கமலஹாசன் வென்றாரா? தோற்றாரா?
பலருக்கும் உண்மை நிலை தெரிவதில்லை நடந்து கொண்டிருக்கும் சர்ச்ச்ஹை வெறுமனே முஸ்லிம்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கலாமா? கூடாதா? என்று மட்டுமே புரிந்து கொண்டிருக்கிறார்கள் இன்று நேற்றா கமல் முஸ்லிம்களை தாக்கி படம் எடுக்கிறார்? உன்னைப்போல் ஒருவனும் அதுதானே? சரி.கமல் மட்டுமா? விஜயகாந்த் பத்து ஆண்டுகளுக்கு முன்பே ஒவ்வொரு படத்திலும் பாகிஸ்தான் காரர்கள் என்று முஸ்லிம்களை வர்ணித்து, இவர் வீரமாக அப்போர் புரிந்து வெல்வாரே? அது என்ன ரகம்? இப்படி எல்லோருமே ஏன் இப்படி எடுக்கிறார்கள்?அதிலும் இந்த படத்தில், "ரா" ஆளாக கமல் வருவது எதனால்? அவர் அமெரிக்க சி.ஐ.ஏ . விற்கு உதவுவது எதனால்? அதாவது முஸ்லிம் எதிர்ப்பு என்பதை தாண்டி, ஆபாகநிச்தான், பின்லேடன், ரா, அமெரிக்க வருவதிலிருந்து என்ன தெரிகிறது? இது திட்டமிட்ட அரசியல் படம். அதிலும் "ரா" மீதுதமிழர்கள் மத்தியில் "இலங்கையில் நடந்த இனப்படுகொலைக்கு உதவியவர்கள்" என்ற அவப்பெயர் இருக்கும்போது, தான் எ"ரா" அதிகாரியாக வந்து அந்த உளவு நிறுவனத்தை நியாயப்படுத்த எடுத்த படம். அதற்கு பொது புத்தியில் உலா வரும், தலிபான், பின்லேடன், ஆகியோரை பயன்படுத்தி, இந்திய நாட்டை காப்பாற்ற வந்த தியாகி போலவும், தீவிரவாதிக்கு எதிர்ப்பு போலவும் "பாவலா" காட்டும் ஒரு திட்டம் இதில் இருக்கிறது. அதாவது அமெரிக்காதான் பின்லேடனை வால்ர்த்து என்ற உணமையோ, ஆப்கானில் அமெரிக்கா படை எடுத்து எண்ணை வளங்களை கொள்ளை அடிக்க என்பதையோ, அழுத்தமாக கூறாத படம். "ரா'வின் முழு ஆதரவு பெற்ற படம்.
சரி.கமலுக்கு நட்டமா? பிவி.பி. என்ற பரபுளி வெங்கடேஸ்வர பிரசாத் என்ற ஆந்திர ரெட்டியார் இந்த படத்திற்கு 60 கோடி குடுத்துள்ளார். தயாரிப்பாளராக இருந்தார். கமல் வழக்கம் போல படம் எடுபடும் எனத் தெரிந்த பிறகு, அவரை நிதி வழங்குபவராகவும், தானே தயாரிப்பலராகவும் புது வேடம் புனைந்தார். அப்போது தனது 60கோடியை திருப்பி தந்து விட்டு தான் தமிழக திரையரங்குகளில் திரையிடவேண்டும் என்று பி.வி.ஒய். எழுதி வாங்கி விட்டார். அதனால்தான் டி.டி..எச்.என்று கமல் இழுத்தடித்தும், இப்போது தமிழகத்திற்கு வெளியே திரையிடவதும் நடக்கிறது. இப்போது புரிகிறதா? கமலின் சூட்சுமம்? அதையும் தாண்டி படத்தை கமல் "காப்பீடு" என்ற இன்சுரன்ஸ் செய்துவிட்டார். ஆகவே "நட்டம்" வராது. இது எப்படி இருக்கு? அவருக்கு போய் நட்டம்னு பேசறீங்களே அய்யா?