டிசம்பர் பத்து உலக மனித உரிமை நாள். அன்று சென்னையில் "கூடங்குளம் அணு உலைகளுக்கு எதிராக" பட்டினி போராட்டம் நடத்தப்பட்டது பொருத்தமானதே. ஆனால் கூவம் கரை ஓரம் இடம் ஒத்துக்கிய மாநகர காவல்துறையை திட்டாதவர்களே இல்லை. இரண்டு நாள் முன்பே மனோ தகராஜ் ஊடகங்களுக்கு கூட்டம் நடத்தினார். அதில் அவருடன் இடிந்தகரை இவாரிஸ், ஆர்ம்ச்டிரான்க், பாதிரியார் ராஜன், ஆவின் பாபு, சங்கீதா ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். இதேபோல சென்ற இருபத்தி ஆறாம் நாள், வணிகர் சங்க பேரவை வெள்ளையன், உலக தமிழர் பேரமைப்பு பொருளாளர் சந்திரேசன், மனித நேய மக்கள் கட்சி போது செயலளார் அப்துல் சமது, இந்திய தௌஹித் ஜமாஅத் தலைவர் எஸ்.எம்.பாக்கர், பறையர் பேரவை ஏர்போர்ட் மூர்த்தி, மக்கள் சிவி உரிமை கழக டி.எஸ்.எஸ்.மணி, மீனவர் சங்க மாறன், மகேஷ், தமிழர் பண்பாட்டு நடுவம் ராஜ்குமார் பழனிசாமி,போன்றோர் கலந்துகொண்டு,"சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்ற பெயரில், விஞ்ஞானி வி.டி.பி. மூலம் பவர் பாயிண்ட்விளக்கம் கொடுத்தனர். இப்போது பட்டினி போர் நடத்தினர். .
இந்த போராட்டம் சென்னை கூட்டமைப்பு என்றும், அணு சக்தி எதிர்ப்பு என்றும் பெயர் பெற்று இருந்தது. இதில் சென்னை களம் உட்பட பலரும் கலந்து கொண்டார்கள். மனோ, இவாரிஸ், கண்ணன், ஆர்ம்ஸ், ஆண்டன் கோமேஸ், வெள்ளையன், கலை,சமுத்திராதேவி, காஞ்சனை சீனிவாசன், தொல்.திருமாவளவன், உதுயகுமார், மைபா, சலபதி, கில்பர்ட், வழக்கறிஞர் சுந்தரராஜன், பொறியியலாளர் ரவி, எஸ்.எம்.பாக்கர், அப்துல் சமது, சதீஷ்குமார், அருண்ஷோரி,மருத்துவர் புகழேந்தி, டி.எஸ்.ஏ.ஸ்.மணி, அருள் எழிலன்,எஸ்.யு.சீ.அய். தோழர்கள், ஜெ.சிதம்பரநாதன், மீத.பாண்டியன்,ஏ.எஸ்.குமார்,திருமுருகன்,மக்கள்மன்றம் மகேஷ், மேகலா, நாத்திகன், என்று பலரும் கலந்து கொண்டனர். கட்சி தலைவர்கள் பலரும்தங்கள் தொண்டர்களுடன் வந்து பேசிவிட்டு செல்வதாக இருந்தனர்.
தென் மாவட்டங்களை சேர்ந்த மீனவ சகோதரர்கள் இடிந்தகரை, கூத்தான்குழி, உட்பட ஒரு ஐம்பது பேர் சென்னை வாழ் மீனவர்களாக வந்திருந்தனர். கில்பர்ட் ஏற்பாட்டில் காஞ்சி மாவட்ட கடலோர பெண்கள் இயக்கம் ஒரு எழுபது பெண்களும், சமுத்திராதேவி ஏற்பாட்டில் மீனவ மகளிர் வாழ்வுரிமை இயக்கம் சார்பாக ஒரு அறுபது மீனவ பெண்களும் கலந்துகொண்டது பெறும் எழுச்ச்சியை தந்தது. தங்கள் அடையாளமாக அவர்கள் " சென்னை மாநகர அணு உலை எதிர்ப்பாளர்கள் களம்" என்று பெயர் பட்டையை சட்டைகளில் அணிந்து இருந்தனர். சென்னை மீனவ சங்கங்களான தமிழ்நாடு மீனவர் முன்னேற்ற சங்கம் மாறன் உடன் டி.பாண்டியன் உட்பட, ஆவின் பாபுவின் "இந்திய மீனவர் பேரவை" சலபதியின் மீனவ தொழிலாளர் சங்கம்", மகேசின் "அகில இந்திய பாரம்பரிய மீனவர் சங்கம்" என்று சென்னைவாழ்மீனவர்களும்கலந்துகொண்டதுசிறப்பு. பங்கெடுத்தவர்களில் மீனவர்களின் எண்ணிக்கையே சரிபாதிக்கு மேல் இருந்தது. அவர்கள் அறிவித்துக் கொள்ளவில்லை. ஆண்டன் கோமெசின் அழைப்பின் பேரில் அவர்கள் வந்திருந்தனர்.
எஸ்.எம்.பாக்கர் பேசும்போது "பட்டினி போராட்டங்கள் பயன்படாது என்றும், முற்றுகை போராட்டமே அணு உலைக்கு பொருத்தமானது "என்றும்பேசிய உடனே கூடங்குளம் வட்டார மக்கள் ஊராட்சி தலைவர் சாண்டல் முத்துராஜ் தலைமையில் கூடங்குளம் அணு உலை முன்பு "முற்றுகை" இடும் செய்தி வந்தது. அங்கேயே சமைக்கவும் தொடங்கி விட்டார்கள் என்றும், பெண்கள் முன்னாள் நின்று அங்கு முற்றுகை போர் நடக்கிறது என்பதும் சிறப்பு செய்திகளாக இருந்தது. கோமாளிகள் போல அமைச்சர் நாராயணசாமியும், அப்துல் கலாமும், பேசிவருவது விமர்சிக்கப்பட்டது.வேய்நாட்டு பணம் விளையாடுகிறது என்ற குற்றச்சாட்டை, "தற்காப்பு பாணியில் பதில் சொல்ல கூடாது" என்றும், தாக்கும் பாணியில் பதில் கூற வேண்டும் என்றும் கூறப்பட்டது. அது என்ன? என்றால், வெளிநாட்டு பணமான அமெரிக்கா பணம் அணு உலை ஒப்பந்தம் போட்டதற்கு ஆதரவாக "அணு உலை ஆதரவு குழுவிற்கு வருகிறது" என்பது விளக்கப்பட்டது. அதேபோல "அணு சக்தி துறை", தேசிய மின்சக்தி கார்பரேசன் ஆப் இந்தியா" ஆகியவற்றுடன் "கூடங்குளம் அணு மின் உலை திட்டம்" இணைத்து அந்த நிதியை செலவழிக்கிறது என்றும் அங்கே குற்றம் சாட்டப்பட்டது.
மேற்கண்ட செலவுகளை செய்ய கணக்கு கேட்க முடியாது என்பதும் விளக்கப்பட்டது. அதாவது 1962 ஆம் ஆண்டு சட்டப்படி, அணு உலை ரகசியங்களை அந்த அணுசக்தி துறை தலைவரும், பிரதமரும் "கமுக்கமாக" வைத்து கொள்ளலாம் என்றும், அதை அமைச்சரவைக்கோ, நாடாளுமன்றத்திற்கோ, கூறவேண்டிய அவசியம் இல்லை என்பதாகவும், அவர்கள் அதற்காக செலவழிக்கும் பணத்திற்கு "கணக்கு காட்டவேண்டாம்" எனவும் அந்த சட்டத்தில் இருப்பது சுட்டி காட்ட பட்டது. ஆகவே அணு உலை ஆதரவு கும்பல்களுக்கு செலவு இவ்வாறு அதிகம் செய்யப்படுகிறது என்பதும், மக்கள் போராட்டத்தை பணம் பற்றி பேசி "கொச்சை படுத்தாதே" எனவும் அங்கே கூறப்பட்டது. மாலையில் சேவ் தமிழ்ச சார்பாக பேரணி எடுக்கப்பட்டது. சன்னியும் எழுந்துவிட்டது என்பதை அது காட்டியது.
Sunday, December 11, 2011
Subscribe to:
Posts (Atom)