கனிமொழிக்கு " பிணை" விடுதலை வேண்டும் என்பது இன்று அவரது வழக்கறிஞரும், அதற்கான வியாக்கியானம் செய்யும் களிஞரும் எடுத்து வைக்கும் வாதங்களை சற்று கவனியுங்கள்." கனிமொழி ஒரு பெண்"" கனிமொழி படித்தவர்" " கனிமொழியின் மகன் சிறிய வயது கொண்ட ஆதித்யா." "மகனை கவனிக்க தாய் வெளியே இருக்க வேண்டும்" " கனிமொழி பொது வாழ்க்கையில் பல நன்மைகளை மக்களுக்கு செய்துவருபவர்." இத்தனை காரணங்களை கண்கலங்கி பேசுகிறார் கலைஞர்.
இதே கலைஞர் தமிழக முதல்வராக இருக்கும் போது, " நளினி விடுதலை" பற்றி மக்கள் மத்தியல் ஆர்வலர்கள் கூச்சல் போட்டார்கள். கலைஞர் அதுபற்றி தனக்கு சம்பந்தம் இல்லததுபோல நடந்துகொண்டார். நளினி தன்னை விடுவிக்கும்படியும், தான் சிறை புகுந்து இருபது ஆண்டுகள் ஆகின்றன என்பதையும் சொல்லி வேண்டுகிறார். அவரது " மரண தண்டனை"கூட சோனியா மனது வைத்து எழுத்டியதால் " ஆயுள் தணடனையாக" குறைக்கப்பட்டுள்ளது. இருபது ஆண்டு ஆயுள் தண்டனை கைத்டியகா இருக்கும் நளினியை விடுவிக்க வேண்டியது மாநில அரசு. நன்னடத்தை காரணமாக சிறைத்துரையின் அப்பிப்பிராயத்தை பெற்று, மாநில முதல்வர் அவரை விடுதலை செய்யலாம். ஆனால் அவரை கலைஞர் விடுதலை செய்யவில்லை.
" நளினி ஒரு பெண்", " நளினி சிறையிலேயே மேலும் படித்தவர்" " நளினி தனது தாயின் மூலம் ஒரு செவிலியர் வாழ்கை எவ்வளவு சமூக சிந்தனைகளை பெற்றிருப்பார்? நளினிக்கு ஒரு மகள் இருக்கிறார். ஆதிரை அவரது பெயர். அப்பாவும், அம்மாவும் அவருக்கு வெளியே இல்லை. சிறையில் இருவரும் இருக்கிறார்கள். நளினியின் நிலைமை கனிமொழி நிலைமையை விட கொடியது. கனிமொழிக்காவது மகன்தான். நளினிக்கு மகள். இந்த நிலையில் நளினியின் நிலைமை, கனிமொழியின் நிலையை விட கொடியது. ம்தல்வராய் இருந்த கலைஞர் கைக்கு அந்த ஆவணம் வந்த பொது, அவர் நளினிக்கு விடுதலை கொடுக்க முடியாது என்று கூறிவிட்டார். நளினி மூன்றேழுத்துதானே, கனிமொழி நாலெழுத்து என்று நினைக்கிறாரோ..
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment