத்த அழுத்தத்தை கொடுக்கும். அதுவே சன் டிவி சகோதரர்களுக்கு பேருவகையை தரும்.ஆனால் டில்லியில் வெளிவந்த ஹிந்துஸ்தான் டைம்ஸ் செய்தி உவகையை மாற்றி அளித்தது. 2003 ஆம் ஆண்டு அருண் செளரி தொலை தொடர்பு அமைச்சர். அப்போது முதலில் வருபவருக்கு முதலில் கொடுப்பது என்ற நடைபெற்று வந்த கொள்கையை எதிர்த்து, இரண்டு அலைவரிசை வழங்குவதில்,இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை அதிகாரம் என்ற டி.ஆர்.ஏ.ஐ. ஒரு முன்வைப்பை வைக்கிறது. அதில் போட்டீக்கு விட்டு அலைகற்றையை வழங்கும்படி ஆலோசனை கொடுக்கப்பட்டது. அதை மத்திய அமைச்சரவையும் ஒப்புதல் கொடுத்தது. அதை அருண் சூரியின் அமைச்சரவ்கமும் ஒப்புக்கொண்டிருந்தது. அதற்குப்பிறகும் ஏன் அருண் செளரி முதலில் வருபவருக்கு முதலில் என்ற கொள்கையை பின்பற்றினார்? என்ற கேள்வியை கேட்டு வருகிற இருபத்தி ஒன்றாம் நாள் அருண் ஷௌரியை சீ.பி.ஐ. விசாரணைக்கு அழைத்துள்ளது.
அதேசமயம் அதே துறையில் 2004 ஆம் ஆண்டிலிருந்து 2007 ஆம் ஆண்டுவரை அமைச்சராக இருந்தவர் தயாநிதி மாறன். அவருக்கு சன் தொலைகாட்சி ஊடக குழுமத்தில் தமிழ்நாட்டில் ஐந்துக்கு மேற்பட்ட அலைவரிசைகளும், ஆந்திராவிலும், கேரளாவிலும், கர்நாடகாவிலும் பல அலைவரிசைகளும் இருக்கும்போதே அந்த அலைவரிசைகளுக்கு தலைமை ஏற்கும் ஒரு அமைச்சரவையை கொடுத்திருந்தார்கள். அதுவே தலைமை அமைச்சர் செய்த தவறு. ஒரு தனியார் முதலாளிக்கு அவரது வணிகம் தொடர்பான அமைச்சரவையை கொடுக்கும் சாமர்த்தியம் மன்மோகனுக்கு மட்டுமே உண்டு. அந்த தயாநிதி மாறனுடைய காலத்தில் இரண்டாம் தலைமுறை அலைக்கற்றை வரிசை விற்பனையும் முதலில் வருபவருக்கு முதலில் என்ற அணுகுமுறையிலேயே கொடுக்கப்பட்டது. அதில் லாபம் அடைந்த தனியார் நிறுவனங்கள் அந்த அமைச்சரை கவனிப்பது என்பது கார்பரேட் பண்பு. அதன்படியே அந்த கொள்ளையில் அதிகம் சம்பாதித்த ஏர்செல் நிறுவனம் தனது அன்பளிப்பாக 670 கோடியை சன் டிடிஎச் என்ற தாயநிதி மற்றும் கலாநிதி சகோதரர்களின் நிறுவனத்துக்கு கொடுத்துள்ளனறேன்பதே அந்த செய்தி.
அதனால் அடுத்து சீ.பி.ஐ. விசாரணை தயாநிதி மேலும் வார இருக்கிறது என்பது அந்த தகவல். இதை ஹிந்துஸ்தான் டைம்ஸ் போட்டிருக்கலாம். அதற்கு டாடா ஏற்பாடு காரணமாகவும் இருக்கலாம். அனால் தயாநிதி சகோக்கள் அவ்வளவு தூரம் விட்டுவிடுவார்களா என்ன? உடனடியாக எல்லா ஊடகங்களையும் தொடர்பு கொண்டு அது பொயசெய்தி என்றும், அதை வெளிடாதீர்கள் என்றும் தடுத்து விட்டார்கள். எல்லாம் ஊடக பெரும் உதலாளிகளால் முடியும் ஐயா.
Tuesday, February 15, 2011
Subscribe to:
Posts (Atom)