நேற்று அதாவது ஏப்ரல் இரண்டாம் நாள் இரவு பத்தரை மணிக்கு, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளராக நிற்கும் அமைச்சர் தண்டராம்பெட்டை வேலு தனது ஆதரவாளர்கள் மூலம் தெர்தேருவில் வீடு வீடாக ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் அன்பளிப்பாக ஐநூறு ரூபாயை வழங்கியிருக்கிறார். இந்த பணபட்டுவாட எதிர்பார்த்த இரண்டாயிரம் அல்லது ஐந்தாயிரம் ரூபாய் காசை எட்டவில்லை என்பதால், இது வாக்குக்கு காசு கொடுக்கும் விதி மீறல் என்ற தவறில் சேருமா அல்லது சேராதா என்ற குழப்பம் வாக்காளர்கள் மத்தியில் உள்ளது. இது போன்ற வழங்கப்பட்ட அன்பளிப்புகளுக்கு தேர்தல் ஆணையம் என்ன பரிகாரம் செய்யும் என்பதும் நமக்கு விளங்கவில்லை.
இதற்கிடையே தேர்தல் ஆணையம் எடுத்துவரும் சட்டபூர்வமான நடவடிக்கைகளை ஆதரிக்கும் போக்கு அறிவுஜீவிகளிடமும், பி.யு.சீ.எல். போன்ற மனித உரிமை அமைப்புகளிடமும் இருப்பதால் மெல்ல, மெல்ல அத்தகைய ஆதரவும் டேஹ்ர்தல் ஆணையத்தை வலுப்படுத்திவிடுமா என்ற அச்சம் ஆளும் தரப்பில் இருப்பது தெரிகிறது. ஆனால் வருகிற ஏப்ரல் ஐந்தாம் நாள் சென்னைக்கு சோனியா காந்தி வருகை புரிந்து ஒரே மேடையில் கலைஞருடன் பேச இருப்பதால் அதற்கு பிறகு தேர்தல் ஆணையத்தின் கெடுபிடிகள் திமுக மீது இப்போது இருப்பது போல இருக்காது என்ற எதிர்பார்ப்பில் திமுக தொண்டர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் தேர்தல் ஆணையத்தின் கெடுபிடியை காங்கிரஸ் கட்சி வேண்டும் என்றேதான் அனுமதித்துள்ளது என்றும் அதன்மூலம் திமுக கூட்டணி தோல்வியை தழுவுவதை காங்கிரஸ் தலைமை விரும்புகிறது என்றும் டில்லியின் தகவல்கள் கூறுகின்றன.தமிழ்நாட்டு அரசு கையில் இருப்பதால்தான் திமுக தலைமை காங்கிரசை மத்தியில் மிரட்ட முடிகிறது என்றும், அதனால் தமிழ்நாட்டில் ஆட்சியை இழந்த திமுக பெட்டிப்பாம்பாக மத்திய ஆட்சிக்கு ஆதரவை கொடுத்துக்கொண்டு சும்மா இருக்கும் என்றும் அந்த டில்லி தகவல்கள் கூறுகின்றன. அதனால் க்ளன்கிராஸ் தலைமை சிபியை. வழக்கை ராஜா மீது குற்றப்பத்திரிகையுடன் போட்டதுபோல, இரண்டாவது குற்றப்பத்திரிகையில் தயாளு, கனிமொழி ஆகியோரையும் அடக்கி போட எத்தனிக்கிறது என்றும் அந்த தகவல்கள் கூறுகின்றன.இதை திமுக தலைமை எப்படி முறியடிக்க போகிறது?
Sunday, April 3, 2011
Subscribe to:
Posts (Atom)