Monday, October 31, 2011

வசமா மாட்டனுமில்ல சிதம்பரம்?

அய்யா. ஸ்பெக்ட்ரம் ஊழலில் சிக்கியவர்களை எல்லோரையும் வரிசையாக பிடித்து திஹார் சிறையில் அடிப்பததானே சரியானது அந்த வரிசையில் சீ.பி.அய். சமீபத்தில் யாரை வீடு புகுந்து சோதனைக்கு உள்ளாக்கியது? அப்போல்லோ மருத்துவமனையின் முதலாளியான பிரதாப் ரெட்டியின் மகளான சங்கீதா ரெட்டியை..அந்த சங்கீத ரெட்டி எதற்க்காக சோதனை செய்யப்பட்டார்? அவர் பெயரில் மலேசியாவின் பிரச்சனைக்கு உள்ளாகியிருக்கும் நிறுவனமான அஸ்ட்ரோ ஆனந்தகிரிஷ்ணனின் "மாக்சி" நிறுவனத்தில் 26 விழுக்காடு பங்கு இந்த சங்கீதா ரெட்டி பெயரில் இருக்கிறது. அதாவது இரண்டு ஜி ச்பெக்டறம் ஊழலில், கையும் களவுமாக பிடிபட்டுள்ள, ஏர்டெல் நிறுவனத்தை நிர்ப்பந்தித்து அமைச்சர் மூலம் வாங்கிய மலேசியகாரன் தனது நிறுவனமான மாக்சியில் எதற்காக சங்கீதா ரெட்டிக்கு பெரும் பங்கு கொடுக்க வேண்டும்?

சங்கீதா ரெட்டி, மருத்துவமனைதானே நடத்துகிறார்? தொலை தொடர்பு துறையில் அவருக்கு எண்ண ஈடுபாடு? எப்படி அது வந்தது? யாருக்காக அவர் அந்த இடத்தில், பண்டமாற்று வேலை செய்துள்ளார்? அப்படி எதுவும் நடந்துள்ளதா? சங்கீதா ரெட்டியும், அவரது தந்தை பிரதாப் ரெட்டியும் நடத்தும் "அப்பல்லோ" மருத்துவமனை நிறுவனத்தில் புதிதாக ப.சிதம்பரத்தின் மருமகளான அதாவது கார்த்திக் சிதம்பரத்தின் மனைவியான "டாக்டர் ஸ்ரீநிதி" ஒரு "போர்டு உறுப்பினராக" சேர்க்கப்பட்டுள்ளார். இதுதான் அந்த " ஹவாலா" பாணியான பண்டமாற்று முறை. இதை அன்றைக்கு அதாவது இந்த ஊழல் நடக்கும்போது, அதாவது இந்த ஸ்பெக்ட்ரம் ஊழல் திட்டமிடப்ப்படும்போது, சிதமபரத்தின் பங்கிற்காக செய்யப்பட்டுள்ளது. அதாவது அன்று நிதி அமைச்சராக இருந்த சிதம்பரத்தின் "ஒப்புதல்" இல்லாமல் ஸ்பெக்ட்ரம் ஊழலும் நடக்கவில்லை, ஏர்டெல் நிறுவனத்தை முடக்கி, அதை மலேசியாவின் மாக்சி வாங்கும் நிலையும் நடக்கவில்லை. அந்த "உதவிக்கு" பிரதிபலனாக அவர் பெற்ற பங்குதான் "ஸ்ரீநிதிக்கு" அப்போல்லோவிலும், சங்கீதாவிற்கு மாக்சியிலும் கிடைத்துள்ளது. இதிலாவது சிதம்பரத்தை பிடிக்க வேண்டும் அல்லவா?

இயற்கை மரணத்தை விரும்பாத குடும்பமா அது?

இன்று அன்னை இந்திரா படுகொலை ஆன நாள். ஆனால் அதே நாளில் உடனடியான பதில் தாக்குதலை டில்லியில் உள்ள "சீக்கியர்கள்" மூவாயிரம் பேர் மீது, காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். படைகளுடன் சேர்ந்துகொண்டு, வீடு,வீடாக அரங்கேற்றிய நாள். எது பெரிது? ஒரு உயிரா? மூவாயிரம் உயிரா? யார் வீரர்கள்? ஒரு உயிரை எடுத்தவர்களா? மூவாயிரம் உயிர்களை எடுத்தவர்களா? யார் வீரர்களோ,யார் போரில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தானே ஆள முடியும்? அதனால்தான் இன்றுவரை அந்த குடும்பமே ஆண்டு கொண்டு இருக்கிறது.

தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப் படாமல், பஞ்சாபில் சீக்கியர்கள் டில்லியின் "விவசாய கொள்கையால்" பாதிக்கப்பட்ட போது, பிரிந்தன்வாலா வுடன் சேர்ந்து கொண்டு, அரசையே எதிர்த்தார்களே? அதை இந்திரா தலைமையிலான ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அந்நிய நாட்டு நிதி மூலதனத்தை விவசாயத்தில் இறக்கினால், அதை வரவேற்று அரசை பாராட்ட வேண்டும். வங்கி கடன்மூலம் விவசாயிகள் திவாலா ஆனால் அதை எதிர்த்து "பாரதீய விவசாயிகள் சங்கம்" என்று போர்க்கொடி தூக்கலாமா? அதைத்தான் இந்திராகாந்தி எதிர்த்தார். அதனால்தான் அரச அடக்குமுறையை பஞ்சாப் விவசாயிகள் மேல் கட்டவிழ்துவிட்டார் அதனால் அவர்கள் பிரிந்தன்வாலா வுடன் சேரலாமா? சீக்கிய மத போர்வையுடன் "அரசை" எதிர்க்கலாமா? அதனால்தான் ராணுவத்தை அனுப்பி இந்திரா காந்தி "ஆபரேசன் நீல நட்சத்திரம்" என்ற பெயரில். "தங்க கோபுரம்" உள்ளே புகுந்து குருத்துவாராவில் இருந்த பிரிந்தன்வாலா உட்பட பாவி சீக்கியர்கள் நாலாயிரம் பேரை கொன்று குவித்தார். அதற்கு பதில் கொடுக்க அவரது "பாதுகாவலர்களாக' இருந்த சீக்கியர்களே அவரை சுட்டு கொள்ளலாமா? அதுவும் இன்றுதான் அந்த கொலை நடந்துள்ளது.

அதனால்தான் காங்கிரஸ்காரர்கள். பதிலடி கொடுக்க மூவாயிரம் சீக்கியர்களை வீடு புகுந்து கொன்றார்கள். அதுவும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருந்த இளம் சிறார்களான சீக்கியர்களை கொலை செய்தார்கள். அதை அறிந்த சீக்கிய தாயார்கள், தங்கள் ஆண் குழந்தைகளை பெண் வேடம் போட்டு வரும் கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள். அத்தகைய வீரதீர செயல் செய்த காங்கிரஸ்காரர்களை " பெரும் மரம் சாயும்போது, அதன் அடியில் பல உயிர்கள் சாகத்தான் செய்யும்" என்று வீர வசனம், தத்துவ விளக்கம் தந்தவர்தான் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி.ஆனால் சீக்கியர்களோ, இந்திராவை கொலை செய்து "இனப் பழி தீர்த்த" வீரர்களான சட்வந்தர்சிங், பியாந்த் சிங், ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் கொண்டாடினார்கள். இது வரலாறு.

இவ்வாறு தங்கள் கொலகையான அந்நிய நிறுவங்களுக்கு நாட்டின் விவசாயத்தை விலை பேசியது தவறு என்று எதிர்த்த வீரமிகு விவசாயிகளை படுகொலை செய்து, அதற்காக தனது "இயற்கை சாவை" இழந்தவர் இந்திரா காந்தி. அதேபோல அவரது மகன் தாய்க்கு மகன் தப்பாமல் பிறந்தவன் என்று நீருபிக்க எண்ணி, "ஈழத்தமிழர்களை" இனப்படுகொலை செய்ய "இந்திய அமைதி படையை" அனுப்பியவர்.ஆயிரத்து ஐநூறு தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர். அதன்விளைவால் அந்த ராஜீவ் காந்தி மரணம் எய்தியதாக அந்த வ்ழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் அவரும் அதாவது ராஜீவ் காந்தியும், தாயின் வழியில் தனது மக்கள் விரோத கொள்கைக்காக இன அழிப்பு செய்வதும், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிவதும் கவனிக்க தக்கது.அதனால் நாம் அறிவது இருவருமே தங்கள் உயிரை துச்சமென மதித்து இயற்கை சாவை விரும்பாமல், தங்களது இன எதிரிகளை வேரோடு அழிக்க புறப்பட்டவர்கள்.


இந்த இருவரையும் போல அல்லாமல், தனது தாயாரிடமே அதிகார பசியால், "தகராறு" செய்ததால் சஞ்சய் காந்தி செயற்கையாக தனது உயிரை விமான விபத்து என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார். மேனகா காந்திக்கும், வருண் காந்திக்குமே வெளிச்சம். சஞ்சய் காந்தியை கொலை செய்ய சொன்னது இந்திரா காந்தி என்ற கருத்தும் இருக்கிறது. எபப்டியோ குடும்பத்தில் அது ஒரு இயற்கை மரணம் அல்லாத செயற்கை மரணம். ஒரு மானார் குடும்பத்தில் இது போன்ற உள்கொளைகளும், வெளிக்கொளைகளும் சாதாரண நிகழ்வுகளே. அது இங்குள்ள காங்கிரச்காரர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எப்படியானாலும், அந்த குடும்பத்தவர்கள் "இயற்கை மரணத்தை விரும்பவில்லை" என்று இதிலிருந்து தெரிகிறது. அதிகார வெறி என்பது உயிரை விட உயர்ந்தது எனபது அந்த அதிகாரத்தை சுவைத்து பார்க்கும் மனிதர்களுக்கே உரிய குணம். சாதாரண மக்களுக்கு விளங்காது. விடுதலை போரில் உள்ள வீரர்களுக்கும் அது விளங்கும்.

குப்பை அள்ளாதவருக்கு "குட்பை" சொன்ன சென்னை.

சென்னை மாநகராட்சிக்கு மாயோர் தேர்தலில், குப்பை அள்ளுவது ஒரு முக்கிய பிடச்சனையாக ஆனது. முந்தைய நிர்வாகங்கள் பல மண்டலங்களை [ ஒரு மண்டலம் பத்து வட்டங்களை கொண்டது] தனியார் குப்பை அள்ளும நிறுவனங்களுக்கு தாரை வார்த்திருந்தது. அதனால் ஓனிக்ஸ் வந்தது. சரியாக வேலை செய்யவில்லைஎன்று சண்டை வந்தது. நீல் மெடல் பனால்கா வந்தது. குறைந்த டெண்டரில் கேட்டார்கள் என்பதால் கொடுத்தோம் என்றார் மாநகர மேயர் மா.சு. ஆனால் அவர்களும் படு மோசமாய் நடந்துகொண்டனர். வேலை செய்த வட்டங்களில் குப்பை கூடுதலாக குவிந்து கிடந்தது. மாசு வால் ஒன்றும் செய்யமுடியவில்லை. தேர்தலில் குப்பை ஒரு அரசியல் கோரிக்கையாக மாறியது.

மாநகராட்சியில் ஏற்கனவே "துப்புரவு தொழிலாளர்கள்" இருக்கிறார்கள். மாநகராட்சிக்கு மொத்தமாக "இருபதாயிரம்" பேர் துப்புரவு வேலைகளுக்கு தேவை. இருப்பதோ "நாலாயிரம் பேர்தான்". அதிலும் "அறுபத்தைந்து" விழுக்காடு பெண் துப்புரவு தொழிலாளர்கள். அவர்களுக்கும் ஏற்கனவே இருந்த அதிமுக நிராவகம் "இரண்டு ஷிப்டு மட்டுமே வேலை" என்று ஆணை அறிவித்திருந்தது. அதை மீறி, திமுக நிர்வாகம் மதியம் ஒரு மணிக்கு பிறகும் வேலை வாங்கி கொடுமை படுத்தினர். பெண்கள் துன்பப்பட்டனர். நாலு ஷிப்டு கூஓட வேலை வாங்கப்பட்டனர். இதை குடியரசு கட்சியின் துப்புரவு தொழிலாளர் சங்கம் எதிர்த்து.போராடியது.

காட்சி ஊடகம் ஒன்றில் மேயர் மாசு, ஒரு போய் கூறினார். துப்புரவு தொழிலாளருக்கு "90 ஒய்வு அறைகள்" கட்டி கொடுத்திருப்பதாக கூறினார். தொழிற்சங்கம் இல்லை என்று 'சவால்" விடுத்து. அறைகளை காணவில்லை என்று காவல்துறையிடம் புகார் கொடுத்து. சுவரொட்டி ஒட்டியது. மாயோர் மாசு, உடனடியாக மாநகராட்சி மனடலங்களில் இருக்கும் "பொறியாளர் அறைகளில்" துப்புரவு தொழிலாளர்கள் இருப்பது போல படம் எடுத்து வெளியிட அதிகாரிகளை பணித்தார். இப்போது எல்லாமே வெட்ட வெளிச்சம் ஆகிவிட்டது. சைதை துரைசாமி, ஐந்து லட்சம் வாக்கு வித்திடாசத்தில் வெற்றி பெற்றி விட்டார். இனி எண்ண செய்ய போகிறார்? மாநகராட்சி தனியாருக்கு துப்புரவு தொழிலை தாரை வார்க்காமல் தானே எடுத்து, 20000 ௦௦௦ தொழிலாளர்களை வேலைக்கு எடுத்து செயல்பட்டால் சென்னை சுத்தமாகும். இல்லாவிட்டால் இப்வரும் குப்பை அள்ளவில்லை என்ற பெயரை அள்ளலாம்.