மயிலை மாங்கொல்லை யில் திமுக வின் கலை இலக்கிய பேரவை பொறுப்பாளர் கனிமொழி எம்.பி.யின் ஏற்பாட்டில் தென்சென்னை கலை இலக்கிய பேரவை ஒரு கூட்டத்தை நேற்று நடத்தியது. அதில் கனிமொழி இரண்டு நிமிடம் மட்டும் வரவேற்புரை பேச, ஸ்டாலின் பத்து நிமிடம் பேச, கலைஞர் நாற்பது நிமிடம் பேசினார். ஜெ .விற்கு அடிக்கு பதிலடி என கொடுத்ததாக உடன்பிறப்புகள் பெருமை பட்டனர். அவர் உரைக்கு பிறகும் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. அதில் " தஞ்சை வறண்டு போச்சு""தமிழகமே இருண்டு போச்சு" " கோட்டைக்குதானே விடுப்பு" ' அம்மா, கொடநாட்டுல இருப்பு" என்று ஆடி, பாடினார்கள். நன்றாகத்தான் இருந்தது. ஆனால் அதற்கும் ஒரு எசப்பாட்டு. " தஞ்சை வறண்டதுக்கும், தமிழகமே இரூண்டதுக்கும், டெல்லி போட்ட பட்டை. அது கலைஞர் முட்டு கட்டை " என்றும் பாடப்படுகிறதே?
Friday, January 18, 2013
Subscribe to:
Posts (Atom)