அணில் அன்றைய காலத்தில் ராமர் பெருமானுகாக, இந்திய--இலங்கை பாலம் போட, மணல் துகள்களை முதுகில் எடுத்துச் சென்றதாம். இது ராமாயணக் கதை. இந்தியாவை ஆளும் வட இந்தியர்களுக்கும், தமிழ் ஆன்மீகப் பெரு மக்களுக்கும், நம்பிக்கை புராணம். அதனால் " சிங்களம்" அத்தகைய கதை தனது நாளுக்கு பயன்படும் என்றால் பயன்படுத்தத்தானே செய்யும்? ரணில் விக்கிரமசிங்கே முன்னாள் இலங்கலையின் பிரதமர். இந்நாள் இலங்கலையின் எதிர்க் கட்சித் தலைவர். அவர் "இனவெரிப்போரை நடத்திய" மஹிந்த ராஜபக்சேவை எதிர்த்து டேஹ்ர்தலில் களம் கண்டவர். ஆனாலும் மகிந்தாவுடன் எந்த ஒரு வேறுபாடும் இல்லாமல் " சிங்களம்" வெல்ல வேண்டும் என்ற மனப்பான்மை கொண்டவர்.
அந்த ரணில் இந்தியா வந்துள்ளார். டில்லி செல்வடஹ்ர்கு முன்பு செனைஒயில் இரவு வந்து இறங்குகிறார். விமான நிலையத்திலேயே நேர்காணல் கொடுக்கிறார். அதற்கான ஆவசியம் யாருக்கும் தெரியாது. அதில் " ராஜபக்சேவை போர் குற்றவாலி என கூண்டிலேற்ற முடியாது" என்று " கொளுத்திப் போட்டுவிட்டு" போய்விடுகிறார் அது பற்றி எரியும் என்பது அவரது எண்ணம். " இலங்கை தமிழர்களது மறு குடியமற்ப்புக்கு, இந்தியா உதவப் போகிறது" என்ற மாயையும் மீண்டும் அரங்கேற்றினார். முதல்வர் ஜெயலலிதாவை சந்திப்பேன் என்றார். டில்லி செல்கிறேன் என்றார். ரணிளது நடவடிக்கைகள், இலங்கையில் அவரது நடவடிக்கைகளைக் காட்டிலும் மோசமா ஒன்றாக தெரிகிறது. இலங்கையில் அவர் கட்டாயமாக மகிந்தா அரசாங்கத்திற்கு எதிராக பேசவேண்டும். அப்போதுதான் எதிர்க் கட்சி என்ற அந்தஸ்து அங்கே கிடைக்கும். தவிர அங்கே ராஜபக்சே அணிலது நண்பர் பொன்சேகாவை கைது செய்து சிறையில் வைத்துள்ளார்.
அதனால் ரணில் இந்திய அரசு பேசச் சொன்னதை எல்லாம் இலங்கையில் பேச முடியுமோ என்னவோ, இந்தியாவில் பேசலாம் என்பதால்தானோ என்னவோ, சென்னை விமான நிலையத்தில் இறங்கியவுடன் பேசியிருக்கிறார். இன்று அதிகாலை டில்லி செல்பவர் என் இரவிலேயே விமான நிலையத்தில் ஊடகவியலாலட்களிடம் பேச வேண்டும்? அதுவும் தமிழ் மக்கள் "ராஜபக்சேவிற்கு போர் குற்ற விசாரணை நடக்கப்போகிறது" என்று நம்பிக்க் கொடிருக்கும் வேளையில் பேச வேண்டும்? அந்தப் பேச்சில் என் " தமிழ்மக்களின் அந்த நம்பிக்கையை உடைக்கும் ரீதியில் பேச வேண்டும்? ஏதோ சட்ட விளக்கத்தை அளிப்பதுபோல, " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றத்தில்" ராஜபக்சேவை கூடிலேற்ற முடியாது ஏறு என் சொல்லவேண்டும்? அதுவும் ஒரு " அனைத்து நாட்டு விதியை " சுட்டிக் காட்டி என் சொல்லவேண்டும்?
அனைத்து நாட்டு நீதிமனரத்திர்கான" அனைத்து நாட்டு ஒப்பந்தத்தில் இலங்கை கைஎழுத்துய் போடவில்லை என்பது, இப்போது சொல்வதால், ராஜபக்சேவை காப்பாற்றுகிறோம் என்பது ரணிலுக்கு தெரியாதா? அப்படியிருந்தும் தனது எதிரி ராஜபக்சேவை காப்பாற்ற என் அப்படி பேச வேண்டும்? இவாறு ராஜபக்சேவை காப்பாற்றும் நோக்கம் இந்திய அரசுக்கு மட்டுமே இருக்கிறது. அதனால் இந்திய அரசுதான் ரணிலுக்கு இந்த வசனத்தை சொல்லிக் கொடுத்துள்ளது என்பது தெளிவாக தெரிகிறது. அதன்மூலம் இந்திய அரசு, தமிழகச் சூழலில் எழும்பியிருக்கும் ஒரு நம்பிக்கையான " ராஜபக்சே கூடிலேற்றப் படுவார்? எண்பதை சிதைப்பதற்கு உதவும் என்று மத்திய அரசு நினைக்கலாம். அதன்மூலம் அத்தகைய முழக்கத்தை எழுப்பிய செல்வி.ஜெயலலிதாவை திசை திருப்பி அவர் கேட்ட, " அனைத்து நாட்டு நீதிவிசாரணை மூலம் மத்திய அரசு தன்னை நிரூபிக்க வேண்டும்" என்ற முழக்கத்திளிருந்து தமிழக முதல்வரை திசை திருப்பிவிடலாம்.
மேற்கண்ட முயற்சிகள் அணிலை அடையாளம் காட்டிவிட்டன. டில்லிக்கு அணில் எப்போதுமே விசுவாசமான ஆள் என்பதில் சந்தேகமில்லை. டில்லியில் இரண்டு நாள் ஆலோசனை நடத்தி, அதன் அடிப்படையில் செல்வி.ஜெயலலிதாவிடம் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்று கற்றுக் கொடுக்க அழைக்கப் பட்டுள்ளார் என்று தெரிகிறது. அணில் கூறிய, " அனைத்து நாச்ட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தந்த்தில் இலக்கை கையெழுத்துப் போடவில்லைதான். கையழுத்துப் போடாத ஒரு நாடு தான் அந்த குற்றங்களை ஏற்றுக் கொண்டு, தானகவே ஒரு நீதிவிசாரனைக்கும் வரலாம். இலங்கை அப்படி வராது என்பது அறிந்த செய்தி. அலல்து ஒரு நாடு தனது நாட்டிற்குள்ளேயே அந்த குற்றங்களுக்கான விசாரனையி நடத்துகிறேன் என்று கூறலாம். அதை இலங்கை கூறிவிட்டது. அதை உலக நாடுகள் நம்புவதை இல்லை.
ஐ.சீ.சீ. என்ற " அனைத்து நாட்டு குற்றவியல் நீதிமன்றம்" ஒப்பந்தத்தில் இலங்கை அரசு கையெழுத்துப் போடவில்லை. ஆனால் " ஐ.நா. சித்திரவதைக்கு எதிரான ஒப்பந்தத்தை" அது கையெழுத்துப் போட்டுள்ளது. அதை " ஐ.சீ.எ. சீ." என்ற அந்த ஒப்பந்தத்தில் கையழுத்துப் போட்ட இலங்கை அதிலேயே குற்றம் சாட்டப் படலாம். அதுபோல, ஐ.சீ.எக.சோ.க.ரை. என்ற, " அனைத்து நாட்டு பொருளாதார, சமூக, பண்பாட்டு உரிமைகள்" என்ற ஒப்பந்த்தத்தில் இலங்கை கையெழுத்திட்டுள்ளது. அதைவைத்து, " இனச் சுத்திகரிப்பு" செய்யும் அரசை குற்றம் சாட்டலாம். பவுத்த பண்பாடுகளை, சைவ பண்பாடுகளின் மீது திணிப்பதை குற்றம் சாட்டலாம்.ஆகவே ஒன்றில் தப்பினாலும், இன்னொன்றில் பிடிபடலாம். தவிர, ஐ.சீ. சீ.பொ ரை" என்ற " அனைத்து நாட்டு குடியுரிமை மற்றும் அரசியல் உரிமைகள்" என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டுள்ளது. இந்த ஒப்பந்தம், " சுய நிர்ணய உரிமை பற்றி" பேசுகிறது. அதுவே " தமழர் உரிமைகளை மீட்டெடுக்க உதவ" முடியும்.
அதேசமயம் தமிழக முதல்வர் ஜெயலலிதா " இன அழிப்பில் ஈடுபட்டதாக மத்திய அரசு மீது ஒரு சந்தேகம் தமிழர்கள் மத்தியில் நிலவுகிறது. அதை வலுப்பெறச் செய்கிற பாணியில் மத்திய அரசு செயல்படக் கூடாது " என்று கூறியுள்ளார். " ராஜபக்சேவை அனைத்து நாட்டு விசாரணைக்கு கூண்டிலேற்ற மத்திய அரசு முயலவேண்டும்" என்று கூறியுள்ளார். அதற்காக " பொருளாதார தடைகளையும் கூட இலங்கை மீது விதிக்கலாம்" என்றும் கூறியுள்ளார். இவை எல்லாமே, மேற்கண்ட இலங்கை கைஎழுதிட்டுள்ள , ஒப்பந்தங்களின் மூலமாக செய்யமுடியும். ஆகவே " குற்றம் இழைத்த இந்தியா அரசே, நீ உன் முகத்தை மாற்றி அமைத்துக் கொள்" என்று ஜெயலலிதா டில்லியை கேட்பதுபோல உள்ளது. ஆகவே அவர் இந்த ரணில் மூலம் டில்லி செய்ய நினைக்கும் " அணில் வேலையால்? பதிக்கப் படுவாரா என்று தெரிய வில்லை. இந்தய ராசும், இலங்கை அரசும் செய்யும் " தமிழர் விரோத சாதிப் பாலம்" கட்ட ரணில் ஒரு அணில் போல அனுப்பப் பட்டுள்ளாரா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment