தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவரின் 88 ஆவது பிறந்த நாளில், காலையில் " அன்னா சதுக்கத்தில்" கூடிய திமுக தொண்டர்கள் ஒருவருக்கொருவர் ஆத்திரத்தோடு அளவளாவிக் கொண்டது, " கழகத்தை அழிக்கத் துணிந்த தயாநிதி சகோக்கள் பற்றித்தான்" என்றி அந்த திமுக பிரமுகர் கூறினார். தாங்கள் உயிரினும் மேலாக வளர்த்த கழகத்தை, எங்கிருந்தோ வந்து உள்ளே நுழைந்து, தயாநிதி மாறன் மூத்த திமுக முன்னோடிகளுக்கு இருந்த இடத்தை பிடித்து, தலைவரிடம் அக்கறை உள்ள திமுக போல நடித்து, அதன்மூலம் " மத்திய அமைச்சர்" பொறுப்பையும் வாங்கி விட்டார் என்று அங்கலாய்த்தனர்.
கலைஞரின் மருமகன் முரசொலி மாறன் மீது கழக உடன்பிறப்புகளுக்கு அதிகமான மரியாதை உண்டு. அதைப் பயன்படுத்தி, அவரது மகன் என்ற பெயரில் இந்த கடைந்தெடுத்த வியாபாரி கழகத்திற்குள் நுழைந்து விட்டார் என்றும் கூறினர். கழகத்திற்காக எந்த ஒரு தியாகத்தையும் செய்யாத இந்த கலா-தயா சகோக்கள் உள்ளே நுழைந்து, மத்திய அமைச்சரவையை பெற்றதனால் அவர்கள் டில்லிக்கு செல்லப் பிள்ளை ஆகிவிட்டனர் என்றனர். அவர்களுக்கு மட்டுமே தெரிந்த " தொலைத் தொடர்பு " அமைச்சகத்தை அடம்பிடித்து வாங்கிக் கொண்டபோதுகூட எங்களுக்கு அந்த " தந்திரம்" புரியவில்லை என்கின்றனர். தாங்கள் நுகர்ந்து பார்த்து கண்டுபிடித்த ஸ்பெக்ட்ரம் விவகாரம் கூடத் தலைவருக்கு மிகத் தாமதமாகத் தான் தெரிந்து இருக்கிறது என்றனர். திமுக " இந்தி எதிர்ப்பு" போரில் ஈடுபட்டதனால், அதன் ஒவ்வொரு தீவிர உறுப்பினரும் " இந்தி மொழிப் பாடம்" கற்காமலேயே இருப்பார்கள். ஆனால் எங்கோ போய் தான் மட்டும் இந்தி பாடம் கற்றுக் கொண்டு வந்துவிட்ட " தயாநிதி" அதன்மூலம் டில்லி தலைவர்கள் மத்தியில் சரளமாக பேசுவதும், பழகுவதும் செய்து " தான்தான் திமுக" என்பதுபோல ஒரு பாவலா கட்டிவந்திருக்கிறார் என்றும் குற்றம் சாடினர்.
தலைவர் பிறந்த நாளில் " உடன்பிறப்புகளின்" ஆதங்கம் இப்படித்தான் வெளிப்பட்டது. அதனால் தயாநிதிக்கும், ஆ.ராஜாவிற்கு வந்த சிறை வரவேண்டும் என்றும், சரத்குமார் ரெட்டி நிலையில் இருக்கும் கலாநிதிக்கு சரத் நிலை வரவேண்டும் என்றும், கலாநிதி மனைவி காவேரிக்கு, கணிம்ழிக்கு கிடைத்த நிலை கிடைக்கவேண்டும் எனவும் அவர்கள் வேண்டி நின்றனர். இது அந்த வரலாற்று தடங்கள் கொண்ட கழகத்தின் பாதையில் ஒரு பெரும் " அதிர்ச்சியாகத்தான்" இருந்தது
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment