Thursday, January 12, 2012

பாரம்பரிய அடையாளங்களை கார்பொரேட் விரும்புவதில்லை.

இப்போது அவர்களது குறி "ஜல்லிக்கட்டு விளையாட்டு" மீது. அவர்கள் கூற்று, "எப்படி விலங்குகளை வதைப்பீர்கள்?". ஆகா. எங்கள் விலங்குகள் மீது இவர்களுக்கு எவ்வளவு அக்கறை? இவர்கள் யார்? நகர்ப்புறங்களில், அறிவுஜீவிகளாகவும், படித்தவர்களாகவும், மனித உரிமையை நுனி நாக்கில் பேசுபவர்களாகவும், அனேகமாக சிவந்த வன்னத்திலுள்ளவர்கலகா இருக்கிறார்கள். விலங்குகளை வதைக்ககூடாதல்லவா? என்று வினவுகிறார்கள். உண்மைதான் விதைக்க கூடாது என்று நாமும் சொல்லிவிட்டால் பிறகு நம்மிடம் நிறைய பேசுகிறார்கள்.அப்போது இவர்களை பற்றி அதிகம் புரிய முடிகிறது. இவர்கள் நீதிமன்றம் செல்கிறார்கள். அங்கே உள்ளவர்களுக்கு "பாரம்பரிய விளையாட்டுகள்" பற்றி என்ன தெரியும் என்பது நமக்கு தெரியாது.

காளையை அடக்க மனிதர்கள் பொங்கல் நேரம் பாய்ந்து வருவது "வீர விளையாட்டு" என்று நாம் புரிந்து வைத்துள்ளோம். அந்த "காளைகளை" விலங்கினத்தில் " அரிதான" ஒன்றாக சேர்த்து விட்டார் ஜெயராம் ரமேஷ் என்றுவேறு கூறுகிறார்கள்.யார் அந்த ரமேஷ்? பெங்களூரு பார்பனரான அவருக்கு நமூர் பாரம்பரிய விளாயாட்டு பற்றியோ, நம்மூரில் காளைகளை எதற்காக பயன்படுத்துகிறோம் என்பது பற்றியோ தெரியுமா? ஒரு காளையை பலர் சேர்ந்து அடக்கலாமா? என்று இவர்கள் கேட்கிறார்கள். ஒருவர்தான் தொடர்ந்து அந்த ஆட்டத்தில் கலையுடன் சண்டை போட்டு அடக்க முடியும்.பலரும் அதை பிடிக்க முயற்சி செய்வார்கள்.அதற்காகவே அந்த கலையை வளர்ப்பவர்கள் அதை தங்கள் வீட்டு குழந்தையை விட அருமையாக வளர்ப்பார்கள்.அதனால்தான் அலங்காநல்லூர் போன்ற சிலகிராமங்களிழ்மட்டுமே அந்த ஆட்டம் நடைபெறுகிறது. மாட்டு போன்களில் கலையை அடக்குவது எங்கள் "தமிழர் பழம் பண்பாட்டில்" இருக்கிறது. இத்தனை விளக்கம் சொன்னாலும் அவர்கள் ஒப்புக்கொள்ள தயாரில்லை.

காளைகளுக்கு "சாராயம்" கொடுக்ககூடாது. ஊசி போட கூடாது. அதை வதைக்க கூடாது. இதையேதானே பாரம்போரிய கலைகளை, விளையாட்டுகளை போற்றுபவர்களும் கூறி வருகிறோம். உங்கள் " ஓட்டப்பந்தயம்" செல்பவர்களும், மற்ற விளையாட்டு வீரர்களும், "போதை மருந்து" பயன்படுத்தும் போது எப்படி உங்களின் விதிகள் அவர்களை தடை செய்கிறதோ அதே போல எங்கள் பாரம்பரிய விளையாட்டிலும் "விதி மீறல்" செய்பவர்கள் இருக்கிறார்கள். அவர்கள் உங்களது "உலகமயமாக்கலின்" விளைவே. உங்கள் வணிகமயமாக்கலின் வித்துக்களே. அதனாலத்தில் உள்ள "ஒழுக்கமற்ற" போக்குகளுக்கு நீங்கள்தான் பொறுப்பு. கிராமப்புற மக்களின் பாரம்பரிய விளையாட்டு என்ன செய்யும்? நீங்கள் " உழவு தொழிலுக்கும்" நாங்கள் காளைகளை பயன்படுத்தும்போது என்ன சொல்லபோகிறீர்கள்? வண்டிமாடு இழுக்கனான்கள் காளைகளை பயன்படுத்தும்போது நீங்கள் எப்படி அதை பார்கிறீர்கள்? இப்படி கேட்டால் அது வேறு. இது வேறு. இது தவிர்க்க கூடியது. அது தவிர்க்க முடியாதது. இப்படி கூறுகிறார்கள்.


விளையாட்டு ஆட கலைகளை பயன்படுத்துவது உங்களுக்கு பொறுக்கமுடியவில்லை என்றால் அது ஏன்? ஒன்று நீங்கள் நகர்ப்புற நடுத்தர வர்க்க, அல்லது முற்பட்ட சாதி மனிதராக இருந்து கொண்டு, இந்த ஆட்டத்தை கிராமப்புற "பிற்பட்ட" சமூகத்தின் ஆட்டம் என்று பார்கிறீர்கள். இப்படி கேட்கலாம். இந்த ஆட்டம் அடிப்படையில் தலித் சமூக மக்களையும் சேர்த்துக்கொண்டு ஆட வேண்டிய ஆட்டம். ஆனால் தமிழ்நாட்டில் எல்லாமே கடந்த முப்பது ஆண்டுகளாக "பிற்பட்டோர்" ஆளுகை என்று போய் விட்டதால், இந்த ஆட்டத்திலும் தலித் சகோதரர்களை ஈடுபடுத்த தயங்கும் பிற்பட்டோரை காண்கிறோம். அதற்கு ஏன் முற்பட்டோரின் பழக்கங்களுடன் சேர்ந்து கொள்ள வேண்டும்? மாறாக "நாங்களும் தமிழர்கள்தான்". என்றும், "எங்களையும் காளைகளை அடக்க" விடுங்கள் என்றும்,தலித் மக்கள் சண்டை போட வேண்டும். வீரத்தை நிரூபிக்கும் தலித் சகோதரனை பிற்பட்டோர் சமூகம் ஏற்றுக்கொண்டு போற்ற வேண்டும். அதுதானே பெரியார் வழியில் உள்ள தமிழர் பண்பாடு?

சரி. உங்கள் வாதத்திற்கே வருவோம். மனிதர்களை நாம் முதன்மையாக நேசிக்கிறோம் என்று கூறும் இந்த மனிதர்கள் "மனித வதைகளையும்"எதிர்க்க வேண்டும் அல்லவா? அதனால் "நாலு சக்கரவாகன ஓட்டம்", "இரு சக்கர வாகன " ஓட்டம் ஆகியவற்றை "தடை" செய்து விட்டு பிறகு இந்த ஜல்லிக்கட்டு பக்கம் வாருங்கள் என்று கூறலாமா? அந்த நாலு சக்கரவாகன ஓட்டத்திலும்" இரு சக்கரவாகன ஓட்டத்திலும்" மனித உயிர்கள் அதிக ஆபத்தை சந்திக்கின்றன என்பதால் அவற்றை தடை செய்ய முதலில் ஏற்பாடு செய்யுங்கள். அது உங்கள் கார்போரேட்களின், பெரு முதலாளிகளின், நடுத்தர வர்க்கத்தின், "வீர விளையாட்டு" என்றால் இந்த " மஞ்சு விரட்டு" என்ற விளையாட்டுதான் எங்கள் தமிழர்களின் பாரம்பரிய வீர் விளையாட்டு.