கே/பி. என்னமோ ராஜபக்சே கையில் சிக்கிதிலிருந்து , சிங்கள இனவெறி அரசியலுக்காக பயன்படுத்தப் படுகிறார் என்றால், எங்கேடா எழவு விழும் என்று காத்திருக்கும் " கழுகுகளாய்" இங்கே சில " அநாமதேயங்கள்" அலைகின்றன. ஏற்கனவே கே.பி. மலேசியாவில் கைது செய்யப்பட்டதற்கே இந்திய வெளிவிவகாரத் துறையின் உளவுத் துறையான " ரா" தான் காரணம் என்ற உண்மைகள் இருக்கின்றன. "ராஜீவ் கலையில்" கே.பி. தான் முக்கிய குற்றவாளி என்று இதே சக்திகள் ஏற்கனவே சொல்லி, சொல்லி வந்தன. அதற்கு " கே.பி.தான் புலிகளின் அனைத்து நாட்டு வேலைகளை கவனித்தார்" என்றும், " புலிகளின் அணித்துநாட்டு உறவில் ஆயுதங்களை வாங்கி வந்தவர்" என்றும் விளக்கமும் கொடுத்து வந்தனர். அதை அவ்வப்போது, " ரா" அமைப்பு கசிய விட்டு வந்தது.இப்போது அந்த " வழக்கை" திசை திருப்பி விடலாம் என்று ஆலோசனை கூறி இப்படி பேச வைக்கிறார்களா என்று தெரியவில்லை.
டில்லிக்காரர்களுக்கு இப்போது இருக்கும் கவலை எல்லாம் " எப்படி ராஜபக்சே அரசை காப்பற்ற்ய்வது? " என்பதுதான். அதனால் அவர்கள் " தமிழ்நாட்டிலிருந்து" அழுத்தம் வரக்கொடாது என்று எண்ணுகிரரகள். அதற்கு தமிழக முதல்வர் " ஜெ" ஐ எப்படியாவது " ஈழத் தமிழர் எதிர் நிலைக்கு" கொண்டு போக திட்டமிடுகிறார்கள். அதற்காக கே.பி.ஐ பேச வைத்திருக்கிறார்கள். ஆனால் இந்த கதை பற்றி, அந்த சீ.என்.என்--ஐ.பி.என். சிலரை பேட்டி காண்கிறது. அதில் இரண்டு " பிழைப்புவாதிகள்" தன்கள் கருத்தை கூறியிருக்கிறார்கள். ஒருவர் " ராஜபக்சே வின் ஆலோசகர் என்றும், " ரா" விற்காக ராஜபக்சேவிடம் கலந்து ஆலோசிப்பவர்" என்றும் பெயர் பெற்ற ஊடகவியலாளர் போர்வை பொத்திய "என். ராம்" . இவர் புலி எதிர்ப்பாளர் எனபது நாடறிந்த செய்தி.
அந்த என்.ராம், " புலிகள் தலைவர் திமுகவின் திராவிட கருத்தியலால் செல்வாக்கு செலுத்தப்பட்ட பார்ப்பன எதிர்ப்பாளர் என்றும், ஜெயலலிதாவை கொள்ள புலிகள் திட்டமிட்டிருந்தார்கள் என்றும் " ரா" பாடத்தை ஒப்புவித்து விட்டார். இந்த மனிதர் முழுமையாக தேர்தலுக்கு முன்பு கருணாநிதி ஆதரவாளராக செயல்பட்டது அனைவருக்கும் தெரியும். அதை மாற்றி எழுதி, அம்மாவிடம் நற்பெயர் பெற இந்த சந்தர்ப்பத்தை கூட அவர் பயன்படுத்துவார். அதனால்தான் மறுநாளே முதல்வர் அம்மாவை சென்று பார்த்து, பூச்செண்டு கொடுத்து விட்டார்.
அடுத்த நபர், உலக மகா யோக்கியர் என்ற பட்டம் பற்ற " சுப்பிரமணிய சாமி" இவர் தேர்தல் நேரம் அம்மாவிடம் ஓட்ட, " ஜெயா டி.வி." நேர்காணல் மூலம் கருணாநிதி எதிர்ப்பு, ஸ்பெக்ட்ரம் ஊழல் எத்ரிப்பு என்று பேசி, " பதினைந்து சீட்" கொடுப்பார்களா என்று வினவி, கிடைக்காது என்று டேஹ்ரிந்த பின், திமுக தான் வெற்றி பெரும் என்று வெட்கமில்லாமல் சொல்லி வந்தவர். இவரைப் பொறுத்தவரை அவரது " அமெரிக்க எஜமானர்களுக்கு" சேவை செய்வதே வேலை. அதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி உண்மையான குற்றவாளியான அமெரிக்காவை காப்பாற்ற புலிகள் மீது பழி சுமத்த பயன்படுத்திக் கொண்டார். ஆனால் இன்னொரு நபரான " மணி சங்கர் அய்யர்" தனது நேர்காணலில், திமுக " பார்ப்பன எதிர்ப்பு " கிடையாது என்றும், " பார்ப்பன பெரிய அதிகாரிகளது" ஆலோசனைகளை பெற்று செயல்படும் கட்சி என்றும் உண்மையை போட்டு உடைத்து விட்டார்.
ஆகவே கே.பி. நேர்காணல் என்பது எந்த வகையிலும் " தமிழின எதிரிகைன் சதித் திட்டங்களுக்கு" உதவி புரிய வில்லை. அதை மீண்டும் எடுத்து, முதல்வர் ஜெயலலிதாவிடம் கீட ஊடகத்தாருக்கு அவர் கொடுத்த பதிலில், " இது ஒன்றும் புதிய செய்தியல்ல" என்று கூறியிருக்கிறார்.அதாவது "புலிகள் தன்னை குறி வைத்தார்கள்" என்ற செய்தி ஒன்றும் புதிய செய்தி அல்ல என்கிறார். அதாவது அதற்காக எந்த ஒரு புதிய முடிவும் சாத்தியமல்ல என்று பொருள்படும். நமக்கு கலைஞர் போல பல பழைய விசயங்கள் நினைவுக்கு வருகிறது. அதாவது எம்.ஜி.ஆர். புலிகளை ஆதரித்து வந்த காலத்தில், செல்வி. ஜெயலலிதா எம்.ஜி.ஆரால், ராமநாதபுரம் கூட்டத்திற்கு அனுப்பப்படுகிறார். அங்குபோய், " புலிகள் மட்டுமே ஈழத்தமிழர் விடுதலையை பெற்றுத் தர முடியும்" என்று ஜெயலலிதா பேசினார்.
அதற்கு பிறகு, ராஜீவ் கொலைக்கு பிறகு, " பிரபாகரனை பிடித்துவரவேண்டும்" என்றும் சட்டமன்றத்தில் பேசினார். பிறகு தனக்கு புலிகள் குறி வைத்துள்ளார்கள் என்றும் பேசினார். பிறகு, தந்து சென்ற ஆட்சியில், உள்துறை மைச்சர் சிவராஜ் பட்டீல் அனுப்பிய கடிதத்திற்கு, " புலி என்று இல்லாத கிளையை கிளப்பாதீர்" என்றும் முதல்வர் ஜெயலலிதா பேசினார். இவை எல்லாமே இப்போதுள்ள சூழலுக்கு சம்பந்தமில்லாதவை. இப்போது ஐ.நா. நிபுணர் குழு " ராஜபக்சேவை" போர் குற்றவாளி என்று அறிக்கை அவித்துள்ள நிலையில், அவரே " ராஜபக்சேவிற்கு பன்னாட்டு நீதிமன்ற விசாரனையை மத்திய அரசு நிர்ப்பந்திக்க வேண்டும்" என்று பேசிவருகிறார். அதை எந்த டில்லி கொம்பனும் அசைக்க முடியுமா என்பதே இப்போதைய கேள்வி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment