Tuesday, March 19, 2013

காங்கிரசுடன் ஒட்டும் வேண்டாம், உறவும் வேண்டாம் என்கிறாரா?


    காங்கிரஸ் தலைமையிலான நடுவணரசு "தமிழர்களின் நியாயத்தை " ஏற்கவில்லை என்பது கலைஞரின் வாதம்.அப்படியானால்  2009 போர் நேரம் காங்கிரஸ் தமிழர்களின் நியாயத்தை ஏற்றதா? என்று பெரியவரிடம்  எதிர்கேள்வி கேட்காதீர்கள். காங்கிரஸ்  தலைமையில்  உள்ளாஅமைச்சரவைளிருந்து, திமுக விலகி கொல்லும்  என்ற பெரியவரின் சொல்லுக்கு, நாடாளுமன்றதிலிருந்தும், திமுக வின் 18 உறுப்பினர்களும் விலக கூடாதா? இருந்து என்ன பயன்? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள்.
திமுக அமைச்சர்கள் ஓரிரு நாளில் "ராஜினாமா" கடிதத்தை கொடுப்பார்கள் என்று கூறியதற்காக,  வன்னி போர் நேரத்தில் ஏன்  "ராஜினாமா" கடிதத்தை நீங்களே வாங்கி வைத்து கொண்டீர்கள்? என்று எதிர்கேள்வியை பெரியவரிடம் கேட்க வேண்டாம். 

            காங்கிரஸ் உடன் நிரந்தர "முறிவு" என்றால், எதற்காக "கெடு நாள் "அறிவிக்க வேண்டும் என்று எதிர் கேள்வி கேட்காதீர்கள். ஈழத்தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் "துரோகம்" செய்ததாக கலைஞர் கண்டுபிடித்திருந்தால், இதுவரை "ஏமாந்து விட்டேன்?" என்று  ஒப்புக் கொள்வாரா? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள். ஈழத்தமிழர்  நலனுககவே  முடிவு எடுகிறேன் என்று கலைஞர் சொல்வதால், "டெசோ" கூட்டத்திற்கு ஏன்  காங்கிரசை கூப்பிட்டீர்கள்? என்று பெரியவரிடம் எதிர் கேள்வி கேட்காதீர்கள். "டெசோ" வில் கூட்டு, ஐ.நா.மனித உரிமை கழகத்தில் "பகையா?" என்று பெரியவரிடம் கேட்டு துன்புறுத்தாதீர்கள். 2009 இல் லட்சக்கணக்கான தமிழர்கள் கொள்ளப்படும் போது  காங்கிரசுடன் உறவு, இப்போது தமிழகம் மாபெரும் மாணவர் போராட்டத்தை சந்தித்து வருவதால், "பகை" என்பதாக புரிந்து கொண்டு பெரியவர் மனதை புண்படுத்தும் கேள்விகளை கேட்காதீர்கள். 

          காங்கிரஸ் உடன் சேர்ந்து நடவனரசில் அங்கம் வகித்ததால்,  "ஈழத் தமிழர்" கண்ணுக்கு தெரியவில்லை என்றும் பெரியவரை கேள்வி கேட்டு துன்புறுத்தாதீர்கள். நடுவணரசில் காங்கிரசுடன் இருந்ததால், "மாணவர் பட்டினி ஒராட்டதை" நிறுத்த சொன்ன கலைஞர் இப்போது மாணவர்கள் போராட்டத்தை  "தொடரட்டும்" என்ருகூருவாரா? எனக்கேட்டு பெரியவரை துன்புறுத்தாதீர்கள். நடுவணரசை எதிர்த்து போராட்டங்களை உற்சாகப்படுத்தாமல், இருந்த நிலை மாறி, திமுக இனி நடுவணரசை எதிரத்த போராட்டங்களை நடத்துமா? என்று பெரியவரிடம் கேள்வி கேட்க வேண்டாம்.