கமல் சார், சில சந்தேகங்கள் .....
நீங்கள் உங்கள் படத்தை தொடங்கும்போதே, "இது உண்மையில் நடந்த கதை" என்று போட்டிருக்கிறீர்களாமே? உங்கள் படத்தை நேநேகள் காட்டி பார்த்த முஸ்லிம் தலைவர்கள் கூறினார்கள். அப்படியானால் மதுரையிலும், கோவையிலும், ஆப்கானின் தலிபான் தலைவர் முல்லா உமர் தங்கியிருந்தேன் என்று உங்கள் படத்தில் கூறுவது உண்மையில் நடந்ததா? அந்த எழுத்துக்களை கேரளாவில் திரையிடும்போது நீக்கி விட்டீர்களாமே? ஏன் சார், உண்மைகளை சொல்கிறோம் என்ர்பதை நீக்கினீர்கள்? அப்படியானால் முல்லா உமர் தம்ன்கியிருந்ததாக உள்ள அந்த இரண்டு ஊர்களும் ஏற்கனவே மத மோதல்களில் மோசமான விளைவுகளை சந்த்திதனவே? மீண்டும் அப்படி எழும்ப அது வழி வகுக்காதா? நீங்கள் ஆய்வு பல செய்துதான் படத்தின் கதையை தயாரா செய்தேன் என்கிறீர்கள். அப்படியானால் உங்களுக்கு அந்த ஆய்வுக்கு உதவியவர்கள் கொடுத்த தகவல்களை உண்மை என்றோ, பொய் என்றோ எதோ ஒரு வகையில் எடுத்து க் கொள்ளலாமா? பொய் என்றால் அவர்கள் அதாவது தகவல் தந்தவர்கள் வேறு எதோ நோக்கத்தில் அவ்வாறு கொடுத்திருக்கலாம் அல்லவா?
கமல் சார், உன்களுக்கு நினைவு இருக்கிறதா> ராஜீவ் கொலை பற்றி, ஒரு மலையாளப்படம் 2002 நேரம் வந்ததே? மிஷன் 99டேஸ் என்பது அதன் பெயர். அதை மேஜர் ரவி என்ற மலையாளி இயக்கினாரே? அவரது படத்திற்கு அப்போதே நீங்கள் பாராட்டு கொடுத்தீர்களே? அந்த மேஜர் ரவி "இந்திய அமைதி படை" என்ற, தமிழர்களை கொலை செய்யும் ராணுவம் ஆயிற்றே? அதில் மேஜராக இருந்த ரவி, தமிழர் விரோத போக்கு கொண்டவர் ஆயிற்றே? அவர் அங்கு பொய் வடக்கு, கிழக்கு இலங்கையில் ஈழத் தமிழரை கொலைகள் செய்டஹ்து மட்டுமின்றி, அதையே ஒரு படமாக "மிஷன் 99 டேஸ் " என்ற பெயரில் எடுத்து என்ன நோக்கம் கொண்டது? அந்த மேஜர் ரவி உங்கள் நண்பர் ஆனாரே? நீங்கள் "ஆளவந்தான்" பாடத்தில் நடிக்க வைத்தீர்களே? அவரும் அந்த படத்தை தயார் செய்வதில் ஆலோசனைகளை வழங்கினாரே? அப்படிப்பட்ட நேஜோர் ரவி போன்ற "இந்திய அமைப்பதை" மேஜோர்களை வைத்துக் கொண்டு நேநேகள் ஆலோசனைகளை அது இப்படித் தானே இருக்கும்? அது ஒடுக்கப்பட்ட சமூகம் மீது இழிவை ஏற்படுத்த செய்யுமல்லவா? இப்போது புரிகிறதா? நேநேகள் எங்கே நிற்கிறீர்கள் என்று? நாங்கள் கூறுவது எப்படி தவறாகும்?