Wednesday, June 1, 2011

சிங்கள வணிகர்களின் கைக்கூலியா கருணா?

வடக்கிலும், கிழக்கிலும் தமிழர் பகுதிகளில், சிங்களவன் குடியேற்றம் எப்படி சரி? தமிழர் பகுதி கடைகளை சிங்களவன் ஆக்கிரமிப்பு செய்வது எப்படி முறை? நல்லூர் முருகன் கோவிலில் கூட , வணிகம் செய்ய சிங்களவன் நுழையலாமா? இது தமிழரின் வாழ்வியல், பண்பாட்டு, நடைமுறைகளுக்கு ஆபத்தல்லவா? கோவிலை புனிதமாக என்னும் தமிழரின் பண்பாட்டிற்கு இழுக்கு அல்லவா? இப்படி உலகத் தமிழர் அனைவரும் குரல் எழுப்பும் வேளையில், ஒரு துரோகியின் குரல் மட்டும் வேறுபட்டு கேட்கிறது.


கொழும்பு நகரில் இதுவரை தொண்ணூறு விழுக்காடு தமிழ் முஸ்லிம்கள் வணிகம் செய்து வந்தனர். போருக்கு பிறகு சிங்களம் அந்த முஸ்லிம் தமிழர்களை விரட்டி விட்டு, சிங்கள வணிகர்களால் நிரப்பி வருகிறது. இப்போது கொழும்பு நகரில் அறுபது விழுக்காடுதான் முஸ்லிம் தமிழர்கள் வணிகம் செய்கிறார்கள். இதை எதிர்த்து தமிழர்கள் குரல் கொடுத்தால், அதற்கு விரோதமாக ஒரு தமிழர் துரோகி, குரல் எழுகிறது. அந்த குரல், "கொழும்பில் தமிழர்கள் வணிகம் செயயலாம் என்றால், வடக்கில் ஏன் சிங்களர்கள் வணிகம் செய்யக்கூடாது" என்று வினவுகிறதாம். அந்த பெரிய துரோகக் குரலுக்கு சொந்தக்காரர்தான் " கருணா " என்ற துரோகி.

ஒன்று செய்யலாம். வடக்கு கிழக்கிலிருந்து சிங்களர்களை கருணாவே விரட்டிவிடு. கொழும்பிலிருந்தும் தமிழர்களை நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம். சரிதானே. உன் இனத்துடன் வாழை முடியாது என்பதற்காகத்தானே விடுதலை கேட்கிறோம்.

No comments:

Post a Comment