நத்தம் விஸ்வநாதன் தமிழ்நாட்டின் மின்சாரத் துறை அமைச்சர். அதனால் அவர் என்னவேண்டுமானாலும் பேசலாம் என்று ஒரு "விதி" இருக்கிறதா? கூடங்குளம் அணு உலையை "பத்தாண்டுகளாக" விட்டுவிட்டு "இப்போது" எதிர்க்கிறார்களே? என்று அவர் கேட்டுவிட்டார். எந்த நேரத்தில் கேட்டார் தெரியுமா? இடிந்தகரையில் நடக்கும் "பட்டினிப் போராட்டத்தில்" 127 உயிர்களுக்கு ஆதரவாக 30000 ௦௦௦ மக்கள் திரண்டு இருக்கும்போது, "அமைச்சர்கள் " வருகிறார்கள்: அதனால் அவர்களை சந்திக்க "போராட்ட குழுவினர்" வாருங்கள் என்ற செய்தியை "தூத்துக்குடி பேராயர்" சொல்லி அனுப்பிய நேரத்தில், கூறுகிறார். அதாவது "முதல்வர்" அனுப்பினார் என்றும், உங்களுடன் "பெட்சச்சொல்லியிருக்கிறார்" என்றும், அமைச்சர்கள் "போராட்டக்காரர்களிடம்" கூறிக்கொண்டிருக்கும் போது, நத்தம் விஸ்வநாதன் "இப்படி" பேசுகிறார். "நீங்கள் சொல்லும் அணு உலை கூடாது என்ற செய்தியை" அம்மாவிடம் போய் சொல்லுகிறோம் என்று வந்திருந்த அமைச்சர்கள் போராட்டக் குழுவிடம் கூறிக்க் கொண்டிருக்கும்போதே, போராட்டக்காரர்களை "தாக்கி" அமைச்சர் விஸ்வநாதன் இப்படி "ஊடகவியலாளர்களிடம்" கூறுகிறார்.
"முதல்வர்" மீது நம்பிக்கை வைத்து நீங்கள் பட்டினிப் போராட்டத்தை கைவிடுங்கள் என்று அந்த நெல்லை, தூத்துக்குடி, அமைச்சர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே, "ஏதோ எதிர்க்கட்சிகாரர்களை" கிண்டல் செய்வதுபோல, நத்தம் சென்னையில் இப்படிக் கூறுகிறார். அமைச்சர்கள் "செல்லப் பாண்டியன், செந்தூர்பாண்டியன், சண்முகநாதன்" ஆகியோரையும், "நயினார் நாகேந்திரனையும்" செல்வி. ஜெயலலிதா " கூடங்குளம் போராட்டக் காரர்களிடம்" பேச அனுப்பியுள்ள போது, அவர்களை அவமானப் படுத்துவதுபோல, அந்த அமைச்சர்களை அனுப்பிவைத்த "முதல்வரையும்" அவமானப்ப்டுத்துவதுபோல,"நத்தம் விச்வ்பனாதன்" பேசி இருக்கிறார். அந்த விஸ்வநாதனுக்கு, 1988 ஆம் ஆண்டு முதல் "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" என்ற பெயரில், பல்வேறு அமைப்புகளை சேர்த்து, "அன்டன் கோமஸ்" தலைமையில் மாநிலம் தழுவிய "போராட்டங்கள்" நடத்தப்பட்டது தெரியுமா?
1989 ஆம் ஆண்டு மார்ச்-20 இல் தூத்துக்குடியில், முன்னாள் மத்திய அமைச்சர் "ஜார்ஜ்" பெர்னாண்டஸ் தலைமையில் ஒரு "மாபெரும்" பேரணியை அன்டன் கோம்ஸ் நடத்தியதும், அதில் "கூடங்குளம் அணு உலை" வேண்டாம் என்ற "தீர்மானத்தை" பல்லயிரக்கனக்கில் கூடிய மக்கள் "முழக்கம்" எழுப்பி, அதையே "போராட்டமாக" அறிவித்தது அமைச்சர் விச்வனாததிற்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அதுபோல, "பேச்சிப்பாறை" அனையிளிருந்துதான் "தண்ணீர்" எடுக்கப் போகிறார்கள் என்ற செய்தியை ஒட்டி, "குமாரதாஸ்" தலைமையில், "பேச்சிப்பாறை விவசாயிகள் சங்கம்" சார்பாக "நூறு" பொதுக்கூட்டங்கள் நடத்தப்பட்டது, இந்த நத்தத்திற்கு தெரியுமா? 'ஐகப்" மாணவர் இயக்கம் "நூறு கிராமங்களில்" விவசாயிகளை சந்தித்து, "கலை nikzhchchikal" மூலம் "அணு உலை எதிர்ப்பை" எடுத்து சொன்னார்கள் என்பத்கு விஸ்வநாதனுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை.
இத்தகைய அணு உலை எதிர்ப்பு போராட்டங்கள் மாநிலம் எங்கும், புதுவையிலும் கூட, அன்றைய "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" மூலம் நடத்தப்பட்டன என்ற செய்தியை " விஸ்வநாதனுக்கு அறிவுரை கூறும் அணு உலை நிர்வாகம்" கூறியிருக்காது என்பது எங்களுக்கு தெரியும். சென்னையில் எழுத்தாளர் "ஞானி" உட்பட கலந்துகொண்ட " அணு உலை எதிர்ப்பு" பேரணி "அண்ணா சாலையில்" நடத்தப்பட்டதும், அதில் "பலூன்க்சலில்" அணு உலைகள் வேண்டாம் என்ற எழுத்துகளுடன் "பறக்க விட்டதும்" இந்த அப்பாவி அமைச்சருக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. எழுத்தாளர் ஞானி, அன்று "முரசொலியின் வார இதழாக" வெளிவந்த "புதையல் " என்ற ஏட்டில், அணு உலையின் "தீமைகள்" பற்றி எழுதியதையும், அதை "முரசொலி மாறன்" ஏற்றுக் ஒண்டு, "கலைஞரிடம்" கூறியதையும், அவரது வலியுறுத்தலில், "வைகோ " நாடாளுமன்றத்தில் "கூடங்குளம் அணு உலைக்கு" எத்ரிப்பு தெரிவித்ததையும், அதை அன்றைய "தினகரன்" ஏட்டில் அன்றைய முதலாளில் "கந்தசாமி" முதல் பக்க செய்தியாக வெளியிட்டதையும் "நத்தம் விஸ்வநாதன்" போன்ற "பிற்கால" அரசியல்வாதிகளுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
புதுச்சேரியில்கூட, அன்று "எழுத்தாளர் ரவிகுமார்" தலைமையில் இந்த "கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு கூட்டமைப்பு" செயல்பட்டது என்ற செய்தியை "அணு உலை நிராவாகம்" கொடுத்திருக்க வாய்ப்பில்லை. அப்போது "ஜூனியர் விகடனில்" தொடர் கட்டுரைகளாக , "நாகார்ஜுன் மற்றும் ஏ.எஸ்.பன்னீர்செல்வம்" இணைந்து அணு உலைகள வேண்டாம் என்ற பொதுக் கருத்தையும், "கூடங்குளம் அணு உலை வேண்டாம்" என்ற குறிப்பான கருத்தைஓயும் எழுதியதை அவர் படித்திருக்க நியாயமில்லை. சென்னையில் பிரபலமான 'டாக்டர். சீ.ஏன்.தெய்வநாயகம்" அன்றே "கல்பாக்கம் அணு உலையால்" வ்ந்துள்ள தீமைகளை தொகுத்து எழுதினார் என்பதும் தெரிய வாய்ப்பில்லை. டாக்டர் தெய்வநாயகம் "கல்பாக்கம் அணு உலையில் பணியாற்றும் தொழிலாளர்களை" அளவு மானி கொண்டு அளந்து, 'வர்களுக்கு உருவாக்கி உள்ள புற்று நோய் பற்றி" காணொளி காட்சிகளை உருவாக்கி எங்களுக்கெல்லாம் "வழிகாட்டி" அணு உலை எதிர்ப்பை உருவாக்கினார் என்பதும் இன்றைய அமைச்சர்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பில்லை.
"உடனடியாக" மின் பற்றாக்குறையை போக்க, அணு உலை பயன்படும் என்ற "தவறான" செய்தியை அணு உலை நிர்வாகம்" கொடுத்ததை நம்பி அவர் அவசப்பட்டு அப்படி கூறியிருக்க கூடும். "அணு உலை நிராவகம்" என்பது, "அணு சக்தி துறைக்கு" கீழே வருகிறது. அணு சக்தி துறை என்பது ஒரு "சர்வாதிகார" சக்தி. அது "இந்திய மத்திய அமைச்சகதிற்கே " தெரியாமல் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். பிரதமரும், பாதுகாப்பு அமைச்சரும், அணு சக்தி துறை தலைவரும் சேர்ந்து கொண்டு "என்ன வேண்டுமானாலும் " முடிவு எடுக்கலாம் என்பது நமது அமைச்சர்களுக்கு தெரிந்திருக்க நியாயமில்லை. அவர்கள் அணு உலைகளை பயன்படுத்தி "அணுகுண்டுகளை" உற்பத்தி செய்கிறார்கள் எனபதும் இவர்களுக்கு தெரியாது..."ஐ.எஸ்.ஆர்.ஒ." நிர்வாகம் "சமீபத்தில்" இரண்டு கோடி ரூபாயை இந்திய அரசுக்கு "நட்டம்" ஏற்படுத்தியதில், இந்த "அணு சக்தி துறை" அம்பலப்பட்டு நிற்கிறது என்படஹியும் இவர்கள் பொருத்திப் பார்க்க மாட்டார்கள்.
ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம். செல்வி.ஜெயலலிதாவிற்கு 'வாக்களித்த" மக்களை 'பரமக்குடி துப்பாக்கி சூட்டில்" பகைத்துக் கொண்டுவிட்டார்கள். இப்போது வக்களித்த "மீனவர்கள் உட்பட தென் மாவட்ட மக்களை" கூடங்குளம் அணு உலையை நியாயப்படுத்தி "பகைத்துக் கொள்ளப்" போகிறார்கள்.
Saturday, September 17, 2011
Subscribe to:
Posts (Atom)