Thursday, June 2, 2011

சபாஷ். சரியான போட்டி. நீயா? நானா? யார் திஹார் சிறையில்?

மன்னர் குடும்பம் " ராஜா ராஜா சோழனின்" வாரிசாம். உண்மை. உண்மை. ஏன் என்றால் ராஜா ராஜா சோழன் எந்த வகையிலும் நல்லவன் கிடையாது. பெண்களை இழிவுபடுத்த, " பொட்டுக் கட்டுதலை" கொண்டுவந்தவன். தலித்களை இழிவு படுத்த அவர்களது " நிலங்களை பறித்தான்". 'அந்தணர்களை வளர்த்துவிட" அவர்களுக்கு "பிரும்ம தேசத்தையும் ", " சதுர்வேத மங்கலத்தையும்" கைமேல் கொடுத்தான்/ அந்த ராஜா ராஜா சோழனின் வாரிசாக தன்னை வரித்துக்கொண்டவர்களுக்கு, இதே போல ராஜராஜசோழனின் குணங்கள் இருக்கத்தானே செயயும்?

இப்போது அந்த இளைய அரசரின் அன்பு மருமகன் "தயா" தனது மாமா ஸ்டாலினை தூக்கி பிடித்து வந்தவர், தானே வசமான பொறியில் சிக்கிக்கொண்டார். ஸ்பெக்ட்ரம் ஊழலில், 2004 முதல் 2007 வரை " தயாநிதி மாறன்" தான் அந்த " தோளைத் தொடர்பு அமைச்சகத்திற்கு" அமைச்சராக இருந்தவர்." ஆகவே அப்போது நடந்த அனைத்து ஊழகளுக்கும் பொறுப்பு அவர்தான். 2001 ஆம் ஆண்டு விற்கப்பட்ட அதே விலைக்கு, நான்கு ஆண்டுகள் கழித்தும் கொடுப்பது என்பது, " வளர்ந்துள்ள சந்தையின் தன்மையை " கணக்கில் எடுக்காமல், வாங்குகின்ற "தனியாருக்கு " பெருத்த லாபத்தையும், அரசுக்கு பெருத்த நட்டத்தையும் ஏற்படுத்த முனைவது ஆகும்.


அப்படிப்பட்ட ஒரு " கடுமையான ஊழலை" செய்த " தயா" 2007 ஆம் ஆண்டு தனது பதவி பறிப்புக்கு பிறகு, தனது அமைச்சரவையை கைப்பற்றிய தனது " தாத்தாவின்" ஆளான " ஆ.ராஜாவை" பூத்துக் கொடுப்பதற்காகவே தனது சொந்த அச்சு ஊடகமான " தினகரனில்" மற்றும் தனது சொந்த காட்சி ஊடகமான " சன் டி.வி.யில்" ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று அன்றாடம் வெளியிட்டு அந்த விஷயத்தை பொதுமக்கள் பார்வைக்கு கொண்டு வந்தார். அதேபோல இப்போது " ஸ்பெக்ட்ரம் ஊழலில்" ஆ.ராஜாவும், கனிமொழியும், சரத் குமார் ரெட்டியும் சிக்கி சிறைக்கு சென்றபோது, அகமகிழ்ந்து, தனது அரசியல் போட்டியாளர், வணிக போட்டியாளர், மைச்சர் பதவி போட்டியாளர் ஆகியோர் மாட்டிவிட்டார்களே என்று அதிகமாக மகிழ்ந்தவரும் இவரே.


அதனால்தான் " கலைஞர் டி.வி.யில்" மேலாண்மை இயக்குனராக இருந்த " சரத் குமார் ரெட்டியை" , அவரது முதலாளிகளில் ஒருவரான " மு.க. அழகிரி" சிறையில் பார்க்க சென்ற போது, இப்போது அழகிரியின் நண்பர் போல நடித்துவரும், தயாநிதி உடன் சென்றதால், சிறைக்குள் கொடுத்துவிட்ட மனுவில் உள்ள பெயர்களை பார்த்த சரத்குமார் ரெட்டி, " இத்தனைக்கும் காரணமான தயாநிதியை சந்திக்க மாட்டேன்" என்று கூறிவிட்டதால், அழகிரி மாத்திரமே உள்ளே ச்நேறு பார்ஹ்து வந்த கதை வெளியே வந்து விட்டது.


இப்போது " தெஹெல்கா" வெளியிட்ட பெரிய கட்டுரையும், அடுத்து " டைம்ஸ் நொவ்" , "ஹெட்லைன்ஸ் டுடே ", "சீ.ஏன்.ஏன்.-ஐ.பி.ஏன்." போன்ற காட்சிஊடகங்கள் நாடெங்கும், உலகமெங்கும் வெளியிட்ட செய்திகள், அனைத்தையுமே கொடுத்தது " சீ.பி.ஐ." தான் என தெரிய வந்துள்ளது. எப்போது உச்சநீதி மன்றம் 2001 இலிருந்து,ஸ்பெக்ட்ரம்விற்பனை பற்றிய விசாரணையை நடத்துங்கள் என்று கூறியதோ, அன்றிலிருந்தே , " தயாநிதி காலத்து" விவகாரங்களும் சீ.பி.ஐ.யால் விசாரிக்கப்பட ஆரம்பிக்கப்பட்டது என்று இப்போது வெளி வ்ந்திருக்கிறது.


"ஏர்செல்" நிறுவனம் சிவசங்கரனிடம் இருந்தது. இந்த " சிவசங்கரன்" தயாவின் அப்பாவான முரசொலி மாறனின் " காய் நகர்த்தலுக்கு" இணங்கி சென்றவர். அவர் " ஸ்டேர்லிங் கம்ப்யுடர் " என்ற பிரபல நிறுவனத்தை வைத்திருந்தவர் என்பது அனைவரும் அறிந்த பழைய கதை. முரசொலி மாறன் " வணிகத் துறை " அமைச்சராக இருந்த போது, சில சித்து விளையாட்டுக்களை செய்தார். தமிழ்நாட்டில் " நாடார் சமூகம்" தனது கடுமையான உழைப்பால் வணிகத்தில், " பனியாக்கள், செட்டியார்கள்" எட்ட முடியாத ஒருஉயர் நிலையை எட்டி இருந்தது.அதனால் தனக்காக ஒரு வங்கியையே உருவாகியது.


அந்த வங்கிதான் " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி". அந்த வங்கியின் பண்குதாரர்களுக்குள் எழும்பிய முரண்பாட்டை, " வணிக அமைச்சர்" கவனித்தார். அதை வசப்படுத்த நினைத்தார். தனக்கு நெருக்கமான " வட இந்திய முதலாளிகளுக்கு" அதாவது " சிந்தி முதலாளிகளுக்கு" அந்த "சுயம்பு தமிழர்" வங்கியை தாரை வார்த்து கொடுக்க திட்டமிட்டார். தனது வணிக தந்திரங்களுக்கு " நாடார் சமூகத்தின் " சுயசார்பு பொருளாதார வளர்ச்சி" தடையாக இருக்கும் என்று " முரசொலி மாறன்" எண்ணியிருந்திருக்கிறார். அதனால்தான் " வட இந்திய வணிகர்களிடம்" சுயமாக எழுந்துள்ள ஒரு தமிழர் வங்கியை ஒப்படைக்க முடிவு செய்தார். அதற்காக அவர் " சிவசங்கரனை" பயன்படுத்திக் கொண்டார்.


" ஸ்டேர்லிங் சிவசங்கரன்" அன்றே மாறனின் சதிக்கு பலியாகி விட்டார். அதன் பிறகு " நாடார் சமூகமே" எழுந்து " தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கியை" மீட்க போராடிய போது, " முரசொலி மாறனே" இடைத்தரகராக வந்து அதை தீர்த்து வைத்தார். அதே சிவசங்கரன், " தயாநிதியின் அமைச்சரவை காலத்தில்" ஏர்செல் நிறுவனம் மூலம், மகன் மாறனிடம் வருகிறார். ஏர்செல் நிறுவனத்திற்கு " பல வடநாட்டு நகர்களில் இணைப்பு" கேட்கிறார். தந்தையின் கையாளுதல்களுக்கு, ஒத்துழைத்த சிவசங்கரனை, மகன் கைகழுவ திட்டமிட்டார்.


ஏர்செல் என்ற பெரிய நிறுவனம் தயாவின் கண்ணை உறுத்தியது. அதை வேறு பெரிய வெளிநாட்டு முதலாளிக்கு விற்றால் அதில் " பங்கு" கிடைக்குமே என்று எண்ணினார். தந்து அமைச்சர் பதவியை பயன்படுத்தி என்ன செயலாம் என மகன் சிந்தித்தார். அப்பன் ஒரு " தமிழர் சமூகம்" பொருளாதார ரீதியாக எழுந்து நிற்பதை உடைத்தவர். மகன் ஒரு தனிநபர் " தமிழ் முதலாளி" வைத்திருக்கும் பெரிய நிறுவனத்தை காலி செய்ய திட்டமிட்டவர். " தயா" தனது நண்பரான மலேசியாவின் " அஸ்ட்ரோ" காட்சி ஊடக வலைப்பின்னலை வைத்திருக்கும் " அனந்த கிரிஷ்ணனுக்கு" உதவி செய்து அதில் பங்கு எடுக்க எண்ணினார்.

அனந்தகிரிஷ்நனோ வெளிநாட்டுக்காரர் வெளிநாட்டு பங்குகள் நமது " தொலை தொடர்பில் " 24 விழுக்காடுதான் இருக்கலாம்..அப்போது நிதி மைச்சராக இருந்த தனது நண்பர் " ப.சிதம்பரத்திடம்" ஆலோசனை கேட்கிறார் தயா. சிதம்பரமும் அன்றைய பிரதமர் மன்மோகனுக்கு விருப்பமான " அந்நிய நிதி முதலீட்டை" கூட்டுவது என்பது பொருத்தமாக இருக்கும் எனவும், ஆலோசனை தந்து " நிதி அமைச்சகத்திலிருந்து" அதற்கு அனுமதியையும் வழங்கியிருக்கிறார். இவாறு அதில் ஒரு " கூட்டு கொள்ளை" நடந்திருக்கிறது.


வெறும் 800 கோடிக்கு ஏர்செல் தந்து பங்குகளை விற்க " தயாநிதி" நிர்ப்பந்தம் செய்திருக்கிறார். அந்த ரகசிய செய்தியை இப்போது சீ.பி.ஐ. அதிகாரிகளிடம் அவரே கூறிவிட்டார். பங்குகளை வாங்கியதோ " அஸ்ட்ரோ அனந்தகிரிஷ்ணனின்" இன்னொரு நிறுவனமான " மாக்சிஸ்". அதை வாங்கிய ஆஸ்ட்ரோ தனக்கு "இந்தியா முழுவதும் இணைப்புகள் வேண்டும்" என்று தொலை தொடர்பு அமைச்சகத்திடம் கேட்டுக் கொண்டது.உடனடியாக் அதை தயா வழங்கினார். அதர்கு பதில் சில காலம் கழித்து, " சன் டிரெக்ட் " நிறுவனத்துக்கு அந்த "மாக்சிஸ்" ஒரு பெரும் தொகையை அதாவது " 725 கோடியை மூலதனமாக கொடுத்தது.


இது ஊழல் இல்லையா என்பதே இப்போது கேள்வி. எப்படியோ இந்த ஊழலில் ஒரு " தமிழின விரோதப் போக்கும்" தொடர்ந்து அந்த குறிப்பிட்ட மாறன் குடும்பத்தாரால் செய்யப்பட்டது என்பது புரியப்படவேண்டும். அதன் பிறகே " தமிழ் முதலாளிகளாக" எழுகின்ற நாடார் சமூகத்தின் பிரதிநிதியாக " ராஜாத்தியும், கனிமொழியும்" தோன்றுகிறார்களே என்ற ஆத்திரத்தில் அவர்களையும் அழிக்க தனது நச்சு ஆயுதங்களை அந்த " குடும்பம்" பயன்படுததியது. எல்லாமே இப்போது " பூமராங்" என்று திருப்பி அடிக்கிறது. சோனியா கைவிட்டு விட்ட நிலையில், சீ.பி.ஐ. தாய்வை மட்டுமா உள்ளே தள்ளும்? கலாவும், மனிவியும் என்ன ஆவார்கள்?

No comments:

Post a Comment