Friday, June 3, 2011

யாருடன் " கூடா நட்பு" யாருக்கு " கேடாய் முடியும்"?

தமிழ்நாட்டின் மூத்த அரசியல்வாதி கலைஞருக்கு இன்று பிறந்த நாள். அவர் அதையொட்டி சில சீரிய கருத்துக்களை அறிவித்துள்ளார். அதில் " அரசியல் மறுமலர்ச்சிக்காக உழைக்கும் தொண்டர்கள், கூடா நட்பு, கேடாய் விளையும் எண்பதை உணரவேண்டும்" என்று அப்போது கலைஞர் அறிவித்தார்.
இன்று அவருக்கு " பிறந்த நாள்" கலைஞர் " திருவாரூர்" வாக்காளர்களால் சட்ட மன்றத்திற்கு தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளார்.இன்று தமிழக ஆளுநர் உரை சட்டமன்றத்தில் நடந்தது. ச.ம.உ.வான கலைஞர் சட்டப்பேரவை சென்றிருந்தால், தோல்வியையும் மறந்து ஆளுநருடன் கை குலுக்கி இருந்தால், முதல்வர் ஜெயலலிதாவே அவருக்கு " பிறந்த நாள்" வாழ்த்து சொல்லும் நிர்ப்பந்தம் வந்திருக்கும். அதை கலைஞர் ஏனோ செய்யவில்லை.


அப்படி தமிழக சட்டப்பேரவைக்கு " ஆரோக்கியமான சூழல்" ஒன்று உருவாவதைக்கூட "கூடா நட்பு" என்று அவர் எண்ணிவிட்டாரோ, என எண்ணிவிட வேண்டாம். " கனிமொழி" க்கு இப்படி ஒரு ஆலோசனையை கலைஞர் வழங்கி இருக்கிறாரோ என்றும் எண்ணிவிட முடியாது. ஏன் என்றால் கனிமொழி சிக்கியிருக்கும் "கலைஞர் டிவி "யின் பங்கு,பண விவகாரத்தில், " தான்தான் கனிமொழியை வற்ப்புறுத்தி, பங்குதாரர் ஆக்கினேன்" என்று கலைஞரே சொல்லியிருக்கிறார். ஆகவே " தான் பெற்ற அனுபவத்தை பிறருக்கு" புரிய வைக்க கைஞர் கூறும் " படிப்பினை" யாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்படி எடுத்துக் கொண்டால், " தயாநிதி மாறனைக் கொண்டுவந்து அரசவையிலே அமரவைத்து" எண்பதை கூடா நட்பு என்று அவர் கூறியிருக்கலாம். அதைவிட " காங்கிரஸ் கட்சியை நம்பி" வைத்துக்கொண்ட உறவு, கூட்டணி, நட்பு என்பது இப்போது சீ.பி.ஐ. பெயரில், நிர்ப்பந்தம், குற்றச்சாட்டு, சதி, கைது, சிறை, என்று தொடர் தொல்லைகளாக வருகிறதே, அதனால் தமிழ் மக்கள் மத்தியிலும் கடுமையான கேட்ட பெயர் வாங்க வேண்டி இருக்கிறதே என்று அவர் எண்ணியிருக்கலாம்.


"காங்கிரஸ் உடன் கூடா நட்பு" இப்போது திமுக வை " நடுத்தெருவிற்கு" கொண்டுவந்து நிறுத்தி விட்டதே என எண்ணித்தான் கலைஞர் கூறியிருக்க வேண்டும். அது " கேடாய் முடியும்" என்றும் கூறிவிட்டார். இன்று தனது பிறந்த நாளில், டில்லி சென்று " கனிமொழியை" சந்திக்கலாம் என்றும், " கணிம்ழி\ஹிக்கு" இன்று பிணை தரும் தீர்ப்பு வெளியாகும் எனவும் கூறப்பட்ட கூற்றுக்கள் உண்மையல்ல என்று ஆன பிறகு, அது அதாவது " காங்கிரஸ் நட்பு என்ற கூடா நட்பு" இப்போது திமுக விற்கும் தனக்கும், தனது குடும்பத்திற்கும் " கேடாய் முடிந்துவிட்டது" என்பதைத்தான் அவர் குறிப்பிடுகிறார் எனப் புரிகிறது.

No comments:

Post a Comment