இளவல் பாஸ்கர் இறந்துவிட்டான்.......
எங்கள் தோழர் இளவல் பாஸ்கர் நேற்றைக்கு முந்திய நாள்,மண்டபம் அருகே வாகன விபத்தில், ஓட்டுனராக பயணம் செய்யும்போது, இறந்துவிட்டான். அவனது உடலை இப்போதுதான், இன்றுதான் கல்பாக்கம் அருகே உள்ள "பழைய நடுக் குப்பம்" இடுகாட்டில் மீனவ சகோதரர்கள், சகோதரிகள் மற்றும் நண்பர்கள் உடன் இணைந்து "அஞ்சலி கூட்டம் நடத்தி எரித்துவிட்டார்கள் அதில் கலந்துகொண்டு திரும்பி வந்துள்ளேன்.இந்த பாஸ்கரை "முக நூல்" வாசகர்களுக்கு தெரியாது. அவனுக்கும் முக நூல் வாசகர்களை தெரியாது. அவன் ஓடி ஓடி வேலை செய்யும் மீனவ் சமூகத்தின் ஒரு போராளி. ஒரு அடிமட்ட செயற்பாட்டாளன் அவன் இல்லாமல், காஞ்சி மாவட்ட மக்கள் மன்றம் நெருக்கடிகளை கடக்க வில்லை என்று மக்கள் மன்றம் மகேஷ் நினைவு கூறுகிறார். அவன் இல்லாமல் மீனவ சமூக அணிதிரட்டல்களில் பணிகள் நடக்க வில்லை என்று மீனவ சங்க தலைவர் கபடி மாறன் ஆதங்கப்படுகிறார்.
பாரதியும், மாறனும், பாபு வும் மற்றவர்களும் நடத்திய "மீனவ மாணவர்களுக்கான தேர்வு மதிப்பெண்கள் பெற்றவருக்கு, பரிசுகள் வழங்கும் விழாவில் பாஸ்கர் சூர்,சுறுப்பாக இயங்கினான். கன்சி மாவட்ட மீனவ கூட்டுறவு சங்க தலைவர் சதீஸ் நடத்திய மீனவ மாணவர்களுக்கான " அடுத்த கட்ட படிப்பை தேர்வு செய்யும் கலந்துரையாடலில்" பாஸ்கர் வேகமாக இயங்கினான். அதை மீன் வள துறை உதவி இயக்குனர் ஜூலியஸ் உட்பட பாராட்டினார்கள். பேரா.சிவகுமார்,பேரா.திருமாவளவன், உட்பட அனைவரும் பார்த்தார்கள். அதை கண்டு "தம்பி" பெரும் பார்ரட்டுகளில் உள்ளம் பூரிந்த்தேன். அந்த பாஸ்கர் இப்போது இல்லை.
கல்பாக்கம் அருகே கடலில் இருக்கும் "எரிமலையை கண்டோம் என்று அதன் பாதிப்பை கண்ட மீனவ மக்களை பற்றி "த.மு.முக.வின் செயலாளர் அப்துல் சமது"என்னிடம் கூறிய பொது ஒரு திருமணத்தில் அந்த வட்டாரத்தை சேர்ந்த பாஸ்கரிடம் நான் கத்திய உடனேயே, பகுஷிமா நினைவு நாளில், அங்கேயே ஒரு பத்து மீனவ கிராம மக்களை திரட்டி, கூட்டம் நடத்தினானே அதை அடக்க நிகழ்ச்சியில், அப்துல் சமது நினைவு கூறினார் அன்று, "கூத்தவக்கம், கல்பாக்கம், மாமல்லபுரம் காவல் நிலையங்கள் அந்த கூட்டம் நடத்த விடாமல்" செய்த வேலைகளை பாஸ்கர் எப்படி முறியடித்தான் என்று நான் நினவு கூறினேன். காவல் துரையின், உளவுத்துறையின் மிரட்டல், பாஸ்கரிடம் அன்று பலிக்கவில்லை. நான் வருவது அந்த உளவு அதிகாரிகளை தலையிட வைத்தாலும், பாஸ்கர் ஊர்தியாக நின்றான் "எள் என்றால் எண்ணை " என்று நிற்பானே என நான் பெருமை பட்டுக் கொண்டேன். எத்தனை பிரபலங்கள், இன்று அந்த மீனவ கிராமத்திற்கு இறுதி அஞ்சலி செலுத்த வந்தார்கள்? ஒரு கடலோர மெனிவா கிராமத்திற்கு பதினைந்து நன்கு சக்கர வாகனங்கள் வந்ததை மக்கள் பேசிக் கொண்டார்கள் பாஸ்கர் அந்த அளவுக்கு காசிமேட்டிலும் மரக்காணம் பகுதியிலும் பிரபலமான தோழன். நானா நிறைய எழுதவேண்டும் அவனை பற்றி. ... .