Saturday, May 28, 2011

முள்ளிவாய்க்கால் ஆவிகள் மு.க.வை சுற்றுமா? அறிவாலயம் அலறல்.

முள்ளிவாய்க்கால் இன அழிப்பு படுகொலைகளை நடத்தி, இரண்டாண்டுகள் கழிந்து விட்டன. நிராயுத பாணியான தமிழர்களை, " போராளிகள்" என்று ராஜபக்சே அவ்ர்நிக்கும் போதே, அவர்களை படுகொலை செய்வதற்காகத்தான் அப்படி சொல்கிறான் என்று தமிழ்நாட்டில் இருந்த பி.யு.சீ.எல். என்ற மக்கள் சிவில் உரிமைக் கழகம் கூறியது. அதேபோல உடனடியாக மனித உரிமை கண்காணிப்பு என்ற ஆசியா அளவிலான ஆர்வலர்கள் கூறினார்கள். இவையெல்லாம் தமிழ்நாடு அரசின் செவிகளுக்கு கேட்காமல் இல்லை. அனைத்தையும் கேள்விப்பட்டும், டில்லிக்காரர்களிடம் அதுபற்றி கேட்கவில்லை. மாறாக எங்கள் கழகத்திற்கு எவ்வளவு அமைச்சரவை தருவீர்கள்? எந்த, எந்த அமைச்சரவை தருவீர்கள்? என்று மட்டுமே கேட்டுக் கொண்டிருந்தோம் என்று இப்போது அறிவாலயம் எண்ணிப் பார்க்கிறது.

மனித உரிமையாளர்கள் கூறியபடியே ராஜபக்சே அப்பாவி தமிழர்களை, நிராயுத பாணியான முதியவர்களை, குழந்தைகளை, பெண்டிரை, வரிசையாக படுகொலை செய்தான். உலக அரங்கில் போர்களில் தடை செய்யப்பட்டுள்ள, " கொத்துக் குண்டுகளை" தமழ் மக்கள் மீது எறிந்தான். பயன்படுத்தவே கூடாத " ரசாயன குண்டுகளை" தமிழரை அழிக்க மட்டும் பயன்படுத்தினான். இந்த சிங்க கொடியவனின் கர்ண கொடூரமான " இன அழிப்பு" போரை கண்டு கொள்ளாமல், காங்கிரஸ் அரசிடம் வாதாடி, நமது " குடும்பத்திற்கு" எந்த, எந்த அமைச்சரவையை ஒதுக்குவார்கள் என்றே எனிஒம் என்று இப்போது அந்த குடும்பத் தலிவன் எண்ணிப் பார்க்கிறார்.

" கொள்ளை அடிப்பதற்கு" தகுந்த அமைச்சரவையை பெற்றுவிடத் துடித்த அப்பனும், மகளும், இப்போது அதுபற்றி எண்ணிப் பார்க்க நேரம் கிடைத்துள்ளது. இரண்டாண்டுகளுக்குல்லேயே அந்த வாய்ப்பு அவர்களுக்கு கிடைத்து விட்டது. என் என்றால் "ஊருக்குதான் உபதேசம் உனக்கில்லையடா" என்ற மொழிப்படி, பகுத்தறிவு பேசுவதும், பெரியார் பேசுவதும் தொண்டர்களை, தமிழர்களை ஏமாற்றத்தானே தவிற, தான் பின்பற்ற அல்ல, தனது குடும்பம் பின்பற்ற அல்ல என்று தெளிவாக அந்த குடும்பத் தலைவன் இருந்தார். அதனால்தான் இன்று, அதே " முள்ளிவாய்க்கால் படுகொலை நாளான" மே 18 கடந்து இரண்டே நாளில் இருபதாம் நாள், தனது மகள் " கனிமொழி" க்கு கைது நடவடிக்கை வந்தவுடன் ஆடிப்போய் விட்டார் அந்த "பகுத்தறிவு பகலவன்" இது " ஆவிகளின் ஆட்டம்தான்" என்று அறிவாலத்தார் அலற வழி வகுத்தது.


அதே நாளில் , இன்னொரு நிகழ்வு. ஜாபர் செட் என்ற ஒரு பெரும் அதிகாரி. அந்த மனிதர் இந்த உளவுத் துறை அதிகாரி, தமிழ்நாட்டில் " முட்டை ரவி, மணல் மேடு சங்கர், குற நடராஜ்" போன்ற பல கைதிகளை " மோதல் சாவுகள் " என்ற பெயரில் படுகொலைகள செய்தவர். அதே " ரத்த வெறியோடு" ராஜபக்சே செயல்படும்போது, இவர் தனது கூட்டாளியை அங்கே இனம் கண்டுகொண்டார். முள்ளிவாய்க்கால் ப்டுகொளைகளை அரங்கேற்றிய இந்திய அரசின் ஆலோசகர்களான " எம்.கே.நாராயணனும், சிவசங்கர் மேநோனும்" இந்த ரத்த வெறியில் நேரடி பங்குதாரர்கள் என்பதால், அவர்களது கைப்பாவையாக இந்த ஜாபர் செட் மாறினார். இலங்கையில் நடந்த படுகொலைகளுக்கு தமிழ்நாட்டில் எதிரொலி வரக் கூடாதே என்று சிரமப்பட்டு, அதை அடக்கி ராஜபக்சே-கலைஞர்-சோனியா கும்பலிடம் நற்பெயர் பெற்றுக் கொண்டவர் இந்த ஜாபர் செட்.


ஜாபரின் கனவுகளை பொய்யாக்க " முத்துக் குமார்" உயிராயுதம் ஏந்தினார். அதனால் ஏற்படப்போகும் கிளர்ச்சியையும் அடக்குவதில் ஜாபர் வென்றார். அதற்காக இலங்கையின் "ஹம்சாவிடம்" பெறுவதை பெற்றுக் கொண்டாலும், தமிழ்நாட்டில் அதன் பலன் களை எதிர்பார்த்து நின்றவர்.அந்த "கொடிய ஜபருக்கும்" புதிய ஆட்சியல் கிடைத்த " மாற்றல் உத்தரவு" அதே மே 18 இல் தான் அரங்கேறியது.அதனால் " மஞ்சள் துண்டு வகையறாக்களுக்கு" கிலி பிடிக்கும் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. இப்போது வேண்டுமானால், " ஆண்டவனே, உனக்கு கண்ணே இல்லையா" என்று மஞ்சள் துண்டுகளை தூற எறிந்திருக்கலாம். ஆனால் என் இந்த குறிப்பிட்டா நாள் " மகளுக்கும், ஜபருக்கும்" ஒரே மாதிரி திருப்பி அடிக்கிறது என்று அந்த "குடும்பம்" கலங்காமல் இல்லை. ஏற்கச்னவே குசும்பமே பகுத்தறிவு பேசுபவரை புறந்தள்ளி, கோவிலுக்கு சென்று வந்த கதைகளும், திருவாரூர் கோவில்களுக்கு விசேடங்களை செய்து வந்த கதைகளும் ஏராளமாக இருக்க இப்போது மட்டும் இந்த குறிப்பிட்ட நாள் நின்று அடிக்கிறது என்று என்ன மாட்டார்களா என்ன?
.

இதை " அறிவாலயத்தின்" மொழிகளில் சொல்;லப் போனால், " முள்ளிவாய்க்கால் ஆவிகள்" நின்று அடிக்கிறது. துரத்தி, துரத்தி அடிக்கிறது என்றுதான் எண்ணுகிரார்கலாம். சரியான பகுத்தறிவு குடும்பம் அய்யா.

No comments:

Post a Comment