Friday, June 3, 2011

இந்தி வெறியன், ஊழலை எதிர்க்க முடியாது.

"யோகா குரு" என்பதாக அழைக்கப்படும் " ராம்தேவ்" இப்போது " பட்டினிப் போராட்ட பூச்சாண்டி" காட்டி, இந்திய மக்களையே " ஊடகங்கள் " மூலம் ஈர்க்கப் பார்க்கிறார். இங்கே " நாடு மாபெரும் ஊழல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் " அதற்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு மக்களது உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் என்ற வப்பெயரைப் பெறுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. ஏன் என்றால் " ஊடகங்கள்" வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்திய மக்களது உணர்வுகள் மத்திய அரசால் சரியாக எதிரோளிக்கப்பட வில்லை என்று உலக சமூகம் எண்ணினால், இந்தியாவிற்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் தடைப்படும் என்ற அச்சம் மத்திய அரசிற்கு உள்ளது.


அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.


ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?

யாருடன் " கூடா நட்பு" யாருக்கு " கேடாய் முடியும்"?

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞருக்கு இன்று பிறந்த நாள். அவர் அதையொட்டி சில சீரிய கருத்துக்களை அறிவித்துள்ளார். அதில் " அரசியல் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், கூடா நட்பு, கேடாய் விளையும் எண்பதை உணரவேண்டும்" என்று அப்போது கலைஞர் அறிவித்தார்.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.


அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.


"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.

தலைவர் பிறந்த நாளில், தொண்டர்கள் ஆவேசம்.

தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.


கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.


தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது