கிராமத்து பழமொழிக்கேற்ப நமது முன்னாள் முதல்வர் நடந்து கொண்டுள்ளார். கலைஞர் கருணாநிதியின் " இலவசங்களில்" பிரபலமானது, " இலவச வண்ண தொலைக் காட்சி".அதை ஈலோருக்கும் அதாவது முதலில் அறிவித்ததுபோல, வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு எண்பதை மாற்றி துணை முதல்வர் ஸ்டாலின் மூலம் { என் என்றால் அவர்தான் அன்றைய உள்ளாட்சித துறை அமைச்சர்} எல்லா "ரேஷன் அட்டைதாரர்களுக்கும்" என்று அறிவித்து வழங்கினார்கள். ஏற்கனவே டி.வி. வைத்திருப்பவர்கள் பலரும் பெற்று கொண்டனர். கொடுபடாமல் இருந்த அய்யோப்பாவங்களும் உண்டு. அவர்களது குடும்ப அட்டைகளை நகல் எடுத்துக் ஒண்டு, வண்ண தொலைக் காட்சிகளை சுருட்டிய திமுக மாமன்ற, நகராட்சி, பேரூராட்சி, ஒன்றிய, ஊராட்சி உறுப்பினர்களும் உண்டு. ஆனாலும் அதிகம் பேருக்கு போய் சேர்ந்தது.
அந்த காட்சி ஊடகங்களில் தங்கள் ஊடகத்தின் " மானாட, மயிலாட" பார்ப்பார்கள் என்று தலைவர் நினைத்ததில் தவறில்லை. ஆனாலும் கையில் திருப்பு கருவியை வைத்துக் கொண்டு ஒவ்வொரு தமிழனும், மற்ற காட்சி ஊடகங்களையும் பார்க்க தொடங்கி விட்டார்கள். அதுவும் குடும்பத்திற்குள்ளேயே இருந்து கொண்டு " போட்டி டி.வி. நடத்தும் " சகோதரர்கள் தாங்கள் எதிர்காலத்திலும் " நடுநிலை" டி.வி. என்று பெயர் வாங்குவதற்காக " ஜெயலலிதா, வைகோ, விஜயகாந்த்" என்று எதிர்க்கட்சி காரர்களின் நேர்காணல்களையும் வெளியிடத்தொடங்கினார்கள். அதன் விளைவாக மக்களுக்கு எல்லா செய்திகளும் போய் சேர்ந்தது. அதிலும் " ஸ்பெக்ட்ரம் ஊழல், குடும்ப அரசியல், ஈழத் தமிழின அழிப்பு, இன அழிப்புக்கு கலைஞர் கொடுத்த ஆதரவு அல்லது மௌனமான ஆதரவு, விலைவாசி உயர்வு, மின்வெட்டு, இப்படி எல்லாமே அன்றாடம் மக்களிடம் போய் சேர்ந்தது.
தீர்ப்பு எழுதும் போது, இதுவரை ஐந்து ஆண்டுகளாக அவர்கள் கேள்விப்பட்டதை, கண்ணால் கண்டதை, அதற்கான காரணத்தை எப்படி மக்கள் மறந்து போக முடியும். எல்லாமே அந்த இலவச வண்ண தொலைக் காட்சிகள் மூலம்தானே போய் சேர்ந்தது? இதைத்தான் கிராமத்தில் " சொந்தக் காசில் சூனியம் வைத்துக் கொண்டவன்" என்று குறிப்பிடுகிறார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment