Monday, January 28, 2013

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......

பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது......
      மதுரை அஞ்சாநெஞ்சன் என்று  திமுகவினரால் புகழப்படும், மு.க.அழகிரியின்  பிறந்த நாள் 39 ஆம் தேதி வருகிறது. அதற்குள் சென்னையிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இன்று காலை நியு இந்தியன் எக்ஸ்ப்ரெஸ்  எட்டில் முதல் பக்கத்திலேயே ஒரு சுவரொட்டியை போட்டு விளக்கம் தந்துள்ளனர். அதில்" இங்கே பரமசிவனும் இல்லை. நாங்கள் கருடரும் இல்லை. நடப்பது ராம நாடகம்." என்று அழகிரி படத்தை பெரிதாக போட்டு ஒட்டியுள்ளனர். அதற்கு என்ன அர்த்தம்?  "பரமசிவன் கழுத்திலிருந்து பாம்பு கேட்டது. கருடா சவுக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்துவிட்டால் எல்லாம் சவுக்கியமே. கருடன் சொன்னது. அதில் அர்த்தம் உள்ளது." இந்த கண்ணதாசன்  பாடல் வரிகள்தான் அதன் பொருள். அப்படியானால் பரமசிவன் கருணாநிதி என்றும், கருடன் அழகிரி என்றும், பாம்பு தளபதி என்றும், ராம நாடகம் என்பது ராமாயணத்திலே அண்ணனை காட்டுக்கு அனுப்பி விட்டு தம்பி பரதனுக்கு முடிச்சொட்ட நினைப்பது என்றும் நீங்கள் புரிந்து கொண்டால் நாம் என்ன செய்ய?

                            அடுத்த சுவரொட்டி. "கண்ணகி சிலம்பும், மனோகரனின் விலங்கும், வீழ்ந்ததா? வீழ்த்தியதா?" இந்த சுவரொட்டியும், நேரடியாலவே. கண்ணகி கால் சிலம்பால்,வீழ்த்தப்பட்டான் சேர மன்னன்   என்ற பொருளை நேரடியாக தருகிறது.இதில் அழகிரி படம் பெரிதாக போடப்பட்டுள்ளது. அடுத்து வழமை போல," தொடர்களின் தாமே. தொண்டர்களின் ஏற்றமே" என்ற சுவரொட்டி. அடுத்து, அழகிரி படத்தை பெரிதாக போட்டு," அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அதுக்கும் மேலே. அண்ணன் எங்க உசுருலே" என்பதாக ஒரு சுவரொட்டி. மேற்கண்ட அசுவரோட்டிகள் ஒரு செய்தியை அழகிரி பிறந்த நாள் நேரம் சொல்லத்தான் செய்கிறது.  
               
 அதற்க்கு பதில் சொலவதுபோல நேற்று திருவண்ணாமலை திருமணத்தில் கலைஞர் பேசும்போது, "கட்டுப்பாடு கழகத்திற்கு முக்கியம். அதை யார் மீறினாலும், அவர்கள் எவ்வளவு நெருக்கமாக் ஏனக்கு இருந்தாலும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்று கூறியுள்ளார். இது எதற்காக?

No comments:

Post a Comment