நாடாளுமன்ற இரு அவைகளிலும் குடியரசு தலைவர் உரையில் தொடக்கி இன்றுவரை தமிழக உறுப்பினர்களின் குரல்கள் மகிந்தா வின் கொடுமை ஆட்சிக்கு எதிரான எதிரொலிகளை எழுப்பி வருகிறது. இதுவரை நாடாளுமன்ற கூட்டுகூட்டத்தில் குடியரசு தலைவரின் உரையின் நேரத்தில் இப்படி நடந்தது இல்லை என்கிறார்கள். அப்படியிருந்தால் மகிழ்ச்சிதான். தமிழனின் நீதிக்கான குரல் ஒரு முன்மாதிரியை ஏற்படுத்தியிருக்கிறது என்றே கொள்வோம். திமுக, அதிமுக சி.பி.ஐ., சி.பி.எம், கட்சிகள், மதிமுக, விசிக, ஆகியோருடன் சேர்ந்து காங்கிரஸ், பாஜக என்று தமிழ்நாட்டிலிருந்தும் ஆதரவாகவும் சென்ற எம்.பி.க்கள் குரல்கொடுத்து அதன்போயறகும் ஐ.மு.கூ. அரசு செவி மதுக்க வில்லை என்ற உணர்வு தமிழக மக்களை பெரிதும் கிளர்ந்தெழ செய்துள்ளது. இந்த நிலையில் இன்று வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணா ஒரு அறிக்கையை படிக்கிறார். அதில் இலங்கைக்கும், இந்தியாவிற்கும் நீண்ட நெடிய ஒரு உறவு இருக்கிறது என்று கூறியுள்ளார். கிருஷ்ணாவைவிட, அந்த உறவு பற்றி தமிழர்களுக்கு அதிகம் தெரியும். அதுமட்டுமின்றி, அத்தகைய உறவு இதுவரை தமிழர்களின் உணர்வுகளுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது. தமழ்நாட்டின் விருப்பங்களுக்கு விரோதமாக செயல்படுத்தப்பட்டுள்ளது.
அதை தெளிவாக இன்று காலை அனகில ஏடான தி ஹிந்து நாளேட்டில் கொள்ளப்பன் எழுதியுள்ளார். அதாவது சாஸ்திரி- பண்டாரநாயகா ஒப்பந்தம் என்ற ஒப்பந்தத்தில், மலையாக தமிழர்கள் அதாவது இந்திய வம்சாவழியினர் இலங்கையிலிருந்து இடம் பெயரப்பட்டு, இங்கே கொண்டுவந்து எறியப்பட்டனர். அந்த ஒப்பந்தத்தை அன்றே காமராஜ் எதிர்த்தார் என்கிறார் கட்டுரையாளர். அப்படி தமழ்நாட்டின் தலைவர்களுக்கு எதிராக, தமிழர்களின் நலன்களுக்கு விரோதமாக டில்லிகாரர்கள் ஒப்பந்தங்கள் செய்துவருவது புதிதல்ல என்பதே அந்த செய்தி கட்டுரையின் சாரம்.அடுத்து எழுபத்தி நாலாம் ஆண்டில் போடப்பட்ட கச்சதீவு ஒப்பந்தம்.அப்போது தமிழகத்தை ஆண்ட திமுக வின் எம்.பி.கால நாடாளும்னர்த்தில் அந்த கச்சதீவு பகுதியான இந்தியாவிற்கு சொந்தமான அப்பகுதியை இலங்கைக்கு கொடுக்க கூடாது என்று வாதிட்ட பின்னாலும் இந்திரா காந்தி கொடுத்தற என்கிறது அந்த செய்தி கட்டுரை. இப்படி வரலாறு ரீதியாக தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராக முடிவுகளை செய்யும் டில்லி தலைமை பற்றி கேள்விகள் இன்று தமிழகத்தில் அடிபப்டை மக்களிடம் மட்டுமல்ல, மேட்டுக்குடி மக்களிடமும் பரவ தொடக்கி விட்டது.அது மேலும் டில்லி மீதான் மக்களின் நம்பிக்கையை கேள்விக்குறி ஆக்கிவிடும்.
அதேநேரம் இன்று சபையில் அறிக்கையை படித்த கிருஷ்ணாவிற்கு உடனேயே அதிமுக எம்.பி.க்கள் எதிர்ப்பு கொடுத்து அவரது அறிக்கையை அங்கேயே கிழித்து எரிந்து வெளியேறினர். அவர்கள் எதிர்க்கட்சி என்பதால் அப்படி எதிர்ப்பை தெரிவித்தனர்.அதேசமயம் திமுக. அப்படி செய்ய முடியாது. அவர்கள் ஆளும் கூட்டணியில் அமைச்சரவையில் இருக்கின்றனர். ஆகவே திமுக வின் திருச்சி சிவா எழுந்து அழகான மறுப்பு கொடுத்தார். அதில் வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறேன் என்றார். இலங்கைக்கும், இந்தியாவிற்கும் உள்ளனல்லுறவு, நாற்பதாயிரம் தமிழர்களின் உயிரை குடித்து விட்டதே என்றார். அன்றாடம் எங்கள தமிழக மீனவர்களின் உயிர்களை இந்திய கடல் எல்லையிலேயே கொலை செய்கிறதே என்றார். அதேபோல சி.பி.ஐ. கட்சியின் டி.ராஜ பேச எழுந்தார். அவர் வருத்தத்துடன் இரு நாட்டு உறவுகளின் நல்லுறவு பற்றி பேச எவ்ந்டியிருக்குஇஅர்து என்றார். அதாவது ஐ.நா. சபையில் இந்தியா பாதுகாப்பு சபையில் உறுப்பினர் ஆகவேண்டும் என்று விரும்புகிறது. அப்படுய் ஒரு உறுப்பினர் கிடைக்க வேண்டும் என்றால்,இந்திய அரசு இப்போது இலங்கைக்கு எதிரான தீர்மானத்தை ஆதரித்தே ஆகவேண்டும் என்றார். இப்படி பலரும் ஆதரபூர்வமாக் ஆரோக்கியமான மனத்துடன் பேசும்போது கிருஷ்ணாவின் கண்களில் கண்ணீர் தஹ்தும்பியது. அதாவது உடன் இருக்க வேண்டிய கட்சிகளே இப்படி நல்ல வாதங்களை முன்வைக்கும்போது, தென்னிந்தியனான இந்தி தெரியாத நம்மை வடநாட்டு இந்திவாலாக்கள் சிக்கலில் மாட்டி வைக்கிறார்களே என்ற எண்ணம் தோன்றியது தெரிந்தது.
அதனால் அவருகிற இருபத்தி இரண்டாம் நாளுக்குள் இறுதி முடிவு செய்யலாம் என்றும், இன்னமும் இந்திய அரசின் நிலை முடிவு செய்யப்படவில்லை என்றும் கூறினார். இது நாம் ஏற்கனவே கூறியது போல வாதங்களை பெரிதாக்கி கடைசியாக இந்திய நிலையைஉலக சமூகம் மத்தியில் தனிமைப்படாமலேடுக்க முயற்சி எடுக்கும் மத்திய அரசை காட்டி கொடுக்கிறது. இப்படி ஒரு விசயத்தில் மக்களது அப்பிபிராயத்தை கிளப்பிவிட, அதன்மூலம் ஒரு க்ருத்தை பொது அபிபபிராயமாக ஆக்கி விட்டு பிறகு தனகளது வெளிவிவகார் துரையின் முடிவை எடுக்க முயலும் இந்திய அரசின் தந்திரம் அம்பலமாகி வ்ருகிறது.அதனால்தான் தமிழ்நாட்டை சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் தலைவர் ஞானதேசிகன் தனது உரையில் இரு நாடுகளின் உறவு கெடாமல் இந்தியா ஐ.நா.வின் முன் வந்துள்ளதீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் என்று கூறினார். இப்படி பரபரப்பை உருவாக்கி நாட்டை குழப்பும் காங்கிரஸ் சரியான பதிலடியை வங்கி கட்டிக்கொள்ளும்.
Wednesday, March 14, 2012
வந்தே மாதரம்?.வந்து ஏமாத்தறோம்?
டில்லிகாரர்கள் அதாவது வட இந்தியர்கள் அதாவது இந்தியா என்ற மாபெரும் துணை கண்டத்தின் பூகோள அகலத்தை, நீளத்தை ஆளக்கூடிய தேசிய இனங்களின் எதிரிகள், அதாவது இந்திய சிறையில் அனைத்து சிறுபான்மை தேசிய இனங்களையும் ஆண்டு வரும் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்தின் அடிவருடிகள், அதாவது காலனி நாடாக இந்த நாட்டை ஆண்டு வந்தவர்களின் கைகளில் அதிகாரத்தை மட்டுமே கை மாற்றி வாங்கி கொனடவர்கள், திடீரென தமிழ் தேசியத்தின் மீது, ஈழ தமிழர்கள் மீது பற்றும், பாசமும் கொள்வார்களா? அல்லது அந்த தேசிய இன விரோதிகள் திடீரென தமிழ்நாட்டு தமிழர்களின் நியாயமான குரல்களுக்கு நல்ல செவி சாய்ப்பார்களா? அல்லது அவர்கள் தாங்கள்தான் ஈழத்தமிழர் மீது போர் நடத்த தூண்டியவர்கள் என்ற உணர்வே இல்லாமல் இலங்கை சிங்கள ஆட்சியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரும் ஐ.நா. மனித உரிமை கவுன்சில்முன் உள்ள அமெரிக்க தீர்மானத்தை தாங்களாகவே ஆதரிப்பார்களா?
நாள் தவறாமல் இரண்டு நாட்களாக மக்களவையிலும், மாநிலங்களவையிலும், பெரும் கூச்சலை எல்லா தமிழ்நாட்டு கட்சிகளும் கிளப்பிய பிறகு, தமிழ்நாட்டு வாக்களர்களை திருப்தி படுத்த வேறு வழியில்லை என்று தமிழ்நாட்டு நாடாளுமன்ற கட்சிகள் அனைத்தும் முடிவு செய்து உண்மையாகவே அதற்காக ஐ.நா. வில் உள்ள தீர்மானத்தை ஆதரிக்க குரல் எழுப்பும் போது முதலில் குறிப்பிட்ட நாட்டில் உள்ளபிரச்ச்னை மீது தீர்மானம் கூடாது என்று கூறிய இந்திய அரசு, அத்தகைய தீர்மானத்தை தென்னாப்பிரிக்க நிறவெறிக்கு எதிராக நேரு காலத்தில் இந்தியா மேற்கத்திய நாடுகளை எதிர்த்து கூட கொண்டுவந்தது என்பதை மறந்த அல்லது எதிர்க்கும் இன்றைய இந்திய ஆட்சியாளர்கள் இப்போது வேறு கோணத்தில் பேசுவது எதனால்? பிரதமர் தான் எல்லா சம்பந்தப்பட்ட சக்திகளுடனும் பேசி வருவதாக கூறுவது ஏன்? இன்னமும் முடிவு செய்ய காலம் இருக்கிறது என்று பிரணாப் முகர்ஜி நீட்டுவது ஏன்? நாடாளுமன்ற விவகார மைச்சர் பன்சிலால் தனைகளுக்கு ஐ.நா. என்றால் என்ன என்றே தெரியாது என்ம்பது போல, வெளிவிவகார் அமைச்சர் கிருஷ்ணா வந்துதான் பதில் கூற வேண்டும் என்று தள்ளி போடுவது ஏன்? தமிழ்நாட்டு எம்.பி.கலை பார்த்து, ப.சிதம்பரம் தமழிலேயே பேசி, நாளை நல்ல முடிவு அவரும் என்று கூறுவது ஏன்? நாம் குரிப்புயட்டது போல அது அமெரிக்க சார்பு இந்திய அரசின் நிலை. சீனாவின் செல்வாக்கை அதிகரிக்கும் ராஜபக்சே க்கு எதிரான ஒரு சிறிய முன்வைப்பு. அதேசமயம் அதற்குள் ராஜபக்சேவை காப்பாற்ற எடுக்கும் புதிய வியூகம்.
அப்படி எதை இந்திய அரசு எடுத்தாளுமுல்க சமூகம் முன்னாள் தான் அதனிமைப்படாமல் இருக்க எடுக்கும் முயற்சிதான் எடஹ்விற மனப்போர்வமான தமிழர் நலனை பாதுகாக்கும் முயற்சி அல்ல. இந்த நிர்ப்பந்தம் நாட்டிற்குள் மட்டுமின்றி உலக சூழலிலும் இந்திய அரசுக்கு வந்திருப்பதை அணங்கு டேஹ்ரிந்துதான் அவர்கள் தங்கள் கூட்டாளி கலைஞரையும், தன்கள் கட்சி ஆள் ஞானதேசிகனையும் பேச வைதிருக்கிரறாக்கள்.ஆகவே வருகின்ற இந்திய அரசின் ஆதரவு பெரும் மாதரத்தை ஏற்படுத்தாது. ஆனால் அதுவே உலக சமூகம் மத்தியில் போர் குற்றவாளி ராஜபக்சேவிற்கு எதிரான ஒரு செய்தியை வலுப்படுத்தும். அது தொடக்கம் என்று காண்போம்.ஆகவே இந்த தீர்மானம் சரிதான். ஆனால் அதற்கும் மேலாக ஒரு சுயாதீனமான அனைத்து நாட்டு விசாரணையை ஐ.நா. தொடங்க வேண்டும் என்ற கோரிக்கையை உயர்த்தி பிடிப்போம். ஆகவே இந்த கிய நகர்த்தல்கள் டில்லியின் வந்து ஏமாற்றுகிறோம் என்ற முழக்கம்தான்.,

Subscribe to:
Posts (Atom)