Thursday, May 26, 2011

நீரா ராடியா, பர்காதத் ஆகியோர் கைதாக மாட்டார்களா?

கனிமொழி கைதிற்கு பிறகு அரங்கேறும் காட்சிகள், வேடிக்கையை ஏற்படுத்தி வருகின்றன. கனிமொழி கண்ணீரை துடைக்க, திடீரென அவர்கள் வீட்டில் உள்ள பல பெண்களும் டில்லி செல்ல, அவர்கள் கனிமொழியை நீதிமன்றத்தில் சந்தித்து "குசலம்" விசாரிக்க, " இது என்னடா புதிய சோதனை" என்று கனிமொழியின் தாயார் ராஜாத்தி அம்மையார் அதிர்ச்சியடைந்து விலகி நிற்க, அந்த காட்சிகள் " ஆறுதல்" தேர்வைப்படும் கனிமொழிக்கு வேண்டுமானால் இதமாக இருக்கலாம். ஆனால் என்ன " சதியை" மனதில் வைத்துக் கொண்டு இந்த " வில்லிகள்" வந்தார்கள் என்று ராஜாத்தி எண்ணுவது தவிர்க்க முடியாதது.


கனிமொழிக்கு " ஜென்ம விரோதிகள்" என்று அறியப்படும் அந்த " சன் டிவி. குழுமம்" தனது தொடர் நாடகங்களில், ஒவ்வொரு வீட்டிலும் " பெண் வில்லிகள்" இருப்பதாக பல ஆண்டுகளாக கதைகளில் சொல்லி வருகிறது. அந்த " குழுமமே" இப்போது அப்படி புதிய "வில்லி" பாத்திரத்தில் நடிக்க தொடங்கி உள்ளதா என்று ராஜாத்தி சந்த்தேகிக்கலாம். என் என்றால் இந்த " தாவும், கலாவும்" தங்கள் "வணிக போட்டிக்காக" கலிஞர் டி.வி.யை முடக்கிப் போட, "சரத்குமார் ரெட்டி" யை வீட்டில் போய் அடிப்பதும், இப்போது சிறையில் தள்ளுவதும் செய்தார்கள என்பது யாருக்கு தெரியாது? இப்போது அவர்களது " தாயார் மல்லிகா" டில்லி சேறு கனிமொழியை பார்ப்பது நம்பக் கூடியதா? " செல்வி" தான் தனது தனத்தை களிஞரிடம் இந்த இரண்டாவது மகளுக்கு எதிராக இதுவரை வாதாடி வருபவர். இப்போது அவர் சென்று பார்ப்பது நம்பக் கூடியதா?


" அந்த சின்னப்பொன்னு இந்த குடும்ப மானத்திற்காக கம்பி என்னுது. அது வாயை திறந்தாள் நீங்க எல்லோரும் உள்ளே செல்ல வேண்டும். நீங்க எல்லா பெண்களும் இங்க நிம்மதியா இருக்கீங்க" என்று தாத்தா கொடுத்த அடியில் இப்படி போய் பார்கிறார்களா? எது எப்படி இருந்தாலும், உண்மையில் இந்த ஸ்பெக்ட்ரம் ஊழலுக்கு காரணமான அமைச்சர் பதிவியை ஆ.ராஜாவிற்கு வாங்கித்தர வாக்குறுதி கொடுத்த, " நீரா ராடியாவும்,, பர்கா தத்தும்" குற்றப் பத்திரிகையிலும் வரவில்லை. கைது செய்யவும் படவில்லை.

ஒருவர் "டாட்டா" வின் பிரதிநிதி. இன்னொருவர் "சோனியாவின்" பிரதிநிதி. ஓஹோ. சீ.பி.ஐ. என்றால் இதுதானா? இப்படித்தான் உலகம் கேட்கிறது.

No comments:

Post a Comment