"யோகா குரு" என்பதாக அழைக்கப்படும் " ராம்தேவ்" இப்போது " பட்டினிப் போராட்ட பூச்சாண்டி" காட்டி, இந்திய மக்களையே " ஊடகங்கள் " மூலம் ஈர்க்கப் பார்க்கிறார். இங்கே " நாடு மாபெரும் ஊழல்களை எதிர்கொள்ளும் நேரத்தில் " அதற்கு மாற்று தேட வேண்டிய கட்டாயம் ஆள்வோருக்கு ஏற்பட்டு உள்ளது. நாட்டு மக்களது உணர்வுகளை மதிக்காத அரசாங்கம் என்ற வப்பெயரைப் பெறுவதற்கு இந்திய அரசு தயாராக இல்லை. ஏன் என்றால் " ஊடகங்கள்" வளர்ந்துள்ள இன்றைய சூழலில், இந்திய மக்களது உணர்வுகள் மத்திய அரசால் சரியாக எதிரோளிக்கப்பட வில்லை என்று உலக சமூகம் எண்ணினால், இந்தியாவிற்கு கொடுக்கப்படும் நிதி உதவிகள் தடைப்படும் என்ற அச்சம் மத்திய அரசிற்கு உள்ளது.
அதனால்தான் " காங்கிரசில் ஒரு சாராரும்" அதேபோல இங்கே தொடர் சுரண்டலில் ஈடுபட்டுவரும் " கார்பரேட்களும்" இந்த " ஊழல் விவகாரத்தை" தற்காலிகமாக நிறுத்தி வைக்க, அதாவது இந்திய மக்கள் மத்தியில் ஒரு மாயையை ஏற்படுத்த முயல்கிறார்கள். அதற்காக " தயார்" செய்யப்பட்டவர்தான் " அன்னா ஹசாரே" என்று கூறினார்கள். அவரும் " சோனியாவால் " ஆசிர்வதிக்கப்பட்டார். ஆனால் அவரை பா.ஜ.க. கும்பல் ஏற்றுக் கொள்ளவில்லை. இப்போது " ராம்தேவ்" கிளம்பி இருக்கிறார். நடுத்தர மக்களாக உள்ள பல இந்துக்கள் அவரை நம்பி களத்தில் குதிக்கிறார்கள். அதுவே அவரது பலம். அதைக்கண்டு மத்திய அரசு அஞ்சுகிறது.அதனால்தான் மொத்த அமைச்சர்கள் அவர் பின்னால் ஓடுகிறார்கள். ஆனால் " திக்விஜய் சிங் " கடுமையாக அந்த ராம்தேவை அம்பலப்படுத்துகிறார்.
ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., போன்ற இந்துத்துவா சக்திகள் " பாபா ராம்தேவை" ஆதரிக்க தொடங்கியவுடன், காங்கிரஸ், திக்விஜய் டிங் மூலம் ராம்தேவை விமர்சிக்க சொல்கிறது. அவரும், " ராம்தேவ் ஒன்று சந்நியாசியாக இருக்க வேண்டும். அல்லது அரசியலுக்கு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். " ராம்தேவ் ஒரு சந்நியாசி போல இல்லாமல் ஏன் நிறைய கோடிகணக்கான ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை வைத்துக்கொண்டுள்ளார்? " என்று திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவ் தனக்கு வரும் வருமானங்கள் எங்கிருந்து வந்தன என்றும் எவ்வளவு வந்தன என்றும் பகிரங்கமாக தெரிவிக்க தயாரா? என்றும் திக்விஜய் டிங் கேட்கிறார். ராம்தேவை ஒரு வியாபாரி என்று டிக்விஜைசிங் கூறிவிட்டார்.
இந்த நேரத்தில் ராம்தேவ் கூறியுள்ள கோரிக்கைகளில், " ஆங்கிலத்தை நீக்கி விட்டு, இந்தியை இந்தியா முழுவதும் கொண்டு வரவேண்டும்" என்று கூறியுள்ளார். அதை திக்விஜய் சிங் என்ற " இந்தி பேசும் மாநிலத்தை சேர்ந்த காங்கிரஸ்காரர்" தெளிவாக மறுக்கிறார். இந்தியாவில் இந்தி மொழி பேசாத மாநிலங்கள் பல இருக்கின்றன என்று திக்விஜய் சிங் கூறியுள்ளார். இந்தியாவில், தமிழ்நாடு உட்பட, தென்னிந்தியா முழுவதும் மட்டுமின்றி, மகாராஷ்டிரா, குஜராத், ஒரிசா, மேற்கு வங்கம், திரிபுரா, அஸ்ஸாம், நாகாலாந்து, மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம், மிசோரம், காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான், போன்ற பல்வேறு மாநிலங்களில் " இந்தி மொழி" மக்களால் பேசப்படும் மொழி அல்ல. இந்த உண்மை " ராம்தேவ்" போன்ற " கோடீஸ்வர சந்நியாசிகளுக்கு" தெரியாமல் இருக்கலாம். அங்கே ஒரு தமிழ்நாட்டின் திருச்ச்சியைச்சேர்ந்த உதவியாளர், " கொவிந்தாச்ச்காரியார்" இருக்கிறாரே, அவருக்கும் தெரியாதா? எப்படி ஒரு " இந்தி வெறியன்" ஊழலை ஒழிக்க போராட முடியும்?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment