நாலாவது வன்னிப்போரை நடத்துவதிலும், தமிழினத்தை அழிப்பதிலும் அவர்களுக்குள் இணைப்பு இருந்தது. ஆனால் அதன்பிறகு, அவர்கள் தங்களுக்குள்ளே "பனிப்போர்" நடத்தத் தொடங்கினர்.அதுவே " பழிப்போர் " ஆக மாறியது. ஒருவரை ஒருவர் ஸ்பெக்ட்ரம் ஊழலில் தாக்கிக் கொண்டனர். குடும்பக் கழகத்திற்குள்ளே இந்த" கூத்து " நடந்தது. குடுமத் தலைவர் அவ்வப்போது, "பலியாடுகளுக்கு" வக்காலத்து வாங்கி வந்தார்." பலியாடுகள் " இரண்டும், " பட்டி" யில் அடைக்கப்பட்டன. " ஆடுகளைப் பார்க்க " ஊடக பெருச்சாளிகள், தங்கள் குடும்ப " ஓநாய்களை" அனுப்பி வைத்தன. ஓநாய்களும் பறந்து சென்று அங்கே " பட்டியிலிருக்கும் " ஆடுகளை, அதிலும் பெண் ஆட்டை பார்த்து, பார்த்து கண்ணீர் விட்டன.
மனதிற்குள் " பலியாடுகள் மூன்றும்" பழிவாங்கிய பெருச்சாளிகளை முறைத்துப் பார்த்துக் கொண்டே இருந்தன. "சமயம் உங்களுக்கும் வரத்த்தானே செய்யும்" என்று பலியாடுகளும், தாய் ஆடும் கருவிக் கொண்டன. "பாரம்பரிய முதலாளி" விடுவதாய் இல்லை. எழு ஆண்டுகளுக்கு முன்னால் " இளைய பெருச்சாளி" இலாக்க வாங்கியபோது, போட்டியில் தோற்றத்தை மறந்து விடவில்லை அந்த முதலாளி. அதை அந்த " குடும்பத் தலைவரிடம்" போட்டுக் கொடுத்துத் தானே இலாகாவையே பறிக்க முடிந்தது. இப்போது தனக்கு பொருள் குவித்தவர்கள் " பலி ஆடுகளாக" " பட்டி" யில் அடைக்கப் பட்டதற்கு " பழி வங்க" அந்த "பாரம்பரிய முதலாளி" காய் நகர்த்த மாட்டாரா?
வசமாக மாட்டிக் கொண்டனர் " பெருச்சாளி சகோதரர்கள்". எல்லா ஊடகங்களிலும் "எச்சரிக்கை மணி" அடித்து விட்டார்கள். அடுத்து " பெருச்சாளி சகோக்களுக்கும்" தலைநகரிலேயே " பட்டி" தயாராகி விடும். இது மேலிடக் கட்டளையாம். இவர்கள்தானே " நாலு ஆண்டுகளுக்கு முன்பு தங்கள் " அச்சிலும், காட்சியிலும்" அமப்லப்படுத்தியவர்கள். அதன்மூலம் " போட்டியாளர்களை " முதல் பலி" கொடுக்க ஏற்பாடு செய்தவர்கள். இப்போது, " ஆட்டை கடித்து, மாட்டை அக்டித்து, மனிதனை" கடிக்க அந்த மேலிடம் வருகிறதே. " வினை விதைத்தவன் வினை அறுப்பான்" " திணை விதைத்தவன் திணை அறுப்பான்" பட்டினத்தார் சொன்னார்- " ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" இதுதான் இப்போது " அறிவாலயத்தின் அகமகிழ்வு"
Subscribe to:
Post Comments (Atom)
2 comments:
read your post..spelling mistakes..
apart from that.. its nice ..
நல்ல பதிவு.
Post a Comment