Friday, September 11, 2015

தமிழ் எம்.பி.களுக்கு இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?

தமிழ் எம்.பி.களுக்கு  இலங்கையில் பேச தைரியம் இருக்குமா?
----------------------------------------------------------------------------------------------
       இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பு  எம்.பி.க்களில்,குறிப்பாக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த எம்.பி.க்கள் தைரியமாக அல்லது நேர்மையாக அல்லது வாக்குகள் பெறுவதற்கு கொடுத்த வாக்குகளின்படி, தமிழர்கள் மீது நடத்தப்பட்ட "இன அழிப்பு போரில், நடந்த போரகுற்றங்களை விசாரிக்க, ஐ.நா. மனித உரிமை கவுன்சில் உரூவாக்கிய "மூவர் விசாரணைக் குழு" அறிக்கையின் அடுத்த கட்டமாக  அதை அமுலாக்க " பன்னாட்டு பங்கேற்புடனான தொடர் செயல்பாட்டு       பொறியமர்வை" ஏற்படுத்த நாடாளுமன்றத்தில் பேசுவதும், இலங்கை அரசுக்கு அழுத்தம் கொடுப்பதும், சிங்கள சாதியான "உள்நாட்டு விசாரணை மட்டுமே" என்பதை எதிர்க்கவும் செய்வார்களா?

              இந்தப் பணியை செய்ய எதிர்க்கட்சி தலைவராக் பொறுப்பேற்றுள்ள இரா.சம்பந்தனோ, சுமந்திரனோ, துணை எதிர்க் கட்சி தலைவராகியுள்ள மாவே   சேனாதிராஜாவோ, செய்ய மாட்டார்கள் என்பதாக ஒரு பொதுக் கருதது இருக்கிறது. வெளியே பேசிவரும், டெலோ உறுப்பினர்களோ, பிளாட் உறுப்பினரோ, நாடாளுமன்றத்திலும் பேசுவார்கள் என்பதும் சந்தேகமில்லை. ஆனால், கிளிநொச்சி சிரிதரனோ, மற்ற தமிழரசுக் கட்சி உறுப்பினர்களோ பேசுவார்களா? மலையகத்தை சேர்ந்த இன்றைய அமைச்சர்களான மனோ கணேசனோ, ராதாகிரிஷ்நனோ  பேசுவார்களா? அழுத்தம் கொடுப்பார்களா? என்ற கேள்வி கேட்கப்பட்டே ஆகவேண்டும்.மனோ கணேசன் ஏற்கனவே நடந்த போரில் " காணமல் போனவர்கள் பற்றியும், வெள்ளை வாகன கடத்தல் பற்றியும் ஐ.நா.விற்கும் பன்னாட்டு சமூகத்திற்கும் விடாப்பிடியாக எடுத்து சென்றவர்" என்பதால் இப்போது "பன்னாட்டு பொறியமைவு"வேண்டும் என்று அவர் கேட்டால் மட்டுமே அது சரியான தொடர்ச்சியாக இருக்கும்.

     எப்படி அரசாங்கத்தில் உட்கார்ந்துகொண்டு அரசாங்கத்தின் ஆட்களுக்கு எதிரான முடிவை பேசமுடியுமா? என்று கேட்பீர்களானால்,அங்கெ சிங்கலதிற்குள் இப்போது என்ன நடக்கிறது? இன்று ரணில்விக்ரமசிங்கே என்ற பிரதம அமைச்சரின் இந்திய பயணத்தை ஒட்டி, பிரதமர் அங்கே சென்று, இந்தியாவுடன் வர்தக உறவுக்காக "சீபா" என்ற ஒப்பந்தந்தில் கையெழுத்து போட்டாரென்றால் அதை நாங்கள் எதிர்ப்போம் என்று, இலங்கை அமைச்சர் சம்பிக்க ரணவக்க பேசியுள்ளார். சிங்கள எம்.பி.களுக்கு உள்ள அந்த "தைரியம்" தமிழர்களுக்கு வருமா?

விக்னேஸ்வரனின்பதிலில் ,நீதி நெருப்பாகிறது

விக்னேஸ்வரனின்பதிலில்,மாவே,சம்பந்தன்,சுமந்திரன் தோற்க,நீதி நெருப்பாகிறது
----------------------------------------------------------------------------------------------------------------------------------
    இன்று செப்டம்பர் 11 ஆம் நாள். இலங்கை அரசிடம்  ஐ.நா.மனித உரிமை கவுன்சில், தங்களது 2014 ஆம் ஆண்டின் தீர்மானப்படி[ இந்தியா புறக்கணிதத தீர்மானம்]  இலங்கையில் நடந்த "போர்குற்ற விசாரணை"க்கு "பன்னாட்டு விசாரணை" ஒன்றை  செயல்படுத்த," மூன்று பேர் கொண்ட குழு" வை நியமித்ததை ஒட்டி, மூவர் குழு கொடுத்துள்ள "அறிக்கையை"  கையளிக்கிறது. இந்த நேரத்தில் இலங்கை வெளிவிவ்கார அமைச்சரான மங்கள சமவீரா, தன்னை சந்தித்த "மனித உரிமை அமைப்பின்" ஆர்வலர்களிடம்," ஐ.நா.போர்குற்ற விசாரணை அறிக்கையின் அடிப்படையில், இன்றைய இலங்கை அரசு, "ஒரு உள்நாட்டு பொறியமைவை ஏற்படுத்தி, அதன் மூலம் உள்நாட்டு நீதியரசர்களைக் கொண்ட நீதிமன்றத்தை அணுகி, போர்குற்றம் செய்தவர்களுக்கு தண்டனை வாங்கி தரத் தயாராக இருக்கிறது" என்று கூரியுள்ளார்..

      அதாவது, தெளிவாக, "பன்னாட்டு நீதியரசர்களையோ, பன்னாட்டு  நீதிமன்றதையோ, அணுக விடமாட்டோம். பன்னாட்டு சக்திகளை உள்நாட்டு விசாரணையில் தலையிட அனுமதியோம். ஐ.நா. வின் விசாரணை செய்த மூன்று பேர் கொண்ட குழுவை, உள்நாட்டு விசாரணையில் தலையிட விடமாட்டோம்" என்றும் தெளிவாக கூறியுள்ளார். அதாவது மஹிந்த ராஜ பக்செவின் அதே முடிவில்தான் மைத்திரிபால சிறிசேன அரசும் உள்ளது. அல்லது ரணில் விக்ரமசிங்கேயும் இருக்கிறார் எனபது தெளிவாக் புரிகிறது.இந்த செய்தியை  வடக்கு மாகான சபையின் முதல்வர் சி.வி.விக்னேஸ்வரன் "தினக்குரல்" இதழுக்கு கொடுத்த நேர்காணலில் கூறியுள்ளார். அதுபற்றி கூறும் முன்னாள் இலங்கை உயர்நீதிமன்றத்தின் நீதியரசர் விக்னேஸ்வரன், " இலங்கையின் உள்நாட்டு விசாரணையை நடத்தும் இலங்கையர்கள்,நிச்சயமாக தங்கள் நாட்டு ராணுவத்தினர் மீது போர் குற்றங்களை  நிரூபிக்க போவதில்லை." என்று கூறுகிறார்.

                     மேலும் விக்னேஸ்வரன், "ராணுவக் கட்டுப்பாட்டில் உள்ள சில ஏக்கர்  நிலங்களை விடுவிப்பார்கள். சில கைதிகளை விடுவிப்பார்கள். காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதாக கூறுவார்கள்.சிறிய அளவில் ராணுவத்தை குறைப்பார்கள்.இவையெல்லாம் அவர்கள் செய்யவேண்டிய கடமைகள. ஆனால் ஆபத்தான போர்குற்றங்கள் என்னவாயிற்று? என்றுமே எந்த இலங்கை நீதியரசரும், ராணுவத்திடம் குற்றம் காண மாட்டார்." என்றும் விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.

     இப்படியாக அங்குள்ள சூழல் இருக்கும்போது, ஊடகவியலார கேட்ட  கேள்வி,"உங்கள் மீது  தமிழரசுக் கட்சி தலைமை நடவடிக்கை  எடுக்கபோகிறார்களே?" என்று கேட்டதற்கு, " தான் பன்னாட்டு விசாரணையை நடத்தி பாதிக்கபட்டோருக்கு உண்மையையும், நீதியையும் வாங்கி தருவேன்  என்ற வாக்குறுதியின் மூலம் வடக்கு மாகாண சபைக்கு மக்களால தேர்வு    செய்யப்பட்டவன்.நான் கடந்த 23 மாதங்களாக  இந்த மக்களுடன் வாழ்ந்து, அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவற்ற குறைந்த பட்ச வாய்ப்புகளுடன் போராடி வருகிறேன். இந்த நேரத்தில் தமிழரசுக் கட்சியினர் எடுக்கும் நடவடிக்கை பற்றி நான் கூற என்ன இருக்கிறது? அவர்கள் தாங்கள் மக்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளை காப்பாற்ற முயல் வேண்டும் " என்றார்.

         தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவே சேனாதிராஜா, இலங்கை எதிர்க்கட்சி தலைவர் சம்பந்தன், சுமந்திரன் உடன் சேர்ந்து, இலங்கை அரசின் இந்த "தமிழர் விரோத போக்கை" ஆதரித்து, செயல்படுகிறார்கள். அவர்கள் மீதும் தமிழ் மக்கள் கடும் கோபத்துடன் இருக்கிறார்கள். மக்கள் போராட்டம் வெடிக்கும் சாத்தியங்களே உள்ளன. அமெரிக்காவும், இலங்கை அரசின் நிலைகளுக்கு துணை போய வருவது தெரிகிறது. பன்னாட்டு விசாரணை இன்னமும் முடிவடையவில்லை என்பதையும், முதல் கட்ட விசாரணையை பன்னாட்டு குழு இலங்கை நாட்டிற்குள் சென்று நடத்த மகிந்தா அரசாங்கம் அனுமதிக்கவில்லை . ஆகவே அது இரண்டாம் தரப்பு சக்திகளிடம் செய்திகளைத்  திரட்டித்தான் அறிக்கை தயார் செய்துள்ளனர்..ஆகவே மீண்டும் இப்போது, புதிய ஆட்சியாளர்கள் புதிய சிந்தனையுடன் வந்திருக்கிறார்கள் என்பது உண்மையானால், பன்னாட்டு விசாரணை குழுவை இப்போதாவது இல்ங்கை தீவிற்குள் அனுமதித்து, விசாரணை நடத்த அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு நீதியரசர்களை அனுமதிக்க வேண்டும். விசாரணையில், பன்னாட்டு வழக்கறிஞர்கள் இலங்கை வந்துகூட, நீதிமன்றத்தில் வாதம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போதுதான் "உண்மையான போர்குற்றம் ஒரு இன அழிப்பே என்பதும், அதை செய்த சிங்களம் ஆளும் கட்சியாகவும், எதிர்கட்சியாகவும் அமர்ந்திருப்பதும்" உலகுக்கு தெரியவரும்.

    இபபோது இன்று { 11-09-2015]காலை முதல் மலை வரை இலங்கையில் "தமிழரசுக் கட்சியின்" தலைமைக் குழு கூடி விக்னேஸ்வரன் மீது எடுக்க வேண்டிய நடவடிக்கை பற்றி விவாதித்து வருகிறார்கள். விக்னேஸ்வரன் தேர்தல் நேரத்தில், "யாருக்கும் பரப்புரை செய்யமாட்டேன்" என்று கூறினார். சொல்லில் மட்டுமின்றி, செயலிலும் காட்டுபவர்களை தேர்வு செய்யுங்கள் என்றார் அதை கஜேந்திரகுமார் தனக்கு சாதகம் என்று பரப்புரை செய்தார். "வாக்குகளை சிதறாமல் போடுங்கள்" என்று விக்னேஸ்வரன் கூறியதை இதே தமிழரசுக் கட்சி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு மூலம், அது தங்களைத் தான் குறிக்கிறது என்று கூறி பரப்புரை செய்தனர்.இரு தமிழர் கட்சிகளுமே விக்னேஸ்வரனின் நேர்காணலை "இணையம்" மூலம் தங்களது பரப்புரைக்கு பயன்படுத்தினார்கள்.  ஆனால் இப்போது தங்களுக்கு எதிராக சென்றார் என்று கூறி நடவடிக்கை எடுக்கிறோம் என்கிறார்கள்.

      வருகிற செப்டம்பர் 30 ஆம் நாள் கூடும் ஐ.நா.மனித உரிமை கவுன்சிலில் இந்த போர்குற்ற அறிக்கை வைக்கப்பட இருக்கிறது. அப்போது  இலங்கையும், அமெரிக்காவும், இந்திய அரசும், ஒரே நிலை எடுக்கலாம். அது "தமிழர்களுக்கு எதிரானது" என்பதை எப்படி கொண்டு செல்ல போகிறோம்?. நமக்கு இருக்கும் வலுவான ஆதாரம் இந்த முறை ஈழம் ம்வுனம் காகக வில்லை. எழுந்து விட்டது. வடக்கு மாகாண சபையின் இந்த ஆண்டு பிபிரவரி 10 ஆம் நாள் தீர்மாணப்படி, 'நடந்துமுடிந்த போர் ஒரு இன  அழிப்பு போரே' என்ற தீர்மானம் இருக்கிறது.  பத்து நாட்கள் முன்னால் விக்னேஸ்வரன் வடக்கு மாகான சபையில் போட்ட தீர்மானம் மூலம், "பன்னாட்டு பொறியமைவு மூலம் ம்ட்டுமே விசாரணையை தொடரமுடியும்" என்பது நிரூபணமாகிறது. உலகின் மனித உரிமை சக்திகள் அல்லது நாடுகள் நேர்மையாக சிந்திக்குமானால், "தேர்ந்தெடுக்கப்பட்ட தமிழ் மக்களின் பிரதிநிதிகளான் வடக்கு மாகான சபையின் தீர்மானங்களை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும். அரசியல் போராட்டத்திற்கு வடக்கும், கிழக்கும் இலங்கையில் தயாராகி விட்டன. நாம் அவர்களுக்கு ஆதரவு தரவேண்டும்.