Monday, April 11, 2011

மின்தடை ஏற்படுத்தியவர்கள் கொள்ளைக்காரர்கள்- ஆதாரம் அம்பலம்.

.
தமிழ்நாடெங்கும் கடந்த ஐந்தாண்டு ஆட்சியில் மின் தடை என்பது ஒரு சாதாரண விசயமாக ஆகிவிட்டது. கிராமங்களில் விவசாயம் செய்ய மோட்டார் போட மின்சாரம் இல்லை. விவசாயத்தை நம்பி பிழைக்கும் மக்கள் படும் பாடு சொல்லி மாளாது. கிராமங்களிலும், சிறு நகரங்களிலும் சிறு தொழில்கள் மின்தடையால் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. விசைத்தறிகள் ஓடவில்லை. தறித்தொழிலாளி பட்டினி கிடக்கிறான்.பல சிறு தொழில்கள் மின்தட்டுப்பாட்டினால் நசிந்து போய்விட்டன. பெரும் ஆலைகளுக்கு மின்சாரம் கொடுப்பதற்காக இந்த மின்வெட்டு மூலம் சிறு தொழில்களையும்,விவசா
யத்தையும் காவு கொடுத்தது கலைஞர் ஆட்சி என்ற அவப்பெயர் வந்துசேர்ந்தது.


அதற்கெல்லாம் பதில் சொல்கிறார் முதல்வர் கலைஞர் புதிய தொழிற்சாலைகளை தனது ஆட்சி திறந்ததால் , மின்சாரம் தடைப்பட்டது என்கிறார் அத்தகைய புதிய தேவைகளுக்கு மின்சாரம் உற்பத்தி ஏன் செய்துகொள்ளவில்லை என்று கேட்டோமானால், முந்திய அதிமுக ஆட்சியில் மின் உற்பத்திக்கான புதிய ஆலைகளை அமைக்கவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் உண்மை என்ன என்று நாம் கண்டுபிடிக்கவேண்டியுள்ளது.


இப்போது கிடைத்திருக்கும் விவரங்களில் இருந்து, தனியார் ஆலைகளுக்கு அதிக கட்டணம் கொடுத்து, அதன்மூலம் மின்சாரம் பெற்ற தமிழ்நாடு மின்வாரியம் செய்த பிழைதான் மின்தடைக்கு காரணம் என்று தெரியவந்துள்ளது. அரசு மாநிலத்தின் தேவைகளுக்கு ஒப்ப தனது மின் உற்பத்தியை பெருக்கி கொண்டிருந்தால்
இந்த மின்தடைக்கு வாய்ப்பில்லை. 1999 ஆம் ஆண்டு கருணாநிதியின் ஆட்சியில், தனியார் மின் உற்பத்தி ஆலைகளுக்கு வித்திடப்பட்டது. சென்னை பேசின் பிரிட்ஜில் இருந்த . .அரசு மின் உற்பத்தி ஆலையை தனியாரான ஜி.எம்.ஆர். என்ற நிறுவனத்துக்கு கருணாநிதி அரசு கொடுத்தது.அவர்கள் அன்றிலிருந்தே அடக்க செலவை அதிகமாக காட்டி, அதன்மூலம் மின்சாரத்தை ஒவ்வொரு யுனிட்டிற்கும் மிக அதிகமான விலை வைத்து தமிழ்நாடு மின்வாரியத்திற்கு விற்க தொடங்கினார்கள்.


பேசின் பிரிட்ஜின் ஜி.எம்.ஆர், தர்மபுரியின் சாமல்பட், மதுரை சமயநல்லூர் மின் ஆலை, திருவையாறு அருகே பிள்ளை பெருமாள் நல்லூர் அப்போல்லோ திட்டம் ஆகியவை அதிக விலைக்குமின்சாரத்தைமின்வாரியத்திற்குகொடுத்துவரத்தொடங்கின. அந்த ஆலைகளில் நாப்தா மூலம் மின் உற்பத்தியை மின்வாரியம் துரிதப்படுத்தியது. எப்போதெல்லாம் பெட்ரோலிய விலை கூடுகிறதோ அப்போதெல்லாம் நாப்தா விலை
கூடத்தொடங்கியது. அதை தனியார் ஆலைகள் வாங்கும் விலை பற்றி கணக்கு பார்க்க மின்வாரியத்திற்கு எந்த ஒரு அதிகாரமும் இல்லை. மின்சாரத்தை யூனிட்டிற்கு
மூன்று ரூபாய், மூன்றரை ரூபாய் என்று வாங்கி கொண்டிருந்த மின்வாரியம் இந்த தனியார்களிடம் ஒரு யூனிட் ஏழு ரூபாய்க்கு என்று வாங்க தொடங்கினார்கள்.


மத்திய அரசின் கையில் இருந்த பவர் டிரேடிங் கார்பொரேஷன் தனது பங்குகளை ஐம்பது விழுக்காட்டிற்கு மேல் தனியாருக்கு விற்று விட்டதால், அதுவும் தனியார் இலாபங்களுக்கான ஒரு கார்பரேஷனாக ஆகிவிட்டது. அந்த நிறுவனத்திடம் மின்சாரத்தை வாங்கும் தமிழ்நாடு மின்வாரியமும், ஒரு யூனிட் மின்சாரத்தை ஏழு ரூபாய் கொடுத்து வாங்க தொடங்கியது. இப்போது அந்த நிறுவனம் மூலம் மின் வாரியம் பெறும் மின்சாரத்திற்கு ஐந்து ரூபாய்,எழுபது பைசா கொடுக்கிறது. இந்த அதிக விலை போல, ஜி.எம்.ஆர் நிறுவனத்திடமிருந்து, 600 மெகாவாட் மின்சாரத்திற்கு, நமது மின்வாரியம் யூனிட்டிற்கு
ஒன்பது ரூபாய் கொடுத்து வருகிறது. இதன்விளைவாக இப்போது தமிழ்நாடு மின்வாரியம் 15000 கோடி நட்டம் அடைந்துள்ளது.41000 கோடி கடனில் உள்ளது.


ஏன் இந்த அவல நிலை? முந்திய ஆட்சியை கருணாநிதி குறை சொல்வது உண்மையா? 2002 ஆண்டு அதிமுக ஆட்சியில் த.நா.மின் வாரியமும், என்.டி.பி.சீ [நேஷனல் டிரேடிங் பவர் கார்பரேஷன்].யும் சேர்ந்து வடசென்னை மின்னுற்பத்தி நிலையம் ஒன்றிற்கான ஒப்பந்தம் போட்டார்களே? அதை பின்னால் வந்த கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? அதேபோல 2004 ஆண்டு தூத்துக்குடியில் த .நா.மின் வாரியமும், நெய்வேலி லிக்னைட் கார்பரேஷனும் சேர்ந்து ஒரு மின் உற்பத்தி நிலையம் ஒப்பந்தம் போட்டார்களே, அதையும் கருணாநிதி ஆட்சி ஏன் நிறைவேற்ற வில்லை? இப்போது சென்ற ஆட்சியில் மின் உற்பத்திக்கான திட்டம் போடவில்லை என்று பொய் சொல்லும் கருணாநிதி இதற்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?


புதிய மின் உற்பத்தி நிலையத்தை உருவாக்கினாலும் மூன்று ஆண்டுகளுக்குள் அது உற்பத்தியை கொடுத்துவிடும். அப்படி தனது ஆட்சியில் ஐந்து ஆண்டுகளாக என் ஏற்படுத்தவில்லை? 2002 ஆண்டு ராமனாதபுரம் அருகே உள்ள வழுதூரில் , 200 மெகா வாட் உற்பத்தி செய்யும் ஒரு இயற்கை வாயு மூலம் மின்சாரம் உற்பத்தி செய்யும் ஆலையை ஒ.என்.ஜி.சீ. மூலம் உருவாகினார்கள் அதை ஏன் கருணாநிதி ஆட்சி வெறும் நூறு மெகாவாட் மின் உற்பத்தியாக குறைத்து உற்பத்தி செய்கிறது? அதேபோல தஞ்சை குத்தாலம் அருகே 100 மெகாவாட் உற்பத்தி செய்யும் வாயு மூலம் மின் உற்பத்தி நிலையத்தை 2005 ஆண்டு ஏற்பாடு செய்தார்களே? அதை ஏன் உற்பத்தியே இல்லாமல் கருணாநிதி ஆட்சி முடக்கி போட்டுள்ளது?




மேற்கண்ட அதிமுக ஆட்சி காலத்தில் தமிழ்நாட்டின் எதிர்கால தேவைகளை கணக்கில் கொண்டு ஏற்பாடு செய்யப்ப்பட்ட மின் உற்பத்தி நிலையங்களை முடக்கி போட்ட கருணாநிதி அதன்மூலம் அடைந்த லாபம் என்ன? மின்சார அமைச்சர் ஆற்காடு வீராசாமியின் உதவியாளர் இளங்கோ, இதற்கெல்லாம் காரணமாக இருக்கிறார். அவர் ஒரு சாதாரண கிளார்க்காக மின் வாரியத்தில் பணியாற்றி வந்தவர். அவர் இப்போது ஆயிரம் கோடிக்கு சொத்து சேர்த்துள்ளார் என்று மின்வாரியத்தில் உள்ள அனைவரும் கூறுகின்றனர். அவர் இப்போது இந்த தேர்தலில் கருணாநிதி நிற்கின்ற திருவாரூருக்கு அருகே, நன்னிலத்தில் திமுக வேட்பாளராக நிற்கிறார. மின்சார அமைச்சருக்கு தேர்தல் வாய்ப்பு கொடுக்காத கருணாநிதி, ஏன் இந்த மின்சார அமைச்சரின் உதவியாளராக இருந்த இளங்கோவிற்கு தேர்தலில் நிற்க வாய்ப்பு கொடுக்க வேண்டும்? அந்த உதவியாளர் இளங்கோ இன்று புதிய சட்டமன்ற வளாகத்திற்கு எதிரே உள்ள பிரியதர்ஷினி விடுதிக்கு சொந்தக்காரர் என்பதும் உண்மையா?


இந்த இளங்கோ தனியார் மின் உற்பத்தி நிலையங்களிலிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை வாங்கி தமிழ்நாடு மின் வாரியம் நட்டமடைவதற்கு காரணமாக இருந்தவர். அதனாலேயே நமது மக்களுக்கு போதிய மின்சாரம் கிடைக்கவில்லை. அது மட்டுமின்றி தமிழ்நாடு மின்வாரியமும் பெருத்த நட்டத்தை சந்தித்து கொண்டு இருக்கிறது.ஒரு மாதத்திற்கு 1600 கோடி வருமானம் பெறும் மின் வாரியம், மாதம் 3000 கோடி செலவு செய்து கொண்டு இருக்கிறது.அதில் முக்கிய செலவு மின்சாரத்தை அதிக விலைக்கு தனியாரிடமிருந்து வாங்குவதால் தான். அப்படி வாங்கும் போது இளங்கோ பெற்று வரும் கமிஷன் தொகைக்காக அதில் பெரும பகுதியை முதல்வரின் பங்குக்கு போவதற்காக,தமிழ்நாட்டில் அரசே ஏற்பாடு செய்த மின் உற்பத்தி நிலையங்களையும் கிடப்பில் போட்டுவிட்டு, நட்ட கணக்கு காட்டி வருகிறது கருணாநிதி அரசு