Thursday, May 26, 2011

அருந்ததி ராய், இந்தியாவின் கருத்துரிமை அடையாளம்.

மீண்டும் எதிர்க்கப்பட்டார் அருந்ததி ராய். ஒருவாரம் முன்னாள் டில்லியில். மே-20 ஆம் நாள்." இந்தியா ஹபிடட் மையம்" - புது டில்லியில் ஒரு புத்தக வெளியீடு. " உடைந்த குடியரசு" என்பது அந்த புத்தகத்தின் பெயர். ஏற்கனவே உடைந்த ஒரு குடியரசை எப்படி வெளியே சொல்லலாம் என்று அந்த கிளர்சிகாறாக்கள் கொபபட்டிருகலாம். அதைவிட எழுதியவர் " அருந்ததி ராய் " என்பதாலேயே அவர்கள் கோபப்பட்டிருக்கலாம் " அருந்ததி ராய்" பெயர் அந்த அளவுக்கு, கருத்துரிமை மறுப்போருக்கு, பிற்போக்காளர்களுக்கு, இந்துத்துவா சக்திகளுக்கு, .மக்கள் விரோதிகளுக்கு, " அச்சத்தை" சமீப காலமாக ஏற்படுத்தி வருகிறது.


ஏற்கனவே " காஷ்மீர்" பற்றி அவர் பேசியதற்கே அந்த " சுதந்திரத்தின் எதிரிகளுக்கு" தாங்க முடியவில்லை. கலாட்ட செய்தார்கள். இப்போதெல்லாம் இந்தியாவில் " கருத்துகளுக்கே" போப்படுகின்ர ஒரு ஆளும் கும்பலை சந்திக்கிறோம.அதனால் தான் அவர்களது " முதல் எதிரியாக" அருந்ததி ராய் தோன்றுகிறார். " எழுத்தும், பேச்சும் " ஒரு நாட்டில் ஆள்வோரால் தாங்க முடியவில்லை என்றால், அந்த நாட்டின் இழி நிலை அங்கே படம் பிடித்து காட்டப்படுகிறது. ஆயுதம் தாங்கிய போரை அல்லது போராட்டத்தை ஆள்வோர்கள் எப்போதுமே அதைவிட பெரிய, பெரிய ஆயுதங்களை வைத்து அடக்கிவிடலாம் என்று எண்ணுகிறார்கள். அவர்கள் அதாவது பிற்போக்காளர்கள் பயப்படுவது, " மக்கள் சக்திக்கு" தான். அந்த மக்கள் சக்தியை புரிய வைப்பது, அந்த மக்களுக்கு விழிப்புணர்வு கொடுப்பது, அந்த மக்களை தட்டி எழுப்புவது, அந்த மக்களை அணிதிரட்டுவது, அனைத்துமே அந்த மக்களை எட்டக்கூடிய " செறிவான கருத்துக்களால்தான்" என்பது ஆள்வோருக்கு எப்போதுமே புரிகிறது. அதனால்ற்ற்ஹான் அவர்களது குறி" அருந்ததி ராய்" எழுத்துக்கள் மீதும், பேச்ச்சுக்கள் மீதும் போய் விழுகிறது.


அப்படி என்ன இந்த புதிய புத்தகமான, " உடைக்கப்பட்ட குடியரசு" என்பதில் எழுதியுள்ளார்? இது இந்தியாவின் இதயப் பகுதியில் " மாவோவாதிகள் செயல்பாடும், அரசின் நிலைமையும்" பற்றியது. அதில் அருந்ததி உண்மையை சொல்கிறார். எப்படி பிற்போக்குவாதிகள் உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்வார்கள்? " முதலில் அவர்கள் காவல்துறையை பயன்படுத்தினார்கள். தோல்வியை தழுவினார்கள்.அடுத்து அவர்கள் சல்வா சுடும் என்ற கூலிப் படையை பயன்படுத்தினார்கள். அதிலும் வெற்றி பெற வில்லை. அதையும் அடுத்து அவர்கள் துணை ராணுவத்தை பயன்படுத்தினார்கள். அதிலும் மாவோவாதிகளை அவர்களால் வெள்ள முடிய வில்லை. அடுத்து இப்போது ராணுவத்தை பயன்படுத்த தொடங்கி இருக்கிறார்கள். ஆனால் அவர்களது ராணுவம் அதற்கு யோசிக்கிறது. " சிறப்பு ஆயுத படை அதிகாரம்" என்ற கண்டால் சுட, கண்டவரை சுட அதிகாரம் வேண்டும் என்று அது கேட்கிறது".


ஏற்கனவே வட கிழக்கு மாநிலங்களில் பயன்படுத்துமந்த கொடூர சட்டத்தை பயன்படுத்த அவர்கள் இதயப் பகுதியிலும் தயாராகிறார்கள். முதலில் நாம் சொல்லிவந்த ," சுரங்கங்களையும், புரிந்துணர்வு ஒப்பந்தங்களையும் பாதுகாக்க, அரசாங்கம் "பச்சை வேட்டையை" நடத்துகிறது" எண்பதை பலரும் புரிந்து கொள்ளவில்லை. இப்போது புரிந்து கொள்கிறார்கள். இவ்வாறு அருந்ததி ராய் எழுதியிருப்பதால் அவர்கள் அந்த புத்தக வெளியீட்டிலேயே கலாட்ட செய்தார்கள். அவர்கள் " பரத மாதா கி ஜெய்" என்று முழக்கமிட்டார்கள். இப்போதுதான் நமக்கு புரிய வேண்டும். அந்த பாரத மாதா அவர்களது நலன் காக்கும் தாய் என்பது. அதாவது இந்திய " பழங்குடி மக்களுக்கு" எதிரான ஒரு தாய்தான் பாரத மாதா என்பது இப்போது தெளிவாக புரிகிறது.

No comments:

Post a Comment