Monday, October 31, 2011

இயற்கை மரணத்தை விரும்பாத குடும்பமா அது?

இன்று அன்னை இந்திரா படுகொலை ஆன நாள். ஆனால் அதே நாளில் உடனடியான பதில் தாக்குதலை டில்லியில் உள்ள "சீக்கியர்கள்" மூவாயிரம் பேர் மீது, காங்கிரஸ் கட்சியின் சேவாதளம் தொண்டர்கள், ஆர்.எஸ்.எஸ். படைகளுடன் சேர்ந்துகொண்டு, வீடு,வீடாக அரங்கேற்றிய நாள். எது பெரிது? ஒரு உயிரா? மூவாயிரம் உயிரா? யார் வீரர்கள்? ஒரு உயிரை எடுத்தவர்களா? மூவாயிரம் உயிர்களை எடுத்தவர்களா? யார் வீரர்களோ,யார் போரில் வெற்றி பெறுகிறார்களோ, அவர்கள்தானே ஆள முடியும்? அதனால்தான் இன்றுவரை அந்த குடும்பமே ஆண்டு கொண்டு இருக்கிறது.

தன் உயிரைப் பற்றிக் கூட கவலைப் படாமல், பஞ்சாபில் சீக்கியர்கள் டில்லியின் "விவசாய கொள்கையால்" பாதிக்கப்பட்ட போது, பிரிந்தன்வாலா வுடன் சேர்ந்து கொண்டு, அரசையே எதிர்த்தார்களே? அதை இந்திரா தலைமையிலான ஆட்சி பார்த்துக் கொண்டு சும்மா இருக்குமா? அந்நிய நாட்டு நிதி மூலதனத்தை விவசாயத்தில் இறக்கினால், அதை வரவேற்று அரசை பாராட்ட வேண்டும். வங்கி கடன்மூலம் விவசாயிகள் திவாலா ஆனால் அதை எதிர்த்து "பாரதீய விவசாயிகள் சங்கம்" என்று போர்க்கொடி தூக்கலாமா? அதைத்தான் இந்திராகாந்தி எதிர்த்தார். அதனால்தான் அரச அடக்குமுறையை பஞ்சாப் விவசாயிகள் மேல் கட்டவிழ்துவிட்டார் அதனால் அவர்கள் பிரிந்தன்வாலா வுடன் சேரலாமா? சீக்கிய மத போர்வையுடன் "அரசை" எதிர்க்கலாமா? அதனால்தான் ராணுவத்தை அனுப்பி இந்திரா காந்தி "ஆபரேசன் நீல நட்சத்திரம்" என்ற பெயரில். "தங்க கோபுரம்" உள்ளே புகுந்து குருத்துவாராவில் இருந்த பிரிந்தன்வாலா உட்பட பாவி சீக்கியர்கள் நாலாயிரம் பேரை கொன்று குவித்தார். அதற்கு பதில் கொடுக்க அவரது "பாதுகாவலர்களாக' இருந்த சீக்கியர்களே அவரை சுட்டு கொள்ளலாமா? அதுவும் இன்றுதான் அந்த கொலை நடந்துள்ளது.

அதனால்தான் காங்கிரஸ்காரர்கள். பதிலடி கொடுக்க மூவாயிரம் சீக்கியர்களை வீடு புகுந்து கொன்றார்கள். அதுவும் ஒவ்வொரு வீட்டிற்குள்ளும் இருந்த இளம் சிறார்களான சீக்கியர்களை கொலை செய்தார்கள். அதை அறிந்த சீக்கிய தாயார்கள், தங்கள் ஆண் குழந்தைகளை பெண் வேடம் போட்டு வரும் கொலைகாரர்களிடம் இருந்து காப்பாற்றினார்கள். அத்தகைய வீரதீர செயல் செய்த காங்கிரஸ்காரர்களை " பெரும் மரம் சாயும்போது, அதன் அடியில் பல உயிர்கள் சாகத்தான் செய்யும்" என்று வீர வசனம், தத்துவ விளக்கம் தந்தவர்தான் முன்னால் பிரதமர் ராஜீவ் காந்தி.ஆனால் சீக்கியர்களோ, இந்திராவை கொலை செய்து "இனப் பழி தீர்த்த" வீரர்களான சட்வந்தர்சிங், பியாந்த் சிங், ஆகியோரையும், அவர்களது குடும்பத்தினரையும் கொண்டாடினார்கள். இது வரலாறு.

இவ்வாறு தங்கள் கொலகையான அந்நிய நிறுவங்களுக்கு நாட்டின் விவசாயத்தை விலை பேசியது தவறு என்று எதிர்த்த வீரமிகு விவசாயிகளை படுகொலை செய்து, அதற்காக தனது "இயற்கை சாவை" இழந்தவர் இந்திரா காந்தி. அதேபோல அவரது மகன் தாய்க்கு மகன் தப்பாமல் பிறந்தவன் என்று நீருபிக்க எண்ணி, "ஈழத்தமிழர்களை" இனப்படுகொலை செய்ய "இந்திய அமைதி படையை" அனுப்பியவர்.ஆயிரத்து ஐநூறு தமிழர்களின் படுகொலைக்கு காரணமாக இருந்தவர். அதன்விளைவால் அந்த ராஜீவ் காந்தி மரணம் எய்தியதாக அந்த வ்ழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் கூறுகிறது. அப்படியானால் அவரும் அதாவது ராஜீவ் காந்தியும், தாயின் வழியில் தனது மக்கள் விரோத கொள்கைக்காக இன அழிப்பு செய்வதும், அதற்காக தனது உயிரையே கொடுக்க துணிவதும் கவனிக்க தக்கது.அதனால் நாம் அறிவது இருவருமே தங்கள் உயிரை துச்சமென மதித்து இயற்கை சாவை விரும்பாமல், தங்களது இன எதிரிகளை வேரோடு அழிக்க புறப்பட்டவர்கள்.


இந்த இருவரையும் போல அல்லாமல், தனது தாயாரிடமே அதிகார பசியால், "தகராறு" செய்ததால் சஞ்சய் காந்தி செயற்கையாக தனது உயிரை விமான விபத்து என்ற பெயரில் கொலை செய்யப்பட்டார். மேனகா காந்திக்கும், வருண் காந்திக்குமே வெளிச்சம். சஞ்சய் காந்தியை கொலை செய்ய சொன்னது இந்திரா காந்தி என்ற கருத்தும் இருக்கிறது. எபப்டியோ குடும்பத்தில் அது ஒரு இயற்கை மரணம் அல்லாத செயற்கை மரணம். ஒரு மானார் குடும்பத்தில் இது போன்ற உள்கொளைகளும், வெளிக்கொளைகளும் சாதாரண நிகழ்வுகளே. அது இங்குள்ள காங்கிரச்காரர்களுக்கு புரிய வாய்ப்பில்லை. எப்படியானாலும், அந்த குடும்பத்தவர்கள் "இயற்கை மரணத்தை விரும்பவில்லை" என்று இதிலிருந்து தெரிகிறது. அதிகார வெறி என்பது உயிரை விட உயர்ந்தது எனபது அந்த அதிகாரத்தை சுவைத்து பார்க்கும் மனிதர்களுக்கே உரிய குணம். சாதாரண மக்களுக்கு விளங்காது. விடுதலை போரில் உள்ள வீரர்களுக்கும் அது விளங்கும்.

1 comment:

Anonymous said...

நல்ல கட்டுரை.

Post a Comment