Wednesday, May 9, 2012

வணிகர் சங்கம் இந்திய வானில் களப்பணியோடு கலந்தது.     அன்று மே ஐந்தாம் நாள். வணிகர் சங்கங்களின் பேரவை என்ற பெயரில் இருபது ஆண்டுகளாக த.வெள்ளையன் நடத்திவரும் கூட்டமைப்பு ஒரு பெரும் மாநாட்டை சென்னை தீவு திடலில் நடத்தியது. வெறுமனே வணிகர்களை கூட்டி, வீர வசனம் பெசோதும், கடைகளை அடைத்து விட்டு திருவிழா போல ஆக்குவதும் போதாது என்று வெள்ளையன் எண்ணினார் போலும். அதனால் இந்த முறை பெரும் வணிகர் கூட்டம்முன்பு, பல்வேறு துறைகளிலும்"களப்பணி" செய்யும் தோழர்களை மாநாத்ட் மேடையில் உரை நிகழ்த்த வைத்து, அதன்மூஓலம் அவர்களது அனுபவங்களை, கருத்துக்களை வணிகர்களுக்கு எடுத்து சொல்லவும், வந்திருக்கும் தோழமை இயக்கத்தினருக்கு "தோழமை" காட்டவும் அந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தார்.

              அதற்காக காலையில் "கருத்தரங்கு" என்று ஒரு அமர்வு. அதில் உணவு வணிகர் சங்க தலைவர் சந்திரேசன், நகரின் ஒடுக்கப்பட்ட குடிசைவாழ் மக்களை விரட்டியடிப்பதை பற்றி பேச தமிழர் எழுச்சி இயக்க தோழர் வேலுமணி, கடல்வாழ் பழங்குடியான மீனவ மக்களை பற்றி பேச இயற்கையுடன் இணைந்த இலங்கையரால் கொள்ளப்படும் கொடோயை வெளிப்படுத்த பேராசிரியர் பாத்திமாப்பு, உடல் சுகாதாரம் பற்றி பேச மருத்துவர், உழவர் பெருங்குடி பற்றி பேச பேச்சாளர், வங்கிகள்,வருமான வரித்துறை ஊழியர் சங்கத்து பேச்சாளர்கள் என்று அனைத்து தரப்பினரையும் அழைத்து உரையாற்ற வைத்தார். அந்த கரஐத்தரன்கிற்கு துவக்கவுரை என்ற பெயரில் என்னை, அந்த "அன்னியர் எதிர்ப்பு மாநாட்டிற்கு, உரையாற்ற வைத்தார். அதில் கிடைத்த வாய்ப்பில், ஆணிய ஏகாதிபத்தியவாதிகளின் "உலக வர்த்தக அமைப்பு" செய்யம் சதிகளையும், அதை ஒட்டி, அந்நிய நேரடி மொலதனம் இந்தியாவிற்குள் நுழைந்து, சில்லறை வணிகர்களை இல்லாம செய்ய முயலும் "போர்" பற்றியும் என்னால் கூறமுடிந்தது. 

               அத்தகைய போரை எதிர்கொள்ள தமிழ்நாட்டிலிருந்து, தமிழர் நலன் காக்க போராடி வரும் வெள்ளையன், ஒரு கருத்து போரை, ஒரு மக்கள் திரளை திரட்டும் போரை "உஅகமயமாக்களுக்கு" எதிராக் நடத்திவருவதை சுட்டி காட்ட முடிந்தது. அத்தகைய ஏகாதிபத்திய எதிர்ப்பு போரை நடத்த உலகில் உள்ள முதன்மை தேசிய இனம் தமிழினம்தான் என்று என்று நிரூபித்த "தமிழீழ தேசிய  தலைவர்" மேதகு வே.பிரபாகரன் வழியில் சமரசமற்ற போரை அந்நிய ஆதிக்கவாதிகளை எதிர்த்து நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்த முடிந்தது. அப்படியோரு போரை உலக சமூகத்தின் முன்னாள் நடத்தி காட்டி தமிழீழ மண்ணை ஆதிக்கவதிகளிடமிருந்து மேட்டு, விடுதலை நிலமாக ஆக்கி, அரசாண்ட தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன், தரைப்படை மட்டுமின்றி, கொரில்லாபடை  மட்டுமின்றி, கரும்புலி தற்கொலைப்படை மட்டுமின்றி, கடல்புலிகள் படை மட்டுமின்றி, வான்புலி படையையும் கட்டி வரலாறு படித்ததை சுட்டும்போது, எழுச்சிமிகு தமிழ் வணிகர்களை காண முடிந்தது.வட இந்திய வணிக சமூகத்தினரின் ஆதிக்கம் தமிழ்நாட்டில்பெருகி வரும் ஆபத்தையும், அதை அடையாளம் காண வேண்டிய தேவையையும் எடுத்துரைக்க முடிந்தது.


            இதோடு விடாமல், வெள்ளையன் வடக்கிருந்து வந்த "களப்பணியாளர்களையும்" மேடையேற்றி மதியத்திற்கு மேல் நாட்டையே திகைக்க செய்தார். இந்திய அளவில் ஊழல் எதிர்ப்பு இயக்கம் நடத்தும், குழுவினரில், கிறேன்பெடி, வழக்கறிஞர் பிரஷாந்த் பூஷன், ஆகியோரையும், பேசவைத்து, எங்கள் ஐக்கியம் நாடு தழுவிய போர் முரசு என்பதையும், ஊழல் எதிர்ப்பு என்பதையும், கருப்பு பண எத்ரிப்பு என்பதையும் தனது மாநாட்டு தீர்மானங்கள் மூலம் நிரூபித்தார். ஆக்ற்றோய் என்ற நுழைவு வரியை எதிர்த்து போராடியதில் இந்த வணிகர் சங்க நாள் உருதிப்பட்டதை எடுத்து கூறினார். அவ்வாறு "வாட்" என்ற "மதிப்பு கூடுதல் வரியை" ரத்து செய்த மாநில ஆட்சியாளர்களுக்கு கை கொடுக்கும் வகையில் அமைச்சர் செல்ல பாண்டியனும், மேயர்  சைதை துரைசாமியும் மேடையில் அலங்கரித்தனர். மத்ததில் வணிகர்களை சொந்த கால்களில் நிற்க வைக்கும் அரசியலுக்கு அங்கே எழுச்சி குறளை எழுப்பி விட்டார். 

மரணங்கள் மனிதர்களை கூடவைக்கும்    மே மாதம் ஐந்தாம் நாள். அன்று காரல் மார்க்ஸ் பிறந்தநாள் என்ற நினைவில் இருந்த தோழர்களை அந்த செய்தி அதிர்ச்சி அடைய செய்தது. மக்கள் கலை இலக்கிய கழகம் மாநில பொருளாளர் தோழர் சீனிவாசன் யார்ந்து விட்டார் என்ற செய்தியே அது.அந்த ம.க.இ.க. அமைப்புடன் பெரிய அளவுக்கு உடன்பாடு இல்லாதவன் நான். அவர்களும் மார்க்சிசம், லெனினிசம், மாசேதுங் சிந்தனை தானே பேசுகிறார்கள். ஆனாலும் செயல் மட்டும்தானே உடன்பாடு, உடன்ப்பாடு இன்மை ஆகியவற்றை தீர்மானிக்கிறது. அந்த வகையில் எனக்கு நல்லதொரு "தூரம் தள்ளல்" அந்த தோழர்களுடன் உண்டு. பரவாயில்லை.நானும் பிற தோழர்கள் போலவே சீனிவாசன் மரணத்திற்காக அதிர்ந்து போனேன். அன்று மாலையே சேத்பெட் குடிசை மாற்று வாரிய குடியிருப்பு பகுதிக்கு சென்று விட்டோம். 

                சேத்துபெட்இல் உள்ள தலித் தோழர்களை சந்தித்து, சீனிவாசன் உடலை அம்பேத்கர் திடலுக்கு எடுத்துவரும் முன்பே தலித் இயக்க பழம்பெரும் தோழர் சத்திதாசன் அவர்களை சந்தித்தோம். அவர் அந்த பகுதியில் வாழ்பவர். அவருடன் சேர்ந்து நானும் பல தோழர்களுக்கு செய்தி அனுப்பி, வரவழைத்து ஆர்களுடன் இணைந்து  சீனிவாசன் மறைவுக்கு நேரிலேயே அஞ்சலி செலுத்தி பதிவு செய்தோம். மறுநாள்தான் எடுப்பார்கள் என்பதால், மறுநாள் காலையிலும் சென்று அதேபோல பல தோழர்கள், வெவ்வேறு இயக்க தோழர்களுடன் சேர்ந்து கொண்டு, இறுதி பயணத்திலு முழுமையாக் கலந்து கொண்டு எங்கள் வருத்தத்தை பதிவு செய்தோம். ஆறாம் நாள் காலையில், விடுதலை ராசெந்திரனையும் அழைத்து வந்து இறுதி நிகழ்வில் கலந்து கொண்ட பேராசிரியர் சரஸ்வதி, அதற்கு மறுநாளே தனது "தாயார்" மறைவை காலையில் சந்தித்தார் என்ற செய்தி அடுத்த அதிர்ச்சியை தந்தது. 

                             மே ஏழாம் நாள் காலை திருவான்மியூர் ஊடகவியலாளர் குடியிருப்பில், உள்ள பேராசிரியர் சரஸ்வதியின் வீட்டில், அவரது தாயார் சீநிவாசம்மாள்  மறைவு இதேபோல பல இயக்க  தோழர்களை ஒன்று கூட்டி விட்டது.  இரண்டு மரணங்களையும் ஊடகங்களில் அறிவிக்க நாமும் முயற்சி எடுத்து கொண்டதில், முதலில் நான் இருக்கும் காட்சி ஊடகத்தில் வெளியிடமுடிந்தது. இரண்டு இடங்களுக்கும், பெரியார்வாதி, மார்க்சிசவாதி, அம்பேத்கர்வாதி, தமிழ்த்தேசியவாதி, சிறுபான்மை உரிமைவாதி,மக்கள்  மன்றத்தினர்,நேதாஜிவாதிகள்,இடதுசாரிகள், ஊடகவியலாளர்கள்,வழக்கறிஞர்கள், பெண்கள் இயக்கத்தினர்,இலக்கியவாதிகள், என்று பல நீரோட்டங்களில் உள்ள தோழர்கள் வந்து குவிந்தார்கள். இது மரணங்கள் ஏற்படுத்தும் மனித தன்மையை  பறை சாற்றுவதாக இருந்தது..   

சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா?   நமது ஊரில் ஒரு கிராமப்புற பழமொழி உண்டு. சீப்பை ஒளித்து வைத்து விட்டால், கல்யாணம் நின்றுவிடுமா? என்று கிராமங்களில் கேட்பார்கள். ஆனால் கிராமப்புற பண்ணையார் பின்னணியில் வந்த சிதம்பரம், சிவகங்கை மாவட்ட பக்கா நாட்டுக்கோட்டை செட்டியார் குடும்ப கனவான் சிதம்பரம், அந்நிய நாட்டில் படித்து, டில்லியில் அதிகார கோலோச்சுவதால் அந்த பழமொழியை மறந்து விட்டார் போலும். என்.சீ.டி.சீ.என்ற புதிய மருந்தை இந்திய நாட்டு அரசியலுக்கு புகுத்த முயலும் சிதம்பரம், அனைத்து முதல்வர்களும் எதிர்க்கிறார்கள் என்பதால், பெயரளவுக்கு ஒரு முதல்வர்கள் மாநாட்டை கூட்டி, அதில் பெயரளவுக்கு விவாதித்து விட்டு, பிறகு தனது அமெரிக்கா கனவை நடைமுறை படுத்தி  விடலாம் என்று எண்ணினார்.  ஆனால் அந்த மாநாட்டில் சில முதல்வர்கள் கராராக பிடித்து விடுவார்கள் என்று அவருக்கு உளவுத்துறை அதிகாரிகள் அறிவுரை கூறிவிட்டார்கள்.அதில் முதன்மையாக தமிழக பெண் முதல்வர் விவேகமாக கேள்விகளை கேட்டு, மற்ற முதல்வர்களையும் "தட்டி" எழுப்பி விடுவார் என்றும் அதனால் தங்களது  சதித்திட்டமே அம்பலமாகி விடும் என்றும் தெரிவித்து விட்டனர். 

                   
                            அதனால் அடுத்த தந்திரம் ஓரை சிதம்பரம் செய்தார். அதுதான் அழைப்பு அனுப்பிய கையேடு, தமிழக முதல்வருக்கு மட்டும் " கூட்ட நிகழ்ச்சிக்கான நகல் அறிககையை" அதாவது "தேசிய பயங்கரவாத தடுப்பு மையம்" அமைக்க உருவாக்கிய நகல் அறிககையை அனுப்பாமல் தடுத்து விட்டார். பயங்கரவாத தடுப்பு பற்றிய விவாதத்திற்கான நகலையே "தடுக்கப்பு வேலை" செய்யும் கெட்டிக்கார உள்துறை மைச்சர் அவர். அந்த "சாதியையும்" புரிந்து கொண்டுவிட்ட தமிழக முதல்வர், அந்த நகல் அறிககையை "ஓடிஸா" முதல்வரிடம் கேட்டு, பெற்றுக் கொண்டு, அதன்மீது கேட்க வேண்டிய கேள்விகளையும், கொடுக்க வேண்டிய பதில்களையும் "தயார்" செய்துகொண்டே சென்றுவிட்டார்.அதனால்தான் "வசமாக" மாட்டி கொண்டார் சிதம்பரம். 

                  அதனால் முதல்வர்களின் கூட்டம் மேலும் சிதம்பர ரகசியத்தைமபலப்படுத்தி விட்டது.இதனால்தான் முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் சிதம்பரம் பற்றி "சின்னப்பையன் சிதம்பரம்" என்று கூறினாரோ?