Friday, June 17, 2011

சமச்சீர்காரர்களுக்கு சமச்சீர் இல்லையா?

தமிழ்நாட்டில் சச்சரவில் உள்ள விவாதம் " சமச்சீர்கல்வி"பற்றியது. எல்லோரும் சமச்சீர் கல்வியை ஆதரிப்பதாக கூறிரார்கள். அது உண்மையா? கலைஞர் அரசு "சமச்சீர் கல்வி"யை அமுல் படுத்தியதாக , அதாவது ஒன்றாம் மற்றும் ஆறாம் வகுப்புகளுக்காவது அமுல்படுத்தியதாக திமுக கூறுகிறது. அது "சமச்சீர் கல்வியே" அல்ல என்றும், அது ஒரு " பொதுப்பாடம்"தான் என்றும் சிபிஎம் ஆதரவாளர்கள் கூறுகின்றனர். "சமச்சீர் கல்விக்காக" திமுக ஆட்சியில் ஏற்படுத்தப்பட்ட " முத்துகுமரன் குழுவோ" தான் கொடுத்த நூற்று ஒன்பது ஆலோசனைகளில் எந்த ஒருஆலொஸநலையையும் திமுக ஆட்சி அமுல்படுத்த வில்லை என்று கூறுகிறது.


"சமச்சீர் கல்வியை" ஆதரிக்க வேண்டும் என்று ஆசைப்படும் ஒவ்வொரு தமிழ்மகனும் எது சமச்சீர் கல்வி என்றே தெரியாமல் முழிக்கிறார்கள்.அதிமுக ஆட்சியில் ஏதோ சமச்சீர் கல்விக்கு எதிராக கைகள் நகர்த்தப்படுவதாக அவர்கள் நினைக்கிறார்கள். ஆனால் அது என்ன என்றே புரியவில்லை. உயர்நீதிமன்றம் சமச்சீர் கல்விக்கு ஆதரவு என்றும், அதை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றம் சென்றது என்றும் அங்கும் சமச்சீ ர்கல்விக்கு ஆதரவாகத்தான் தீர்ப்பு வந்துவிட்டது என்றும் எல்லோரும் படிக்கிறார்கள். ஆனால் அந்த சமச்சீர் கல்வி எது, அதை எப்படி அமுல்படுத்துவது என்பது யாருக்கும் தெரிந்துவிட்டதா எபது நமக்கு தெரியவில்லை.

" என் எழுத்துக்களை" எதிர்க்கத்தான் அந்த "அம்மா" சமச்சீர் கல்வியை எத்ரிக்கிறார் என்று கலைஞர் அனுதாப லையை ஏற்படுத்த முயல்கிறார். ஆனால் ஜெயலலிதாவோ, கல்வி அமைச்சரோ தாங்கள் "சமச்சீர் கல்விக்கு" எதிரி அல்ல என்று கூறுகிறார்கள். திமுக அமுல்படுத்தியது "அரைவேக்கட்டுத்தனமானது" என்று கல்வி அமைச்சர் கூறியுள்ளார். அபப்டியானால் சிபிஎம் சொல்வது போலத்தான் அதிகவும் கூறுகிறது என்று அர்த்தமா? அந்த அறைவீகாட்டு கல்வியை அதிமுக வேண்டாம் என்றும், சிபிஎம் "வேம்டும்" என்றும் கூறுகிறார்களே?


இன்று ஒரு செய்தி. சென்னை சாந்தோம் "மாநகராட்சி பள்ளியில்" ஒன்றாம் வகுப்பிற்கு "பிழைகளே" சேரவில்லை. பக்கத்தில் இருக்கும், மீனவ, மற்றும் தலித், மற்றும் ஏழை குழந்தைகளைக் கூட "பெற்றோர்கள்" தனியார் பள்ளிகளில் சேர்த்து விட்டனர். இப்படி ஒரு மனோ நிலை பெற்றோர் மத்தியில் இருக்குமானால் அது "சமச்சீர் கல்விக்கு" கிடைக்கும் ஆதரவா? இவாறு நமது மக்கள் மத்தியில் "மாநகராட்சி பள்ளிகளைவிட" தனியார் பள்ளிகள் சிறந்தது என்ற யானோ நிலை இருக்குமானால் எங்கிருந்து சமசீர் கல்வியை கொடுவர முடியும்? தஹ்னியார் கல்வி வணிகர்களை எப்படி விரட்ட முடியும்? " சமசீர் கல்வியின்" நோக்கம் அதுதானே?


முதலில் அதிகமாக "சமச்சீர் கல்வி"பற்றி பேசும் சிபிஎம், சிபியை, கட்சிகளின் தோழர்கள் தங்கள் குழந்தைகளை எந்த பள்ளிகளில் சேர்த்துள்ளார்கள் என்று பார்க்க வேண்டும். அவர்களை "மாநகராட்சி பள்ளிகளில்" குழந்தைகளை சேர்க்க சொல்லி வற்புறுத்த வேண்டும். அடுத்து "தலித்" இயக்கங்களின் தோழர்களும், முற்போக்கு பேசும் "கல்வியாளர்களும்"தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும். பிறகுதான் நாம் திமுக, அதிமுக கட்சிகாரர்களை பார்த்து அவர்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க சொல்ல முடியும். அபப்டி செய்துவிட்டால், தானாகவே "கல்வி வணிகர்கள்" ஓடிப்போய் விடுவார்களே? அத்தகைய கட்டமைப்பு வந்தவுடன் "சமச்சீர் கல்விக்கான" சூழல் ஏற்பட்டுவிடுமே?